28-01-2015 - திண்டுக்கல் வருகிறேன்.. வந்தேன்

28-01-2015  புதன்கிழமை  மாலை 
திண்டுக்கல் வந்தேன்..
(படங்கள் கீழே)

தலைமை உரை திரு மணிவண்ணன் அவர்கள்
தலைவர் -இந்திய சமூகவிஞ்ஞானக் கழகம்,
மற்றும் ஏ.பி .சி. கல்லூரி முதல்வர். திண்டுக்கல்
மற்றும்  ஆசிரியர் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள்
நினைவுப்பரிசு வழங்குபவர்-
முனைவர் குருவம்மாள் 
(தமிழ்த்துறைத் தலைவர்-காந்திகிராம் பல்கலை, திண்டுக்கல்,
ஒருங்கிணை்ப்பாளர் திண்டுக்கல் கலை-இலக்கியக் களம்)
--------------------
படங்களுக்கு நன்றி -
திரு  சுபாஷ் சந்திர போஸ், திண்டுக்கல்.
----------------------------------------------------------
நமது வலைச்சித்தரை 
28-01-2015 மாலை5.30க்குச் சந்தித்து, நிறையப் பேசினோம்.
விரைவில் (மார்ச் மாதம்) புதுக்கோட்டையில் 
மீண்டும் இணையப் பயிற்சி பற்றிப் பேசினோம்..
விவரம் செயல்வடிவில் வரும்.
--------------------
29-01-2015 காலை
ஈரோடு -சத்தியமங்கலம் -டிஜி புதூர்
காமதேனு கலை-அறிவியல் கல்லூரி
மாணவ-மாணவியர்க்காக
மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்த
ஈரோடு மாவட்ட 
வேலைவாய்ப்பு அலுவலர் நடத்திய
மாணவ-இளைஞர்களுக்கான 
வேலைவாய்ப்பு மற்றும்
வழிகாட்டு நெறிக் கண்காட்சியில்
எனது நம்பிக்கை உரை
சுமார் 2000 மாணவ-மாணவியர் கொண்ட மாபெரும் நிகழ்வு.
படங்கள் கிடைத்ததும் இடுவேன்.
இந்தப்படம் கிடைத்ததும் இடுவேன்.
------------------- 

9 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  நிகழ்வு சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்.. நிச்சயம் தனபாலன் அண்ணாவை சந்தியுங்கள்..... ஐயா மிகுதி தொலை பேசியில்..  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  அரசுப் பள்ளியின் அவசியத்தைப் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ள திண்டுக்கல் செல்ல இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. வலைச்சித்தரைச் சந்தித்து வலைத்தளம் சிறக்க ‘ஒபாமா & மோடி’ சந்திப்பு போல தங்கள் இருவரின் சந்திப்பும் இருக்கட்டும்.

  உலக வலைத்தள மக்கள் பயன் அடையட்டும்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் நம்பிக்கை உரை பலருக்கு வழிகாட்டுமென நம்புகிறேன்.
  நிகழ்வு சிறப்பாக இடம்பெற வாழ்த்துக்கள்...

  யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான அவசியமான தலைப்பு
  பேச்சின் காணொளியப் பதிவீர்கள் ஆயின்
  பதிவர்கள் அனைவரும்
  கூடுதல் மகிழ்ச்சி கொள்வோம்
  விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. இந்த படத்தை நீங்க google plus ல ஷேர் செய்த போது , அவ்ளோ தெளிவா இல்லை. இப்போ ஓகே! விழா சிறப்பாய் அமைய வாழ்த்துகள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 6. தங்களது உரைகளை நான்கேட்டுள்ளேன். தற்போது திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளும், திண்டுக்கல் தனபாலன் மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவருடனான சந்திப்பும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. விழா முடிந்து அனைவரின் சந்திப்புடனும் சந்தோஷமாய்....
  வாழ்த்துக்கள் ஐயா....

  தங்கள் மகனை எப்படியும் பார்த்து விடலாம் என கில்லர்ஜி அண்ணனுடன் பேசி அலைனில் இருந்து அபுதாபி வந்தேன். இங்கு வந்தால் இரவு அண்ணன் போன் செய்து அவர் இப்பத்தான் அலைன் போறாராம் என்கிறார்.

  நாளை அலைன் போவேன்... அங்கிருப்பாரா... இங்கு வருவாரா தெரியவில்லை.... கில்லர்ஜி அண்ணாவிடம் மொபைல் நம்பர் வாங்கிச் சென்று கூப்பிட்டுப் பார்க்கிறேன்...

  எப்படியும் பார்க்க முயற்சிக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு