தமுஎகச விருதுகள் -2025 - அறிவிப்பும், கதை - வீதி அழைப்பும்

                     தமுஎகச விருதுகள் - 2025 அறிவிப்பு 

2025ஆம் ஆண்டுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.        

2025ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை.

(அதாவது 01-01-2025முதல் 31-12-2025தேதிக்குள் வெளிவந்தவை)

----------------------------------------------------------------- 

நூலின் மூன்று பிரதிகள் 

2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் 

அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்ப வேண்டும் 

பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. 

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,

(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)

மதுரை- 625001

தொலைபேசி: 0452-2341669

-------------------       000000         -------------------- 

குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின்

தனிநபர் இணைய இணைப்புகளை

73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.

--------------------         000000          ---------------------- 

தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் 

விருதுத்தொகை ரூ.10,000/, சான்றிதழ் 

ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்

 விருதுகள்

1. கே.முத்தையா நினைவு விருது  தொன்மைசார் நூல்

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது  நாவல்

3. சு.சமுத்திரம் நினைவு விருது  விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு

4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது அல்புனைவு நூல் (நான் ஃபிக்‌ஷன்)

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்)         

            நினைவு விருது - கவிதைத் தொகுப்பு

6. அகிலா சேதுராமன் நினைவு விருது - சிறுகதைத் தொகுப்பு

7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது - மொழிபெயர்ப்பு நூல்

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்)

           விருது குழந்தைகள் இலக்கிய நூல்(சிறுவர் பாடல்கள் உட்பட)

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது  

                 மொழிவளர்ச்சிக்கு உதவும் நூல்

10. ஜனநேசன் நினைவு விருது  எழுத்தாளரின் முதல் நூல்

11. மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது                                                                                    அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்

12. பா.இராமச்சந்திரன் நினைவு விருது குறும்படம் 

13. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது ஆவணப்படம்

 -----------------------------------------------------------------------------------------------

              கீழ்காணும் விருதுகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகள்

                                             வரவேற்கபடுகின்றன

                                               -------------------------------------

14. மு.சி.கருப்பையா பாரதி-ஆனந்த சரஸ்வதி                                            நாட்டுப்புற கலைச்சுடர் விருது

15. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது

16. த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது 

17. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண்படைபாளுமை விருது

18. கருப்பு கருணா நினைவு நுண்கலைச்சுடர் விருது

 

                   மதுக்கூர்இராமலிங்கம்  - மாநிலத்தலைவர்                

                                   களப்பிரன் - பொதுச்செயலாளர்                                                                                               

------------------------------------

-----------------------------------------------------------------------------------------

மற்றும் ஒரு

 தனிப்பட்ட எனது  வேண்டுகோள் 

இது, புதுக்கோட்டையிலிருந்து 

கடந்த ஜனவரி-2014முதல் 

12ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் 

'வீதி' கலை-இலக்கியக் களம் என்னும் 

அமைப்பல்லாத அமைப்பின் அறிவிப்பு

ஆம்! இதற்கு,

தலைவர், செயலர், பொருளர் என்று யாரும் இல்லை,

ஒருங்கிணைப்பாளராக

புதுக்கோட்டை கவிஞர் மு.கீதா அவர்கள்

12ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறார்கள்

--------------------------------------------------------------------

“வீதி” அமைப்பின் 

மற்றும் ஒரு முன்னெடுப்பு

தோழர்களுக்கு வணக்கம்

வரும் 08/3/26 முதல்

சிறுகதை படிக்கும் / படைக்கும்

ஆர்வத்தைத் தூண்டும் வகையில்

நமது 'வீதி' சார்பாக

"கதை-வீதி" என்னும் புலனக் குழுவைத்

தொடங்குகிறோம். 

நல்ல கதைகளைப் படிப்பது,

படைப்பது, விமர்சனம் செய்வது மட்டுமே

இதன் நோக்கம்

-------------------------------------------------------------

இதில்

வேறு எந்தப் பதிவுகளுக்கும் 

இடமில்லை

-------------------------------------------------------------

ஒவ்வொரு ஞாயிறு காலை 6 - 7மணிக்கு

ஒரு சிறந்த சிறுகதை 

குழு நிர்வாகிகளால்

பகிரப்படும்.

அந்த வாரம் முழுவதும்

அதுபற்றிய கருத்துப் பகிர்வு நடக்கும் 

 (விவாதம் அல்ல - அவரவர் கருத்து அவ்வளவே)

---------------------------------

உலகெங்கும் உள்ள

 படிப்பை, படைப்பை விரும்பும்  

நண்பர்கள் இணைந்து பயன் பெறலாம் என்பதை

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

----------------------------------------------

நேற்றுத் தொடங்கிய

கதை – வீதி” குழுவில்

இன்று மதியம் வரை சுமார் 350பேர்

இணைந்திருக்கிறார்கள்!

--------------------------------------

நீங்களும்

உங்கள் நண்பர்களும் இணைய,

பின்வரும் இணைப்பில் வரலாம்!

Follow this link to join my WhatsApp group: 

https://chat.whatsapp.com/IcrJfsOtwb8H9jCDTDwEWI?mode=gi_t 

----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக