இந்தவார “புதிய தலைமுறை” (08-01-2015) இதழ்களில்
நமது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” நூலுக்கான மதிப்புரைகள்
சிறப்பாக எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.
நமது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” நூலுக்கான மதிப்புரைகள்
சிறப்பாக எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.
வலையில் பிடிக்க முடிந்தவர்கள்
இதழ்த் தேதியைக் குறிப்பிட்டுப்
படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இதழ்த் தேதியைக் குறிப்பிட்டுப்
படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இல்லையின்னாலும் -விட்டுடுவமா?-
முறையே அரைப்பக்கம், மற்றும் முழுப்பக்கம் அளவுள்ள அந்த
மதிப்புரைகளைத் தட்டச்சுச் செய்து
நாளை வெளியிடுவேன்.
(அவசியம் நாளை வந்திருங்க...என்ன?)
------------------------------------
இன்னும் இரண்டு முக்கியமான செய்திகள் -
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து “கல்கி”யையும்,
திரு மாலன் அவர்களுக்கு விவரம் தெரிந்து
“புதிய தலைமுறை” இதழைத் தொடங்கியதிலிருந்தும்
படித்து வருகிறேன் (இது எப்படி இருக்கு?)
இவ்விரண்டு இதழ்களின்
ஆசிரியர் குழுவினர்க்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியைத்
தெரிவித்து மகிழ்கிறேன்.
எனது முதல்சிறுகதை “கல்கி”யில்
இரண்டாம் பரிசுபெற்று
வெளியானது - பார்க்க-
http://valarumkavithai.blogspot.com/2013/12/blog-post_12.html
எனது இசைப்பாடல் ஒன்று
“புதிய தலைமுறை”யில்
வெளியாகியிருக்கிறது-
http://valarumkavithai.blogspot.com/2011/04/blog-post_07.html
அது சரீ... நம்ம ராசிய பார்த்தீங்களா?
என்ன? கவனிக்கலயா?
அட என்னங்க நீங்க?
நம்ம நூல் மதிப்புரை வெளிவந்த
கல்கி அட்டையில் அமீத்ஷா!
புதிய தலைமுறையில் வாஜபாயிஜீ!
(பாவம் நம்ம ராசி பாய்ஞ்சு,
இவங்களுக்கு இருக்கும் மரியாதைக்கு
ஒன்னும்
ஆயிடக் கூடாது பெருமாளே!)
இன்னும் இரண்டு முக்கியமான செய்திகள் -
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து “கல்கி”யையும்,
திரு மாலன் அவர்களுக்கு விவரம் தெரிந்து
“புதிய தலைமுறை” இதழைத் தொடங்கியதிலிருந்தும்
படித்து வருகிறேன் (இது எப்படி இருக்கு?)
இவ்விரண்டு இதழ்களின்
ஆசிரியர் குழுவினர்க்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியைத்
தெரிவித்து மகிழ்கிறேன்.
எனது முதல்சிறுகதை “கல்கி”யில்
இரண்டாம் பரிசுபெற்று
வெளியானது - பார்க்க-
http://valarumkavithai.blogspot.com/2013/12/blog-post_12.html
எனது இசைப்பாடல் ஒன்று
“புதிய தலைமுறை”யில்
வெளியாகியிருக்கிறது-
http://valarumkavithai.blogspot.com/2011/04/blog-post_07.html
அது சரீ... நம்ம ராசிய பார்த்தீங்களா?
என்ன? கவனிக்கலயா?
அட என்னங்க நீங்க?
நம்ம நூல் மதிப்புரை வெளிவந்த
கல்கி அட்டையில் அமீத்ஷா!
புதிய தலைமுறையில் வாஜபாயிஜீ!
(பாவம் நம்ம ராசி பாய்ஞ்சு,
இவங்களுக்கு இருக்கும் மரியாதைக்கு
ஒன்னும்
ஆயிடக் கூடாது பெருமாளே!)
--------------------------------------------
04-01-2015
தேதியிட்ட “கல்கி“ வார இதழ் “நூல் விமர்சனம்“ பகுதியில் (பக்-60), திரு.சுப்ர.பாலன்
அவர்கள் “எழுதி, “கல்கி“ யின் அரைப்பக்க அளவிற்கு வந்திருந்த எனது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” மதிப்புரை –
'திருவளர் செல்வி'யில்
எதற்கு 'ச்'?
'திருவளர் செல்வி'யில்
எதற்கு 'ச்'?
“விடுதலைபெற்று 68ஆண்டுகள் ஆனபின்னும் சுய சிந்தனைக்கான கல்வி
இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை எனது 34ஆண்டுக்காலக் கற்பித்தல்
அனுபவத்தில் கண்டேன்“ என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை
வெளியிட்டிருக்கிறார் நா.முத்துநிலவன்.
“நடுத்தர வர்க்கத்தின்
ஆடம்பரத்தில் கல்வியும் அகப்பட்டுத் தவிக்கிறதே?“ என்கிற ஆதங்கத்தோடு, பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே
கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான்.
மறுவாசிப்புக்கு
உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பலநூறு பழமரபுக் கதைகளை இன்னமும் அப்படியே
சொல்லித் தருவதைக் கண்டிக்கும் முத்துநிலவன், அரிச்சந்திரன் கதையைப் பற்றிக்
கேள்வி எழுப்புவதையும் சிந்திக்கத்தான் வேண்டும். “அரசனின் கடமை மக்களைக்
காப்பாற்றுவதா? வாய்மையைக் காப்பாற்றுவதா?”
அழகான தொடர் “திருவளர்செல்வி“ என்பது.
வினைத்தொகை என்பது மட்டுமன்று, வாழ்நாள் முழுவதும் திருவும் (செல்வமும் பிற
பெருமைகளும்) வளரக்கூடிய செல்வி எனப் பொருள்படும் “திருவளர்செல்வி“யில்,
திருமணத்திற்கு முன்பே, வைக்கக் கூடாத இடத்தில் “ச்“ வச்சதாரு?” என்று கேட்கிற நகைச்சுவையின் அழகையும் ரசித்தபடி சிந்திக்கலாம்.
பயனுள்ள பத்தொன்பது கட்டுரைகளின் அருமையான தொகுப்பு.
-'முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!'
– நா.முத்துநிலவன்,
தொ.பே.04362-239289 (அகரம் பதிப்பகம்)
– நா.முத்துநிலவன்,
தொ.பே.04362-239289 (அகரம் பதிப்பகம்)
----------------------------------------
“புதிய தலைமுறை” மதிப்புரை --
(கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, படத்தைப்
பெரிசுபண்ணி, படிச்சுக்கங்க சகாக்களே!..)
blogspot.com/
நமது 3நூல்களைப் பற்றிய சுருக்கமான
ஆனால், நுட்பமான விமர்சனம் வந்திருக்கிறது.
வாய்ப்புள்ளவர்கள் பார்க்க வேண்டுகிறேன்.
(கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, படத்தைப்
பெரிசுபண்ணி, படிச்சுக்கங்க சகாக்களே!..)
(நன்றி நமது வலை நண்பர் திரு ரூபன், மலேசியா)
http://tamilkkavitaikalcom.
--------------------------------------------------------------
இதோடு, சனவரி-2015 “சிந்தனையாளன்” மாத இதழில்,நமது 3நூல்களைப் பற்றிய சுருக்கமான
ஆனால், நுட்பமான விமர்சனம் வந்திருக்கிறது.
வாய்ப்புள்ளவர்கள் பார்க்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------------
எனது செல்பேசி எண் -94431 93293
மின்னஞ்சல்- muthunilavanpdk@gmail.com
------------------------------------------------------------
மகிழ்வூட்டும் செய்தி
பதிலளிநீக்குஇன்று வாங்கிப் படித்துவிடுவேன்
படைப்புகளும் சாதனைகளும் தொடர நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா.
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது இனிய வாழ்த்துகளும், வணக்கங்களும்.
மிகவும் மகிழ்ச்சி ஐயா...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி சரி.. தொழில் நுட்பம் தெரியாத ஒரு கத்துக் குட்டி, தட்டித்தடுமாறுறானே.. ஒரு உதவிபண்ணுவோம்னு வர்ரீங்களா அய்யா.? மலேசியாவிலிருந்து அந்தப் பச்சப்புள்ள வந்து கேட்டு உதவி செய்யிது.. மாம மச்சாங்கெ பக்கத்துல இருந்து என்ன செய்ய.. (அட உங்களயும் சேத்துத்தான்..)
நீக்குபுத்தாண்டு வணக்கங்கள்...
த ம ++
பதிலளிநீக்குந்தா... வந்துட்டாருல்ல..
நீக்குத.ம.ஓட்டுப் போட்டதுக்கு நன்றி..
மேல்பின்னூட்டத்தைப் பாக்கவும்.
சூப்பர் ஜி கலக்குங்க:)))) நான் அப்பவே நோட் பண்ணிட்டேன்..ரெண்டு பக்கத்திலும் தாமரை, நடுவில் என்ன கதிர் அருவாளா:))))
பதிலளிநீக்குநட்சத்திரத்தைக் காணமே தங்கச்சீ... அதான் அதைக் கண்டுக்காம விட்டுட்டேன்.. கண்டுபிடிச்சிட்டியா? தன்விவரப் படம் மாறி இருக்கு.. நல்லாருக்குப்பா.. (மேல் பின்னூட்டம் பற்றிய மேல்விவரத்தை மதுவுக்குச் சொல்லவும்)
நீக்கு:))) கண்டிப்பா சொல்றேன் அண்ணா:) அந்த படம் நானே வரைந்தது அண்ணா!
நீக்குநீங்களே வரைந்ததா?!! ஆஹா ! அப்போ நீங்க சகலகலாவல்லினு சொல்லுங்க......அருமையா வரைன்சுருக்கீங்க...
நீக்குமைதிலி டியர்..நீங்களே வரைந்ததா? கலக்குங்க..இப்படி எத்தனை திறமை வச்சிருக்கீங்க? :) நானெல்லாம் electronic circuit நல்லாஆஆ வரைவேன் :))
நீக்குஒரு நல்ல ஆசிரியர் நல்ல பாடவல்லுநராக மட்டுமல்ல, பேச்சாளராக, ஓவியராக, பாடகராக, டான்ஸராக குழந்தையாக மற்றும் அன்பான அம்மாவாக இருக்கணும். நீ நல்ல ஆசிரியர் என்பதால் எனக்கு வியப்பாக இல்லை. அடுத்த படத்தை வண்ணத்தில் தரவும். (1979இல் பயிற்சி முடித்து 80இல் வேலைக்குப் போகும் முன் ஓராண்டு ஓவியம்தான் எனக்கும் என் மனைவி மகளுக்கும் சோறுபோட்டது தெரியுமோ? )
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மகிழ்ச்சியாக உள்ளது தொடர் வெற்றிகள் குவியட்டும்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீக்குமலேசியா வந்தபோதுதான் “வாட்ஸப்“ கற்றுக்கொண்டேன்.
(வேறு வழி? மடிக்கணினிக்குத் தமிழ் சொல்லிக்கொடுகத் தெரியாமல் படங்களையாவது பகிர்வோம் என்று..) இப்ப அதிலிருந்து கணினிக்கு ஏற்ற முடியாமல்.. உங்கள் உதவிக்கு நன்றி ரூபன்.. நீங்க நல்லா வருவீங்க ரூபன் நல்லா வருவீங்க.
ஒ! வட்ஸ் up ஐ தான் சொன்னீர்களா?? நீங்க மலேஷியா போனதுக்கு அப்புறம் தான் உங்க தம்பியும் வாட்ஸ் up பயன்படுத்த ஆரம்பிச்சார்.. பாவம் இந்த ஒரு விசயத்தில் நீங்கள் அவரை மன்னிக்கவேண்டும் அண்ணா:)
நீக்குஅதெல்லாம் முடியாது, ஒழுங்கு மரியாதையா அவ்வப்போது (செல்லில் எடுத்து, கணினியில் ஏற்றத் தெரியாத சில படங்களை நான் வாட்ஸப்பில்தான் அனுப்ப முடியும் என்பதால்) தொடர்ந்து இணைப்பில் இருக்கச் சொல்லவும் ..(ப்ளீஸ்..)
