பாடமாய் மாறிய படங்கள் – பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி


பாலுமகேந்திரா (20-05-1939 -- 13-02-2014)
பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலுமகேந்திரா காலமானது அறிந்து ஒரு பெரும் ஒளிஓவியரை இழந்த வலியின் எச்சங்கள் -
பல தேசிய விருதுகளையும் தாண்டிய அவரது ஒளிப்பதிவும் இயக்கிய திரைப்படங்களும் அவரது பெயரைத் திரைத்துறையின் பாடத்திட்டத்தில் இன்னும் பல்லாண்டுக்காலம் இருக்க வைக்கும் என்பது  உறுதி.
அவரது குறும்படங்கள் – பொதிகைக்குப் பார்வையாளர்களை அள்ளி வந்தன!
இன்றும் நம்வீட்டார் அனைவரையும் பார்க்கவைக்கவேண்டிய படங்கள் அல்ல பாடங்கள் அவை!

வீடு – நடுத்தர வர்க்க சொந்தவீட்டுக் கனவை கண்ணீர் வழியக் காட்டியது

மூடுபனி –காட்சிகளில் இயக்குநரை மீறிய சினிமா ஒளிப்பதிவாளராக பாலுவை இனங்காட்டியது.

மூன்றாம்பிறை  - ஸ்ரீதேவிக்கு வரவேண்டிய தேசிய விருது கமலுக்குப் போனது, என்றாலும் படததில் பாலுவே பேசப்பட்டார் (சிலுக்கு கொஞ்சம் சினிமாத்தனம்)
(மாற்றிவிட்டேன் - சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி)

தியாகராஜன் நடித்த ஒரு படத்திலும் இவ்வாறே சினிமாத் தனமான ஒரு பாடல் இருந்தாலும் பாலுமகேந்திராவே பாராட்டுக்கு உரியவரானார்.

அவரது ஒளிப்பதிவில் மகேந்திரனின் முள்ளும் மலரும் இன்றுவரை ரஜினிகாந்துக்கும், இயக்குநர் மகேந்திரனுக்கும் பேர்சொல்லும் படம்!

ஈழத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்தவர், தமிழின் நல்ல கலைவளர்ச்சிக்கு உரமூட்டியவர் பாலு! சென்னையில நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டை வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து திறம்பட நடத்தித் தந்த அந்த மகத்தான -சமூகஈடுபாடுகொண்ட- அந்தக் கலைஞனின் இழப்பு உண்மையிலேயே ஒரு பேரிழப்பு!

அவர் திரைப்படங்களைப் பள்ளி மாணவர்க்குப் பாடமாக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நல்ல படங்களைப் பார்க்கத் தெரிந்தால் தானாகவே மோசமான படங்களைப் புரிந்துகொள்வார்கள் என்ற அவரது கருத்தை உள்வாங்கி நான் எழுதிய கட்டுரை தினமணியில வந்தது
படிக்கச் சொடுக்குக - http://valarumkavithai.blogspot.in/2014/01/blog-post_21.html
------------------------------------------------------
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினைஅமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.  1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நன்றி - http://ta.wikipedia.org/wiki/
----------------------------------------------------------------

25 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  இவரின் இழப்பு ஈட செய்ய முடியாது..... அன்று ஈழத்தில் பிறந்து இன்று இந்தியாவில் உயிர்நீத்தார்...அவரின் ஆத்மா சந்தியடையட்டும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன், ஈழத்தில் பிறந்து, தன் கலைப்பயணத்தினூடே இடதுசாரிகளோடு நெருக்கம் காட்டிய அவருக்கு ஆன்மாவின் மேல் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. நானும் நம்புவதில்லை. (ஆமா இந்த சாந்தி யாரு ரூபன்?)

   நீக்கு
 2. இயக்குநர் என்றளவில் ரசிகர்களைத் தன்னை நோக்கித் திருப்பியவர்களில் இவர் முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவருடைய ஒவ்வொரு படத்திலும் தன் முத்திரையை ஆழமாகப் பதித்திருப்பார். தமிழகத் திரையுலகிற்கு பேரிழப்பு. இச்சாதனையாளரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீதர்படம், பாலச்சந்தர் படம் என்று இயக்குநர் பெயர்பார்த்து ரசித்தவர்களிடம், ஒளிஓவியர் என்று பெயரெடுத்துத் தனக்கென்று ஓரிடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர் பாலு. தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா.

   நீக்கு
 3. "ஸ்ரீதேவிக்கு வரவேண்டிய தேசிய விருது கமலுக்குப் போனது" என்று மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி DD. திருத்திவிட்டேன். மாபெரும் கலைஞர்களான அந்த இருவரையும் மீறி அந்தப் படத்தில் பாலு பேசப்பட்டதுதான் ஆழப்பதிந்துவிட்டது போல!

   நீக்கு
 4. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  அவரின் சிறப்பு தொகுப்பிற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி DD. ரூபனின் பின்னூட்டததிற்கு இட்ட எனது பதில் கேள்வியை உங்களுக்கும் Forward செய்கிறேன்...(உறி உறி!)

   நீக்கு
 5. Sridevi's National Award went to Kamal... you have mentioned reverse.

  பதிலளிநீக்கு
 6. மூன்றாம் பிறை படத்துக்கு கமலுக்கு தான் விருது வழங்கப் பட்டது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் செந்தில், நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு என் நனறி. திருத்திவிட்டேன்.

   நீக்கு
 7. படைப்பாளிகளுக்குச் சாவில்லை கண்டீர்
  விடைபகிர்கிறது நா.முத்துநிலவன் பதிவு
  "பாடமாய் மாறிய படங்கள்"

  திரைத்துறை இருக்கும் வரை
  பாலுமகேந்திரா இருப்பார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதிலலை, தமிழ்த்தொண்டன் பாரதிதா(ச)ன் செத்ததுண்டோ?” - பாரதிதாசனின் தமிழைக் கலை என்றும் திருத்திக்கொள்ளலாமல்லவா அய்யா? நன்றி.

   நீக்கு
 8. ஆழ்ந்த அனுதாபங்கள்...

  //கமலுக்கு வரவேண்டிய தேசிய விருது ஸ்ரீதேவிக்குப் போனது//

  எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து பலரும் இதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதெப்படி ஒரு நடிகைக்கு போக வேண்டிய விருதை நடிகனுக்குக் கொடுக்கலாம்? அதே வருடம் சிறந்த நடிகனுக்கான விருது யாருக்கு அளிக்கப்பட்டது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா தெரியலிங்கய்யா. கருத்துக்கு நன்றி. விவரங்களை விடவும் அவற்றின் விளைவுகள் பற்றியே கவலைப்பட்டுப் பழகிவிட்டதால் உங்கள் கேள்விக்கு என்னிடம் விடையில்லை.

   நீக்கு
 9. கமலையும் ஸ்ரீதேவியையும் இயக்கியது பாலு மகேந்திரா என்றால், அதிலிடம்பெற்ற, (அந்தக் காலத்தில் உங்களையும் என்னையும் போலவே) பல ஆண்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட சிலுக்குவை இயக்கிய பெருமையையும் அவருக்குத்தானே வழங்கவேண்டும்! சாம்பார், ரசம், கூட்டு செய்தவர்களுக்கு அங்கீகாரம் தரும்போது, உப்பும் காரமுமாய் உறைக்க உறைக்க ஊறுகாய் படைத்தவர்களுக்கும் அங்கீகாரம் தரவேண்டுமல்லவா? சிலுக்கு விஷயத்தில் நீங்கள் ஏன் apolegetic ஆக எழுதவேண்டும்?

  பதிலளிநீக்கு
 10. ”அந்தக் காலத்தில் உங்களையும் என்னையும் போலவே பல ஆண்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட சிலுக்கு” - ஆகா! அய்யா வேண்டாம்யா, நாம தனியாப் பேசிக்கிறுவம்யா! (சின்னப் புள்ளைங்க நிறையப் பேரு நம்மலச் சுத்தி நிக்கிறாங்க கேள்வி கேட்ட உங்கள விட்டுட்டு என்னையக் கல்லக் கொண்டு அடிக்க சில தங்கச்சிங்க வேற இருக்காங்கய்யா! )
  கந்தர்வன் எழுதிய அன்றைய கவிதை ஒன்று மறக்கவியலாதது
  ”திரைப்பட உலகின் திசைகள் ஐந்து,
  கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு சிலுக்கு!” எப்புடீ?

  பதிலளிநீக்கு
 11. அவருடைய இழப்பு பேரிழப்பே. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. (சின்னப் புள்ளைங்க நிறையப் பேரு நம்மலச் சுத்தி நிக்கிறாங்க கேள்வி கேட்ட உங்கள விட்டுட்டு என்னையக் கல்லக் கொண்டு அடிக்க சில தங்கச்சிங்க வேற இருக்காங்கய்யா! ) ஹா...ஹா ...ஹா ...வந்துட்டேன் அண்ணா வந்துட்டேன்.
  செய்தியை படித்தவுடன் நான் அடைந்த அதிர்ச்சியை பார்த்து உன்ன தன்பிக்கு டென்சன் ஆய்டுச்சுன்ன பார்த்துங்களே!
  ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் பாலா தொடரில் பாலா பாலு சார் ஐ கொண்டாடியிருப்பார் அல்லவா?
  நல்ல படைப்பாளி மட்டும் அல்லர் , அட்டகாசமா படைப்பாளிகளால் தம் குரு என கொண்டாடப்படவர். ஈடு செய்யா முடியா இழப்பு:((((((((((

  பதிலளிநீக்கு
 13. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அவருடையது! அவரின் இன்னொரு வெகு நாள் கோரிக்கை திரைப்பட ஆவண காப்பகம்!

  இனிமேலாவது அவருடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா!
  காலம் தான் பதிலளிக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 14. வாழ்வின் இறுதி வரை சினிமாவிற்காக வாழ்ந்த மாமனிதன்.பேரிழப்பு....திரையுலகிற்கு...

  பதிலளிநீக்கு
 15. அஞ்சலிப் பதிவு
  சுருக்கமாக இருந்தாலும்
  மனதிற்கு மிக நெருக்கமாக...

  பதிலளிநீக்கு
 16. வணக்கம். உங்களை எனக்கு லியோனியின் பட்டிமன்றங்கள் மூலமாகத்தான் அறிமுகம். இப்போது வலைத்தளத்திலும். தொடருங்கள். ரமணி அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். ஒளிப்பதிவாளரை ஒளி ஓவியர் என்று குறிப்பிட்டது அருமை. நேரமிருந்தால் நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்களேன்? முகவரி: http://newsigaram.blogspot.com

  பதிலளிநீக்கு