பிரதமர் மோடியின் இணைய தளம் - சிக்கலா? ஏமாற்றா?



நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 26-05-2014 அன்று, 15ஆவது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றவுடன், தொடங்கி வைத்த இணைய தளத் தகவல் எனது மின்னஞ்சலுக்கும் நேராக வந்திருந்தது.
'பரவாயில்லையே, தகவல் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததுபோல, நல்லாட்சி தரும் முயற்சிக்கும் இதனைப் பயன்படுத்த நினைக்கிறாரே!" என்று உடனடியாக எனது கருத்தைப் பிரதமரின் இணைய தளப் பின்னூட்டப் பகுதியில் எழுதினேன்.
எழுதினேன் எழுதினேன் எழுதினேன்... ஏற்கவில்லை.

சரி பெயரோ முகவரியோ தமிழில் இருந்தால் ஏற்காது போல என்றெண்ணி, அவற்றை ஆங்கிலத்தில் மாற்றிவிட்டு, செய்திப் பெட்டியில் மட்டும் ஆங்கிலத்தில் இட்டுப் பார்த்தேன். அப்போதும் ஏற்கவில்லை.
அதன் பின்னர் அனைத்தையும் ஆங்கிலத்தில் மாற்றி அடித்தேன்.
அப்போதும் ஏற்கவில்லை.
சரிதான், கமா, ஐஃபன் அடிக்கோடு, கேபிடல் லெட்டர் என எதுவுமே இல்லாமல் அடித்துப் பார்த்தேன். ம்கூம்.. கடைசிவரை ஏற்கவே இல்லை!
நான் தமிழில் அனுப்பிய செய்தி ஏற்கப்படாமல் “எர்ரர்“ என வந்ததால் பின்வரும் ஆங்கிலச் செய்தியை அனுப்பினேன் -
please insert  'COMPUTER'  as the sixth subject and 'MEDIA' as the seventh Subject in all our Indian Secondary Schools   via INDIAN  NATIONAL  EDUCATION  POLICY   IT  IS  A MUST   TO  OUR   UPCOMING GENERATION

இதையும் ஏற்காமல் எர்ரர் பதில் வந்ததால் அனைத்து எழுத்துகளையுமே சாதாரண எழுத்துகளாக மாற்றி, பின்வரும் செய்தியை அனுப்பினேன் -

Interact with Hon'ble PM
Errors found on page - 
Please avoid use of
 special characters, such as --, # etc in your Feedback.

(ஏற்கப்படாத எனது செய்தி)
please insert  computer  as the sixth subject and media  as the seventh Subject  in all our Indian Secondary Schools via Indian national education policy it is a must for our upcoming  generation

பத்துமுறைகளுக்கும் மேலாக எனது செய்தியை மீண்டும் மீண்டும் 
தந்து பார்த்தும் ஏற்கப்படாமல் மேற்கண்ட செய்தியே திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருந்தது!!!

எனது மின்னஞ்சலுக்கு வந்திருந்த இணைய தள முகவரி -
http://pmindia.nic.in/

எனக்கு வந்திருந்த மின்னஞ்சல் -
from: Twitter info@twitter.com
to:  
date: 28 May 2014 06:53
subject: Message from The Prime Minister
mailed-by: bounce.twitter.com
Signed by: twitter.com
--------------------------------------------------
ஆனால் நான் அந்த முகவரியில்
பதில் அனுப்பவில்லை. அதில் கண்ட
நம் பிரதமரின் இணைய தள முகவரிக்கே சென்று
என் பின்னூட்டத்தை அனுப்பினேன்... ஆனாலும் ஏன் இப்படி?

இது சரியான இணைய முகவரி தானே? எனில்...
இது என்ன தொழில்நுட்பக் கோளாறா?
இல்லை வழக்கமான தில்லி அரசியலின் ஏமாற்றா?
இது நம் புதிய பிரதமருக்குத் தெரியுமா?

யார் பதில் தருவார்கள்? 

31 கருத்துகள்:

  1. அவசியம் கவனிக்கப் பட வேண்டிய தொழில்நுட்ப கோளாறு. ஆட்சி மாற்றத்திற்க்கு இணையம் ஆற்றிய பங்கினை எவறும் மறந்துவிட முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகப் புதிதாகப் பதவியேற்ற அரசு, பழைய அரசின் கொள்கைகளைப் பின்பற்றாது என நம்புவோம் ஐயா!

      நீக்கு
    2. ஆமாம் திரு விக்னேஷ் நான் சொல்ல நினைத்ததையே நண்பர் திரு விஜூ சொல்லிவிட்டார் இருவர்க்கும் நன்றி.

      நீக்கு
  2. ஐயா,

    எமது பதிவு பிரதமரின் இணையப் பகுதியில் ஏற்கப்பட்டதே

    அனுப்பிய விவரங்கள்…

    My suggestion is to finalise the cases quickly...

    The main thing to dragging the cases by asking time without any reason and justification.

    The Law must empowered to the judges to give time only for the justified reasons not simply giving. Getting time and simply dragging will be reduced. This is in the hands of LAW and the Power has given to the all Judges

    This will reduce the time of the cases and get finish quickly.

    Jai Hind




    Interact with Hon'ble PM


    Thank you for sending us the feedback/comments.


    முத்து பாலகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு முத்துபாலகன். நீங்கள் சொல்வதுபோலவே திரு தி.ந.முரளிதரன் அய்யாவும் சொலலியிருக்கிறார். அவ்வாறெனின் எனது முயற்சியில்தான் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். என் கருத்தைப் புதிய பிரதமரிடம் சேர்க்கமுடியவில்லையே எனும் ஆதங்கம் மட்டும் தொடர்கிறது. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. http://www.pmindia.nic.in/feedback.php?msg=1&ln=

    இது தான் அந்த இணைய முகவரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே முகவரியில்தான் நானும் முயற்சி செய்தேன்.
      அவர்கள் அனுப்பியிருந்த தள முகவரியில் சென்றேன்.

      நீக்கு
  4. பேசாமல் தபாலில் ஒரு கடிதம் போட்டுப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... அது நம் பழைய பிரதமரின் -காலாவதியாகிப்போன- பாணி அல்லவா?

      நீக்கு
  5. தொழில் நுட்பக் கோளாராகத்தான் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் தெரிகிறது அய்யா.
      (நமக்குத்தான் தொழிலும் தெரியவிலலை, நுட்பமும் புரியவிலலையே?)

      நீக்கு
  6. சில தொழில் நுட்பக் கோளாறுகள் இருக்கலாம். விரைவில் சரி செய்து விடுவார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைக்கிறேன் அய்யா.
      நமது பிரதமர் எவ்வளவு வேகமாகச் செயல்பட நினைக்கிறாரோ அவ்வளவு வேகமாக நாமும் உதவ நினைத்தாலும் தொழில்நுட்பம் உதவமாட்டேங்குதே! பார்க்கலாம். நன்றி அய்யா.

      நீக்கு
  7. ஐயா ,
    நானும் கல்வித் துறை பற்றிய ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.
    சிக்கல் எதுவும் எழவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? மிக்க நன்றி அய்யா.
      நானும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். இது நிற்க,
      நான் பிரதமருக்கு எழுதிய கல்வித்துறை சார்ந்த கருத்து சரிதானே?

      நீக்கு
  8. விரைவில் விடையை கண்டுபிடிக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வலைச்சித்தரே! கண்டுபிடித்துச் சொன்னால் மிக்க மகிழ்ச்சியடைவேன். நானும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். நன்றி

      நீக்கு
  9. வணக்கம் ஐயா
    தொழில்நுட்ப சிக்கலுக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டது வேதனை தான் ஐயா. பிரதமருக்கு இப்படியொரு இணையதளம் இருக்கிறது என்பதை சத்தமில்லாமல் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட்டூர்களே ஐயா. காலத்திற்கேற்ற வேண்டுகோளை தான் வைத்துள்ளீர்கள். மீண்டும் முயன்று தங்களை வேண்டுகோளைச் சேர்த்து விட வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சற்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன்..“ போல, நானும் விடாமல் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது செய்தி ஏற்கப்ப்ட்டு விட்டால் இதே தளத்தில் என் பதிவின் இறுதியில் அதை -மீண்டும்- வெளியிடுவேன் அய்யா நன்றி.

      நீக்கு
  10. நானும் பல முறை முயன்று பார்த்தேன் இயலவில்லை!!!

    Congrats PM என்று அனுப்பினேன்... அந்த தகவல் சென்றது!!!

    என்னடா இது சோதனை என்று விடாமல் தங்களின் தகவலை அனுப்ப முயற்சித்தேன்... இறுதியில்

    தங்களின் தகவல், பிரதமர் அலுவலகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே பரவாயில்லையே என் பெயரிலா என் மின்னஞ்சல் முகவரி? பதில் ஏதும் வருமா? எனினும் தகவல் மகிழ்வளிக்கிறது. வரும் ஜூன்-1 உன் திருமண நாள் நல்வாழ்த்துகள் பா! கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு இன்னும் பயனுடையதாக, மகிழ்ச்சிதருவதாக, வாழ்க்கையில் முன்னேற்றம் உள்ளதாக அமையட்டும்!

      நீக்கு
    2. தங்கள் பெயர் என் முகவரி...
      தகவல் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை நகல் மட்டும் கிடைத்தது...

      நீக்கு
    3. வாழ்த்தியமைக்கு நன்றி அப்பா!!!
      குறியீட்டு எழுத்தை சரியாக உள்ளிட்டு முயற்சி செய்யுங்கள் பா

      நீக்கு
  11. மீண்டும் மீண்டும் முயல்க
    அல்லது வேறு கணிப்பொறியில் முயல்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே பாருங்கள் என் செய்தி அனுப்பப் பட்டுவிட்டதாம்! நன்றி

      நீக்கு
  12. //இது என்ன தொழில்நுட்பக் கோளாறா?

    இல்லை வழக்கமான தில்லி அரசியலின் ஏமாற்றா?

    இது நம் புதிய பிரதமருக்குத் தெரியுமா//
    முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல், பிற பயனர்களின் அனுபவத்தை கொள்ளாமல், ஏமாற்று வேலையா? என்று எப்படி தாவுகிறீர்கள்? மோடியின் மேல் நம்பிக்கை எழமாட்டேன் என்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திரு மோடியைக் கடுமையாக விமர்சித்தவன்தான்.
      வந்தவுடனே, பதவியேற்பின் போதும், அந்நிய முதலீட்டில் சில்லறை வர்த்தகத்தைத் தடுக்க ஆணையிடடதும், பின்னர் வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதாக அறிந்த போதும் நம்பிக்கை வந்திருக்கிறது. பார்க்கலாம். நல்லது செய்தால் எனக்கு மட்டுமல்ல இந்தியர் அனைவரும் பாராடட்த்தானே செய்வோம்? எனினும் தொழில் நுட்பக் கோளாறா இல்லை டில்லிக் கோளாறா என்பதை இனிமேலதானே புரிந்து கொள்ள முடியும்?

      நீக்கு
  13. எனக்கு தானியங்கியாக P.M வலைப்பதிவில் இருந்து வந்த பதில் மின்னஞ்சல்
    do-not-reply@gov.in
    To Me
    Today at 7:19 PM
    Your Mail is being reviewed.
    To access contact information please visit : http://www.pmindia.gov.in
    Please do not reply to this e-mail as it is an automated response on your mail being accessed.

    PMO Public Response Unit.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நான் இதில் அனுப்ப வில்லையே? நேரடியாக அவரது தளத்தின் பின்னூட்டப் பகுதியில்தானே இட்டேன். இன்றுவரை சுமார் 20முறைக்கு மேல் முயற்சி செய்துவிட்டேன். பார்ககலாம். எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. வேறு வேறு வழிகளில் முயற்சியைத் தொடர்வேன். நன்றி அய்யா.

      நீக்கு