அன்பின் இனியவர் அனைவர்க்கும் வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்
நாளை -14-01-2014 பொங்கல் அன்று
காலை 9மணிக்கு
உங்கள் வீட்டுக்கு வரும் வாய்ப்பு வந்திருக்கிறது.
அனேகமா நான் 9.15மணிக்கு
முதல் ஆளா வந்து சேர்வேன்னு நினைக்கிறேன்....
உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில்
கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசையில் வருகிறேன்.
அட ஆமாங்க..
பொங்கல் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன்.
தலைப்பு
அன்பிலும் பாசத்திலும் சிறந்தவர்கள்
உறவினர்களா? நண்பர்களா?
நடுவர்
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
உறவினர்களே! நண்பர்களே
நா.முத்துநிலவன், கோவை தனபால்,
மதுக்கூர் இராமலிங்கம் கவிஞர் இனியவன்
...அப்புறம்...
தமிழர் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
பேச -94431 93293
மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com
-------------------------------------------
தொலைக்காட்சி இணைப்புக்குச் சொடுக்குக -
தொலைக்காட்சி இணைப்புக்குச் சொடுக்குக -
தலைப்பு ரொம்ப கஷ்டம் ,நண்பர்கள் நம் ரத்தம் பாயாத உறவுகளே !நல்ல உறவு (அப்பா,அம்மா)நண்பர்கள் போல இருக்கவேண்டும் இப்டி எல்லாம் தீர்ப்பு சொல்லமாட்டாங்கள ?சரி நாளைக்கு பார்த்து தெரிஞ்சுகிறேன் !
பதிலளிநீக்குகஷ்டமான தலைப்புத்தான்... ஆனாலும் எல்லாவற்றிலும் இன்னொரு முகம் உண்டுதானே? அதுபற்றி நாங்கள் இரண்டுபேரும் (நானும் மதுக்கூரும்) தான் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.. எப்டிப் பேசியிருக்கோம்னு பாத்துட்டுச் சொல்லு,.. நன்றி பா.
பதிலளிநீக்குவருக வருக...
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...
நானும்தான் உங்கள் கருத்திற்காக...
நீக்குகாலையில் அனைவருமே காத்திருந்து ஆவலுடன் பார்த்தோம்... ரசித்து சிரித்தோம்... இன்னும் சிறிது நேரம் பேசி இருக்கலாம் என்று என் மனதிற்கு பட்டது... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா... விரைவில் youtube இணைப்பு கிடைத்தவுடன் அனுப்புகிறேன்...
நீக்குகீழே இணைப்பை கொடுத்துள்ளேன் ஐயா... காணொளியோடு ஒரு பதிவாக பகிர்ந்து கொள்ளவும்... நன்றி... வாழ்த்துக்கள்...
நீக்குhttp://www.dailymotion.com/video/x19mzwe_pattimanram2_shortfilms?start=9
நாளைக்கு பார்த்திடுறேன் சார் தகவலுக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபாருங்கள், பகிருங்கள் நன்றி சரவணன். தங்களுக்கும் என் இனிய தமிழர் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்
நீக்குஅண்ணா நன்றி எல்லாம் toooo much.no formalities.strict அ சொல்லிட்டேன்
பதிலளிநீக்குSORRY ப்பா,
நீக்குஅட இதுவும் சொல்லக் கூடாதில்ல...?
சரிப்பா. இனிமேல் சொல்லல.
வாழ்த்துகள் ஸார். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஐயாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்கு\வாங்க ஐயா! ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பட்டிமன்றத் தலைப்போ தீர்ப்போ முக்கியமல்ல நமது கருத்தும் கருத்துக்கும் வலுசேர்க்கும் எடுத்துக்காட்டுகளும் தான் முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டுமா? அந்த வகையில் சும்மா அசத்தியிருப்பீர்கள் ஐயா. பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
-------
தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
நமது - இந்தச் சொல்லில் நெஞ்சைத் தொட்டுவி்ட்டீர்கள்... இந்த உறவாகிவரும் நட்பில்தான் உலகம் சுழல்வதாக நினைக்கிறேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மலேசியாவில் கலைஞர் தொலைக்காட்சி உள்ளது.. நாளைக்கு பார்த்த பின் தொலை பேசியில் உரையாடுகிறேன் ...ஐயா.தங்களின் தமிழ்ப்பணி வளர எனது வாழ்த்துக்கள் ஐயா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
நீக்குஅவசியம் பாருங்கள்...
அடுத்ததாய்ப் பேசுங்கள்...
காத்திருங்கள் ...
காத்திருக்கிறேன்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி அய்யா, தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்
நீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! நாளை அவசியம் தங்களை தொலைக்காட்சியில் சந்திக்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி சகோதரி, தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். பார்த்துவிட்டுத் தங்கள் கருத்தை அவசியம் தெரிவியுங்கள்.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி அய்யா. தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்
நீக்குநாளை -14-01-2014 பொங்கல் அன்று
பதிலளிநீக்குகாலை 9மணிக்கு
உங்கள் வீட்டுக்கு வரும் வாய்ப்பு வந்திருக்கிறது.
அனேகமா நான் 9.15மணிக்கு
முதல் ஆளா வந்து சேர்வேன்னு நினைக்கிறேன்....
வரலாம்ல...?
உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில்
கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசையில் வருகிறேன்.
அட ஆமாங்க..
பொங்கல் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன்.//
இன்பம் பொங்கும் திரு நாளில்
இதயம் மகிழ வரவேற்கின்றோம்
பொங்கிப் படைத்த படையலுண்டு
பொழுதைக் கழிக்கப் பாக்களுண்டு
தங்கத் தமிழை நேசிக்கும்
தனையன் உன்னை மனம் பூஜிக்கும்
வங்கக் கடலும் வற்றிடலாம் இனி என்றும்
வற்றா நட்பை நாம் தொடர்வோமே ! :)
இனிய தைப் பொங்கல் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள் ஐயா தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .
வங்கக் கடலும் வற்றாது - நம்
நீக்குவளரும் நட்பும் வற்றாது
தங்கள் வாழ்த்தில் அகமகிழ்ந்தேன் - இத்
தமையன் வாழ்த்தை அகமேற்பீர்!
வாழ்த்துக்கள் அண்ணா..
பதிலளிநீக்குஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி மது.
நீக்குஉங்களுக்கும் என் தங்கை, மருமக்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.
வணக்கம் தோழர்,
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் தாங்கள் பங்கு பெற்ற பட்டிம்ன்றத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்தோம். 'வாட்டருக்கும் குவார்ட்டருக்கும் என்ன வேறுபாடு ' என்று ஆரம்பித்த தங்கள் பங்களிப்பு மிக நன்றாகவும் , ஆக்கபூர்வமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள். நடுவர் ஐ.லியோனி தனக்கே உரித்தான பாணியில் கலக்கினார். தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்றுதான் என்பதனை மிக அழுத்தமாக அவர் சொன்ன விதம் அருமை. மதுக்கூர் இராமலிங்கம், கோவை தனபால்,இனியவன் அனைவருமே நன்றாக வாதாடினார்கள். வாய்ப்புக்கள் கிடைத்தால், தொடர்ந்து பட்டிமன்றங்களில் பங்கு கொள்ளுங்கள். எந்தக் கருத்தை நாம் சொல்வதாக இருந்தாலும், ஏற்கன்வே ஏதோ ஒரு வகையில் அறிமுகம் என்றால் நம்து கருத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக காது கொடுத்து கேட்பார்கள்.உங்களது பங்களிப்பு மிக நன்றாகவே, சுயமரியாதையோடு கூடிய பங்களிப்பாகவே இருக்கிறது. பங்கு பெறுங்கள், இன்னும் புகழ் பெறுங்கள்.தங்களுக்கு கிடைக்கும் புகழ் , தரம் வாய்ந்த பலரை உயர்த்தும் ஏணிப்படியாக்த்தான் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
முனைவர் வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்
நான் நினைத்திருந்தால் இன்னும் கூடுதலான புகழுடன்(?) பொருளையும் சம்பாதித்திருக்க முடியும். இது என் நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும். என் சுயமரியதை உணர்வால் நான் இழந்தது அதிகம். ஆனால், பெற்றது அதைவிடவும் மதிப்பு மிகுந்த மனநிறைவு. எனவேதான் தொடர்கிறேன். புரிந்துகொள்ளக்கூடிய உங்களைப் போன்ற தோழர்களின் அன்பால் இதையே தொடர்வேன். நன்றி தோழர். தங்கள் குடும்பத்தினர்க்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.
நீக்கு.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி, தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குவணக்கம்.என் பெயர் செந்தில் குமார்.கல்விதகுதி-பொறியியல் முனைவர் பட்டம்(மின்னியல்).தொழில்-பேராசிரியர்.ஊர்-சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.மின் அஞ்சல் முகவரி-ramsenthil@gmail.com.உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன்.பாராட்டவோ அல்லது குறை சொல்லவோ ஏதும் இல்லை.ஒரு சாதாரண பேச்சாகத்தான் எனக்கு பட்டது.நீங்கள் இருக்கும் இடம் அப்படி.அந்த குழுவிலிருந்து நீங்கள் வெளியே வந்தால்தான்,உங்களால் சிறப்பாக பேசமுடியும் என்பது என் நம்பிக்கை. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநன்றி செந்தில். தங்கள் சொல்லாடலில், முன்னர் இருந்த கோபம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். “பாராட்டவோ, குறைசொல்லவோ ஏதுமில்லை” என்பதே ஒருவகைப் பாராட்டுத்தான். விளம்பரம் கூடக்கூட, எங்கள் கவிதைகளும் கருத்துகளும் வெட்டுப்பட்டு வெளியே கிடந்து துடிப்பது உங்களுக்குத் தெரியாது, நேரில் வந்த நண்பர்கள்தான் அறிவார்கள். ஊடகங்களில் நாம் வெளியேறிவிட்டால், நம்மினும் தரங்கெட்ட படைப்பைத் தர ஆயிரம்பேர் இருக்கிறார்கள், எனவே அதற்குள் இருந்து முடிந்தவரை செய்யலாம் என்னும் என் கருத்தே இன்றுவரை சரியென்பதால் தொடர்கிறேன். என் துறைசார் “சீனியாரிடி“யில் நான் மாவட்ட அலுவலர் ஆகியிருக்கவும், அதைவிட முன்பே பட்டிமன்றத்தில் “தொழில்ரீதிநடுவர்”ஆகியிருக்கவும் முடியும். ஆனால், அவற்றை நான் தெரிந்தேதான் ஏற்கவில்லை. இன்னும் நாம் போகவேண்டிய தூரம் அதிகம். இயலும்வரை தொடர்வோம். உங்களின் அறிவார்ந்த கருத்துகளை இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கருத்து வேறுபாடு நம் நட்பைப் பாதிக்காது என்றே நம்புகிறேன். தங்களை வெளிப்படுத்திக் கொண்டமைக்கு என் நன்றியும் வண்க்கமும். தொடர்வோம்
நீக்குவாழ்வின் விமர்சனங்கள்தான் நம்மை அடுத்த தளத்திற்கு முன் செலுத்தும் ... நீங்கள் சொன்னதுதான் அண்ணா. செந்திலின் தற்போதைய கருத்தில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது ...
நீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
இணையங்களில் பதிவாகி வந்தபின்னரே என்னால் பார்க்கமுடியும். பார்த்துவிட்டு கருத்தினைப் பகிர்வேன் ஐயா!
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!
நன்றி சகோதரி. தங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள். இணையத்தில் பார்த்தபின் தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
நீக்குஅண்ணா ,
பதிலளிநீக்குபொங்கல் சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.சன் டிவி ,விஜய் டிவி பொங்கல் நிகழ்ச்சியெல்லாம் யூ டிபிள் வந்துவிட்டது .கலைஞர் இன்னும் update ஆகவில்லை( நான் பட்டிமன்றத்தை சொன்னேன் )பார்த்தவுடன் எழுத ஆவல் ஆனால் இப்படி சொதப்பும் என்று நான் எதிர்பார்க்கவில்லை
தங்கள் பட்டிமன்றத்தை தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிட்டியது... தங்கள் வாதம் அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா. இணையத்தில் தேடி இன்றுதான் பார்த்தேன்.
பதிலளிநீக்கு"நட்பின் முதிர்ச்சியே உறவுதானே " மிகவும் அருமை!
நன்றி!