கல்லத் தனை உள்ளத் தவரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கெனவெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும் நிலைமாறி,
வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும் உழவோனே,
தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி நினைவாக,
ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென்
றெழுவோமே!!
எளியபொருள்—
கல் போலும் மனம் கொண்டவரிடம், மிகக் குறைந்த கூலிக்காக வேர்வை வெள்ளத்தில் தள்ளாடும்படி உழைக்கின்றான் கூலிவிவசாயத் தொழிலாளி.
இந்த நிலை மாறி,
தன் நிலத்தில் உழைத்துப் பயிர்வளர்க்கும்
உழவன், தனது உரிமையான விளைச்சல் மொத்தத்தையும் தானே எடுத்துக்கொள்ளும் அவனது கனவு
நிறைவேற,
“ஒட்டிய வயிறு இனி உழைக்கும் –கூலித்தொழிலாளியான-
ஏழை விவசாயிக்கோ, குத்தகை விவசாயத் தோழனுக்கோ இல்லை“ என அனைவரும், எழுந்துவரும் பட்டப்பகல்
வெயிலைப் போல அந்த விவசாயிக்கு ஆதரவாக எழுவோம்.
(ஏனெனில் –
அந்தக் கூலிவிவசாயத் தொழிலாளிதான் மூக
மாற்றத்திற்காக நடந்துவரும் இரண்டாம் இந்தியச் சுதந்திரப் போரின் உண்மையான கதாநாயகன்
என்பதை நாமுணர்வோம்! உணரவேண்டும்)
(மே-5,2014 – காரல்மார்க்சின் 196ஆவது
பிறந்தநாள் நினைவாக...மறுபதிவு சந்தத்திற்கு நன்றி-
“முத்தைத் தரு பத்தித் திருநகை“-அருணகிரியார்
மார்க்சைச் செதுக்கும் படத்திற்கு நன்றி - http://puduvairamji.blogspot.in/
-------(எனது “புதியமரபுகள்“ 1993 கவிதைத் தொகுப்பிலிருந்து)----
----------------------------------------------------------
-------(எனது “புதியமரபுகள்“ 1993 கவிதைத் தொகுப்பிலிருந்து)----
----------------------------------------------------------
அருமை தோழர்....
பதிலளிநீக்குநன்றி தோழரே
நீக்குநல்ல பகிர்வு நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பா. நல்ல தகவல்களைத் திரட்டித் திரட்டித் தருகிறீர்கள் உங்கள் பணி சிறக்கும். என் வணக்கம்.
நீக்குஅழகிய பாடல்...எளிய விளக்கம்....
பதிலளிநீக்குநல்லது
வணக்கம் திரு சௌந்தர். அருமையாக எழுதுகிறீர்கள். அழகான படங்களுடன், அசத்தலான நகைச்சுவையும் அழகு போங்கள்
நீக்குதொடர்கிறேன், தொடருங்கள். நன்றி
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமண்வாசனை
நீக்குகிளப்பிச்செல்வது போல
உன் யோசனை
கிளப்பிச்செல்கிறாய்! - உங்களின் அருமையான கவிதை பார்த்து அசந்து போனேன்.. முதல் கவிதையா இது? அருமை. நன்றி
எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள். பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே, தங்களை தமிழ் இந்துவில் தேடிக்கொண்டே இருக்கிறேன். தொடருங்கள்.. வரும் 12-05-திங்கள் கிழமை தஞ்சையில் சந்திப்போம். பெரிய தி்ட்டமொன்று உள்ளது. நன்றி
நீக்குவிளக்கம் அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி வலைச்சிததரே.17,18 இரண்டுநாளும் நீங்கள் புதுக்கோட்டையில்தான் சொல்லிட்டேன்.அட்வான்ஸ் நன்றி.
நீக்குதோழமைக்கு எனது வணக்கம்!
பதிலளிநீக்குதங்களின் கண்ணதாசன் பற்றிய கட்டுரை அபாரம் அய்யா. தினமணியில் வெளிவந்த “காலங்களில் அவன் வசந்தம்“ எனும் எனது கட்டுரையை விரைவில் பதிவிட உங்கள் கட்டுரைதான் எனக்கு நினைவூட்டியது. இருமுனை நன்றி அய்யா.
நீக்குஅழகான படமும் கவிதையும் சகோதரரே.
பதிலளிநீக்குநன்றி சகோதரி. உங்களுடைய அண்மைய பதிவுகளில்,
பதிலளிநீக்கு“தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்“தான் என்னைக் கவர்ந்தது. படமும் விளக்கமும் அருமை. அதிலும் ஆண் அடங்கக்கூடாது என்பது சரிதானா சகோதரி? அல்லது பெண் அடங்க வேண்டும் என்பது பொருளா?
வணக்கம் சகோதரா ! நல்ல கேள்வி தான் மிக்க மகிழ்ச்சி. இரண்டுமே இல்லை சகோதரா. இருவருமே ஒருவரை ஒருவர் அடக்கி ஆளவோ அடிமை படுத்தவோ கூடாது. பெண்ணும் புளுங்கக் கூடாது அதே போல் ஆணும் புளுங்கக் கூடாதுதானே. பெண்களுக்கு பணிவும் அன்பும் அழகு தான் ஆனாலும் கொடுமைகளை கண்டால் கொந்தளிப்பதில் தவறு இல்லை. அதே போன்று ஆண்களுக்கும் மிடுக்கு அழகு தான், தேவை தான் சரியான முடிவுகள் எடுக்கவும்,குடும்பத்தை வழி நடத்தவும் மிடுக்கு அவசியமே. அதை தவறாக பயன் படுத்தக் கூடாது கோபம் கொள்வதும் கொடுமை படுத்துவதும் தப்பு தான். ஒருவருரை ஒருவர் மதித்து நியாயமாக நடத்தல் அவசியம். என்பதை தான் சொல்ல விரும்பினேன். மிக்க நன்றி ! சகோதரா. வாழ்க வளமுடன் ....!
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குசிறப்பான கவிதையும் அதற்கு எளிய விளக்கமும் விவசாயிக்காக அன்றே நீங்கள் எழுதி குரல் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது ஐயா. தொடர்ந்து உங்கள் எழுத்துகள் சமூகத்தின் மாற்றத்திற்கு கை கொடுக்கும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..
அற்புதம்
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் சப்தமாகப் படித்து
மகிழ்வு மிகக் கொண்டேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இவை தெருப்புகழ் என்பதா
பதிலளிநீக்குசுவை தரும்பாவாக மின்னி
உழவர் கதை பேசுதே!