வலைப்பக்க வயது நான்கு தொடக்கம் – வலைப்பதிவு வரிசை பத்து

 வலைப்பதிவு தொடங்கி மூன்றாண்டு முடிந்து,
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த பிப்ரவரி-18  தரும் சிந்தனை

மூன்றாண்டுகளில் தரமான(?) எனது முதல்10 பதிவுகள் என நான் நினைப்பவை இவை  
(ஆனால் வாசகர் வரிசை வேறாக இருக்கிறதே! ஏன்?)
இதோ என் வரிசை-
1         ஜெயகாந்தன் முழுவிமர்சனம் –(தற்போது முதல்10இல் இடமில்லை)                       http://valarumkavithai.blogspot.in/2013/01/blog-post_7.html
2. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே (தற்போது  4ஆம் இடம்)
3. விண்ணப்பித்து வாங்குவதா விருது? – (தற்போது முதல்10இல் இடமில்லை)
4. தனியார் பள்ளிகள் சாதனை – பின்னணி என்ன?
5. சிறுகதை ஆய்வு (தற்போது முதல் 10இல் இடமில்லை)
6. இன்றைய தமிழில் பெண்கவிகள் (தற்போது முதல்10இல் இடமில்லை)
7. கம்பனும் காரல்மார்க்சும் (தற்போது முதல்10இல் இடமில்லை)
8. ஆசிரியர் உமாவைக் கொலைசெய்தது யார்? (தற்போது முதல்10இல் இடமில்லை)
9. காலத்தை மீறிய கவிதைகள் (தற்போது முதல்10இல் இடமில்லை)
10. குமுதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை “கன்வார்“(தற்போது இல்லை)
       http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_3773.html
இந்தப் பட்டியல் பற்றிய நண்பர்களின் கருத்துகளை -முக்கியமாக எந்தெந்தப் பதிவுகள் சிறந்திருந்தன, எவையெவை தேவையில்லை எனும் நண்பர்களின் உண்மையான கருத்துகளை எனது வரிசைகளை மாற்றியிருந்தாலும் வரிசையில் இடம்பெறாதிருந்தாலும் சரிதான் – மனந்திறந்து எழுதிட வேண்டுகிறேன். உங்களின் கருத்து உளிகள் என்னைச் செதுக்குமென நம்புகிறேன். எழுதுங்கள்.
நமது வலையின் இரண்டாமாண்டு தொடக்கத்தின்போது, ஒரு பதிவு இட்டிருந்தேன் போன ஆண்டு சத்தியமா மறந்திட்டேங்க! (திருமணநாள், பிறந்த நாளை மறந்து வெளியூர் போய் ஒரு தொலைபேசி கூட பண்ணாததற்கு நீங்க வீட்ல திட்டுவாங்கியிருக்கீங்களா? ஐயா வாங்கியிருக்காருல்ல??!!) -- அதைப்பார்த்தால்... பார்க்க- http://valarumkavithai.blogspot.in/2012/02/blog-post_7985.html  
நானும் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன். அதனாலேயே எனது வலைப்பதிவு முறை கடந்த 2ஆண்டுக்குப் பின் மாறியுள்ளதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டி மகிழ்ந்தார்கள்...  அதனாலேயே வாசகர் எண்ணிக்கையும், பின்தொடர்வோர் எண்ணிக்கையும் கடந்த 2ஆண்டுகளை விட கிடுகிடுவென்று உயர்ந்ததைக் கவனிப்பவர்கள் கவனித்திருக்கலாம். “விஜய் டிவிக்கு ஏனிந்த வெட்கங்கெட்ட வேலை“ என்னும் தற்போது முதலிடத்தில் இருக்கும் எனது விமர்சனம் காட்டமானதுதான், ஆனால் அதில் கருத்துப் பிழையேதும் இல்லை யென்றாலும், அந்தக் கோபத்தை ரசித்துப்படிக்கும் ஆர்வலர்கள், அதன் மாற்றாக எழுதப்படும் நல்ல விமர்சனங்களையும் படிக்கவேண்டும் என்றும் “நல்லவற்றைப் பாராட்டும் விமர்சனம்  வளர வளரத்தான், அல்லவற்றைப் பற்றிக் குறைகூறுவதும் விமர்சனமும் குறையும்என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 3ஆண்டுப் பதிவுகளில் ரொம்பப் பேரு விரும்பிப் படிச்சதாக இப்போது இருப்பது.......


  1.  விஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை? விஜய் டிவி சிவ.கார்த்திகேயன்-எங்கவீட்டுப் பிள்ளை”        14-01-2014 பொங்கல்       சிறப்பு நிகழ்ச்சி பார்த்தீர்களா? அவர்தான் விஜய் டிவியில்-...
  2. ஆனந்த விகடனில் ஏன் இப்படி ஆபாசக் குப்பை?                               ஆனந்த விகடனில் இருந்து ஜூனியர் விகடன், சுட்டி விகடன், அவள் விகடன்,     மோட்டார் விகடன், வேளாண் விகடன்,  வரிசையாக வந்தபோது...
  3. நீயா-நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தும் பெண்ணியவாதிகளும்! 20-10-2013 ஞாயிறு இரவு விஜய் தொலைக்காட்சியில் பெண்ணியவாதிகளும், பெண்ணியவாதம் வேண்டாம் என்னும் இளம்-பெண்களும் பங்குபெற்ற விவாதம் வழ...
  4. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! --நா.முத்துநிலவன் கட்டுரை—        என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுத...
  5. இயக்குநர் சேரனுக்கும் அவரது மகளுக்கும் என்ன பிரச்சினை? உண்மைக்காதல் உயிர்க்காதல் என்கிறார் மகள் தாமினி. இல்லை  பணம்பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் சந்துரு என்கிறார் இயக்குநர் சேரன் ... ...
  6. கார்த்தி காப்பி குடிக்கட்டும், சூர்யா பெப்சி குடிக்காதிருக்கட்டும் இந்த வாரக் கல்கி (10 மார்ச், 2013) அட்டைப்படம் பார்த்தீர்களா? உள்ளே அட்டைப் படக் கட்டுரை படித்தீர்களா? நடிகர் கார்த்தி ஒரு காப்ப...
  7. சூப்பர் சிங்கர் திவாகர்தான்! சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டியில் பாடிய அற்புதப் பாடக இளைஞர்கள் இடமிருந்து சையது, பார்வதி, நடுவில் திவாகர் , சோனியா, சரத் ...
  8.   கவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள் (கவிஞர் வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர்.இரா.தெ.முத்...
  9. ‘‘படிப்பது எதற்காக? வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” – ‘நீயா-நானாகோபிநாத்தின் மிகச்சிறந்த பேச்சு! நீயா நானாகோபிநாத்தை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், தனது நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களை வாயைப் பிடுங்கிப் பேசவைக்கும் க...
  10. அஜித்தின் ஆரம்பம்திரைப்படக் கதை தரும் அதிர்ச்சிகள்! இந்தப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுபவை அல்லஎன்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏத...

இந்த வரிசை மாறவேண்டும்.
நல்லவற்றைத் தேடிப்பிடித்துப் படிக்கும் ஆர்வம் இணைய –இளைய- வாசகரிடம் வளரவேண்டும். இதை நம் வலைக்கு 4ஆம்வயது பிறக்கும் இன்று(18-02-2014) என் வேண்டுகோளாக வைக்கிறேன். 
இன்னும் கூர்மையாகவும், நேர்மையாகவும் நான் தொடர்ந்து எழுத, நண்பர்களின் உதவியை வாழ்த்தை இன்னும் சிறப்பாகப் பதிய- திரட்டிகளில் இணைத்துப் பரப்ப- ஆலோசனைகளோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.
-------------------------- 
அடுத்த ஆண்டு இதே நாளில் (18-02-2015) பதிவுகளின் தரம் குறையாமல், புரட்டிய பக்கங்களை 2லட்சமாகவும், பின்பற்றுவோர் எண்ணிக்கையை 500ஆகவும் உயர்த்திட சபதம்ஏதும் ஏற்கவில்லை உங்கள் உதவிகளுடன் முயற்சிசெய்வோம். நன்றி.
-------------------------- 

32 கருத்துகள்:

  1. மிகவும் தரமான பதிவுகளைத் தரும் வலைப்பதிவு உங்களது.
    சினிமா குறித்தான பகிர்வுகளுக்கு இருக்கும் மரியாதை மற்ற பதிவுகளுக்கு இருப்பதில்லை என்பதே எனது ஆதங்கமும்... இதை நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன்...

    ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி அய்யா. ஆனால், மூன்று வருடம் முடிந்து 18-02-2014அன்று நான்காவது ஆண்டுதான் தொடங்குகிறது.ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்தை ஓராண்டு முன்னதாகவே சொல்லிவிட்டீர்கள் நன்றி

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    பதிவை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..... நான்காவது ஆண்டுடில் காலடி எடுத்து வைத்துள்ளிர்கள் தொடர்ந்து வலையுலகில் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன், உங்களைப் போலும் செயலூக்கமுள்ள இளைஞர்கள் தரும் நம்பிக்கையில்தான் வண்டி ஓடுது...

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் ஐயா.
    தாங்கள் சபதம் ஏற்க வேண்டிய அவசியமில்லை
    நல்லது தானாகவே நடக்கும் ,
    நன்றாகவே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நல்ல மனத்திற்கு நன்றி. ஆனால்,
      “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” என்று நம்ம பாட்டுமாமன் பட்டுக்கோட்டை சொல்லியிருக்கானே? நாம் ஏதாவது செய்துகொண்டே இருக்கணுமய்யா. நன்றி

      நீக்கு
  4. நான்கு ஆண்டு நிறைவுக்கும், ஐந்தாம் ஆண்டு துவக்கத்திற்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. தங்களைப் போன்றவர்களிடம் இன்னும் இன்னும் நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன் மீண்டும் நன்றி

      நீக்கு
  5. ஐந்தாம் ஆண்டினைத் தொடங்கிய உங்கள் வலைப்பக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு தொகுப்பு ஐயா... இந்த வலைப்பதிவு சுய ஆய்வு மிகவும் தேவை...

    நான்காம் ஆண்டு நாலாபுறமும் உங்களின் எண்ணங்கள் போல் விரியும்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையில் வந்து வாழ்த்தியதோடு, காலையில் தொலைபேசி வழியாகவும் வாழ்த்திய உங்கள் அன்புகண்டு நெகிழ்ந்தேன். (ஏதோ எனக்கே பிறந்தநாள் போல! மகிழ்ந்தேன்) மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  7. வணக்கம் ஐயா
    ஐந்தாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைக்குழந்தைக்கு எனது அன்பான வாழ்த்துகள். தாங்கள் குறிப்பிட்டது போல் வலைப்பதிவுகளில் அதிகம் விரும்பிப் படிப்பது சினிமா மற்றும் அரசியல் சார்ந்த பதிவுகளாகத் தான் உள்ளது. இந்நிலை கண்டிப்பாக மாற வேண்டும் நல்லவற்றை நாடி கற்க வேண்டுமெனும் ஆவல் வலைப்பதிவு வாசகர்களிடம் அதிகளவு ஏற்பட வேண்டும் எனும் ஆசை எனக்கும் உண்டு ஐயா. நான்காண்டுகளில் உங்கள் வலைப்பக்கம் தங்கள் எழுத்துகளால் கூர்மை பெற்று வருவது ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. வலைப்பயன்பாடு மூலம் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டும் பணியும் ஒருங்கே நடந்து வருவது கூடுதல் சிறப்பு. தொடருங்கள் ஐயா. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி பாண்டியன். ஆனால், மூன்று வருடம் முடிந்து 18-02-2014அன்று நான்காவது ஆண்டுதான் தொடங்குகிறது. ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்தை ஓராண்டு முன்னதாகவே சொல்லிவிட்டீர்கள் நன்றி நம் நட்புவலைவட்டம் விரியட்டும்.

      நீக்கு
  8. பாராட்டுக்கள் ...சினிமா சம்பந்தமான பதிவுகளே முதல் பத்து இடங்களைப் பிடித்து உள்ளன என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது ..
    போடாத சபதமும் நிறைவேறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “என் தாயின் மீது ஆணை - எடுத்த சபதம் முடிப்பேன்(?!!!?) உங்களைப் போல நகைச்சுவையாகச் சொல்லிப்பார்த்தேன். “திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” குறள-374 -வள்ளுவனின் குறள் கண்டு அதன் உலகியல் கண்டு வியந்துகொண்டே நடை போடுபவன் நான். பார்க்கலாம். உங்களைப் போலும் நன்மன நண்பர்களின் வாழ்த்துடன் உற்சாக நடை தொடர்வேன். நன்றி.

      நீக்கு
  9. வளரும் கவிதை,வளர்க்கும் கவிதை...உண்மைதான் தன்னைத்தானே கூர்தீட்டிக்கொள்ளும் முயற்சி இது.வாழ்த்துக்கள் தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழியரே. உங்களிடம் இன்னும் நல்ல நல்ல படைப்புகளை எதிர்பார்க்கிறேன், வண்ண வண்ணமாய்... வளர்க, வளர்க்க.

      நீக்கு
  10. அண்ணா நான்காம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நல்லது எங்கிருந்தாலும் தானாக தேடி வந்து படிக்கும் ஆர்வம் இளம் தளமுறையிடம் இருக்கு என்றே நம்புகிறேன்.. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கும்மா... ஆனால் கூடுதல் எதிர்பார்ப்பில் உலகியல் சிக்கல்கள்...! எங்கள் இளமைக் காலத்துச் சிக்கலை விட இன்றைய இளைய உங்களுக்கு எத்தனை எத்தனை விதமாக வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள்! (இரண்டுமே வளர்ச்சி) அதில்தான் ஏமாற்றம் எழுகிறது. அதை உன்னைப்போலும் பொறுப்பானவர்கள் மாற்றிவருகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சியே! அளவுமாற்றம்தானே குணமாற்றத்தை நிகழ்த்தும்? தொடர்வோம். நன்றி தங்கையே!

      நீக்கு
  11. 2,3,6,8,10 தங்கள் வரிசைப்படுத்திய பட்டியலில் நான் படித்தவை. முதல் மதிப்பெண் கட்டுரை எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா. ஒரு நாள் டைம் கொடுங்க படிச்சிட்டு வந்திடுறேன். நாலாவது ஆண்டு, கலக்குங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னதுதான் என்றில்லாமல், இலக்கணம் முதல் திரைப்படம் வரை தேவையான நல்லவற்றை அளவின்றி ரசிப்பவன், அதுபற்றித் தெரிந்து எழுத விரும்புபவன். அதுதான் என் பலமும் பலவீனமும். நம் கல்வி தொடர்கிறது!... நன்றி தங்கையே உன்னிடம் இன்னும் நிறைய்ய்ய்ய எதிர்பார்க்கிறேன் திறமை உள்ளவர்கள் அதைச் சமூகத்திற்குப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய சோகம். அந்த சோகத்தை நீ துடைக்கிறாய், இன்னும் இன்னும் வளர்க்க, வளர வேண்டும்பா. நன்றிடா.

      நீக்கு
  12. நான்கு வருடம் , கலக்குங்கள் ஐயா! இணையத்தில் நான் தொடர்ந்து வருகை தரும் பக்கம் தங்களுடையதுதான்! வாழ்த்துகள்.. வலைக்குப் புதியவன் என்பதால் தங்களின் பல கட்டுரைகளை படிக்கவில்லை. கண்டிப்பாக படித்துவிடுவேன்... தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு வருடமல்ல ஜெயசீலன், நான்காம் வருடம்...
      நன்றி ஜெயசீலன், இன்றைய இளைஞர்கள் முகநூ்லில் லைக் போடுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்கள் என்னும் குற்றச்சாட்டை நீங்கள் துடைக்கிறீர்கள்.. வலைப்பக்கம் நம் படைப்புமுகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும், என் வலைப்பக்கம் மட்டுமல்லாமல் எனது வலைப்பக்க இணைப்பிலுள்ள நண்பர் பலரின் வலைப் பக்கங்களுக்கும் சென்று பாருங்கள். படித்து இணையுங்கள், புதிய உலகில் நீங்கள் அறியப்படுவீர்கள்! தொடருங்கள். வாழ்த்துகள். நன்றி.

      நீக்கு
  13. வாழ்த்துக்கள் ஐயா! இந்தப் பட்டியலில் சில நான் படித்தவை, சில படிக்காதவை..படித்துவிட்டுச் கருத்திடுகிறேன்..
    நீங்கள் சபதம் செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்கள் எழுத்தைத் தேடி தேனீக்கூட்டம் போல பலர் வருவர்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ அந்த நம்பிக்கையில தான வண்டி ஓடுது! நன்றி சகோதரீ
      (“கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” என்று வள்ளலாரே சொன்னதாகப் பலரும் தவறாகச் சொல்கிறார்கள் ஆனால் வள்ளலாரின் எந்தப் பாடலிலும் இந்த வரிகளைக் காணவில்லை!)

      நீக்கு
  14. ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என்வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் உங்கள் நற்பணி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று வருடம் முடிந்து, நாலாம் ஆண்டில்தான் அடியெடுத்து வைக்கிறேன் கஸ்தூரி. 18-02-2011இல் எனது வலைப்பக்கம் தொடங்கப்பட்டது... அப்படின்னா...? சரி விடுங்க... நன்றி.

      நீக்கு
  15. தங்கள்
    நான்காமாண்டு வலைப்பூப் பயணத்திற்கு
    வாழ்த்துகள் ஐயா!
    தங்கள் பதிவுகள் யாவும்
    தரமானவை என்றே
    நான் கருதுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. நானும் அப்படித்தான் கருதுகிறேன்
      (...ஆனா அய்யா நெறயப்பேரு “சப்பாணி“ன்னுதானே சொல்றா(ய்)ங்க..-நன்றி பதினாறு வயதினிலே பாரதிராஜா)

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே!
    நாலாவது ஆண்டில் நற் புகழை தாங்களும் நற் பயனை நாங்களும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    தங்கள் பெண் கவிகள் பற்றி வாசித்தேன். அபாரம் மிக்க மகிழ்ச்சி. or பனை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம் என்ற வகையில் சிறப்பாக அமைந்தது. தங்கள் எல்லா பதிவும் நன்றாகவே இருக்கும். நீண்ட பதிவாக இருப்பதால் முழுதும் வாசிக்க முடியவில்லை.பார்க்கிறேன்
    நன்றி தொடருங்கள் தங்கள் பணியை தயக்கமின்றி.
    வாழ்த்துக்கள் .பல...!

    பதிலளிநீக்கு
  17. தங்களின் பதிவுகள் இன்னும் பல ஆண்டுகளைக் காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதன் மூலமாக நாங்கள் பல அரியனவற்றை அறியமுடியும். தஞ்சையில் புத்தக விழாவில் தங்களைச் சந்தித்தது என் மனதிற்கு நிறைவைத் தந்தது.

    பதிலளிநீக்கு