தனிநாயகன் - ஆவணப்படம் பார்க்க வருக! தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் வளர்க!

 மலேயாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மென்பொருளாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்களைத் தலைவராகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு – தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation - THF)

சாதி, மத, இன அடிப்படையிலேயே பெரும்பாலானவற்றை நடத்தி அதன் காரணமாகவே இழிநிலை நோக்கிச் சென்று வரும் தற்காலத் தமிழர்க்கு உண்மையான நமது வேர்களையும் விழுதுகளையும் அறிமுகப்படுத்தி ஆய்வுப் பணிகளைத் தொடரும் சிறப்பான அமைப்பு இது.

உலகளவிலான தமிழர்க்குத் தனது இணையப் பணிகளால் அறிமுகமான திருப்புவனம்–மதுரை-ஜெர்மனி-கொரியா -ஜப்பான் எனப் பறந்து வரும் முனைவர் ந.கண்ணன் அவர்கள் இதன் தோற்றுநர்களில் ஒருவரும் துணைத்தலைவருமாவார்.

திருச்சியில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும்  எழுத்தாளர் சமூகவியல் அறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் இதன் செயலாளர்.

இதன் பொருளராக முனைவர் இனிய நேரு பணியாற்றி வருகிறார்

த.ம.அ. வெள்ளிவிழா, கடந்த 22-8-2026 அன்று சென்னையில் நடந்தது. வழக்கம் போல, நூல்கள் வெளியீடு நிகழ்வுடன் தனிநாயகம் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

உலகத் தமிழ் மாநாடுகளைத் தொடங்கி வைத்த பெருமை தனிநாயகம் அடிகள் அவர்களையே சாரும். அவரைப் பற்றிய சரியான மற்றும் முழுமையான ஊக்கச் செய்திகளை  இன்றைய (ஜென்-ஸி) தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அற்புதமாக ஆவணப் படம் இது.

 அனைவரும் பார்க்க வேண்டுகிறேன்.

  த.ம.அறக்கட்டளைத் தலைவர்

 சுபாஷிணியின் கருத்தாக்கம், தயாரிப்பில்,     

அருமை நண்பர் 

                  கவிஞர் பிருந்தாசாரதி                     

எழுதி இயக்கியிருக்கிறார்.

இசை - ஜோஹன் சிவனேஷ்

பாராட்டுகள் சுபா!

வாழ்த்துகள் பிருந்தாசாரதி!, ஜோஹன்.

--------------------------------------------------------------- 

ஆவணப் படத்தின் இணைப்பு -

https://youtu.be/vettZuaj000?si=iCkpQ3oFK60qx_x_

இதுபோலும் ஏராளமான தமிழ், தமிழ்ச் சமூகம் சார் பணிகளை

இடையறாது,  உலக அளவில் 

 முன்னெடுத்துவரும்  தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை 

இதுவரையிலும் அறியாதவர்கள் 

 அவசியம் தெரிந்து கொள்வதோடு 

இதன் பணிகளில் உதவலாம் 

அதன் இணையம் : 

Tamil Heritage Foundation – THF :

https://tamilheritage.org/

 --------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. 'தமிழ் மரபு அறக்கட்டளை'க்கு அருமையான அறிமுகம்! தமிழுக்கு இவர்கள் செய்து வரும் தொண்டு தலைவணக்கத்துக்கு உரியது. பழைய ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்றவற்றைப் பாதுகாத்து ஆவணப்படுத்துவதோடன்றி இவை தொடர்பாகவும் இன்ன பிற மொழியியல் - வரலாறு - வாழ்வியல் தொடர்பாகவும் எழுதுவது, பரப்புவது என இடைவிடாமல் ஒரு முழுமையான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு முனைவர் சுபாசினி அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினால் அவர் செய்யும் இந்த அரும்பணி இன்னும் பரவலாகச் சென்றடையும்.

    ஈழத்துத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் பற்றி இவர்கள் ஆவணப்படம் வெளியிடுகிறார்கள், அதுவும் அதை நீங்கள் இவ்வளவு பாராட்டுகிறீர்கள் என்றால் அதைப் பார்ப்பதை விட வேறென்ன வேலை? இதோ புறப்படுகிறேன் ஐயா! நன்றி!

    பதிலளிநீக்கு