18-12-1980 அன்று பணியில் சேர்ந்த நான், 31-5-2014 இன்று, நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன்,
34ஆண்டுகள்! பதவிஉயர்வில் செல்லாத ஒரே பணி!
நான் விரும்பி ஏற்ற தமிழாசிரியர் பணி!
34ஆண்டுகள்! பதவிஉயர்வில் செல்லாத ஒரே பணி!
நான் விரும்பி ஏற்ற தமிழாசிரியர் பணி!
இந்தப்
பணிக்காலத்தில், நல்ல நிகழ்வுகள் மிகுதியாக, கசப்பான
நிகழ்வுகள் குறைவாக வாய்க்கப்பெற்றது என் பெறுபேறு!
எத்தனை
வகையான மாணவர்கள்!
எத்தனை
வகையான பெற்றோர்கள்!!
எத்தனை
வகையான ஆசிரியர்கள்!!!
எத்தனை
வகையான அலுவலர்கள்...!
எத்தனை
வகை-வகையான மக்கள்!... அடடா!
(இவர்களைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சிறுகதை,கட்டுரை கவிதைகள் எழுதியிருந்தாலும் இன்னும் எழுத ஏராளமுண்டு)