நம்ப முடியாத உண்மைகள்...!

நம்ப முடியாத உண்மைகள்...!
வீட்டில் எதையாவது தேடப்போய், தேடிய பொருள் கிடைக்காத எரிச்சலில் இருக்கும்போது, ஏற்கெனவே காணாமல் போன (?) பொருள் கிடைத்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு நிறைய உண்டுப்பா...!
“இந்தப் புத்தகக் குவியலுக்குள் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் ஒருவேளை, காணாமல் போன இந்தோனேசிய விமானம் கூட ஒருநாள் கிடைக்கப் போகுது பாருங்க“ என்று என் துணைவியார் ஒரு முறை கிண்டல் செய்திருக்கிறார். அந்த லட்சணத்தில் புத்தகம் நிறைந்துகிடக்கும் (இறைந்துகிடக்கும்?) வீடு நம்முடையதாக்கும்...

சரி..சரி.. இந்தக் கதை எதற்கு இப்போது?
இணையத்தில் நான் தேடிய செய்தி கிடைக்காத எரிச்சலில் இருந்தபோது இந்த சுவாரசியமான செய்தி கிடைத்து வியக்கவைத்தது..

இதோ அந்த செய்தி -
     
இவரும்-அவரும்!












அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத உண்மைகளாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே
ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946
லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856! ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956!
லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960
லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913
லிங்கன், கென்னடி இருவருமே-                                       சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.
இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.
இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.இருவருக்குமே காயம் பட்டது தலையில்
லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்
இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.
இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.
இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பதுதான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.
கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.
லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்
கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.
இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.
லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ஃபோர்ட்
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்தயாரித்த காரில்.
லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.
பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மைச் செய்திகளாம்!
நல்லாக் குடுங்கிறாங்கய்யா டீடெய்லு...


ஆனா --
இது உண்மைதானா என்பதை 
யாரிடம் கேட்டு உறுதிப்படுத்துவது?
அய்யா... சாமிகளா.. 
நம்ம நண்பர்கள் யாராச்சும்

பங்காளி பராக் ஒபாமா 
முகவரி இருந்தாக் குடுங்கய்யா... 
---------------------------------------------------- 
நன்றி - https://ramanans.wordpress.com/2014/12/26/D-8/

17 கருத்துகள்:

  1. இத்தனை விசயங்களா?
    அண்ணா, இன்னொரு ஒற்றுமை நான் சொல்லட்டுமா...இருவரும் உங்கள் வலைத்தளத்தில் இடம்பெற்றுவிட்டனர் :) (திட்டாதீங்க :) )

    பதிலளிநீக்கு
  2. நானும் படித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறந்த சுவையான செய்திகளை வெளிப்படுத்திய பதிவிது.
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  4. டீடெய்லு பல தளங்களில் வந்து விட்டது தலைவரே...!

    பதிலளிநீக்கு
  5. ஆச்சரியம் கொடுக்கும் செய்திகள்தான்! இந்தச் செய்திகள் பல தலங்களில் வந்திருக்கின்றது ஐயா! வாசித்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  6. இதை முகநூலில் படித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் ஐயா...
    அதை மீண்டும் உங்கள் தளத்தில் படித்தேன்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. இந்த தகவல்களை ஏற்கனவே படித்து இருக்கிறேன்! உண்மையா என்று விளக்குவீர்கள் என்று பார்த்தால் எங்களையே கேட்கிறீர்களே! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அட என்னவொரு அதிசய ஒற்றுமை.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொல்லியது போல் இவையெல்லாம் உண்மைதானா வரலாற்று முனைவர்கள் தான் யாரேனும் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. நானும் படித்துள்ளேன் சகோ..

    பதிலளிநீக்கு
  11. உண்மையில் நம்பத்தான் முடியவில்லை. ஒரு சிலவற்றையாவது சரிபார்க்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இந்த விசித்திரத்தை நான் முன்னரே படித்துள்ளேன். இருப்பினும் தங்களது எழுத்துவழியாகப் படிக்கும்போது அதற்குள்ள சிறப்பே தனிதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. இரண்டு பெரும் ஒரே மேட்டருக்காகத்தான் போட்டுத் தள்ளப்பட்டனர் அது கறுப்பர்களுக்கு சம உரிமை...

    பதிலளிநீக்கு
  14. ஆமாம் ஐயா! உண்மையும் ஆச்சரியமும் மிக்க விடயங்கள் அவை!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு