தனிநாயகன் - ஆவணப்படம் பார்க்க வருக! தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் வளர்க!

 மலேயாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மென்பொருளாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்களைத் தலைவராகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு – தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation - THF)

சாதி, மத, இன அடிப்படையிலேயே பெரும்பாலானவற்றை நடத்தி அதன் காரணமாகவே இழிநிலை நோக்கிச் சென்று வரும் தற்காலத் தமிழர்க்கு உண்மையான நமது வேர்களையும் விழுதுகளையும் அறிமுகப்படுத்தி ஆய்வுப் பணிகளைத் தொடரும் சிறப்பான அமைப்பு இது.

உலகளவிலான தமிழர்க்குத் தனது இணையப் பணிகளால் அறிமுகமான திருப்புவனம்–மதுரை-ஜெர்மனி-கொரியா -ஜப்பான் எனப் பறந்து வரும் முனைவர் ந.கண்ணன் அவர்கள் இதன் தோற்றுநர்களில் ஒருவரும் துணைத்தலைவருமாவார்.

திருச்சியில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும்  எழுத்தாளர் சமூகவியல் அறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் இதன் செயலாளர்.

இதன் பொருளராக முனைவர் இனிய நேரு பணியாற்றி வருகிறார்

த.ம.அ. வெள்ளிவிழா, கடந்த 22-8-2026 அன்று சென்னையில் நடந்தது. வழக்கம் போல, நூல்கள் வெளியீடு நிகழ்வுடன் தனிநாயகம் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

உலகத் தமிழ் மாநாடுகளைத் தொடங்கி வைத்த பெருமை தனிநாயகம் அடிகள் அவர்களையே சாரும். அவரைப் பற்றிய சரியான மற்றும் முழுமையான ஊக்கச் செய்திகளை  இன்றைய (ஜென்-ஸி) தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அற்புதமாக ஆவணப் படம் இது.

 அனைவரும் பார்க்க வேண்டுகிறேன்.

  த.ம.அறக்கட்டளைத் தலைவர்

 சுபாஷிணியின் கருத்தாக்கம், தயாரிப்பில்,     

அருமை நண்பர் 

                  கவிஞர் பிருந்தாசாரதி                     

எழுதி இயக்கியிருக்கிறார்.

இசை - ஜோஹன் சிவனேஷ்

பாராட்டுகள் சுபா!

வாழ்த்துகள் பிருந்தாசாரதி!, ஜோஹன்.

--------------------------------------------------------------- 

ஆவணப் படத்தின் இணைப்பு -

https://youtu.be/vettZuaj000?si=iCkpQ3oFK60qx_x_

இதுபோலும் ஏராளமான தமிழ், தமிழ்ச் சமூகம் சார் பணிகளை

இடையறாது,  உலக அளவில் 

 முன்னெடுத்துவரும்  தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை 

இதுவரையிலும் அறியாதவர்கள் 

 அவசியம் தெரிந்து கொள்வதோடு 

இதன் பணிகளில் உதவலாம் 

அதன் இணையம் : 

Tamil Heritage Foundation – THF :

https://tamilheritage.org/

 --------------------------------------------------------------------------

இரண்டு உரைப் பதிவுகள் : ரசிகமணி டி.கே.சி. - வட்டத்தொட்டி, திருக்குறள் ஆய்வுப் பட்டிமன்றம்.

 கடந்த 20ஆம் நூற்றாண்டின்

குறிப்பிடத்தக்க தமிழறிஞர்

ரசிகமணி டி.கே.சி. அவர்கள்

அவர்களது "வட்டத்தொட்டி" மிகப் புகழ்பெற்றது

அவர்களின் குடும்பத்தினர் 

நடத்திவரும் இணைய நிகழ்வில்

எனது 25 நிமிட உரை.

பிறகு கேள்வி பதில்

                                             கலந்து கொண்ட நண்பர்கள் கேட்ட

கேள்விக்கான பதிலும்

தொடர் இணைப்பில் உள்ளது.

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். 

எனது உரையின் காணொலி இணைப்பு :

கீழுள்ள இணைப்பில் சொடுக்குக:

https://youtu.be/ZbltDqXNKPE?si=u06mYjh3KRlLHDOl 

இதற்கு முன் நான் பலமுறை பேசியுள்ள

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

என்னும் தலைப்பில் பல புதிய செய்திகளுடன்

பேசியிருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்

----------------000------------------ 

அடுத்து வருவது,

புதுக்கோட்டையில்

திருக்குறள் பேரவை நடத்திய நிகழ்வில்

திருக்குறளின் பெருமைக்குக் காரணம்:

அறமா?  பொருளா?  இன்பமா?

எனும் தலைப்பிலான

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்ற நிகழ்வு

இதன் காணொலி இணைப்பு:

https://youtu.be/CjZbvhepFl0?si=GHdXrslgyKNR9KgD 

------------------------------------------------------------