இந்து தமிழ் நாளிதழ் - தொடர் - தமிழ் இனிது (1) -06-06-2023

 தமிழ் இனிது (1) 

நா.முத்துநிலவன் 

      உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் உண்மையான பெருமை, அதன் தொடர்ச்சி தான்! தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ், இப்போது பில்கேட்சின் (விண்டோஸ்-எனும்) சன்னல் பலகையிலும் கிடைப்பது தான் உண்மையான பெருமை!

      குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களையும் கடந்து  ஆறாம்  திணையாக  -இணையத் தமிழாக- வளர்வது பெருமை!  

ஜனநாயகத் தமிழ்!

       உலகமொழிகள் பலவற்றுக்கு இல்லாத பெருமை, தமிழுக்கு உண்டு என்றால், அனைத்து மதங்களுக்கும் இடம்கொடுத்து, அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழியாகத் திகழ்வதைச் சொல்ல முடியும்.

சமணத்திற்குச் சிந்தாமணி, பவுத்தத்திற்கு மணிமேகலை, சைவத்துக்குத் திருமுறைகள், வைணவத்திற்குப் பிரபந்தங்கள், இஸ்லாத்திற்குச் சீறாப்புராணம், கிறிஸ்தவத்திற்குத் தேம்பாவணி,  மதஒற்றுமைக்குத் திருக்குறள், சிலப்பதிகாரம், தற்கால இலக்கியங்கள்! இவற்றோடு, எதிர் நாயக நிலைக்கு இராவண காவியம் என, அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழி தமிழ்! இதுதான் உண்மைப் பெருமை!  

காவிய காலத்திற்கு முந்திய சங்கப் பாடல்களைப் பற்றிய கருத்து ஒன்று, இன்னும் அருமையானது. .எல்.பாஷம் அவர்கள் தொகுக்க, ஆக்ஸ்ஃபோர்டு கிளாரெண்ட்டன் அச்சக வெளியீடாக (1975) வந்திருக்கும் இந்தியாவின் பண்பாட்டு வரலாறு (A CULTURAL HISTORY OF INDIA) எனும் 600-பக்க நூலின் 34ஆம் பக்கம், சங்க இலக்கியம் பற்றி, “இவை சமயச் சார்பற்றவைஎன்கிறது. இதன் அடிநாதம் இன்று வரை தொடர்கிறதே!    

தமிழ், வெறும் இலக்கிய இலக்கணமல்ல! வாழ்வியல்!

தமிழறிவு என்பது பலதுறைஅறிவு என்பதே உண்மை! இரண்டாயிரம் ஆண்டு நிறைந்த கல்லணையும், ஆயிரமாண்டு நிரம்பிய தஞ்சைப் பெரிய கோவிலும் தமிழின் அறிவியல், கணக்கு, பொறியியலுக்கு அடையாளம்! வணிகம் இல்லையென்றால் ஒரு மொழி வளர முடியாது. யவனர் எனும் சங்கச் சொல் தமிழரின் வணிக மரபுச் சொல்(அகநானூறு-149). கல்வி, மருத்துவம் என்பவற்றையும் தாண்டி, வாழ்வியல் மொழி தமிழ்!

தமிழ்நாட்டில் பாகற்காய் எனும் ஒரு காய் உண்டு அது கசப்பானது! அதை, கசப்புக்காய் என்று சொல்லாமல் பாகு(இனிப்பு)அல்லாதபாகுஅல்-காய் என்றது பாகற்காயையே இனிப்பாக்கும் பண்பாட்டுச் சொல்லல்லோ!

ஊழல்எனும் சொல்லுக்கான பொருள் வியப்பானது! ஊழ் என்றால் விதி, அரசு விதி! அதற்கு மாறான, ஊழ்அல்லாத, அரசு விதிக்குப் புறம்பானது, ஊழல்! சரியா? (ஊழல் சரியல்ல, விளக்கம் சரிதானே?)

இப்படி, தொல்காப்பியம் முதல் அறிஞர் தொ..வரை அலசுவோம்! முன்னைத் தமிழிலிருந்து, சென்னைத் தமிழ்வரை பேசுவோம்! அரசுத் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர், சாதாரண வாசகர் என, அனைவரும் வாழ்வியல் நுட்பங்களை அறிய, தமிழால் முயல்வோம்! தமிழ் இனிது!

------------------------------------------------------------------------------------------------ 
             
நன்றி - இந்து தமிழ்-06-06-2023 செவ்வாய்க்கிழமை

வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்-- நா.மு.,
(இந்து தமிழ் நாளிதழுக்கும் எழுதலாம்)
மின்னஞ்சல் - thisaikaatti@hindutamil.co.in

37 கருத்துகள்:

  1. தமிழிற்கு அணி சேர்க்கும் அருமையான தொடக்கம். தமிழின் தொன்மை அறிய நல்வாய்ப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தொடர் கண்டு மகிழ்ச்சி. தொல்காப்பியம் தொடங்கி.....தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜூன் 11, 2023

      நன்றியும் வணக்கமும் அய்யா

      நீக்கு
  3. மிகச் சிறப்பு
    தங்களுக்கு மிக எளிதென்பதை நானறிவேன்.
    முகிழ்க்கட்டும் வாழ்வூட்டும் வாடாத தமிழ் மலர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜூன் 11, 2023

      நன்றியும் வணக்கமும் நண்பரே

      நீக்கு
  4. மிகச் சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே (தங்கள் பெயர் அறியத் தரலாமே? ஏதும் தொழில் நுட்பச் சிக்கலா?)

      நீக்கு
  5. பாகற்காய், ஊழல் விளக்கம் அருமை தோழர்

    பதிலளிநீக்கு
  6. சிறப்பும், மகிழ்ச்சியும் அய்யா ❤🙏

    பதிலளிநீக்கு
  7. தமிழில் சொற்கள் வெறுஞ்சொற்கள் அல்ல;பண்பாட்டின் உரைகல். சிறப்பு ஐயா

    பதிலளிநீக்கு
  8. தமிழ் மொழியின் வரலாறும் தமிழர் பண்பாடும் ஒருசேர அமைந்த தொடர். தமிழ் இந்து நாளிதழ் தொடரில் பலரும் புருவம் உயர்த்தி படிக்கும் சிறந்த தொடராக அமையும் என்பதே உண்மை. மகிழ்ச்சி அய்யா.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான தொடக்கம் ஐயா. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்திங்கள், ஜூன் 19, 2023

      மிக்க நன்றி நண்பரே, இங்குப் பதிவிட்டதோடு, உங்கள் முகநூலிலும் இந்த வலைப்பக்க இணைப்புடன் பகிர்ந்திருந்ததற்கு மிக்க நன்றி. அதனால் இந்தப் பதிவை நண்பர்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள். அதற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி, நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்சனி, ஜூலை 08, 2023

      நன்றி சகோதரி. உங்கள் பாராட்டு எனக்கு ஊக்கம் தருகிறது. தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்துகளையும் அவ்வப்போது சொல்ல வேண்டுகிறேன்.

      நீக்கு
  11. மிக அருமையான விளக்கம் தோழர் வாழ்த்துக்கள் 💐
    தொடர்ந்து படிக்கிறேன் தோழர் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      நன்றி கவிஞரே. தொடர்ந்து படித்து, உங்கள் கருத்துகளையும் பதிவிட வேண்டுகிறேன்.

      நீக்கு
  12. நெ.இரா.சந்திரன் பொன்னமராவதிவெள்ளி, ஜூலை 28, 2023

    ஐயா வணக்கம்
    அன்னைத்தமிழின் மேன்மையை அகிலம் அறியச்செய்யும் அரும்பெரும் பணியைத்தொடங்கியுள்ள தங்களை அகமகிழ்வோடு வாழ்த்துகிறேன் தமிழுக்குத் தொண்டு செய்யும் தங்களின் திருப்பணி தொடர நெஞ்சக்கட்டில் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      நன்றி நண்பரே. பொன்னமராவதியின் புகழ்மிக்க தமிழ்ச்சங்க நண்பர்களின் கருத்துகளையும் அறிய விழைகிறேன்.

      நீக்கு
  13. முத்து நிலவ! ஆதவன் தினம் தினம் புதிதாய் உதிப்பது போன்று உன் தமிழ்ப் பற்று அன்றிலிருந்து இன்று வரை புதிது புதிதாய் உதிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      அன்றிலிருந்து - 40ஆண்டுக்கும் மேலான - நமது நட்பு மாறாமலிருப்பது உன் அன்பால்தான். எழுத்தாளனாகி விட்ட உனது கருத்துகளைத் தொடர்ந்து பார்த்து எழுதவும் வேண்டுகிறேன் நண்பா.

      நீக்கு
  14. தமிழ் - தோண்ட தோண்ட இனிக்கும் மொழி. அள்ளி அள்ளி தந்திருக்கிறீர்கள். இன்னும் இன்னும் தாருங்கள். காத்திருக்கிறோம்.
    அன்புடன்
    ஆ.மீ.ஜவகர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      நன்றி நண்பரே. தொடர்ந்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்

      நீக்கு
  15. கார்த்திகேயன்ஞாயிறு, ஜூலை 30, 2023

    பாகு அல் காய் , ஊழ் அல் போன்ற கருத்து நிறைந்த வார்த்தைகள் நமது தமிழ் மொழியில் உள்ளது என்பதை மேற்கோள் காட்டியது மிகவும் அருமை, அண்ணா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      நன்றி கார்த்தி. தொடர்ந்து உனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்

      நீக்கு
  16. தமிழ் மதமற்றது, மனிதர்களுக்கானது. தமிழின் சிறப்பை ஓங்கிச் சொல்லும் தொடர் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 08, 2023

      உண்மையச் சொன்னேன்! நன்றி நண்பரே

      நீக்கு
  17. தமிழ் இனிது! அருமை அண்ணா, ஊழல் எனும் சொல்லின் வேரை இக்கட்டுரை வாசித்துத்தான் அறிந்துகொண்டேன். புலனத்தில் அப்போதே படித்திருந்தாலும் இப்போது முதலிலிருந்து அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க விளைகிறேன்.

    பதிலளிநீக்கு