ஆலங்குடி - புதுக்கோட்டை மாவட்டம்
நான் முகநூலில் தொடர்ந்து எழுதுவதில்லை. என்றாலும், என்
வலைப்பக்கத்தில் எழுதுவதை முகநூல் நண்பர்களின் பார்வைக்கு வைப்பேன். முகநூலில்
மட்டுமே எழுதுவோரில் “சீரியசாக” எழுதுவோர் மிகவும் குறைவு
(தமிழறிஞர் பொ.வேல்சாமி முகநூலில் மட்டுமே ஆழமான இலக்கியச் செய்திகளை எழுதிவருகிறார்-
இவர்போலும் எழுதுவோர் மிக மிகவும் குறைவானோர்)
என்றாலும் புதுக்கோட்டை அருகிலிருக்கும்
ஆலங்குடியை மையப்படுத்தி எழுத்தாளர்கள் நிறையப் பேர் உள்ளனர். பத்திரிகையாளர்கள், இலக்கிய
இதழ்களில் எழுதுவோர் பலர் வலைப்பக்கம் தொடங்காமல் முகநூலிலேயே எழுதி வருகின்றனர்.
அவர்கள் ஒரு நட்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நண்பர் ரமா ராமநாதன்
அழைத்தார். ஏற்பாட்டாளர்களை எனக்குத் தெரியவில்லை. சந்திப்பில் என்ன
பேசப்போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் குமாரும் பேசினார். புதுக்கோட்டை,அறந்தாங்கி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நம் வலை நண்பர்கள் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
அழைப்பிதழ் மேலுள்ளது.
திரு ரமா. ராமநாதன் அலைபேசி எண்-9865566151
திரு செந்தில்குமார் அலைபேசி எண்- 8973070044
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
முகநூல் நண்பர்கள் சந்திப்பு இனிதாக நடைபெற எனது வாழ்த்துக்கள் ஐயா...
தூரம் எம்மை பரித்து வைத்துள்ளது... நட்பு என்ற ஒன்று மட்டும் பிரிக்கவில்லை ஐயா நம்முடைய நட்பு தொடரும்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன், நம் போட்டிக்கான இறுதித் தேதியை மாற்றியதும் நல்ல்துதான். நட்பும் தமிழும் தொடரட்டும்
நீக்குசந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா... தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி வலைச்சித்தரே.
நீக்குசந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநீங்கள் முகப்புத்தகம் பக்கம் வருவதில்லை என்று தெரியும் அய்யா. நான் நட்பு வேண்டுகோள் விடுத்து பல நாட்களாச்சே!!
வணக்கம்.
பாண்டியன்
மிக்க மகிழ்ச்சி பாண்டியன். எனக்கு முகநூலில் தொடத்தெரிந்த அளவிற்குத் தொடரத் தெரியாது, கற்றுக்கொள்ள ஆவல்தான். விரைவில் கற்றுக்கொண்டு மீள்வேன். அன்பிற்கு நன்றி. வகுப்பில் முதல் பெஞ்சில் இருந்த நீ ஏன் இப்படி ஒரு பெயரில்?
நீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி அய்யா.
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குநல்லதொரு செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். சந்திப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழா படைப்பாளிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கட்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.
நன்றி பாண்டியன், சற்று முன்னுள்ள பாண்டியன் -குழப்பம் வேண்டாம், எங்கள் பள்ளியில் படித்த மாணவர்.
நீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவெறும் வாழ்த்து மட்டும்தானா? ரெண்டுபேரும் வரலாம்லஃ
நீக்குFACEBOOK என்பது பெயர்ச்சொல்.அதை முகநூல் என்று தமிழ்படுத்துவது எப்படி சரியாகும்?ஒரு படத்தில் EASTWOOD என்ற பெயரை கிழக்குகட்டை என்று சொல்வதைப்போல் இருக்கிறது இது.
பதிலளிநீக்குபெயர்ச்சொற்களை அவசியமின்றி மொழிபெயர்க்க வேண்டியதில்லை என்றுதான் சொல்வார்களே அன்றி அழகுத் தமிழில் அர்த்தமும் புரிய மொழிபெயர்ப்பதில் என்ன தவறு நண்பரே? அப்படியாயின் ஏராளமான அறிவியல் சாதனங்களை எல்லாம் ஆங்கிலத்திலேயே -அப்படி அப்படியே- எடுத்தாளத்தான் வேண்டுமா? அதற்காக இன்னொரு முனையில் நின்றுகொண்டு, “ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரி” என்பதை “எருதந்துறை அகரமுதலி” என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அவ்வளவு ஏன்? தொலைபேசி, செல்பேசி, கணினி இவற்றை ஏற்கும் தமிழர் முகநூலை ஏற்கக் கூடாதா என்ன? விவாதம் தொடரலாம். நேரமிருந்தால் எனது வலையில் மறுபதிவு செய்யப்பட்ட எனது தினமணிக் கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.in/2012/10/blog-post_20.html நன்றி.
பதிலளிநீக்குசந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஏதாவது சடங்கு சொல்லி சொந்தக்காரர்களை யெல்லாம் சந்திக்கிறவர்கள் மத்தியில் ஏதாவது சாக்கு சொல்லி நண்பர்களை அவ்வப்போது சந்திப்பதுதான் நோக்கம்.. என்ன நடக்கிறது என்று பார்ப்பது இரண்டாவது ... நன்றி அய்யா.
நீக்குஉங்கள் கட்டுரையை படித்தேன்.எனக்கு முழு உடன்பாடு.அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.காரணப் பெயர்களை மொழிமாற்றம் செய்யலாம்.உதாரணமாக football ஐ கால்பந்து என்றும் basketball ஐ கூடைப்பந்து என்றும் சொல்லலாம்.தவறில்லை.ஆனால் கிரிக்கெட் அப்படி அல்ல.hockey அப்படி அல்ல.cricket கிரிக்கெட் என்றே அழைக்கப்பட வேண்டும்.அது போலவே மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும்.அவர்கள் கண்டுபிடித்தார்கள்.அவர்கள் பெயர் வைக்கிறார்கள்.அதை மாற்ற நமக்கு உரிமை இல்லை.இது என் கருத்து.
பதிலளிநீக்குஇதை மொழிபெயர்த்துத்தான் ஆகவேண்டும் என்னும் வறட்டுப் பிடிவாதம் மொழிப்பயன்பாட்டுக்கும் ஆகாது, மொழி வளர்ச்சிக்கும் உதவாது. அதே நேரம் அலட்சியத்திற்குப் பெயர் போன தமிழர்களிடத்தில் மறைமலையார், பரிதிமாற்கலைஞர் பாவாணர், பெருஞ்சித்திரனார்களும் இருந்து “குத்திக்கொண்டு“ இருக்கவேண்டியதும் அவசியம்தானே? “தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற்பின்னணி” முனைவர் அய்யா கு.திருமாறன் அவர்கள் எழுதியது. மிக அரிய பார்வை. அது தான் எனது பார்வையும்... என்ன செய்ய? “இருமுனைத் தவறுகள்“ தொடரும்வரை நாமும் தொடரத்தானே வேண்டும்?
நீக்குஉங்களின் கருத்துரையில், ”அவர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்கள் பெயர் வைக்கிறார்கள்.அதை மாற்ற நமக்கு உரிமை இல்லை” என்னும் கருத்தில் நான் மாறுபடுகிறேன். மக்களுக்கான கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதற்கும் சொந்தம். அவரவர் பயன்பாட்டிற்கேற்ப பெயர்வைத்துக் கொள்வதில் தவறில்லையே? சைக்கிளை மிதிவண்டி என்றதோடு நம் வேலை முடிந்துவிட்டது! அதில் உள்ள நூற்றுக்கணக்கான சிறுபொருட்கள் அனைத்தும் இன்னும் ஆங்கிலத்திலேயே புழங்கப் படுகின்றன... மிதிவண்டி தொடர்பான மற்றும் ஒரே தமிழ்ச்சொல் “கோட்டம்” என்பதுதான்.... மற்ற அனைத்தும் ஆங்கிலமே. சொல்லிப் பாருங்கள்... இது சரிதான் என்கிறீர்களா நண்பரே? இயன்ற வகையில் தமிழ்ப்படுத்த முயலவேண்டாமா - வறட்டுப் பிடிவாதத்துடன் அல்ல, இயல்பான மக்கள் மொழியில.?
நீக்குஇதோ இந்தத் தளத்தைப் பாருங்கள்... Intelligensia = அறிவுய்தி
நீக்குTwitter = கீச்சு
Mobile phone = நகர்பேசி
Editor = எடுவிப்பாளர்
Auxillary verb = துணை வினை
Conditional Phrase = கட்டியத் தொடர்
Extreme = எக்கிய
Fashionable view = படிய நோக்கு
Surplus value = உவரி மதிப்பு
-------------- http://thamizhchol.blogspot.in/2014/01/blog-post_11.html இதை உங்களால் முழுவதுமாக ஏற்க முடிகிறதா? அய்யா இராம.கி. நல்லறிஞர்தான். ஆனால்...
நண்பர்கள் விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே, நீங்களும் இந்தப் பக்கம் வரும்போது தெரிவிக்க வேண்டுகிறேன்... நண்பர்கள் வட்டத்தைச் சந்திப்போம் என்ன?
நீக்குசந்திப்புச் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!