நீக்குஓ நீங்கள் இருவரும் வாட்ஸ் அப்பில் இருக்கிறீர்களா? மகிழ்ச்சி
நீக்குஅண்ணா, செல்லிக் Dropbox இன்ஸ்டால் செய்யுங்கள்..கணினியிலும்
பிறகு இணையத்தில் எளிதாக ஏற்றலாம்
இன்று உங்களை அழைக்க எண்ணியிருந்தேன்.. தொண்டை வலி, காய்ச்சல்.. சரியானவுடன் அழைக்கிறேன்
மகிழ்ச்சியான செய்தி ஐயா...
பதிலளிநீக்குபதியுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்....
பதிஞ்சுட்டம்ல... (அய்யா உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.. ஒருமாதமாகியும் வேலைகள் சில திட்டமிடாமல் அலைக்கழிப்பதில்... விரைவில் உங்களுக்கு மின்னஞ்சலிடுவேன்)
நீக்குநாளை நிச்சயமாய் வந்துவிடுகிறேன் அய்யா... !
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் குழுவினருக்கு எங்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
" சுயமரியாதை " பக்கமுள்ள உங்களால் அவர்களின் மரியாதை கூடத்தான் செய்யும் அய்யா !
நன்றி
சாமானியன்
இரண்டு இதழ்களின ஆசிரியர் குழு நண்பர்களிடமும் பேசி நன்றி சொன்னேன்.. 2000ஆம் ஆண்டில் இணையத்தில் கொண்டிருந்த தொடர்பை நினைவுபடுத்தி திரு மாலன் அவர்கள் என்னை நலம் விசாரித்ததும், கல்கி துணைஆசிரியர் கவிஞ்ர் அமிர்தம் சூர்யாவும் அப்படியே அன்பாகப் பேசியதும் மகிழ்வாயிருந்தது... உண்டால் அம்ம இவ்வுலகம்... ந்ன்றி.
நீக்குஅய்யா,
பதிலளிநீக்குமிகுந்த மன உளைச்சலுடனும், வருத்தத்துடனும் இதனை எழுதுகிறேன்...
தாங்கள் எனது " விடாது துரத்திய விஷ்ணுபுரம் " பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தை தவறுதலாக அழித்துவிட்டேன்... உங்களின் பெயரை கண்டதுமே பெருமை பிடிபடாத காரணத்துடன், அதனை படிப்பதற்கு முன்னரே நீங்கள் அழிக்க கேட்டிருந்த பின்னூட்டத்தை அழிப்பதாக நினைத்து அழித்துவிட்டேன்.
( இந்த சாமானிய மரமண்டைக்கு போதிய அளவு வலைப்பூ தொழில்நுட்ப அறிவு இல்லாததே காரணம் ! )
உங்கள் பின்னூட்டத்தை படிக்க முடியாதா மனவேதனையுடன் கேட்கிறேன்... தயவு செய்து மீன்டும் அனுப்ப முடியுமா ?
