நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?


 உழைத்து,  நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?
-சின்னச் சின்னச் சிந்தனைகள்...2

(நேற்று எங்கள் ஊர் மாமன்னர் கல்லூரியில் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சார்பில்- முத்தொள்ளாயிரம்  ஆய்வரங்கம்  நடந்தது.

அந்த நிகழ்வைக் கடந்த ஒருமாதமாக உழைத்து, தலைப்புகளை யோசித்து, பொருத்தமானவர்களை அழைத்துப் பேசவைத்த பேராசிரியர் முனைவர் அ.செல்வராசு, முதலில் காலை அமர்வின் பெரும்பாலான நேரம் நின்றுகொண்டே இருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. பிற்பகல் அமர்வில் பேசவேண்டிய நான், தமிழறிஞர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அய்யா அவர்களின் பேச்சைக் கேட்பதற்காகவே காலையில் போய்விட்டேன். என்னைப் பார்த்த கல்லூரி முதல்வர் முனைவர்  த.மனோகரன் அவர்கள் முதலில் நான்மறுத்தும், வருந்தி அழைத்து என்னையும் மேடையில் அமரவைத்து விட்டார். (நாங்கள் 1985-86 ஜேக்டீ போராட்ட சிறை நண்பர்கள்!) விருந்தினனாய்ச் சென்ற நான் அவரை அழைத்து உட்கார வைப்பது நன்றாக இருக்காதே என்று தயங்கிக்கொண்டே இருந்தேன். பின்னர் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்கள் இதைக் கவனித்து அவரையும் அழைத்து மேடையில் உட்கார வைத்தது நிம்மதியளித்தது.)
 -----------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  நல்ல வினாவை தொடுத்து பதிவாக அமைத்த விதம் நன்று.. தங்களைப் போலதான் எனக்கும் இந்த வினா அடையாளந்தான்என் மனதில் நிக்கிறது... வருகிற கருத்துக்களை பாரக்கிறேன் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது ரூபன், லீனா பற்றிய பதிவின் பின்னூட்டமே ஒரு மாபெரும் பதிவு அளவுக்கு வந்ததைப் பார்த்தீர்களா?
   இலலையெனில் உடன்பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் அதில் இடுங்கள். விவாதம் முடிந்துவிட்டது. கருத்துகள் தொடரலாம்.

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!..
  வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
  http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு துரை செல்வராஜூ.
   வலைச்சரத்திலேயே நானும் என் மகிழ்வார்நத நன்றியைத் தெரிவிததிருக்கிறேன். நட்புவட்டம் வளர உதவும் புதிய புதிய நண்பர்களைவிட மதிப்புக்குரியவர்கள் வேறு யார் இருக்க முடியும்? நன்றி.

   நீக்கு
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன். நன்றி , மகிழ்வோடு பகிர்நத வலையுலக கதி (“கருத்துத் திலகம்”) அவர்களே! உங்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. என்ன அப்பாடா?
   என்ன நிம்மதி?
   இப்படிக் கோனார் நோட்ஸ் தேவைப்படும் அளவிற்குக் கருத்துச் சொன்னால் நாங்கள் எங்கே போவது?

   நீக்கு
 5. நீங்கள் பிரமாதமாக பேசி அசத்தி விட்டீர்களாம்.... மாணவர்களும் மற்றவர்களும் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.... வாழ்த்துக்கள்.... உங்கள் கம்பீரக்குரலுக்கு ஒரு ஜேஜேஜேஜேஜேஜே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு அறிமுகப்படுத்திய நண்பர் முனைவர் சு.மாதவன்தான் “ஓவர்பில்டப்“ கொடுத்தார் என்றால் நீங்களுமா சகோதரீ? எதற்கு இத்தனை ஜே? (நீங்களும் நம்ம அம்மா கட்சிதானா?)
   இதைத் தனிததமிழில் சொல்லிப்பாருங்கள்.. சே! விடுங்கள்..

   நீக்கு
 6. தாங்கள் மனதினால் எண்ணியதை, முனைவர் சி. சேதுராமன் செய்ததைப் படித்ததும் மன நிம்மதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மைவிடவும் அன்பான, நம்மை விடவும் அறிவான நம் நண்பர்களைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான். அதை நான் அப்போது அனுபவித்தேன். முனைவர் அய்யா சேதுராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. (பின்னர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், ஆனால் இதுபற்றிச் சொல்லிக்கொள்ளத் தயங்கி விட்டுவிட்டேன். நாமதான் ரொம்பக் கூச்ச சபாவம்ல...?)

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. பெரும்பாலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறவர்களுக்கு உட்கார இயலாதுதான். தவித்தக் கொண்டேயல்லவா இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, அந்தத் தவிப்பை மேடையிலிருந்து கவனித்ததை விடவும் “நின்றுகொண்டே“ கவனித்ததுதான் அதிகம், ஏனெனில் பல்லாண்டுகள் நான் நிகழ்ச்சி அமைப்பாளனாகவே இருந்திருக்கிறேன்... அதனால்தானோ என்னவோ...

   நீக்கு
 9. நம் வீட்டுக் கல்யாணத்தில் நமக்கு உட்கார மனம் வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு உட்கார மனம் வராதுதான், உட்காரச் சொல்லி யாராவது சொல்லமாட்டார்களா என்றும் மனம் வேண்டுமல்லவா? அப்போது வரும் மகிழ்ச்சியும் நிறைவும்... அதுதான் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்குத் தரும் மரியாதை அல்லவா?

   நீக்கு
 10. தோழரே , வணக்கம். தலைப்புதான் சின்னச்சின்னச் சிந்தனைகள் , ஆனால் உள்ளடக்கம் மிகக் கனமான சிந்தனையாக இருக்கிறது. நல்ல தொடக்கம்,தொடரட்டும். பல நேரங்களில் நிகழ்ச்சி அமைப்பாளர்களாகவும், சில நேரங்களில் பேச்சாளர்களாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் தெரியும். பெரும்பாலும் நிற்பதும், நமக்கு மிகப்பிடித்த பேச்சாளர்கள் என்றாலும்கூட கேட்க இயலாமல் அங்கும் இங்கும் ஓடி அடுத்த நிகழ்வுக்காக முன்னேற்பாடுகள் செய்வதும் தவிர்க்க இயலாதவை. பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் சென்னையில் இருக்கும் வீ.குமரேசன் அவர்கள் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. சொன்னாலும் கூட நீங்கள் உட்காருங்கள், நான் அடுத்தடுத்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவார். எல்லா நிகழ்வுகளிலும் இப்படித் தன்னை முன்னிறுத்தாமல், நிகழ்வை முன்னிறுத்துவர்களால்தான் நிகழ்ச்சி சிறப்பாக அமைகின்றது என்பது உண்மை. வாழ்க நிகழ்வுகளில் நின்று கொண்டயிருப்பவர்கள்.

  பதிலளிநீக்கு
 11. பெரும்பாலும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஓடியாடி வேலை செய்துவிட்டு நின்று கொண்டே இருப்பார்கள். கல்லூரியில் படிக்கும் போது தமிழ்த்துறைப் பேராசியரும் எனது கல்வித் தந்தையுமான பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் கலையிலக்கியப் பெருமன்ற விழாக்களில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்துவிட்டு மேடையின் ஓரத்தில் நிற்பார்... அமரச் சொன்னாலும் அமர மாட்டார். பெரும்பாலும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அமர்வதில்லை. பேராசிரியர் செல்வராஜ் அவர்கள் அமரவில்லை என தாங்கள் வருத்தப்பட்டதற்கு பலனாக மற்றொரு பேராசிரியர் அவரை அமரச் சொன்னது நன்றி.

  பதிலளிநீக்கு