என் மாணவர், தன் ஆசிரியரின் நூலைப்பற்றி..!
KRISHNA VARATHARAJAN Chairman-IDEAPLUS HR & Business solution |
இன்று, நான் மிகுந்த நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சி அடைந்த தருணத்தை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்-
நான் மிக பாக்கியம் செய்தவன்தான் –
“என்ஆசிரியர் எழுதிய நூல்“என்று, “மாணவரே தன் ஆசிரியரின் நூலை
அறிமுகம் செய்யும் நல்ல வாய்ப்பு“ எத்தனை ஆசிரியர்க்குக்
கிடைக்கும் என்று யோசிக்கும் பொழுது, நெகிழ்ந்து போகிறேன்.
என்னை விடவும் சிறந்த ஆசிரியர்களை நான் அறிவேன். என்னை விடவும்
சிறந்த அறிஞர் பலரையும் நான் அறிவேன். எனினும் அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு
எனக்குக் கிடைத்ததற்குக் காரணம் இரண்டு என்று நினைக்கிறேன்.
ஒன்று – சிறந்த ஆசிரியர் பலரும் தனது சிறந்த அனுபவங்களை உலகறியப் பகிர்நதுகொள்ளாமல்
போய்விடுகிறார்கள்.
இரண்டு – பகிர்ந்துகொண்டாலும், அதை இன்றைய ஊடகமான இணைய உலகில்
தொடராமல் போய்விடுகிறார்கள்.
எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்து, இனிவரும் கல்வியுலகம்
இன்னும் சிறந்த ஆசிரியர்-மாணவர் உறவால் சிறந்து, நல்ல கல்வியால் ஒரு நல்ல சமூகம்
உருவாக நானும் ஒரு துரும்பாக இருப்பதறிந்து மகிழ்கிறேன் – இதோ அந்த என் மாணவரின்
எழுத்து –
நன்றி –
என் இளைய நண்பன் கிருஷ்ண.வரதராஜன் – அனு தம்பதியினர்.
என் இளைய நண்பன் கிருஷ்ண.வரதராஜன் – அனு தம்பதியினர்.
மிகப்பெரிய அளவில் மாணவர்களுக்கான “ஜாலியாகப்
படிக்கலாம், ஈஸியாக ஜெயிக்கலாம்” எனும்
வகுப்புகளை (மாணவர் ஒருவருக்கு சுமார் 500ரூ கட்டணம் வைத்து, ஆயிரக்கணக்கிலான
மாணவர்களை ஓரிடத்தில் வரவைத்து) தமிழகத்தின் பெருநகரங்களில் நூற்றுக்கு மேலான
நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும், இப்போதும் சென்னையிலிருந்து நடத்திவரும்
கிருஷ்ண.வரதராஜன் - அனு தம்பதியினர்
இணைப்புக்குச் சென்று படிக்க –
“ஆசிரியர்களுக்கு
ஆசிரியர்“
http://krishnavaratharjan.blogspot.in/
இல்லந்தோறும் பள்ளிக்கூடம் என்ற கனவை
மாணவர்களுக்கு கற்றுத்தருபவர்
இல்லந்தோறும் பள்ளிக்கூடம் என்ற கனவை
மாணவர்களுக்கு கற்றுத்தருபவர்
---------------------------------------------------------------
தங்களுக்கும், தங்களது மாணவருக்கும் எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் மாணவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஅவரின் தளம் சென்று வாசிக்கிறேன்.
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குபடிப்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது. உண்மையாகவே நெகிழ்வும் மகிழ்வும் நிரம்பிய தருணம். நண்பர்களோடும் பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தங்களின் மாணவனின் வலைப்பக்கம் சென்று வந்தேன் தங்களின் சிறப்பான ஆளுமைகளை மிக அருமையாக சொல்லியுள்ளார். பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மிகவும் சந்தோசம் ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குதங்களது மாணவரின் வலைப்பூ பக்கம் சென்றேன். பார்த்தேன். படித்தேன். எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு