தொலைக்காட்சியில் பேசுகிறேன் - பார்த்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன்


என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 
அது ஒன்றும்  பெரிய சாதனையே அல்ல.
        நான் 1997 -இந்திய சுதந்திரப் பொன்விழா நிகழ்ச்சியாக- பொதிகைத் தொலைக்காட்சியில் பேசியதிலிருந்து 15ஆண்டுக்கும் மேலாக - தமிழ்த் தொலைக் காட்சிகளில் சுமார் 200முறைகளுக்கும் மேலாகப் பேசியாயிற்று. பொதிகை, சன், விஜய், கலைஞர், ஜெயா, ராஜ் என்று அனைத்துத் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றம், நேர்காணல் எனப் பற்பல முறை பேசியாயிற்று.
திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் தமிழகததின் பலநூறு ஊர்கள் உட்பட  இந்த 15ஆண்டுகளில் பல ஆயிரம் பட்டிமனறங்கள் பேசியாயிற்று. 
 2000 முதல் 2005 வரை ஆண்டொன்றுக்கு  200க்கு  மேற்பட்ட நிகழ்ச்சிகள்... 2004இல் ஒரே நேரத்தில் விஜய், ராஜ், கலைஞர், மற்றும் சேலம், திருச்சி நகரம் உள்ளிட்ட  உள்ளுர்த் தொலைக்காட்சிகள், என  ஒரே நாளில் 5 அலைவரிசையில் எம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியிருக்கின்றன!
 பல உள்ளுர் தொலைக்காட்சி அலை வரிசைகளிலும், 
பேருந்துப் பயணங்களின் போதும் பார்த்திருக்கலாம்...
கலைஞர் தொலைக்காட்சியின் முதல்நாள் ஒளிபரப்பிலேயே எங்கள் பட்டிமன்றம் இடம்பெற்றது...

              ஆனால், என்றைக்கும் என் பேச்சில்  
            எனக்கு நிறைவு ஏற்பட்டதே இல்லை. 

              நண்பர்கள் பார்த்துவிட்டு 
“சூப்பர்“ என்று குறுஞ்செய்தி தருவார்கள்... 
தொலைபேசியில் அழைத்தும் பேசுவார்கள்... 
சரியான விமர்சனங்கள்தான் என்னை  வளர்க்கும் 
என்னும் எண்ணம் ஆழப் பதிந்திருப்பதால் 
ஒரு சில நண்பர்களின் ஆழ்ந்த கவனிப்பே 
எனக்குப் பயன்பட்டிருக்கிறது. மற்றவை நன்றிக்குரியவை.

             கலைஞர் தொலைக்காட்சியின் தொடக்கநாள் பட்டிமன்றம் உட்பட, 
திரு திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின்  அணித்தலைவராகவே பேசிவந்த எனக்கு, 
சிலபல காரணங்களினால், 
அண்மையில்  அவரது அழைப்பு எனக்கு வருவதில்லை... அதோடு, அவரது துணைவியார் அழைத்த சில நேரங்களில் என்னால் கலந்துகொள்ள இயலாமலும் போய்விட்டது. எனினும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் வீச்சை அறிந்த நான், அதை விட்டு விடவும் விரும்பவில்லை.

          எனவே,  நேற்று -04-01-2014 அன்று- நடந்த ஒளிப்பதிவில் சிலகால இடைவெளிக்குப் பிறகு 
நான் கலந்துகொண்டு வந்திருக்கிறேன்.

          வரும் பொங்கல் அன்று எங்கள் பட்டிமன்றம் 
காலை 9மணிமுதல் 10.30வரை ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல நான் முதல் பேச்சாளனாக வருவதால் எனது பேச்சு அனேகமாக 9.15மணிவாக்கில் வரும் 
சுமார் 10நிமிடநேர அளவிற்கு என்று நினைக்கிறேன். 
விளம்பரம் அதிகமாக அதிகமாக, பேச்சு வெட்டுப்படும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

நண்பர்கள் பார்த்துக் கருத்துக் கூறுமாறு 
அன்போடு  வேண்டுகிறேன்


           உடன் என்னுடன்பேச  - 94431 93293



           விரிவான விமர்சனம் தர விழைவோர்

      பொங்கலன்று நிகழ்ச்சியைப் பார்த்தபின்
      இந்தப் பதிவிலேயே பின்னூட்டம் இடலாம்.


            நண்பர்களின்  கருத்துகளை  நான் பெரிதும் மதிக்கிறேன்.

   
            நான் பேசிய ஏராளமான பட்டிமன்றப் பதிவுகள், 
யூட்பில் உள்ளன என்று கேள்விப்பட்டேன். 
அவற்றை அறிந்தவர் எனக்குச் சொன்னால், 
இதில் மறு பதிவு செய்யலாம்.

           இந்த நிகழ்வை  யூ ட்யூபில் பதிவு செய்தபின், 
அந்த விவரத்தை எனக்கு அனுப்பினாலும் 
நமது இந்த வலைப்ப்திவில்  மீள் பதிவிடலாம். 
அதற்கான தொழில் நுட்பம் எப்படி என்று தெரியாமலே 
காலம் கடத்தி விட்டேன். இம்முறை வலைநுட்பமறிந்த  நண்பர்களின் குரலை எதிர்பார்ததிருக்கிறேன்

      அன்புடன்,
      என்றும் உங்கள் தோழன்
      நா.முத்துநிலவன்,
      புதுக்கோட்டை - 622 004.
--------------------   0000000   ---------------------    

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    கட்டாயம் 14ம் திகதி நிகழ்ச்சியை பார்த்த பின்பு நான் அது பற்றிய கருத்தை சொல்லுகிறேன் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன். யூட்யூபில் ஏற்றும் வகைதெரிந்தால் நீங்களே ஏற்றி எனக்கும் இணைப்புத் தந்தால் நம் வலையில் ஏற்றிவிடுவேன். இயலுமெனில் செய்யுங்கள். கருத்தும் தெரிவியுங்கள். நன்றி.

      நீக்கு
  2. முன் கூட்டிய தகவலுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பட்டிமன்றப் பதிவுகளின் நாட்கள் மட்டும் அனுப்புங்கள்... youtube Link-யை அனுப்புகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வலைச்சித்தரே! நேற்று மாலை சென்னையில் ஒளிப்பதிவு நடந்தது. அனேகமாக 14-01-2014 பொங்கலன்று ஒளிபரப்பாகலாம். (தவறினால் 15-01-2014) இருநாளில் ஒருநாள் உறுதி. நாள் எதுவாயினும் ஒளிபரப்பாகும் நேரம் வழக்கம்போல காலை 9-10.30தான். அதில் மாற்றமிராது. ஆயினும் கலைஞர் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி விளம்பரங்கள் ஓரிருநாள் முன்னதாக வெளியிடுவர். அப்போது இறுதியாகத் தெரிந்து விடும் நண்பரே! நன்றி.

      நீக்கு
  3. ஐயா வணக்கம். பொங்கல் விழாவிற்குத் தொலைக்காட்சி வழி உங்களை எங்கள் இல்லத்தில் இனிதே வரவேற்கிறோம். ஆங்கிலப் புத்தாண்டில் எங்கள் இல்லம் வந்து நெகிழ்த்து விட்டீர்கள். மிக்க நன்றி. உங்களின் பேச்சைப் பற்றி விமர்சிக்கும் அன்பருக்கு உங்களின் பொங்கல் பட்டிமன்றப் பேச்சு உரத்த வாள்வீச்சாக அமையட்டும். அந்த அன்பருக்கு ஒரு வேண்டுகோளை இந்தப் பின்னூட்டத்தின் வழியில் கூறிக் கொள்கிறேன். அவர் நமது புதுக்கோட்டைக்கு வந்து இலக்கிய நிகழ்வுகளில் அல்லது தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் உங்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அப்போது தெரியும். நிலவன் ஐயா அவர்கள் இலக்கியத்தில் பழமையின் ஆழத்தையும் புதுமையின் விசாலத்தையும் அறிந்தவர் என்று. சரி... "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின் நோக்காச் சொல்" என்பதை அறியட்டும். முன்கூட்டியே ஐயா அவர்களுக்கும் குடும்பத்தார்க்கும் பொங்கல் வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கு நன்றி கோபி. உங்கள் வீட்டில் என் மகள் தந்த தேநீரை அருந்திக்கொண்டே 2014புத்தாண்டை வரவேற்றது உண்மையில் மறக்கஇயலாத நெகிழ்வான நிகழ்வாகவே இருக்கிறது! இதற்கு நம் அய்யாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பொங்கல் பட்டிமன்ற நிகழ்வைப் பகிருங்கள். நன்றி

      நீக்கு
  4. இந்தவருட பொங்கலில் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ
    அண்ணா நிகழ்ச்சி பற்றி அக்கறை இருக்கும் .சும்மா T.R போல முயற்சி பண்ணினேன் .ஆவலோடு காத்திருக்கிறோம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உன் உடல் நலததிலும் கொஞ்சம் அக்கறை செலுத்து. திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” தெரியும் தானேம்மா? (இன்று இலக்கியச் சந்திப்பில் கஸ்தூரியைச் சந்தித்தேன்)

      நீக்கு
  5. சிறந்த கருத்துப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  6. கருத்துச்சொல்லிவிடலாம்,தவறு இருக்குமாயின் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக நீங்கள் சொல்ல மாட்டீர்கள். தவறுகளைச் சரியாகவே சுட்டிக் காட்டிச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.அவசியம் சொல்லுங்கள். நன்றி நண்பர் விமலன்.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் ஐயா...
    இங்கு எங்கள் அறையில் தொலைக்காட்சி இல்லை...
    ஆன்லைனில் வந்ததும் கண்டிப்பாக பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நாள்தானே உங்களுக்குக் கிடைக்கும்?
      பார்த்தபின் அவசியம் சொல்லுங்கள்... நன்றி.

      நீக்கு
    2. கண்டிப்பாக பார்க்கிறேன் ஐயா...

      நீக்கு
  8. ஐயா...
    முன்கூட்டியே தகவல் தந்தமைக்கு நன்றி. நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலோடிருக்கிறேன்.
    பேசுங்க... பேசுங்க...
    பேசிக்கிட்டேயிருங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நலமா? நீண்டநாளாயிற்றே உங்கள் கருத்துகளைப் பார்த்து?

      நீக்கு
  9. வணக்கம் ஐயா
    தங்களின் பேச்சைக் கேட்க ஆவலாக உள்ளேன். நமது இல்லத்திற்கு ஒரு முறை நேரிலும் வந்து சிறப்பு சேர்த்து விட்டீர்கள். அதற்கு தங்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள். அது நிற்க. தொலைகாட்சியின் வழியே உலகெங்கும் உள்ள தமிழர்களின் இல்லங்களுக்கு சென்று தங்கள் பேச்சால் அவர்களின் உள்ளங்களைக் கவரவிருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் தங்கள் பேச்சு பற்றிய உண்மையான, நேர்மையான ஒரு விமர்சனத்தையும் இதே பகுதியில் பின்னூட்டமாக தரவும் காத்து இருக்கிறேன் அது தான் உண்மையான நட்பாகும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் அதையே நானும் விரும்புகிறேன். முன்கூட்டிய தகவலுக்கு மிகுந்த நன்றிகள். அனேகமாக கூட்டமாக உட்கார்ந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றிங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  10. நானும் உண்மையான நேர்மையான விமர்சனத்தை உங்கள் முன் வைப்பேன் என் முகம் மறைக்காமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருகரம் கூப்பி வரவேற்கிறேன்,
      உங்கள் கருத்தையும் முகத்தையும்.

      நீக்கு
  11. //கலைஞர் தொலைக்காட்சியின் தொடக்கநாள் பட்டிமன்றம் உட்பட, திரு திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் அணித்தலைவராகவே பேசிவந்த எனக்கு, சிலபல காரணங்களினால், அண்மையில் அவரது அழைப்பு எனக்கு வருவதில்லை... அதோடு, அவரது துணைவியார் அழைத்த சில நேரங்களில் என்னால் கலந்துகொள்ள இயலாமலும் போய்விட்டது.//

    "தாங்கள் ஏன் முன்பு போல் திரு. லியோனி அவர்களின் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வதில்லை...?" என்று அண்மைக் காலங்களில் நினைப்பதுண்டு... பதில் கிடைத்தாயிற்று... அவசியம் பார்க்கிறேன்... கருத்துச் சொல்லும் அளவிற்கு இன்னும் முன்னேறவில்லை... இருந்தாலும் முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  12. நிச்சயம் பார்க்கிறேன் ஐயா... உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்...

    நன்றி.

    பதிலளிநீக்கு