ஆமா... நம்ம சுதந்திரநாளுக்கும்,
குடியரசு நாளுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய செய்தித்தாள் ஒன்றின் முதல்பக்கத்தில் அரைப்பக்க விளம்பரம் -மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரம்- ஒன்றில்
கட்டுரையைப் படிக்கும் முன்,
சுதந்திர தினம், குடியரசு தினம்
இரண்டுக்குமான வித்தியாசங்களை
முதலில் பார்த்துவிடுவோம்
முதல் வித்தியாசம்.
ஆகஸ்டு-15, சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே
கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள
கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்.
அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு
*"கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,
ஜனவரி-26, குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின்
உச்சியிலே கட்டப்பட்டிருக்கும்.
அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி
திறக்கப்பட்டு பறக்கவிடப் படவேண்டும்
இதை கொடியை பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்பார்கள்..
இரண்டாவது
வித்தியாசம்.
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை.அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head கருதப்பட்டார்.
குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்
கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக
உரையாற்றுவார்..
குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் (இந்தியா குடியரசு ஆன ஆண்டு 1950) அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர்
என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..
மூன்றாம் வித்தியாசம்...
சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது
குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாதையில்
கொடி பறக்கவிடப்படுகிறது
-----------------------------------
இரண்டு நாள்களிலும்
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படாத
தலைவர்களே கொடியேற்றி வந்த
வழக்கத்துக்கு மாறாக,
மக்கள் போராடிப் பெற்ற சுதந்திர தினத்தில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்/ பிரதமர்களும்,
அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின்
குடியரசு தினத்தில்,
அரசியல் சட்டத் தலைவர்களான
(நியமனத் தலைவர்களான) மாநில ஆளுநர்/
குடியரசுத் தலைவர்களும்
கொடியேற்றுவதை
இந்திய அரசுடன் சட்டப் போராட்டம் நடத்தி
நடைமுறைக்குக் கொண்டுவந்தவர்
தமிழக முதல்வராக இருந்த
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான்!
(இதனால் இப்போது மாநில முதல்வர்கள்
இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தன்று
கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!)
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம்.
அடேங்கப்பா! அரசியல் சாசனம்:
அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த மூன்று வார்த்தைகள்:@@இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை,தெளிவாக விளக்குகிறது. முகவுரை இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல் மற்றும் அரசியலமைப்பின் இதயம் எனபோற்றப்படுகிறது.
தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:
ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.
முதல் குடியரசு தினம் -
எப்படி கொண்டாடப்பட்டது:ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில்,1950 ஜன.,26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் ஜெய் என கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதான) நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.
யார் அதிகம் :அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
யார் குறைவு:நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
ஜன.,26 ஏன்?@@1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.
நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி அய்யா,
நீக்குவந்ததற்கும், கருத்துத் தந்ததற்கும்
மிகவும் அருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கல்ள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குசொல்ல வேண்டுமென்று நினைத்தது மட்டுமே நான்,
நீக்குசொன்னது தினமலர். கருத்துப் பதிவிட்டமைக்கு நன்றி அய்யா
அனைவரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
தகவல்களை எடுத்து வழங்கியதற்கு, நன்றி!
பதிலளிநீக்குமிக சரியாக சொன்னீர்கள் ஐயா!.பள்ளிகளில் கொடியேற்ற வரும் ஊராட்சி தலைவர்கள் பலர் குடியரசு தினம் எனறால் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்..ஆனால் ஒரு அரசுத் துறையே இப்படி செய்திருப்பது மிக தவறானது. அது எந்தப் பத்திரிக்கை என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.அதை சரிபார்க்காது வெளியிட்ட பத்தி ரிகையும் கண்டிக்கத் தக்கதே
பதிலளிநீக்குஎனக்கும் குடியரசு தினத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு .இந்த நாளில்தான் எனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது .. ஆம் ஐயா இதே நாள் தான் எனது திருமண நாள்
பதிலளிநீக்குநல்ல தகவல் ஐயா. தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்தேன்....சிறப்பான கட்டுரை.. வாசிக்க வாசிக்க வாசிக்கத்தான் சொல்லுது.... தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா.
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேற்றுதான் என் ஐந்து வயது மகன் இரண்டுக்குமான வேற்றுமையை என்னிடம் கேட்டான்...அவனுக்கு சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று உங்கள் கட்டுரை பார்த்து அறிந்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குகுடியரசுதினம் பற்றிய பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா!
அன்புள்ள அப்பா,
பதிலளிநீக்குகுடியரசுதினம் என்றாலே எனக்கு தாங்கள் என்னை சிறுவயதில் புதுக்கோட்டை பிருந்தாவனம் வீட்டில் நாம் வசித்தபொழுது, பள்ளியில் கொடியேற்றம் முடிந்தவுடன், நாம் அனைவரும், வீட்டில் ஒன்றாய் அமர்ந்து தில்லியில் குடியரசுத்தலைவர் கொடியேற்றுதல், இராணுவ அணிவகுப்பு மற்றும் மாநிலவாரியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இது இது இன்ன இன்ன மாநிலம் என்று தாங்கள் எங்களிடம் விவரமாக எடுத்துக்கூறியது குழந்தைகளாய் இருந்த எங்கள் மனதில் இன்றளவும் பதிந்துள்ளது. இன்றைய பெற்றோர் அதனை தொடர்ந்தால் பின்வரும் காலத்தில் சுதந்திர தினத்திற்கும், குடியரசுதினத்திற்கும் உள்ள வேறுபாடு அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தங்கள் கட்டுரையில் மேலும் சில சுவாரசியமான நிகழ்வுகள்...
இப்பொழுது நாம் பயன்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முன் இரண்டு பெரிய சட்டங்கள் (ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில்) பயன்பாட்டில் இருந்தது. அவை Government of India Act 1935 மற்றும் Indian Independence Act 1947. இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி (Article 395) நவம்பர் 26 1949 அன்று நீக்கப்பட்டு அதன்பிறகே, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1922 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவு இந்தியர்களால் மட்டுமே இயற்றப்படவேண்டும் என்று திரு. காந்தி அவர்களால் முதன்முதலாக முன்னிறுத்தப்பட்டது.
1928 - ஆறு வருடம் கழித்து (சைமன் குழுவிற்கு எதிராக) இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு மோதிலால் நேரு தலைமையினால் ஆன குழுவினால் (நேரு குழு) முழுவதும் இந்தியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவை வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம் 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன
1929 - இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மேலாட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரித்தானியப் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரசு உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான சாற்றுதல் காந்தியால் உருவாக்கப்பட்டது.
1930 - காந்தியின் இந்த, இந்திய சுதந்திரப் பிரகடனம், முழு தன்னாட்சிக்கான சாற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனிய அரசுடனான அடுத்த கட்ட மோதலுக்கு வழிவகுத்தது.
அதனை நினைகூறும் விதமாக ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் குடியரசுநாளாக கொண்டாடப்படுகிறது.
அ. மு. நெருடா.
"இரு நாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை தாகூரை மட்டுமே சேரும்." என்பது உண்மை!
பதிலளிநீக்குதெளிவான விளக்கம்
சிறந்த கருத்துப் பகிர்வு
எனக்கு இருந்த சந்தேகங்களில் ஒன்று ஐயா..பயனுள்ள பதிவு..நன்றி ஐயா..
பதிலளிநீக்கு