மாநில முதல்மதிப்பெண் வாங்கிய மாணவி கொலைகாரியானாள்!

கல்வி என்ன செய்தது?

முதல்மதிப்பெண் வாங்கணும், நல்ல கல்லூரியில நல்லஉயர்படிப்புப் படிக்கணும் என்று தன் பிள்ளைகளைப் பாடாய்ப்படுத்தும் பெற்றோர்களுக்கு இந்தச் செய்தி ஒரு எச்சரிக்கை...

முதல்மதிப்பெண் வாங்கினால்தான் நல்லவாழ்க்கை வாழ முடியும் என்று மக்களை நம்ப வைத்திருக்கும் கல்வித் துறைக்கு இந்தச் செய்தி ஒரு கன்னத்தில் அறையும் மறுப்பு...

முதல்மதிப்பெண் வாங்கினால் தான் தன் கல்விவணிகம் சிறப்பாக நடக்கும் என்று புரிந்தே பிள்ளைகள் வெறும் மனப்பாடப் பிண்டங்களாக வளர்ந்தால் போதும் என்று ஆலாய்ப் பறக்கும் கல்விநிறுவனத் தலைவர்களுக்கு இந்தச் செய்தி ஒரு சாதாரணம்...

முதல்மதிப்பெண்ணை நோக்கியே தன் பிள்ளைகளை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு இச்செய்தி ஒர் அதிர்ச்சி...

என்னதான் அந்தச் செய்தி? இதோ நீங்களே படியுங்கள்-

சகோதரி மாமியாரை கொலைசெய்த கல்லூரி மாணவி... 


இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? 

செய்தியின் கடைசிவரிகளைப் பாருங்கள்... 

http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/01/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/article2016945.ece 

நன்றி தினமணி
என்ன படித்துவிட்டீர்களா? 
இது தொடர்பாக நான் எழுதி நமது பதிவில் இருக்கும் கடிதத்தைப் படிக்க--- 

8 கருத்துகள்:

  1. படிப்புக்கும் ஒழுக்கத்திற்கும்
    மதிப்பெண்ணுக்கும் தரத்திற்கும்
    எந்த சம்பந்தமில்லாமல் நம் கல்வி முறை
    உள்ளதென்பதற்கான மற்றுமொரு உதாரணம்

    பதிலளிநீக்கு
  2. உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி... ஆனால் அது தான் சந்தேகமே...!@

    பதிலளிநீக்கு
  3. இப்போதான் நானும் படித்தேன் .மனம் வேதனையில் ...வன்முறைதான் தீர்வு என கூறும் திரைப்படங்களின் தாக்கம்..ஒரு பக்கம் அழகு ,காதல்,வன்முறை....என இழுக்க ,மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் மதிப்பெண்களை நோக்கி இழுக்க சிதைகின்றது .வளரும் சமுதாயம்.நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் இணைத்துள்ள சுட்டியில் குறிப்பிடட செய்தியை காணவில்லை. அதற்கு பதிலாக இங்கே வாசிக்கலாம்..

    http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/01/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/article2016945.ece

    பதிலளிநீக்கு
  5. ஒழுக்கம், கல்வி இரண்டும் இரு கண்கள் தரும் ஒரே பார்வை போல...
    தவறு எங்கு உள்ளதோ?
    ஆனால், அதிர்ச்சி தரும் செய்தி.

    பதிலளிநீக்கு
  6. முன்பெல்லாம் பள்ளியில் 'மாரல் சைன்ஸ்' என்ற வகுப்பு நடக்கும். இப்போதெல்லாம் அப்படி இருக்கிறதா என்றே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது (4 வருடங்கள் முன்பு) மதிப்பீட்டுக்கல்வி என்றொரு பாட வேளையே இருந்தது. ஆனால் இப்போது இல்லை! அதுபோன்ற பாடவேளைகளில் எங்களுக்கு ஓழுக்கத்தை போதித்தனர். இபோது? பாடங்களோடு நிறுத்திவிடுகின்றனர்..

    பதிலளிநீக்கு