சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வலைப்பதிவர் மினி சந்திப்பு - ஒரு வேண்டுகோள்

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வர
வாசிப்பு-ருசியுள்ள நம் வலைநண்பர்கள் திட்டமிட்டிருப்பீர்கள்.  
வலை நண்பர்களைச் சந்திக்க 
நானும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்
      திரு தி.ந.முரளிதரன், திரு கவியாழி கண்ணதாசன், திரு மதுமதி மற்றும் சென்னைப் பகுதியின் வலை நட்புவட்டம் திட்டமிட்டால்
 13-01-2015 மாலை 5-7மணிக்கு 
சென்னைப் புத்தகக் கண்காட்சி
அன்னம் பதிப்பகம்
ஸ்டால் எண்-636இல் சந்திக்கலாம் 
மற்றஊர் நண்பர்களும் 
ஒருகல்லில் இரண்டு மாங்காய் 
அடிக்க  வரலாமே 
 அல்லது 
வேறு எங்கு எப்போது சந்திக்கலாம் 
என்று சொன்னால் 
நான் அதற்கும் உடன்படுகிறேன்
(எனக்கு 12,13-01-2015  இரண்டும் வாய்ப்பான நாள்கள்) 
முன்னரே தெரிவிக்க வேண்டுகிறேன்.

--------------------------------------

சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகத்தார் கூட்டமைப்பின்  தலைவர் மீனாட்சி மோகனசுந்தரம், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது கூட்டமைப்பின் சார்பில் 
38-ஆவது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9ஆம் தேதி மாலை தொடங்குகிறது. காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். 
ஜனவரி 21 வரை 13 நாட்களுக்கு காட்சி நடக்கிறது. 
வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் காட்சியை பார்வையிடலாம். தொடக்க விழாவில் பதிப்பகச் செம்மல், சிறந்த புத்தக விற்பனையாளர், சிறந்த குழந்தை எழுத்தாளர், சிறந்த ஆங்கில எழுத்தாளர் உள்ளிட்ட விருது கள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளை காவல்துறை அதிகாரி வன்னிய பெருமாள் வழங்குகிறார். மேலும் மாணவர் களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீனாட்சி மோகனசுந்தரம் கூறினார். 

கூட்டமைப்பின் செயலாளர் கே.எஸ்.புகழேந்தி கூறியது: கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. வாசகர்கள் புதிய புத்தகங்களை அறிந்துகொள்ள இணையதள வசதிகளும் உள்ளன. வாசகர்களின் வசதிக்காக காட்சி திடலில் 5 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கூடுதல் பார்க்கிங் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ‘சென்னை வாசிக்கிறதுஎன்ற நிகழ்ச்சி, அண்ணாநகர் டவர் பூங்காவில் நாளை (இன்று) நடக்கிறது. இதில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இதுவரை நடந்த புத்தகக் காட்சி களுக்கு அரசு தரப்பில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. புத்தகக் காட்சியை நடத்த நிரந்தரமாக ஒரு இடத்தை அரசு ஒதுக்கித் தரவேண்டும். இட பற்றாக் குறையால் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டால் அமைக்க இடமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 
 -- நன்றி - http://alleducationnewsonline.blogspot.in/2015/01/9.html
-------------------------------------------------------  

நன்றி - சிந்தனையாளன் -சனவரி-2015 மாத இதழில்
நமது மூன்று நூல்கள் பற்றிய “சுருக்“விமர்சனம்  
(நட்புடன் நன்றி - திரு ரூபன் மலேசியா)
----------------------------------------------  

- புத்தாண்டில் சில மகிழ்வான செய்திகள் -

எப்போதும் போலப் புத்தாண்டில் சில உறுதிகளை எடுப்பதும் ஓரிரு வாரம் (அ) நாள்களிலேயே கூட அதை மீறி
விட்டுவிடுவதும் வழக்கம்தானே? நானே பலமுறை 
அப்படிச் செய்து, “இனி அப்படிச் செய்வதில்லை“என 
-அதாவது உறுதிமொழியேதும் எடுப்பதில்லை என- உறுதியெடுத்துவிட்டேன்(!)
         ஆனால்
இந்தப் புதிய ஆண்டுத் தொடக்கத்தில் 
சொல்லாமலே சில நல்லவற்றை நிறைவேற்றத்
திட்டமிட்டிருந்தேன். 
- அது -
       சில நல்ல இலக்கிய சமூக இதழ்களுக்கு 
ஓராண்டு, ஈராண்டு, ஐந்தாண்டு அல்லது ஆயுள்சந்தாக் கட்டிவிடுவதுதான்.
       அதன்படி, இப்போது 
     (1) காலச்சுவடு - மாதஇதழ் 
     (2) கல்கி - வாரஇதழ் - 
     (3) இந்தியா டுடே - வாரஇதழ் 
     (4) புதியதலைமுறை + கல்வி  
     (5) காக்கைச் சிறகினிலே -மாதஇதழ் 
     (6) சிந்தனையாளன் - மாதஇதழ்  
     (7 புத்தகம் பேசுது - மாதஇதழ்,
     (8) செம்மலர் - மாதஇதழ் 
(9) நாளை விடியும் - பருவ இதழ் 

ஆகியவற்றிற்கு 
இதுவரை சந்தாக் கட்டிவிட்டேன். 
(இவற்றில் ஓராண்டு, ஈராண்டு, ஐந்தாண்டு மற்றும் 
ஆயுள் சந்தாக்களும் உண்டு!)
ஏற்கெனவே வாங்கிக்கொண்டிருக்கும் 
புதுவிசை,தாமரை,கணையாழி,மகளிர் சிந்தனை, உயிர்மெய், தலித்முரசு,ரௌத்திரம்,உங்கள்நூலகம்,இளைஞர் முழக்கம்,  அமுதசுரபி, போலும் சில இதழ்களுக்கும் அடுத்தடுத்து ஆண்டுச்சந்தா (அ) ஆயுள் சந்தாக் கட்ட வேண்டும். பார்க்கலாம், சென்னைப் புத்தகச் சந்தையில்...
    ------------------------------------------------- 
வரும் 10-01-2015 சனிக்கிழமை அன்று மாலை
தஞ்சையில் நான் பேச இருக்கும் 
நிகழ்வின் அழைப்பிதழ் கீழுள்ளது 
வாய்ப்புள்ள  தஞ்சை நண்பர்கள் 
இந்த அழைப்பையே அன்புடன் ஏற்று 
விழாவிற்கு வரவேண்டுமென  அன்புடன் அழைக்கிறேன்.
(முக்கியமாக நம் இனிய வலைநண்பர்கள் கரந்தை ஜெயக்குமார், முனைவர் ஜம்புலிங்கம், அய்யா உறரிணி முதலானோர்)
    ------------------------------------------------- 


45 கருத்துகள்:

 1. அடேயப்பா!!!எத்தனை புத்தகங்கள்!! உங்கள் நேரத்தை கொஞ்சம் களவாட முடிந்தால் எப்படியிருக்கும் :)))) இப்படிதான் வறியவர்களுக்கு களவு எண்ணம் தோன்றுகிறது போல!

  பதிவர் சந்திப்பு இனிமையாக அமையவும், புத்தக்கன்காட்சியும் நம் புத்தகங்கள் மகுடம் சூடவும் வாழ்த்துகள் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட நீ வேற... எஸ்.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செல்வன் போலும் எழுத்தாளர்கள் எழுதுவதையும், படிப்பதையும் பார்த்தால்.. எனக்குக் காதில் புகைவரும்! நானெல்லாம் படிப்பது ஒரு படிப்பா அவர்கள் படிப்புக்கு அவர்கள் எழுதிப் புகழ்பெறுகிறார்கள்.. என் படிப்பு லட்சணத்திற்கு நான் நாவால் நடந்து திரிந்தே நாசமாகிவிட்டேன்... அது இருக்கட்டும், -
   “புத்தக் கன்காட்சி“ன்னா என்னப்பா? புதூ சொல்லாயிருக்கு?

   நீக்கு
  2. புத்தக கண்காட்சி
   புத்தக கண்காட்சி
   புத்தக கண்காட்சி
   அட மூணு முறை இம்போசிஷன் தட்டுரதுக்குள்ள பொறுமை போயிடுதே:(( இந்த டீச்சர்கள் பத்து முறை, ஐம்பது முறை கொடுத்தால் ??? பாவம்தான் நம்மிடம் சிக்கிய மாணவர்கள் இல்லையா அண்ணா!

   நீக்கு
  3. ஒ! இப்போ கூட க் கை விட்டுட்டேனே:(( புத்தகக்கண்காட்சி:)))))))

   நீக்கு
 2. கல்கி, கணையாழி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

  தஞ்சை நிகழ்ச்சி இனிதாக அமைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்கி பழைய வடிவிலும், கணையாழியின் பழைய 3வடிவிலும் என்னிடம் உள்ளன.... அவற்றையெல்லாம் பயன்படுத்தித்தான் “கவிதையின் கதை“ எனும் பெருநூல் ஒன்றை (கடந்த பத்தாண்டுக்கும் மேலாக) எழுதிக்கொண்டே இருக்கிறேன். விரைவில் -அடுத்த ஆண்டு - வெளியிட எண்ணம..பார்க்கலாம். தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. சனிக்கிழமை சந்திப்போம். சென்னைக்கு எங்களால் வர முடியாத நிலை. தங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திப்போம் அய்யா. ஆவலுடன் இருக்கிறேன். (தங்களின் விக்கிபீடியா பணி எனக்கே பெரிய உதவி! என்னை அழைக்கும் நிறுவனத்தினர் “விக்கிப்பீடியாவில் உங்கள் விவரங்களை எடுத்துக் கொண்டோம்“எனச் சொல்லும் ஒவ்வொரு முறையும் உங்களின் அன்புமனம் எனது நெஞ்சை வருடுகிறது.நன்றிஅய்யா)

   நீக்கு
 4. அண்ணா .. மைதிலி சொல்வது போல எப்படி இவையெல்லாம் படிக்க நேரம் கிடைக்கிறது? அதுவும் உங்கள் பல பணிகளுக்கு இடையில்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையைச் சொல்லப் போனால், நேரம்கெட்ட நேரத்தில் படிப்பதும், எழுதுவதும்.. விடிகாலையில் தூங்குவதும் என் துணைவியார் பாவம்... எழுப்பிப் பார்த்துவிட்டு “அய்யோ பாவம்“ என்று விட்டுவிட்டுப் போய் அலுவலகத்திலிருந்து தொலைபேசி “சாப்பிட்டீங்களா?” என்பதும் எங்களுக்குத் தானே தெரியும்.. சரி.. நம்ம விருப்பம் நம்ம வாழ்க்கை.. முடிந்தவரை நல்லபடி வாழப் பார்ப்போம்.. படிக்காத நாள் பிடிக்காத நாளே!

   நீக்கு
 5. ஆசிரியர் அவர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்னை புத்தக கண்காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி. அடுத்த முறை இந்த புத்தகக் கண்காட்சி தென் மாவட்டங்களில் நடைபெற நீங்கள் ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  தங்களது தஞ்சை கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி அய்யா. புத்தகக் கண்காட்சி வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நான் பல்லாண்டுகளாகப போவதும் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குப் புத்தகங்களை அள்ளிவருவதும்.. என்னமோ நான் எவ்வளவு தொகைக்கு வாங்கினாலும் என் துணைவியார் எதுவுமே சொலவதில்லை.. கடந்த முறை செல்லமுடியாத வருத்தம் இன்னும் தீரவில்லை. 2013இல், ரூ.7,000 ஆனது. இம்முறை எவ்வளவு ஆகும் எனத் திட்டமேதும் இல்லை.. நீங்களெல்லாம் அவசியம் வந்து புத்தகங்களையும் புத்தகக் காதல்ர்களையும் சந்திக்க வேண்டாமா அய்யா?

   நீக்கு
 6. அண்ணா 11ஆம் தேதி என்றால் நான் வருவேன். ஆமாம் அது என்ன ஆண் பதிவர்கள் பெயர் மட்டும் இருக்கிறது.
  திரு தி.ந.முரளிதரன், திரு கவியாழி கண்ணதாசன், திரு மதுமதி மற்றும் சென்னைப் பகுதியின் வலை நட்புவட்டம் திட்டமிட்டால், -----
  உரிமையா இதற்கெல்லாம் சண்டைக்கு வருவோமே.

  குறிப்பு-எனக்கு தேவையான புத்தகங்களை தேடித் தருவதாக இருந்தாலும் தங்களைக் காண வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 11ஆம் தேதி இங்கொரு நூல்வெளியீடுப்பா..(கண்ணகி காவியம் - எழுதியவர் உங்களருகில் விழுப்புரத்தில் இருக்கும் கவிஞர் புதுகை வெற்றிவேலன்) முந்திய 10ஆம் தேதி இருநிகழ்வுகள். வேறென்ன செய்ய?
   ஆண்பதிவர் என்றா போட்டிருந்தேன்? ஓ பெயர்களில் ஆண்கள் மட்டும் வந்துவிட்டதா? மன்னிச்சுக்கோம்மா.. என் உடம்பில் ஓடும் “ஆணாதிக்க“ ரத்தத்தை அப்பப்ப சுத்தம்பண்ணித்தான் பார்க்கிறேன்.. இன்னும் இருக்கு போல.. 2,3ஆயிரம் வருடப் பழக்கமல்லவா? மாற்றுவோம்பா.. மாற்றணும் உன்னைப்போல் சுயசிந்தனையுள்ள பெண்படைப்பாளிகள் தான் அதைச் செய்துவருகிறீர்கள்.. உன் மரபுக்கவிதைகள் ரொம்ப அருமைப்பா.. தொடர்க்! அண்ணனின் வேண்டுகோள்!

   நீக்கு
  2. அண்ணா கட்டளையிடுங்கள் காத்திருக்கிறேன். மரபில் தொடர..
   சரிங்க சந்திப்பு இனிதே தொடரட்டும் நாவால் நடக்கும் அண்ணாவை நான் என்று காண்பேனோ ? பார்க்கலாம்.

   நீக்கு
 7. நேமேயில்லை என்று தெரிகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

  நம்ம வகுப்பு...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வலைச்சித்த்ரே... இதுவரை -முந்திய வகுப்பில் கலந்து கொள்ளாத எழுத்தாளர்கள் மட்டுமே- ஒரு 15பேர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பொங்கல் முடியட்டும்.. நம் இணையப் பொங்கலைத் தனியாக வைப்போம்..

   நீக்கு
 8. 10.01.2015 அன்று மாலை 6.30 க்கு நமது மணிமன்றத் தேர்தல் அறிவித்து விட்ட காரணத்தால் அன்று தாங்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற இருக்கும் தஞ்சை “மகிழ்ச்சி மலரட்டும்“ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். விழா சிறப்புற வாழ்த்துகள்.
  சென்னையில் நடைபெற உள்ள 38ஆவது புத்தகக் கண்காட்சியில் 17,18 தேதிகளில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
  தங்கள் அண்மைய படைப்புகள் பற்றிய வார, திங்கள் இதழ்களின் விமர்சனங்கள் படித்தேன் . மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. தங்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். தங்களின் சொந்தச் சோகத்தை விட்டு உதறி, வெளியேறி வந்து பொதுப் பணிகளில் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி அய்யா. தங்களின் பணிகள்தான் பலநேரங்களில் எனக்கு உத்வேகம் தருகின்றன அய்யா. 10ஆம் தேதி நிகழ்வு சிறப்பாக நடக்க வாழத்துகள் அய்யா.
   .15,16, 17,18 வெளியூர் நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டிருப்பதால் தான் 12,13 சென்னை எனத் திடடமிட்டிருக்கிறேன். (15-காங்கேயம், 16-நாகூர், 17-மன்னை, 18-பொள்ளாச்சி) பிறகும் இந்த மாதம் முடிய 7,8நிகழ்ச்சிகள் உள்ளன அய்யா. நன்றி

   நீக்கு
  2. மாற்றங்கள் மலர, தங்களின் இலக்கியப் பணி தொடரட்டும்.

   நீக்கு
 9. முத்து நிலவன் அய்யா:
  வணக்கம். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பின்குறிப்பு:
  [[[[சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை தொடங்கி வைக்கிறார்.]]]

  ஒரு -"""உண்மையான""" விஞ்ஞானியை விழாவை தொடங்கி வைக்க அழைத்ததற்கு நன்றி---அதற்கும் ஒரு நல் மணம் வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே.
   நீங்கள் வர இயலாதா? எங்கே இருக்கிறீர்கள்?

   நீக்கு

 10. அறிவுப் பசி உள்ளோருக்கு
  பயன் தரும் பகிர்வு

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
 11. 12- 13ல் வருவேனா என்று தெரியவில்லை! ஆனால் புத்தக கண்காட்சிக்கு வரும் எண்ணம் இருக்கிறது பார்ப்போம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருவதுதான் வருகிறீர்கள், இயன்றவரை 13ஆம் தேதியே வர முயலுங்கள் அய்யா. சந்திக்க ஆவலுடன் இருக்கிறோம்..
   முரளி அய்யா வர்ராக முத்துநிலவன் வர்ராக..
   மற்றும் நம் வலைப்பக்க உறவினர்கள் வர்ராக... அப்ப நீங்க?

   நீக்கு
 12. ஐயா,
  தாங்கள் சொன்ன அதே தேதியில் அதே இடத்தில் கட்டாயம் சந்திப்போம். நான் தயார்.
  மற்ற நண்பர்களுக்கும் சொல்கிறேன். உங்கள் புத்தக ஆர்வமும் படைப்பாற்றலும் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பிரபலங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் முரளி அய்யா! சற்றும் ஈகோ இல்லாத உங்களின் பெருந்தன்மைக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.
   (சும்மா இருந்துகொண்டே -13ஆம் தேதியா.. அன்னிக்கு எனக்கு ஒரு முக்கியமான ஆஃபீஸ் மீட்டிங் னு நினைக்கிறேன்.. வர முயற்சிபண்றேன்.. வரமுடியலன்னா கோவிச்சிக்காதிங்க ப்ளீஸ்..“ னு சொல்வோர் மத்தியில் உங்கள் உயரம் பெரிது.

   நீக்கு
 13. வணக்கம் சகோ...முதலில்.வாழ்த்துகள் தஞ்சை நிகழ்விற்கு.நானும் வர என்ணியுள்ளேன்...புத்தகக்கண்காட்சிக்கு வர இன்னும்நாள் முடிவு செய்ய வில்லை...வாய்ப்பு இருப்பின் அனைவருடன் நானும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சைக்கு வர்ரீங்களா மகிழ்ச்சி..
   சென்னைக்கும் வர்ரீங்களா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

   நீக்கு
 14. அன்பின் முத்து நிலவன்

  அருமையான பதிவு - சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

  தங்கள் தஞ்சைக் கூட்டம் வெற்ரி கரமாக நடைபெற நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 15. அன்பின் முத்து நிலவன்

  தமிழ் மணம் : 7

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 16. ஐயா! சென்னைக்கு வருகின்றீர்கள்! எங்கள் தில்லையகத்திலிருந்து கீதா தங்களைச் சந்திக்க வருவார். மற்ற சென்னை நண்பர்கள் பதிவர்களுக்கும் சொல்லி எல்லோரும் சந்திக்க. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா! தஞ்சைக் கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி அய்யா. முரளிதரன் அய்யாவும் வருகிறார்..மற்ற நம் நண்பர்களும் வருவார்கள் என்றே நம்புகிறேன். நன்றி அய்யா
   எனது செல்பேசி எண் - 94431 93293

   நீக்கு
 17. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்து மட்டும்தானா நண்பா?
   வருகை இல்லையா? மதுரையில் சரியாகப் பேசமுடியலையே?
   வர முயலுங்கள்.

   நீக்கு
 18. தஞ்சையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா
  வாருங்கள் வாருங்கள் என
  அன்போடு வரவேற்கின்றேன்
  தங்களின் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
 19. அன்புள்ள ஐயா

  வணக்கம். உங்களைத் தஞ்சையில் சந்தித்தது மனம் நிறைவானது. உங்களின் மலர்ந்த சிரிப்பும் சுறுசுறுப்பான இயக்கமும் பேச்சும் என்னை நிறைத்தன.

  பட்டிமன்றப் பேச்சுக்களைத் தொலைக்காட்சியில் கண்டிருந்தாலும் நேரில் தஞ்சையில் பேசிய பேச்சு நெகிழவைத்தது. குறிப்பாக அறம் செய விரும்பு என்பதை ஏன் சொல்லித் தருகிறீர்கள் குழந்தையே அறம்தானே என்று உரைத்தது கல்லெழுத்தாக மனத்தில் பதிந்துவிட்டது. போலச்செய்தல்தான் பிள்ளைகள் பொய்யல்ல என்றதும் அழுத்தமான உணர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது.

  ஒருபேச்சு என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதை உங்களின் பேச்சு எனக்கு உணர்த்தியது. தடையில்லாமல், சோர்வில்லாமல், அலுப்பில்லாமல், தேவையற்ற சொற்கள் இல்லாமல் சரியாகப் பயணித்த பேச்சு அது. கேட்டோர் கற்றுக்கொள்ளவேண்டியது இது.

  முதல் மதிப்பெண் வேண்டாம் மகளே என்பதில் உள்ள மகளே என்பது உங்களின் மீதாக மதிப்பை மேலும் கூட்டுகிறது. இது இலட்சியாவிலிருந்தும் வால்காவிலிருந்து துளிர்த்திருந்தாலும் உலகின் எல்லா மகள்களையும் விளித்தது மனம் கசிய வைக்கிறது. நான் என் மாணவர்களிடம் வகுப்பு எடுக்கும்போதெல்லாம் அடிக்கடி சொலவது நீங்களெல்லாம் என் பிள்ளைகள்.. உஙகளுக்கு ஒரு மணிநேரம் வகுப்பெடுப்பதற்கு நான் 5 மணிநேரங்கள் செலவிடுகிறேன். என் பிள்ளைகள் நன்றாக இருந்தால் நான் நன்றாக இருப்பேன். புத்தகத் தலைப்பிடல்கூட உணர்வுபூர்வமானது, அக்கறையானது, பொறுப்பானது என்பதையும் உணர்த்தியிருக்கிறீர்கள். இரண்டு கடடுரைகள் படித்துவிட்டேன். முழுமையாக மூன்று நுர்ல்களையும் கால அவகாசத்தில் வாசித்துவிட்டு உங்களுக்குக் கண்டிப்பாக எழுதுகிறேன்.
  மனம் நிறைவான சந்திப்பு.

  பதிலளிநீக்கு
 20. அய்யா வணக்கம். தங்களை வீட்டுக்கு வந்து சந்தித்து நெடுநேரம் பேச வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆனால், “மாலைதானே தஞ்சை போகிறீர்கள்? காலையில் எங்கள் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து மாணவர்களிடம் பேசுங்கள்” என்று எனது நண்பரும் நல்ல கவிஞரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரித் தாளாளருமான திரு கதிரேசன் அவர்கள் அழைத்தபோது மறுக்கமுடியவில்லை. (நமது தமிழ் இணையப் பயிற்சிக்கு இருமுறை இடமும் உணவும் தந்து உதவிய அவர் பேச்சை எப்படித் தட்டுவது?) எனவே, நான் திட்டமிட்டபடி மதியம் கிளம்ப முடியாமல் மாலைதான் கிளம்ப முடிந்தது. எனவே தான் சரியாக 6மணிக்குத்தான் தஞ்சைக்கே வந்தேன். எனவேதான் தங்கள் இல்லம் வரமுடியவில்லை. நண்பர் கரந்தையாரிடம் சொல்லி வருந்தித் தங்கள் வீட்டுக்கும் தகவல் சொன்னேன். அய்யா இன்னொருமுறை அவசியம் வருவேன். தாங்கள் தந்த தங்களின் நூல்களைப் பார்த்து வியந்து மகிழ்ந்தேன். தாங்கள் என்பேச்சைப் புகழ்ந்தது தங்கள் அன்பின் மிகையே என உணர்கிறேன். தங்களையும் நம் நண்பர் கரந்தை ஜெயக்குமாரையும் போல, ஆழமும், அதனால் வந்த அடக்கமும் நிறைந்த நண்பர்களைப் பெற்றதே நான் பெற்ற பேறு. தங்களின் நூல்களைப் படித்துவிட்டு அவசியம் பேசுவேன். நாவல் சிறுகதை கட்டுரை என எத்தனை துறைகளில் தங்கள் பயணம்! இன்று மாலை இங்கு ஒரு புத்தக அறிமுகக் கூட்டம் எனவேதான் இரவு 12மணிக்கு மேல் தங்களுக்குப் பதிலெழுதிக் கொண்டு இருக்கிறேன். தங்களைச் சந்தித்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அய்யா. தஞ்சை வெற்றித்தமிழர் பேரவை நண்பர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்கள்.. எனக்கும் நிறைவான நிகழ்ச்சி நேரில் வந்து மகிழ்வூட்டிய தங்களுக்கும் நம் நண்பர் கரநதையார்க்கும் நன்றி

  பதிலளிநீக்கு