நான் தொலைக்காட்சியில் பேசுவது தவறா? - வாசகர்கள் கருத்துச் சொல்லுங்கள்


கணையாழி இதழில் வெளிவந்த எனது கட்டுரையை எனது வலையின் முந்திய பதிவாக இட்டிருந்தேன் அது பற்றிய   நண்பர்களின் கருத்தில் ஒரு கருத்தை மட்டும் நான் வெளியிடவில்லை.

அவர் பெயர் திரு அருள்மொழி. ஊர் தெரியவில்லை.
 “சினிமா நடிகர்களைக் குறைசொல்வது இருக்கட்டும். உங்களைப் போன்ற தமிழ் வாத்தியார்கள் பட்டிமன்றம் என்னும் பெயரில் அடிக்கும் கூத்தை நிறுத்துங்கள். பிறகு சினிமா நடிகர்களைக் குறை சொல்லலாம்” என்று கருத்திட்டிருந்தார்.

பிற கருத்துகளைப் பார்க்க -. http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_26.html

என்னிடம் கேட்பதற்கு நியாயமற்ற இந்தக் கேள்வி என்னுள் சில கேள்விகளை எழுப்பியது. பொதுவான பட்டிமன்றப்பேச்சாளர்களின் போக்கிற்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் ? என்று கேட்க விரும்புகிறேன்.

என் படைப்புப் பற்றித்தான் நான் கருத்துக் கூற முடியுமே அன்றி மேடையில் நான் பேசுவதாலேயே பட்டிமன்றப் பேச்சாளர் அனைவருக்குமான பதிலை நான் தரவேண்டுமென்று இவர் கேட்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை

 உதாரணமாக என்னோடு பேசும் நண்பர்கள் எனக்கு உடன்பாடில்லாத கருத்துகளைப் பேசினால், நான் அங்கேயே -வாய்ப்பிருந்தால் மேடையிலேயே - மறுத்திருக்கிறேன். எனக்குப் பிறகு பேசியிருந்தால் அதை நேரிடையாக அவர்களிடமே சொல்லும் பழக்கம் உடையவன் நான்.
அதனாலேயே பட்டிமன்ற வாய்ப்புகள் பலவற்றை நான் இழந்துமிருக்கிறேன். அதுபற்றி நான் கவலைப்படுவதில்லை. “பட்டிமன்றம் எனக்குத் தொழிலல்ல, என் கருத்துகளைச் சொல்லும் ஒரு வாய்ப்பாகவே நான் நினைக்கிறேன்“ என்று நான் சொல்லிவிடுவது என் சக பேச்சாளர்களுக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையில் எழுதுகிறோம் என்றால், அந்தப் பத்திரிகையில் வெளிவரும் மற்ற கருத்துகளுக்கும் நாம் பொறுப்பேற்க முடியுமா என்ன?
அல்லது வலைப்பூக்களில் பொழுதுபோக்கும், குப்பைகளும் மிகுந்து கிடப்பதால் வலைப்பூவில் நாம் எழுதுவதே தவறாகிவிடுமா?

மேடையில் பேசும் என் கருத்துகளில் பிழையிருந்தால் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம், திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

அதற்காக மற்றவர் கருத்துகளுக்கு வக்காலத்து வாங்கமுடியுமா என்ன?
அதே நேரம், என் எழுத்துகளை விடவும் தொலைக்காட்சிப் பட்டிமன்ற அறிமுகம் என் கருத்துகளைக் கூடுதலானவர்களுக்கும், தூரதூரத்திற்கும் கொண்டுசெல்ல உதவுவதை நான் கவனித்திருக்கிறேன்.

அடிப்படையில் எழுத்தாளனான என்னை, ஒரு பேச்சாளனாக அறிமுகப் படுத்திவிட்ட தொலைக்காட்சியில் நான் பேசுவது தவறாகப் படுகிறதோ?

அல்லது--
பேசுவதை விடவும் எழுதுவதையே அதிகம் விரும்பும் நான்,
இனி பட்டிமன்றம் பேசுவதை நிறுத்திவிடலாமோ?

வாசக நண்பர்கள் இதுபற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படையாகச்  சொல்ல வேண்டுகிறேன்.
----------------------------------------------------------------------------- 

43 கருத்துகள்:

 1. பேசுவதை விடவும் எழுதுவதையே அதிகம் விரும்பும் நான்,
  இனி பட்டிமன்றம் பேசுவதை நிறுத்திவிடலாமோ///ஏன் உங்களுக்கு இப்படி தவறான சிந்தனை குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே ஒற்றுமையாய் முடிவெடுக்க தயங்கும் இக்காலத்தில் யாரோ ஒருவர்? யாரையோ எண்ணி இப்படி சொல்வதை கவனத்தில் கொள்ளாமல் நீங்கள் எப்போதும் போல அசத்தலாம்.இது தங்களின் தனிப்பட்ட திறமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே ஒற்றுமையாய் முடிவெடுக்க தயங்கும் இக்காலத்தில்/ நல்ல உதாரணம் சொல்லி என் தெளிவுக்கு உதவி செய்தீர்கள் நன்றி கவியாழியாரே!

   நீக்கு
 2. பட்டிமன்றம் அவருக்கு கூத்தாக தெரிகிறது... விட்டு விடுங்கள்... அவரை ஒரு நாள் (எங்காவது) பேச வைத்து விடுவோம்...!

  அவரின் கைபேசி எண் ஏதேனும் உண்டா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூத்தும் ஒரு கலைதான் என்பதால்தான் “கூத்தரசன்“ எனும் பொருள்படும் நடராஜனை மக்கள் வழிபடுகிறார்கள். நிற்க, நான் தற்பேர்து பேசுவதை நிறுத்தவேண்டியதில்லை என்று கருத்துத் தந்தமைக்குத் தங்களுக்கு நன்றி வலைச்சித்தரே!

   நீக்கு
 3. பேசும் கலை எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை. உங்கள் முயற்சியாலும் உழைப்பாலும்,பெற்ற அறிவாலும் அதை வளர்த்துக் கொண்டதோடு பிறருக்கு பயன்படும் வகையிலும் செயல்படுகிறீர்கள். குற்றம் கூறுபவர் எப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஒதுக்கித் தள்ளி உங்கள் பயணத்தை தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறருக்கும் பயன்பட நான் முயலும் ஒரு கலைவடிவம் பட்டிமன்றம் என்னும் எனது தெளிவு சரிதான் என்பதை எடுத்துச் சொன்ன தங்களுக்கு என் தலைதாழ்ந்த நன்றி. பயண வாகனம் மாறினாலும், பயணிக்கும் இலக்கில் மாற்றமில்லை நன்றி முரளி

   நீக்கு
 4. தற்போது பட்டிமன்றம் என்ற பெயரில் சிலர் கூத்தடிக்கிறார்கள் என்பதால் எல்லாரையும் அந்த வகையில் சேர்த்துவிட முடிய
  கையில் எல்லா விரல்களும் ஒன்றாக இருப்பதில்லைதானே... யாரோ ஒருவருக்காக உங்கள் பேச்சை நீங்கள் ஏன் நிறுத்த வேண்டும்... தொடருங்கள் நல்ல கருத்துக்களுடன்...

  அபுதாபியில் லியோனியின் சொல்லரங்கம் குறித்து பகிர்வை எனது தளத்தில் பார்த்தீர்களா ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “கையில் எல்லா விரல்களும் ஒன்றாக இருப்பதில்லைதானே.“ அழகான உதாரணம். தங்களின் தொடர் பதிவைப் பார்த்தேன். ரசனையோடு மட்டுமின்றி, நல்ல விமர்சனமாகவும் எழுதியிருக்கிறீர்கள். திரு லியோனியிடமும் சொன்னேன். தங்களின் தெளிவான பார்வை எனக்கும் வழிகாட்டுகிறது. நன்றி.

   நீக்கு
 5. பட்டிமன்றம் ஓர் இலக்கிய நிகழ்வாக இருந்த நிலை போய் இப்போது பொழுது போக்கும் நகைச்சுவை நிகழ்ச்சியாக திரிந்து விட்டது. திரைப்படங்களும் தமது களங்களை மாற்றுகின்றன. இதில் குறை கூற என்ன இருக்கிறது? எந்த காலத்திலும் இரண்டாம் தர சுவைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயினும் கலந்து கொண்ட நிகழ்வுகளில் நேர்மையாக இருக்க நீங்கள்முயற்சிப்பது யாவரும் அறிவார். தமிழ்ச்சுவையை குழந்தைகட்கு ஊட்டி வளர்க்க மறந்துவிட்டோம். தமிழ்னின் தனித்தன்மை குறைந்து வருகிறது. தங்களைப் போன்றவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் தமிழை மேன்மையுறும் பணியைச் செய்யலாம். வருந்தற்க. தொடர்க உம் பணியை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “எந்த காலத்திலும் இரண்டாம் தர சுவைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயினும் கலந்து கொண்ட நிகழ்வுகளில் நேர்மையாக இருக்க நீங்கள்முயற்சிப்பது யாவரும் அறிவார்” - தங்களின் கருத்து மிகுந்த ஆறுதலாக இருக்கிறது நண்பரே நன்றி

   நீக்கு
 6. கருத்து கணைகளுக்கு அஞ்சுவதா? ஒருவருடைய தனிப்பட்ட கருத்திற்காக ஒரு படைப்பாளி தனது பல்முனைப் பயணத்தில் தயக்கம் கொள்வதா? கற்புர மணம் தெரியா--தைகளின் கிறுக்கல்களைக் கழித்துக் குப்பையில் தள்ளுங்கள் .. நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நெடிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தங்களின் கோபம் மிகுந்த மற்றொரு கடிதத்தை விட்டுவிட்டேன். பாதையில் தெளிவும், பயணத்தில் சலிப்பற்ற உழைப்பும் உங்கள் நட்பில் கிடைத்தவைதாம். தொடர்வோம். தடம் மாறினாலும், நம்மிடம் தடுமாற்றமில்லைதானே? நன்றி அய்யா.

   நீக்கு
 7. ஐயா!
  தொலைக்காட்சியில் தாங்கள் பேசுவதில் தவறில்லை.
  தங்கள் பல பட்டிமன்றங்களைப் பார்த்திருக்கிறேன். சிறந்த கருத்துரைகளைப் பகிருவதை நானறிவேன்.
  பிறர், சிறியர் குறை கூறுவதைக் கருத்திற்கொள்ளாது தொடர்ந்தும் பட்டிமன்றம் பேசுவதைத் தொடருங்கள்.
  தங்கள் பணிகளை நிறுத்தாது தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “தங்கள் பல பட்டிமன்றங்களைப் பார்த்திருக்கிறேன். சிறந்த கருத்துரைகளைப் பகிருவதை நானறிவேன்” நன்றி நண்பரே. நம்மால் முடிந்தவரை முயல்வோம். முயற்சிகள் தோற்கலாம், முயலாமல் இருப்பதுதான் தவறு என்பது நம் தெளிவு நன்றிநண்பரே.

   நீக்கு
 8. வணக்கம்
  ஐயா.

  நம்மிடம் உள்ளதிறமைகளை தனிப்பட்ட ஒருவருடைய கருத்து சுதந்திரத்திற்காக விட்டுக்கொடுக்கமுடியாது. அப்போது உங்களிடம் உள்ள இலட்சியப்பாதை தகர்க்கப்டும் நீங்கள் முன்பு இருந்த மாதிரி இருந்தால் சரி ஐயா.....கருத்து சொன்னவர்களின் வலைப்பூ முகவரியை தாருங்கள்....ஐயா.மின்னஞ்சல் செய்யுங்கள் எனக்கு...விவாதம் நடத்தலாம்

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”கருத்து சொன்னவர்களின் வலைப்பூ முகவரியை தாருங்கள்....ஐயா.மின்னஞ்சல் செய்யுங்கள் எனக்கு...விவாதம் நடத்தலாம்” சரியாகச் சொன்னீர்கள் நண்பர் ரூபன் அவர்களே, நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். அவர் தன் முகம்காட்ட மறுக்கிறாரே! நான் தெரிவித்தபடி நேற்று (04-01-2014அன்று) சென்னையில் நடந்த கலைஞர் தொலைக்காட்சிப் பதிவுக்கும் அவர் வந்திருந்ததாகத் தெரிகிறது. பார்க்கலாம். நம்மிடம் ஒளிவுமறைவில்லை என்பதையாவது அவர் புரிந்து கொண்டால் சரிதான். தங்கள் கருத்துக்கு நன்றி ரூபன்.

   நீக்கு
 9. பலர் நன்றாக எழுதுவார்கள் ஆனால் மேடைப் பேச்சு வராது
  பலர் மேடையில் நன்றாக முழங்குவார்கள், ஆனால் எழுத்துப் பயிற்சி இருக்காது. தங்களைப் போன்ற மிகச் சிலராலேயே, நன்றாக எழுதவும், மேடைப் பேச்சில் வெல்லவும் முடிகிறது.
  தங்களின் பணியினைத் தொடருங்கள்
  மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கவே செய்கிறார்கள். அதனைப் பெரிது படுத்தத் தேவையில்லை

  பதிலளிநீக்கு
 10. 'மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கவே செய்கிறார்கள். அதனைப் பெரிது படுத்தத் தேவையில்லை' - ஆமாம் அய்யா, அதிலும் வலையுலகில்... சொல்லவேண்டாம் போல..நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஒரு படைப்பாளி வாய்ப்பு கிடைக்கும் தளங்களில் எல்லாம் ஒரு தெளிவான தத்துவ பலத்துடன் தன்னை நிறுவிக்கொள்வது ரொம்பவும் அவசியம் ....

  சமாதினில் யானையின் காதில் நுழைந்த சிறு துரும்பு துன்பம் விளைவிக்கும் ...

  எனக்கு இது தான் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “ஒரு படைப்பாளி வாய்ப்பு கிடைக்கும் தளங்களில் எல்லாம் ஒரு தெளிவான தத்துவ பலத்துடன் தன்னை நிறுவிக்கொள்வது ரொம்பவும் அவசியம்” - என்கருத்தும் இதுதான் மது! நன்றி.

   நீக்கு
 12. பின்னால் பேசுபவர்களை பற்றி நமக்கெதற்கு? நாம் முன் நோக்கி அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிலும் முகத்தை மறைத்துக் கொண்டு, பெயரே உண்மையா என்று தெரியாதவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள். நமக்குத்தான் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை... ஏனெனில் நாம் அரசியல்வாதியல்லவே? தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 13. என் கருத்துக்கு உங்கள் பதில், அதற்கு உங்கள் உங்கள் அபிமானிகளின் எதிர்வினையையும் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.அவர்கள் வேறு என்ன சொல்வார்கள்?அப்படி சொன்னால் நீங்கள் அதை வெளியிடுவீர்களா? உங்கள் தந்திரம் என்னக்கு புரிகிறது.ஆனால் இந்த தந்திரம்கூட இரவல்தான்.கட்சியில் நெருக்கடி வந்தபோது அரசியலை விட்டு விலகுகிறேன் என்று முன்னாள் முதல்வர் சொன்னதுதான் அது. நான் பொதுவாக யாரையும் சொல்லவில்லை.உங்கள் பட்டிமன்றம் பற்றிதான்
  குறிப்பிட்டேன்.என் கருத்தையும் வெளியிட்டுவிட்டு பின் உங்கள் பதிலை தந்திருக்கலாம்.எத்தனை மேடைகளில் நீங்கள் தியாகிகளை பற்றி பேசியிருக்கிறீர்கள்?சொல்லுங்கள் அய்யா.உங்கள் பட்டிமன்ற பேச்சின் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.அதுதான் என் வினைக்கு எதிர்வினை.இப்படி நாடகம் போடுவது அல்ல.இதுவும் உங்கள் பட்டிமன்றம் போலவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பர் அருள்மொழி அவர்களுக்கு வணக்கம். எது செய்தாலும் இயன்றவரை சமூக மேம்பாட்டுக்காகச் செய்வது என்பதில் கவனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பழைய நிகழ்வுகளிலும் அப்படியே என்றாலும், வரும் 04-01-2014 சனிக்கிழமை அன்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் பொங்கலுக்காக நடைபெறவிருக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கான பட்டிமன்ற ஒளிப்பதிவைப் பார்க்க நேரில் வரும்படித் தங்களை அன்புடன் அழைக்கிறேன். (இதையும் கூட்டம் சேர்க்க நான்போடும் நாடகம் என்றும் சொல்லலாம்) வெறும் நகைச்சுவைத் துணுக்குகளாகவே போய்விட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஏதேனும் நல்லவற்றைச் சொல்லமுடியுமா என்று முயற்சிசெய்யும் என் சிரமத்தை நேரில் புரிந்துகொண்டு, அங்கு ஒளிப்பதிவையும் பார்த்து, 14-01-2014அன்று ஒளிபரப்பு நிகழ்வையும் பார்த்து, உங்கள் விமர்சனத்தை வைத்தால் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.என்மீதான -அல்லது சமூகத்தின் மீதான- உங்கள் அக்கறைக்கு என் நன்றி. நல்ல விமர்சனங்களை என்றும் மதிப்பவன் நான். ஒற்றைக் காது, ஒற்றைக் கண் குறைபாடு உள்ளவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

   நீக்கு
  2. அப்படி நீங்கள் நிகழ்ச்சிக்கு வரஇயலாத தூரத்தில் இருந்தால், உங்களின் உண்மையான பெயர், ஊர் விவரங்களுடன் எழுத வேண்டும். ஒளிவுமறைவில்லாத என்னிடம் இப்படி ஒளிந்து பிடித்து விளையாடும் விளையாட்டு வேண்டியதில்லை நண்பா.

   நீக்கு
 14. ஐயாவிற்கு வணக்கம்
  தங்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தங்களைப் பற்றி ஏதும் அறியாமல் வாதத்தை வைத்த நண்பரின் கருத்துக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே எழவில்லை ஐயா. பட்டிமன்றத்தின் இன்றைய நிலையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டிருந்தால் இந்த கேள்வியைத் தங்களிடம் நண்பர் அருள்மொழி கேட்டிருக்க மாட்டார். பட்டிமன்ற பேச்சாளரின் முழு கருத்தையும் ஒரு பட்டிமன்றத்தில் பேசி விட முடிகிறதா! பலமணி நேரம் பேசினாலும் அது சில நிமிடங்களாக குறைக்கப்பட்டு விடுகிறது. அதிலும் மக்கள் எதிர்பார்ப்பு, விருப்பங்கள் மற்றும் விளம்பரங்களை மனதில் வைத்து தேவையான பேச்சைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் கத்தரித்துக் காட்டு விடுகின்றனர். இதில் எங்கு தனது கருத்தை முழுமையாக சொல்ல முடியும்? என்பது அவர் உணரவில்லை போலும். பட்டிமன்றங்களில் பேச முடியாத, வாய்ப்பு இல்லாத விடயங்களை ஒரு படைப்பாளி படைப்பாக தரும் போது அது கண்டு மகிழ்ச்சி அடையாமல் அதில் இது போன்ற வாதத்தை வைப்பதே தவறு என்று எனக்கு படுகிறது. எங்கோ அவரின் மனதில் பாதித்த விடயத்தை தங்களிடம் கேட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது அவரின் பட்டிமன்றம் பற்றிய பொது புத்தியால் விளைந்தது. அது பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியது இல்லை என்றே தோன்றுகிறது.
  ---------
  நண்பர் அருள்மொழி அவரின் கேள்விற்கு
  /.என் கருத்தையும் வெளியிட்டு விட்டு பின் உங்கள் பதிலை தந்திருக்கலாம்// தங்களது கருத்தை தனி பதிவாகவே போட்டு விட்ட பின் இந்த கேள்வி எழ வேண்டிய அவசியம் என்ன நண்பரே!
  -------
  அடுத்தது
  /உங்கள் உங்கள் அபிமானிகளின் எதிர்வினையையும் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது/
  வலைப்பதிவைக் கண்டு அதற்கு கருத்தூட்டம் வழங்கிய வாசகர்களை அபிமானிகள் என்று சிறுமை படுத்தியிருப்பது தங்களின் கண்மூடித்தனமான வாதத்தைத் தான் காட்டுகிறது. திரைப்படம் பற்றிய தங்கள் கருத்தூட்டத்தின் நோக்கத்தைச் சிதைத்து விட்டீர்களே நண்பரே.
  (யாரையும் உயர்த்தி பேசுவதற்கு இந்த கருத்தை வெளியிடவில்லை நடுநிலைமையோடு சிந்தித்தது என்று படிப்பவர்கள் மனதில் வைத்து படித்தால் நலமாக இருக்கும்) நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நண்பர் அருள்மொழிக்கு... நீங்கள் பேசுவ து அய்யாவைதானா? பிறரிடம் நீங்கள் இப்படி கேள்வி கேட்கவும் முடியாது.. கேள்வி கேட்டால் அதற்கு பதிலும் வராது... எங்கள் அய்யாவின் பண்பாடே இது... அவர் பிறரிடம் நடந்து கொள்வதும்..பேசுவதும் பழகுவதும்.. நீங்கள் கூட இருந்து பார்த்தால் கண்டிப்பாக விளங்கிக் கொள்வீர்கள்..நிச்சயம் வருத்தப்படுவீர்கள் அப்படி சொல்லிவிட்டோமே என்று... பரவாயில்லை... அய்யாவை அப்படி தூண்டி விட்டதற்கு நன்றி... அவர் இன்னும் பல மடங்கு தன்னை உயர்த்திக்கொள்வார்.... வாழ்த்துக்கள்.... அவர் மேலும் அவர் பேச்சு மேலும் என்னைப்போல வே பலர் உண்ர்ந்தது குறித்து மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி என்மீதான மதிப்பில் சற்றுக் கூடுதலாகவே எழுதிய நண்பர் தன் பெயர் முகவரியுடன் எழுதியிருந்தால், மகிழ்ந்திருப்பேன். இதற்குமுன் இதுபோலவே வெறும் பாராட்டை எழுதிய பல “அனானிமஸ்“ கடிதங்களை நான் அழித்திருக்கிறேன். இது தவறு எ ன்று தெரிவிப்பதற்காகவே இப்போதுமட்டும் வெளியிடுகிறேன். சரியோ தவறோ கருத்தை வெளியிடுவதில் அதை நம் கருத்தென்றே பதிவு செய்வதில் ஏன் தயக்கம்? இது தவறான முன்னுதாரணமாகிவிடும் நண்பரே

   நீக்கு
 16. அண்ணனுக்கு நான் சொல்லவேண்டியதில்லை
  இவர் குறுக்குசால் ஓடுகிறார் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள் அந்த ரகம் .கண்ணதாசனின் காலக்கணிதத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.மேலும் நான் சொல்ல நினைத்ததை சகோதரர் பாண்டியன் அழகாக சொல்லிவிட்டார் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணனுக்கு ஏன் சொல்லவேண்டியதில்லை? எவ்வளவு பெரிய ஒரு மூளையை விடவும், சாதாரண இரண்டு மூளைகளின் திறன் கூடுதலானது என்பதில் நம்பிக்கை உள்ளவன். நான் கருத்துச் சொல்லும்போதும், என்னைப் பற்றிய கருத்துச் சொல்லப்படும் போதும் நான் இதை மறப்பதில்லை. என்மீதான உன் நம்பிக்கைக்கு என் நன்றிப்பா.-அண்ணன்

   நீக்கு
 17. அய்யா அது நான் தான்... உங்கள் வலைப்பக்கத்திற்கு என் வ்லை பக்கம் வந்தால் தான் பெயடிட முடிகிறது... போங்கள் அய்யா ... ஆசைஆசையாய் உங்களுக்கு பதில் கமெண்ட் கொடுத்தால் அழிக்கிறீர்கள்....31 டிசம்பர் எழுதியது நானே தான் நானே தான்... .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையைச் சொன்னதற்கு நன்றி சகோதரி சுவாதி, ஆனால், நண்பர் திரு பாண்டியனுக்கு முன்னொரு பின்னூட்டத்தில் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். ”மிகையான பாராட்டுகள் நம்மை வளர்க்காது, மாறாக வீழ்த்தி விடும். அளவான பாராட்டுடன் கூடிய விமர்சனமே நம்மை வளர்க்கும். அடிக்கிற கம்பாக அல்ல, செலுத்துகிற துடுப்பாக விமர்சனம் இருக்கவேண்டும், வெறும் பாராட்டு, சொறிந்து விடும் சிரங்காக நம்மை விழுத்திவிடும். அதற்காக அவசரத்தில் முனைக் கொழுந்தைக் கிள்ளிவிடாமல், பழுத்த இலையைக் கிள்ளி அந்தச் செடிக்கே இடுவதுதான் நல்ல விமர்சனமாக இருக்கும்” எனது இந்தக் கவிதையைப் பார்க்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_15.html
   பாராட்டு அளவு மீறினால் சொறிதல் ஆகிவிடும் என்பதே என் கருத்து. நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தங்களின் தொடர் கருத்துக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 18. ஐயாவின் குணம் பற்றி நான் எப்போது குறை சொன்னேன் ?நீங்களே சொல்லுங்கள்.ஐய்யா எப்போதாவது நெல்லை கண்ணன் போன்றோ பேராசிரியர் ஞானசம்பந்தான் போன்றோ முனைவர் அறிவொளி போன்றோ
  பேராசிரியர் ராஜாராம் போன்றோ ஐய்யா அவ்வை நடராசன் போன்றோ சுபா வீரபாண்டியன் போன்றோ
  தமிழ் இலக்கியம் மணக்க பேசியிருக்கிறாரா?கம்பனையோ இளங்கோவையோ பட்டினதாரையோ பேசியிருக்கிறாரா? இல்லயே.மேடையில் சில திரைப்பட பாடல்களை ராகம் போட்டு பாடுகிறார்..பின்னர் அந்த நடிகர்களை குறை சொல்கிறார்.முதல் தர பேச்சாளர் போல் இல்லாமல் மூன்றாம் அல்லது நான்காம் நிலை பேச்சாளர் போல் நடந்துகொண்டால் நான் விமர்சிக்காமல் என்ன செய்வது?ஐய்யா ஒரு சிறந்த பேச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அந்த கலை இப்படி வீணாகிறதே என்பதே என் கவலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லாட்சியிலும் ,கவிசெழிப்பிலும் இலக்கியங்கள் இலகியங்கள் தான் அதற்காக அவை மேற்கோள் காட்டப்படலாம்
   ஏற்றுக்கொள்கிறேன் .ஆனால் அவை காட்டும் வாழ்க்கைக்கான அப்போதைய அரசியல் பின்னணியையும் அறிந்து கொள்வது அவசியம் .தங்களுக்கு பிரபஞ்சனின் "துறவாடைக்குள் தொலைந்த காதல் மனம் "புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்
   மாற்று கருத்தில் தங்களுக்கு மதிப்பிருந்தால் படித்துப்பாருங்கள் .பெரியார் திருக்குறளை குறளார் முனுசாமிக்காக பொறுக்கிறேன் என்றதன் பொருள் புரியும் .
   இலக்கியங்கள் மாணக்க பேசினால் தான் பேச்சா என்ற புரிதலை எனக்கு தந்தது அந்த புத்தகம் .

   நீக்கு
 19. நண்பர் அருள் மொழிக்கு, இதற்கு முந்திய-“அனானிமஸ்“ என வந்த- பின்னூட்டத்திற்குத் தந்த பதிலையே உங்களுக்கும் தரவிரும்புகிறேன்.”சரியோ தவறோ கருத்தை வெளியிடுவதில் அதை நம் கருத்தென்றே பதிவு செய்வதில் ஏன் தயக்கம்? இது தவறான முன்னுதாரணமாகிவிடும் நண்பரே” எனவே முதலில் உங்கள் முகம் அல்லது முகவரியேனும் காட்டுங்கள், பின்னர் நம் விவாதத்தை விடாமல் தொடர்வோம். அதுவரை, உங்கள் கருத்தை ஏற்கவியலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. wish you all the best for your programme in chennai.i will come again after hearing you on 14-1-14.thank you for your prompt response

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My dear Arulmozhi. Vanakkam. Have You come for Pongal Prog. T.V. Recording? Then Why didn't u meet me? Are we enemies? I don't think so. Please open ur mask. I want to see ur face and hear ur words face to face. Expecting your phone after Pongal Telecost. (9 to 10.30am on 14-01-2014 in Kalaignar TV) Or come again in this comments area.
   My Cell No. is 94431 93293. Once again I thank u for ur visit to recording as per my previous comment. Thank u.

   நீக்கு
 21. தமிழருவி மணியன் அவர்களுடைய நூல் ஒன்றில் படித்ததாக நினைவு, "என்னுடைய ஒவ்வொரு கருத்துகளும் விமர்சனதுக்குரியதே " என்பார்.. அதைபோல் இதுவும் ஓர் விமர்சனமே... வேண்டுமானால் பட்டிமன்றத்தில் பேசப்படும் நற்கருத்துகளை நண்பர் அவர்கள் காதில் வாங்கலாம்... உங்கள் pஅணி தொடரட்டும் அய்யா.. நன்றி ஸ்ரீமலையப்பன்...

  பதிலளிநீக்கு
 22. அய்யா முத்து நிலவரே.........எழுதுவதை எத்தனை பேர் படிக்க முடியும்? அனால் தொலை காட்சியில் நீங்கள் பேசுவதை ரொம்ப பேர் கேட்க முடியும் அல்லவா?எனவே தப்பெல்லாம் இல்லை கவியே...தொடருங்கள்.யாரான்னு குழப்பமோ ? நான் தான் அய்யா. ஜெயராமன் ....உ .தொ.க. அலுவலர் ஓய்வு

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் அண்ணா.
  உங்கள் பழைய பதிவுகளை நேரமிருக்கும்பொழுது படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்..சரி, 2013 டிசம்பரிலிருந்து பின்னால் போகலாம் என்று வந்து பார்த்தால் இந்த பதிவு..யாரோ சொல்லும் அர்த்தமற்ற கருத்திற்காக நீங்கள் பேசுவதை நிறுத்துவதா? அப்படியென்றால் ஒரு அறிஞரும் தம் பணியைச் செய்திருக்கமுடியாது அண்ணா. நான் அறிந்த உங்கள் நேர்மையும் கருத்துகளும் பாராட்டுக்குரியன. அவர் கருத்தில் பாருங்களேன், "உங்களைப் போன்ற தமிழ் வாத்தியார்கள்..", அவருக்குத் தமிழ் வாத்தியார்கள் மேல் அப்படி என்ன கோபமோ. தமிழ் வாத்தியார் என்றால் இலக்கியத்தை மேற்கோள் காட்டித்தான் பேசவேண்டுமா? சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை எவ்வழியில் சொன்னால் என்ன? இன்றைய நடைமுறை, நிகழ்வுகள், சமூகம், பற்றி பேசினால் இன்றைய வாழ்விற்குப் பொருத்தமாகத் தானே இருக்கும்..எழுத்திலும் பேச்சிலும் சிறப்பான பணியைச் செய்கிறீர்கள். கண்டிப்பாக உங்கள் பேச்சைத் தொடருங்கள். பேசுவதா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம் அண்ணா. என் நண்பர்கள் சிலருக்கும் உங்கள் பேச்சு பிடிக்கும்.

  பதிலளிநீக்கு