அதிர்ச்சியூட்டிய முகநூல் நண்பர்கள் !

இன்று -12-01-2014 ஞாயிறு மாலை ஆலங்குடியில் கூடிய 
“முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வு” 
எல்லாருக்குமே அதிர்ச்சியாக இருந்தது!

சாதாரணமாக ஒரு புதிய அமைப்புக் கூட்டம் என்றால், 
முதல் கூட்டம் பற்றி நிறைய விசாரிப்புகள் வரும்.
ஆனால் கூட்டம் குறைவாகவே வரும்.

ஆனால், நாங்கள் புதுக்கோட்டையிலிருந்து போகும்போதே ஏற்பாடு செய்த (கல்லாலங்குடி சுபபாரதி மெட்ரிக் பள்ளி) வகுப்பறையிலிருந்து பெஞ்சுகளை எடுத்து 
வெளியே போட்டுக்கொண்டிருந்தார்கள். 
என்ன ஆச்சு என்று விசாரித்தால்...


“சும்மா 10,15பேர்தான் வருவார்கள் என்று பார்த்தால், இப்பவே 35பேர் வந்துட்டாங்க... வகுப்பறை போதாது என்பதால் வெளியில் ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்...
கலந்துகொண்ட  பார்வையாளர்களில் ஒருபகுதியினர்

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து

அமைப்புக் கூட்டம் ஒன்றிலேயே ஏற்பாடு செய்த இடம் போதாமல் பெரிய இடத்தைத் தேடிய முதல் நிகழ்வு இதுதான்.. அந்தா இந்தான்னு கூட்டம் ஆரம்பிக்கும்போதே சுமார் 60பேர் இருந்தார்கள்... 
அதில் 50வயதுக்குமேல் ஆனவர்கள் இரண்டு பேர்தான்.. ஒருவன் நான், இரண்டாமவர் கூட்ட ஏற்பாட்டாளர் திரு சுப.செந்தில்குமாரின் ஆசிரியரும் என் நண்பருமான பிரகாசம் அவர்கள்...

மற்ற பெரும்பாலோர் 30களில் இருந்தார்கள்.

சிலர் 20களில், சிலர் 40களில்... 
ஆக சராசரிவயது 30முதல்35க்குள் இருக்கும் 

எனவே, கூட்ட நிகழ்விலும் இளமை பொங்கித் ததும்பியது!

ரோட்டரி சங்கத் தலைவர் பாபுஜான் தலைமையேற்க, ஆசிரியர் கணேசன் வரவேற்க... மேடையில் என்னுடன் ஒருங்கிணைப்பாளர் சுப.செந்தில்குமார், ரமா.ராமநாதன், சுவாதி, ஸ்டாலின், ஆனந்தாமுருகன், சு.மதியழகன், இருக்க... அனைவரின் அறிமுகம் தொடங்கியது...

அறிமுகத்தின் போதே, 
”என்ன மறந்திடாம லைக் போட்ருங்கப்பா”
 என்று சிலர் முடித்தபோதும் சிரிப்பு...

“பொண்ணுங்க முகநூல்லதான் வரமாட்டெங்கிறாங்கனு பாத்தா... முகநூல் கூட்டத்துக்கும் வரமாட்றாங்க” 
என்றதும் பெருஞ்சிரிப்பு...

அடுத்து வந்தவர் “அதான் ரெண்டுபேர் (கீதாவையும் சுவாதியையும் பார்த்து) வந்திருக்காங்கள்ல..” 
என்று இழுக்கவும் 
“பரவால்ல- இருந்தாலும்- வந்திருக்காங்கள்ல...” 
என்றதும் 
அவங்க ரெண்டு பேருக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு...

வாழ்த்துரைக்க வந்தவர்களும் 
சிரிப்பும் எதார்த்தமுமாகப் பேச கலகலப்பானது நிகழ்வு! 

அதிலும் நகைச்சுவையாகவும், எச்சரி்க்கையுடனும் பேசிய கவிஞர் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்ட நண்பர்களின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது!

மேடையில் இருந்தவர்கள் பேசுவதற்கு முன், 
சுவாதியின் கணவர் மீரா.செல்வகுமார், கவிஞர்கீதா, உ.ஞானவடிவேல், மோதிலால், சிவாமேகலைவன், கவிபாலா, காசாவயல் கண்ணன், பத்திரிகையாளர்கள் மீனாட்சிசுந்தரம், குறும்பட இயக்குநர் சசி என,
எனக்கு அறிமுகமில்லாத ஆனால் என்னையும் மதித்து, மிகுந்த மரியாதையுடன் பேசிய இளைய நண்பர்களைப் பார்க்கப் பார்க்க எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை! 

இளைஞர்களின் வாழ்த்துரைகளே அருமையாக இருந்தன!

(எனது நிறைவுரையை நாளைய பத்திரிகைச் செய்திகளில் இருந்து எடுத்துப் போடுவேன்)

கலகலப்பான... இளைஞர்விழாவாக இந்த முதல் சந்திப்பே சிறப்பாக நடந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. சில நல்ல முடிவுகளையும் எடுத்திருக்கிறார்கள்... விரைவில் அவற்றைப் பார்ப்போம்.

ஏற்பாட்டாளர்கள் சுப.செந்தில்குமார், ஆசரியர் கணேசன், தமுஎச ரமா ஆகியோரை எல்லாரும் கைகுலுக்கி விடைபெற்றோம்... மீண்டும் சந்திப்பதாகச் சொல்லி
------------------------------------------------
(இதில் எனக்கொரு தனிப்பட்ட அதிர்ச்சி, பின்னூட்டத்தில் ............................ போட்டு விட்டிருக்கிறேன், பார்த்து முகநூலில் விவரமானவர்கள் எனக்கு ஏதும் சொல்ல முடிந்தால் மகிழ்வேன்)
------------------------------------------------------------

23 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் அய்யா!.
  முக நூல் நண்பர்கள் கூட்டத்திற்கு இத்தனை நண்பர்கள் வந்திருந்தது சிறப்பான ஒன்று!. தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எனது வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கே வியப்புத்தான் தோழரே! இளைஞர்கள் விட்டேத்தியானவர்கள் என்னும் பொதுப்புத்தியைத் தகர்த்து, எங்கள் ஆலங்குடி இளைஞர்கள் கடைசிவரை என் நிறைவுரையையும் கேட்டுவிட்டு, என்னிடம் வந்து அறிமுகம் செய்துகொண்டு விடைபெற்றது உண்மையிலேயே மறக்க முடியாததாக இருந்தது... இவர்கள் சாதிப்பார்கள்! தங்களின் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி தோழரே!

   நீக்கு
 2. periya vetriyaga amainthadhu mudhal kootam...natpu thodarattum ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போலும் இளைஞர்களில் 100 பேர் இருந்தால் இந்த சமூகத்தையே மாற்றுவேன் என்று விவேகானந்தர் சொன்னது தவறல்ல... என்று, அவரது 151ஆவது பிறந்த நாளில் நான் புரிந்துகொண்டேன் நண்பா! உங்கள் குழு சாதிக்கப் போகிறது!

   நீக்கு
 3. முகநூல் மிக வலுவான ஊடகமாகவே படுகிறது. எளிமைதான் அதன் பலமும் பலவீனமும். என்ன ஒரு பயம் எனில், எனக்கான ஆயுதமாய் இருப்பதைப் போலவே நான் யாரை எதிர்த்து இயங்குகிறேனோ அவனிடமும் முகநூல் ஆயுதமாக இருக்கிறது. நாம் எப்படி இதை பயன்படுத்துகிறோம் என்பதே தீர்மானிக்கப் போகிறது. அண்ணனைப் போன்றோரின் இருத்தல் நம்பிக்கை தருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி எட்வின். இதை நான் அந்தச் சந்திப்பிலும் சொன்னேன் - “நாம் எப்படி எழுத வேண்டும் என்பதை அந்த எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்“என்று! ஆனால், இந்தத் தொழில் நுட்பத்தை நாம் அறிந்து நீந்தி வரவேண்டியதும் அவசியம்தான் என்பதை நம் நண்பர்களும் தெரிந்திருப்பதுதான் மகிழ்ச்சிக்குரியது.

   நீக்கு
 4. அண்ணா

  ஜே.சி. ஐ நிகழ்வொன்றில் கலந்து கொண்டதால் வர இயலவில்லை ஆலங்குடிக்கு..

  நிகழ்வு ரொம்ப ஜோர் என்பது பதிவில் தெரிகிறது

  வாழ்த்துக்கள்

  நிறைவுரையை காண ஆவலுடன்..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா
  நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததைத் தங்கள் பதிவு அழகாக பிரதிபலிக்கிறது. சந்திப்பு இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்திருக்கும். மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் பணி சிறக்கட்டும். பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பாண்டியன், உங்களைப் போன்றவர்கள் இங்கும் (புதுக்கோட்டையைச் சுற்றிலும்) உள்ள நண்பர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம்... நண்பர்களுடன் ஆலோசித்து விரைவில் செய்யுங்கள்... வட்டம் விரிவடையட்டும் நன்றி

   நீக்கு
 6. தானா வந்தா கூட்டம் மாதிரி தெரியலையே. உங்க மேல வச்ச அன்பாலா சேர்ந்த கூட்டம் போலிருக்கே. முகப்புத்தக தோழர்கள் இணைந்து தேசத்துக்கும், மொழிக்கும் நல்லது செய்ய முயன்றால் மிக்க நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்குத் தெரியாதவர்கள் - அதிலும் இளைஞர்கள் - நம்மைத் தெரிந்து வைத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சி, அதைவிட அவர்கள் நம்மீது பெருமதிப்பு வைத்திருப்பதை உணர்த்தி அமைதியாக நம் உரையைக் கேட்டது நம் பொறுப்பை நமக்கு உரைத்தது போல இருந்தது..நல்லது நடக்கும் என நம்பிக்கை விதைத்தது தங்களைப் போன்றவர்களின் அன்புக்கும் நன்றி.

   நீக்கு
 7. தங்கள் பணி சிறக்கட்டும்... வாழ்த்துகள் அய்யா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் தூரத்தில் இருந்தாலும் இதயத்தின் அருகில் ஈரத்தில்தான் இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கைதான் தலைவா!

   நீக்கு
 8. சந்திப்பு....

  நல்ல விஷயம்....

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. உண்மையாவே அதிர்வை தந்த கூட்டம் தான் .நலமே விழையட்டும் .நல்ல மனங்களின் வழிகாட்டலில் ....வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி. உங்கள் கருத்திற்கு மட்டுமல்ல, வந்தது, கவிதை தந்தது, அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து காத்திருந்தது, அவர்களின் குறும்பை ரசித்தது, இதற்கு பெரியமனம் வேண்டும். உங்களின் வழிகாட்டுதலும் அவர்களுக்குத் தேவைஎன்பதை மென்மையாக உணர்த்திவிட்டீர்கள். நன்றி

   நீக்கு
 10. முகநக நட்பது நட்பன்று இடுகையில்
  முகநூலில் நட்பதே நட்பு….

  என்று வந்திருந்தவர்கள் ‘நண்பேன்டா’
  என்று இதயம் குலுங்க கைகோத்துக்கொண்டார்கள்.
  பேச்சுத்திறமையும் தயாரிப்புகளோடும் வந்தவர்கள்
  நிறைய்ய பேசினார்கள்(கவிவர்மன், ஸ்டாலின் சரவணன், சுவாதி;).
  மற்றவர்கள் (மைக்பிடிக்க பயந்தவர்கள்) எழுத்தில்மட்டுமே
  பேசுபவர்கள் இருந்த இடத்திலிருந்தே கைதட்டி தங்களின்
  கருத்தை பதிவு செய்தார்கள். ஆரோக்கியமான கூட்டமாக
  அமைந்தது. கவிஞர் ரமாராமநாதன் வழிகாட்டுதலில்
  நண்பர் செந்தில்குமாரின் வித்தியாசமான அணுகுமுறைக்கு
  வெற்றி என்றே சொல்லலாம். தங்களின் இளமையான உரை எல்லோரையும்
  ஈர்த்தது. 30ஐக் கடந்தவர்களுக்கு 60ஐத் தொடுபவரின் அனுபவம்
  நிச்சயம் தேவை. தங்களின் எழுத்தாற்றல், பேச்சாற்றல், கூட்டத்தை கலைக்காமல்
  கொண்டுபோகும் திறன் ரசிக்கும்படி இருந்தது. தொடரட்டும்
  முகநூல் சமுதாய முன்னேற்றக் கழகத்தின் பணிகள்.

  பதிலளிநீக்கு
 11. ஆகா... கண்ணன், தெருக்குறளா? அருமை!
  ஆமா தங்களின் இளமையான உரை ... நன்றி நண்பா. உங்களின் குரலைப் பாதுகாத்து இனிய பாடல்களோடு, கவிதை, கதைகளையும் காத்திரமாகத் தாருங்கள்... நான் உங்கள் ரசிகன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. முக நூல் நண்பர்களின் சந்திப்பு பற்றிய பதிவுக்கு நன்றி சார் தொடரட்டும் தங்கள் பணி

  பதிலளிநீக்கு
 13. Ungal muganool sandhippu koottam menmalum thodarnthu nadai pera valltthukkal

  பதிலளிநீக்கு