சின்னக்குத்தூசி நினைவு - கட்டுரைப் போட்டிமூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றது.
2013-ஜனவரி-1முதல் டிசம்பர்-31வரை நாளிதழ்கள், பருவ இதழ்கள், இணைய தளங்களில் வெளியான அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு தொடர்பான கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரையை எழுதியவர் மட்டுமின்றி, கட்டுரைகளைப் படித்தவர்களும் அவற்றைப் பரிந்துரைத்து அனுப்பி வைக்கலாம்.
தேர்வு செய்யப்படும் மூன்று கட்டுரைகளின் ஆசிரியர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்.
2014 ஜூன்-15அன்று சென்னையில் நடைபெறும் சின்னக்குத்தூசி பிறந்தநாள்விழாவில் கட்டுரைகளை எழுதிய ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
2014-மார்ச்-07ஆம் தேதிக்குள்...   
கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி –
சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை,
13, வல்லப அக்ரகாரம் தெரு,
அறைஎண்-06, திருவல்லிக்கேணி,
சென்னை-600 005
மின்னஞ்சல் – chinnakuthoositrust@gmail.com
 ------------------------------------------------------------------  

7 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  நல்ல முயற்சி... தைப்பொங்கல் கட்டுரைப்போட்டி முடிந்தவுடன் மற்றும் ஒரு கட்டுரைப் போட்டியா.....தொடருங்கள் தமிழ்ப்பணியை... வளரட்டும் நம் தமிழ் மொழி...வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அடுத்த அதிரடியா நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள் ....!
  தமிழ் இனி பிழைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை....!

  பதிலளிநீக்கு
 3. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு