தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி அறிவிப்பு




மலேசியாவைச் சேர்ந்த தமிழ்வலைப்பதிவர் திரு ரூபன் அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும் “தைத்திங்கல் சிறப்புக் கட்டுரைப்போட்டி” அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விருவருடன், 
நம் வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும், 
மதுரை திரு.எஸ.வி.ரமணி அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக...

குவைத்தில் வாழும் தமிழறிஞர் திரு வித்யாசாகர் அவர்கள், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் அய்யா செல்லப்பா யாகசாமி அவர்களுடன் நானும் ஆக மூவர் நடுவர்களாக...
அறிவிததிருக்கிறார்கள்.

இதுதொடர்பாகக் கடந்த சில நாள்களாகத் திரு ரூபன் அவர்களும், திரு தனபாலன் அவர்களும், தம்பி பாண்டியன் அவர்களும் மாறி மாறி என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்...


இதில் என்னையும் -பொருட்டாக மதித்து- நடுவர்களில் ஒருவராக்கியிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஒருபக்கம்...
 “இந்த இளைஞர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றித்தரவேண்டுமே” என்னும் பொறுப்புணர்வுடன் கூடிய கவலை மறுபக்கமாக இருக்கிறேன்...

போட்டி பற்றிய  விவரம், விதிமுறைகள், தலைப்புகள் முதலானவற்றை அறியவும் அறிவிப்பைக் காணவும் இணைப்பில் சென்று சொடுக்குக - 

http://tamilkkavitaikalcom.blogspot.in/2013/12/blog-post_9.html

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் சென்றும் பார்க்கலாம் -

அவரது தள இணைப்பு -

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html


எழுத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் 
தாமும் கலந்துகொள்வதுடன், 
தத்தம் நண்பர்களுக்குத் தெரிவித்தும், 
தமது வலைப்பக்கங்களில் எடுத்து இட்டும் 
உதவ வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
அலைபேசி - 94431 93293
----------------------------------------------------------- 

11 கருத்துகள்:

  1. இனிய வணக்கம் ஐயா...
    கட்டுரைப் போட்டி நடத்தும் நண்பர்களுக்கு என்
    நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    ==
    தகுந்த நடுவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும்
    தேர்ந்தெடுத்திருக்கும் இந்த திருவிழா சிறப்புற நடந்தேற
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கட்டுரைப் போட்டி நடத்தும் நண்பர்கள் ரூபன் மற்றும் பாண்டியன், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் தனபாலன் சாருக்கும் வாழ்த்துக்கள்...

    மிகச் சிறப்பான நடுவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கட்டுரைப் போட்டு சிறப்பாக நடைபெறட்டும்...

    பதிலளிநீக்கு
  3. அன்பு அய்யாவிற்கு வணக்கம்
    தங்கள் தளத்திலும் போட்டி குறித்த அறிவிப்பு மிகுந்த மகிழ்வளிக்கிறது.
    //என்னையும் -பொருட்டாக மதித்து- நடுவர்களில் ஒருவராக்கியிருக்கிறார்கள்// என்னங்க ஐயா இப்படி ஒரு வார்த்தை! தாங்கள் தான் நடுவராக இருக்க வேண்டும் என்று போட்டி பற்றிய ஆலோசனையின் போதே சகோதரர்கள் திரு. ரூபன், திரு. தனபாலன் அவர்களிடம் சொல்லிய உடனே ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள். அந்த அளவிற்கு தங்கள் மீது மரியாதையும் அன்பும் வைத்திருப்பது கண்டு வியந்து போனேன். நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தித் தர வேண்டுமென்று நாங்கள் கேட்ட உடனே நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதும், போட்டிக் குறித்த ஆலோசனைகள், தலைப்புகள் அனைத்தையும் ஒரே இரவில் தந்தமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. தொடர்ந்து இணைந்து வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளைத் தாங்கள் தலைமையேற்று நடத்தும் சூழல் அமைய வேண்டும் என்பது எனது ஆசை. இணைந்திருப்போம் ஐயா..

    பதிலளிநீக்கு
  4. பகிர்வு சிறப்பாக உள்ளது ஐயா... நன்றிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் , அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கு நன்றி!
    போட்டி சிறப்பாக நடைபெற்றிட நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. போட்டி குறித்த அறிவிப்பை
    சிறப்பாக வெளியிட்டமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    கட்டுரைப்போட்டிக்கான பதிவை தங்கள் தளத்திலும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா
    நீங்கள் நடுவராக வரவேண்டும் என்று. அறிவித்தல் வரமுன்பு என் மனதில் உங்கள் நினைவு வந்தது.. அடுத்த நாள் மின்னஞ்சல் வருகிறது.. ஐயாவை நடுவராக எடுக்க வேண்டும் என்று.. தங்களின் சேவைஎனக்காக தொடர்வதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. போட்டிகள் சிறந்த முறையில் நடைபெற
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. அருமையான போட்டியாகத் திகழப்போகிறது!

    அத்தனை நடுவர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும்

    பங்குகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இவ்வளவு தன்னடக்கம் ஆகாது அண்ணா !
    போட்டி களைகட்டபோகிறது !

    பதிலளிநீக்கு