நன்றியுடன்
சாமானியன்
உங்களின் “விடாமல் துரத்திய விஷ்ணுபுரம்“ எனும் நீண்ட பதிவுகண்டு மகிழ்ந்து நெகிழ்ந்து, கிடடத்தட்ட பதிவில் பாதி அளவிற்குஎனது பின்னூட்டத்தை இட்டிருந்தேன்(?). நல்லவேளை அழித்துவிட்டீர்கள்.. சரி என்ன தெரியாமல் அழித்துவிட்டீர்களா? பரவாயில்லை விடுங்கள்... எனக்கும் கொஞ்சம் திருப்தி...நான்தான் இப்படி தொழில்நுட்ப அறிவு-கணினிஅனுபவக் குறைவோடு இருக்கிறேனோ என்ற என் ஐயத்தைப் போக்கி நானும் இருக்கிறேன் என்று எனக்கு ஆறுதலாக இருப்பதால்(?!) எனக்கும் இந்தமாதிரி சில அனுபவங்கள் உண்டு.. பின்னூட்டத்தை அப்லோட் பண்ணுவதாக நினைத்து அழித்த அனுபவம் மட்டுமல்ல, புத்தகங்களோடு திரிந்த அனுபவத்தைச் சொல்கிறேன். நான் எழுதிய நீண்ட பின்னூட்டத்தின் சுருக்கம் இதுதான் - பள்ளிக்காலத்தில் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்புக் கணித ஆசிரியர் திரு உலகநாதன் அவர்கள் அறிமுகப்படுத்திய- கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி, சாண்டில்யன், மு.வ., நா.பா, பின்னர் கல்லூரிக்காலத்தில் தி.ஜா., பு.பி.,ஜெ.கா...என நகர்ந்து டி.செல்வராஜ், கு.சி.பா., தமிழ்ச்செல்வன், மேலாண்மை, கந்தர்வன் அம்பை, பாமா எனத் தொடர்வதுதான்.. இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில் இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல். இதை, ஜெயகாந்தன் மற்றும் க.நா.சு.பற்றிய எனது கட்டுரைகளில் பார்க்கலாம் -
நீக்குமுறையே - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_7.html , http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post.html ஆகவே, தங்களின் வாசிப்பு ருசியை வாழ்த்தி வரவேற்கும்போதே, கி.ரா. தோப்பில் தி.ஜா. எல்லாம் சரி, ஆனால் ஜெயமோகனுக்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்பதே. ஏனெனில், நம்போன்றோர் வீடுகளுக்குத் தேவை துளசிச் செடிகளே அன்றி குரோட்டன்சுகள் அல்ல.. நன்றி நண்பரே.. வாழ்க உங்கள் தேடல். வணக்கம்.
பதிவிட்டேனே நண்பரே பார்க்க முடிந்ததா?
நீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பரே. அடுத்தடுத்து மேலும் சில பிரபல இதழ்களில் வரும் என நண்பர்கள் சொன்னார்கள். வந்ததும் தெரிவிக்கிறேன்.
நீக்குWOW! மகிழ்ச்சி அண்ணா..
பதிலளிநீக்குநீயும் உனது நூலை அனுப்பி வைக்க வேண்டுகிறேன். (மதிப்புரைக்கு என்று முக்கியமான இதழ்களுக்கு அனுப்பினால் அவர்களை அந்த நூல் கவர்ந்தால் எழுதுவார்கள் அவ்வளவே!)
நீக்குஅப்பா எது எதற்கு அனுப்பினார்கள் என்று கேட்கிறேன் அண்ணா. இல்லாவிட்டால் அனுப்பச் சொல்கிறேன்.
நீக்குகுமுதம், விகடன், தந்தி, மற்றும் நூல் மதிப்புரை வெளியிடும் இதழ்களுக்கெல்லாம் அனுப்பிவிட வேண்டும். (நமக்கு இரண்டு நூல்கள் செலவு, கிடைப்பதோ பல்லாயிரம் வாசக அறிமுகம்) அப்பாவிடம் சொல்லி அனுப்பவும்.
நீக்குபடித்துவிடலாம் என்று பார்த்தேன் அண்ணா, சந்தாதாரர் ஆகவேண்டும்போல..அது பிறகு பார்க்கிறேன்..உங்கள் நூல் பற்றிய படைப்பை நாளை உங்கள் தளத்தில் படித்துவிடுகிறேன் :)
பதிலளிநீக்குநன்றி அண்ணா..
இப்ப படிக்கலாம் பா.படிச்சுட்டு உன் கருத்தையும் எழுது. (உனது நூலை அங்கு -யுஎஸ்சில்- உள்ள தமிழ் அமைப்புகளின் இலக்கிய நண்பர்கள் மற்றும் அங்கிருந்து வெளிவரும் இலக்கிய இதழ்களுக்கும் அனுப்பி வை. இதெல்லாம் தான் நமது நூல்களை உலகறியச் செய்யும்.)
நீக்குபடிச்சுட்டேன் அண்ணா..எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா..நன்றாய் எழுதியிருக்கிறார்கள். வாழ்த்துகள் அண்ணா..மறுமதிப்பு முடிந்ததா அண்ணா? புத்தகக் கண்காட்சியில் இருக்கும் தானே?
நீக்குஇருவருக்கு அனுப்பியிருக்கிறேன் அண்ணா..இன்னும் விசாரிக்க வேண்டும்..
அப்பாவிடம் சுமார் 50பிரதிகளை வைத்துக் கொண்டு, எஞ்சிய பிரதிகளை அகரம் வழியே சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அனுப்பச் சொல்லவும். (தவறாக நினைக்காமல் அப்பாவை என்னிடம் பேசச் சொல்லவும். அவர்களின் எண் எனது செல்லில் அழிந்துவிட்டது)
நீக்குதந்திக்கு அனுப்பியிருக்கிறார்கள் அண்ணா , மற்றது தெரியவில்லை .. நண்பர் ஒருவருக்கு ஒரு அறுவை சிகிச்சைக்காக அப்பா சென்னையில் இருக்கிறார்கள் .. சொல்கிறேன் அண்ணா , தவறாக நினைக்க ஒன்றுமில்லையண்ணா :)
நீக்குஇன்று மதியம் பேருந்து நிலையத்தில் இருந்து வீடு நோக்கி வந்த பொழுது இந்த அட்டைப்படத்தை நினைத்து சிரித்துக்கொண்டே வந்தேன்.
பதிலளிநீக்குமீண்டும் சிரிப்பு ...
அதெல்லாம் சரி ஒரு நல்ல ஆசிரியர் எழுதக் கூடிய கடவுளின் பெயரா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடவுள்...
(இவனுக்கு அருணன் புத்தகத்தை கொடுத்ததே தப்புன்னு ஒங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது)
“ஒரு நல்ல ஆசிரியர் எழுதக் கூடிய கடவுளின் பெயரா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடவுள்...” - அடக் கடவுளே! நாம ஜோக் அடிச்சாக் கூட அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கேள்வி கேட்கும் இந்த மதுவுக்கு நல்ல புத்தியக் குடு ஈஸ்வரா! (இப்ப பரவாயில்லையா வாத்தியாரே?)
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குசெய்தியைக் கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் இரு பெரும் இதழ்களில் மதிப்புரை கலக்கல் ஐயா. நமது நூல் என்று தலைப்பிட்டு நூலினை நாட்டுடைமையாக்கி விட்டீர்கள். எனது கைகளுக்கு கஸ்தூரி சகோ மூலம் புத்தகங்கள் வந்து விட்டது ஐயா. விரைவில் படித்து முடிப்பேன். தகவலுக்கு நன்றிகள்.
இன்னும் இருபெரும் இதழ்களில் அடுத்தடுத்த வாரங்களில் வரும் பாண்டியன்... எழுதியபின் கவிதை எனது அல்லவே நமது தானே? படித்துவிட்டு மதிப்புரை எழுதுங்கள் அவசியம் எதிர்பார்க்கிறேன்.
நீக்குஇரு இதழ்களில் மதிப்புரை என்பது நூல் வெளியீட்டினைவிட மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. தங்களுடைய எழுத்தும் பேச்சும் எங்களுக்கு பல புதிய பாடங்களைக் கற்றுத் தருகின்றன. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅய்யா, இம்மாத “சிந்தனையாளன்“ திங்களிதழில் நமது மூன்று நூல்களின் விமர்சனங்ளும் வந்துள்ளன அந்த இணைப்பைக் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் வெளியிடுவேன் அய்யா. நன்றி.
நீக்குஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.6
நன்றி அய்யா.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா! மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குநன்றி அய்யா. மிக்க நன்றி.
நீக்குசிங்கம் கர்ஜிக்குது, குயில்கூவுவது மிக இனிமையானதுன்னு
பதிலளிநீக்குசொன்னவுங்க பெரியவுங்களாச்சே!!!!! மேலும் மேலும் நீங்க
உயர வேண்டும் எல்லாம்வல்ல இறைவன்
அருள்புரிய வேண்டும்.