அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாமே?அது என்ன “மோட்டல்”?     
தனீ  நாடா? 

இதை யாரும் கேட்க மாட்டார்களா? 
காஃபியிலிருந்து, காரச்சட்னி வரை...தனீ ரேட்!

அரைத்தூக்கத்தில் எழுப்புவதிலிருந்து... 
அவசரத்துக்கு ஒதுங்குவது  வரை... அராஜகம்!

ஓட்டுநர் நடத்துநர்களுக்கு மட்டும்
தனீ அறையில்
ஓசியில் அனைத்தும்  சப்ளை...!

இந்த ஓசி-க்காக 
அனைத்துப் பயணியரையும் 
ஓட்டுநர்-நடத்துநர்கள்,
அந்தத் தீவில் 
“அடகு” வைக்கும் கேவலம்? 

ஆமா...
அம்மா உணவகத்தில் நல்ல உணவு, நல்லவிதமான பரிமாறுதல் என்கிறார்களே?

அம்மா உணவகக் கிளைகளை
அனைத்து மோட்டல்இடங்களிலும்
ஆரம்பிக்கலாமே?

ஆயிரக்கணக்கான பேருந்துகளில் 
தினந்தோறும் சென்று-வரும்
இலட்சக்கணக்கான வாக்காளர் மக்கள்
மன்னிக்கவும் பொதுமக்கள்
அம்மாவை வயிறாரவும் வாயாரவும்
 வாழ்த்துவார்கள் அல்லவா?

-சின்னச் சின்னச் சிந்தனைகள்...3

13 கருத்துகள்:

 1. நியாயமான கேள்வி.. அரசு செவி சாய்க்குமா?

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான சின்னச் சின்னச் சிந்தனை
  நிச்சயம் செய்ய வேண்டும்
  அராஜகம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியது
  மிகச் சரி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான சிந்தனை,,,

  போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு... சென்றால் நலம் விளையும்

  பதிலளிநீக்கு
 4. சிந்தனை செயலுக்கு வந்தால் மகிழ்ச்சியே...

  சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

 5. "ஓட்டுநர் நடத்துநர்களுக்கு மட்டும்
  தனீ அறையில்
  ஓசியில் அனைத்தும் சப்ளை...!" என்பது
  இலங்கையிலும் இருக்கு...
  காரமான பகிர்வு
  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 6. மோசமான மோட்டல்கள். நான் இந்த ஹோட்டல்களில் சாப்பிடுவது இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவர்கள் நிற்கும் இடத்தில்தான் தேவையானதை வாங்க வேண்டி இருக்கிறது. நீங்கள் சொல்வது நல்ல ஆலோசனைதான். ஆனால் நம் ஓட்டுனர் பெருமக்கள் அந்த இடத்தில் நிறுத்துவார்களா?

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு கேள்வி! நாங்களும் பயணம் செய்யும் போது கூடியவரை இந்த மோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்தாலும், வேறு ஏதாவது வாங்கினாலும் கூட அளவுக்கு அதிகமாக அதுவும் MRP மேலாக காசு பிடுங்குகின்றார்களே என்று சங்கடப் பட்டதுண்டு. தற்போது உணவகங்கள் எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணை வந்துள்ள் நேரத்தில் இதை நேர்ப்படுததலாம் அரசு. இல்லையென்றால் தாங்கள் சொல்லுவது போன்று அம்மா உணவகங்களாக இந்த மோட்டல்கள் மாற வேண்டும்! நல்ல சிந்தனை!!! இந்த நேரத்தில் தேவையானதும் கூட!!

  தொடர்கின்றோம்!!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 8. சென்ற வாரம் இரவு சென்னை சென்று வந்தேன். மோட்டல்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. கழிப்பறைகளில் கண்ணை முடிக் கொண்டு, மூக்கைப் பொத்திக் கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.

  நீங்கள் சொல்வதுபோல் அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல யோச்னை ஐயா! மக்கள் நலனில் உண்மையிலேயே நிறைய அக்கறை இருந்தால் தனியார்துறை கொள்ளையடிக்கும் துறைகளில் அரசுத்துறை ஈடுபடவேண்டும்.

  நான் நீண்ட வருடங்களுக்குப்பின் சென்ற ஆண்டில் தொலைதூர பயணத்தில் ஒரு மோட்டலில் சாப்பிடவேண்டியதிருந்தது. மோட்டல்களில் கல் தோசைதான் ரெடியாக இருக்கும், பேருந்துகள் அதிகமாக வந்துவிட்டால், தோசை வேகாமல் நம்முடைய இலைக்கு வந்துவிடும், ஒரு செட் 50 ரூ, ஒருவகை வழிப்பறிதான், எந்தப் பொருளையும் கள்ளச்சம்ந்தையில் விற்கும் விலையில்தான் விற்கிறார்கள். மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் சொன்னமாதிரி முதலாளியின் சுரண்டல் ஒருபக்கம் முடிந்து திரும்பினால் உழைப்பாளி குட்டி பூர்வாசுக்கள் சுரண்டுகிறார்கள். இவர்கள் பாட்டாளிகள் என்று உணருவதேயில்லை.

  பதிலளிநீக்கு
 10. உங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...
  http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு