காரைக்குடியில் கவிதைப் பயிற்சி முகாம்சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி அருகில் உள்ளது புதுவயல்
அந்தச் சிறிய கிராமத்தில் நடந்த கவிதைப் பயிற்சி முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து, தமுஎகச கிளைகளின் தலைவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர் -ஆசிரியர் - பேராசிரியர் என 120பேர் வந்திருந்தார்கள்


முழுநாளும் –
செய்யுள் வரலாறு,
மரபுக்கவிதை வகைகள்,
கவிதைமாற்றமும் கால மாற்றமும்,
நல்ல கவிதை எது? எது கவிதையாகாது?
இலக்கணமும் கவிதையும்,  
கவிதைஎழுதுவோரின் சமூகப் பொறுப்பென்ன?

n      எனப் பலப்பல தலைப்புகளை 
  அல்லது கேள்வி-பதில்களை
n    நானே உருவாக்கிக்கொண்டு,
n  காலை 10மணிக்குத் தொடங்கி மாலை 5மணிவரை நடந்த முகாம் இது,

n      அண்மையில் நான் கலந்துகொண்ட கவிதைப் பயிற்சி முகாம்களில் வயது வித்தியாசம் நிறைந்த, அதனாலோ என்னவோ உற்சாகமான முகாமும் இதுதான்! உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!
  
இடையிடையே நண்பர்கள் பாடல்கள், வாழ்த்துரைகள் என்று வந்து போனாலும் எனது குரலே பெரும்பாலான நேரம் கேட்டுக்கொண்டிருந்தது. (விளைவு? அடுத்த நாள், புதுக்கோட்டையில் என்னோடு பேசிய நண்பர்கள் என்னாச்சு உங்க குரல்? என்று கேட்கும்படி ஆயிற்று என்பது வேறு!)

பின் வரும் இணைப்பில் சென்று 16-12-2013 தேதியிட்ட தீக்கதிர் மின்-பதிப்பின் கடைசிப்பக்கம் சென்று இந்தப் பகுதியைச் சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்.

இதனைச் சிறப்பாக நடத்தித்தந்த புதுவயல் முத்தமிழ் மன்றத்தின் தலைவர்  கவிஞர் தமிழ்மதி நாகராசன், தமுஎச சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் அனைவர்க்கும், மற்றும் தொகுத்தளித்த எழுத்தாளர் ஜனநேசனுக்கும், வெளியிட்ட தீக்கதிர் நாளிதழ் “இலக்கியச் சோலைஆசிரியர் எழுத்தாளர் மயிலை பாலு உள்ளிட்ட குழுவினர்க்கும் எனது நன்றிகள்.
-----------00000------------


            பயிற்சி முகாமின் நிறைவுரையாக, வந்த கவிதைகளைப் பற்றிய எனது உரைசிறப்பாக இருந்ததாகப பலரும் உடனே வந்து சொன்னார்கள்.  
அதிலும் ஆயிஷா பானு சொன்னார் -  “பயங்கரம் தோழர்” என்று!                                            நானே சிரித்துவிட்டுச் சொன்னேன் -
 “கவிதை நன்றாக எழுதியிருந்தார்கள், அதைப்பற்றி நான் பேசும்போதும் நன்றாக கவனித்தார்கள், பிறகு நன்றாகத்தானே பேசமுடியும்?” 
          
           முகாமில் எழுதப்பட்ட கவிதைகளைப் பாருங்களேன்!
           நான் சொன்னது உண்மை என்பதை ஒப்புக்கொள்வீர்கள்!

            என்ன? நாஞ்சொன்னது சரிதானுங்களே? 
-------------------------------------------------------------------- 

11 கருத்துகள்:

 1. நீங்கள் சொன்னது சரிதான்
  உதாரணமாக எடுத்துக் கொடுத்த கவிதை வரிகள்
  அத்தனையும் மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கவிப்பயணம் சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்..
  நல்ல ஒரு தமிழ்த்தொண்டு...

  பதிலளிநீக்கு
 3. நான் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்றிருப்பேன்.கவிதை பற்றிய நுணுக்கங்களை அறிய வாய்ப்பாக அமைந்திருக்கும்.தங்கள் ஆர்வமும் உழைப்பும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.பயிலரங்கில் எழுதப் பட்ட கவிதைகள் அனைத்து அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு
 4. மிக மிக அருமை ஐயா!
  நறுக்கென இருந்தன அத்தனை கவிதை வரிகளும்!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 5. உங்களின் இந்தப் பணி தொடர்ந்து சிறப்பாக நடக்கட்டும் ஐயா..
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. தாங்கள் சொன்னது சரிதான் ஐயா.
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள் இதுபோன்ற வகுப்புக்கள் மனிதனை செதுக்கும்தான்/

  பதிலளிநீக்கு
 8. வெங்காயம் பற்றிய கவிதை சூப்பர்.நல்ல பயிற்சி முகாம்.வாழ்த்துக்கள் தோழர்

  பதிலளிநீக்கு
 9. இது போன்ற செயற்பாடுகள் தொடர என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. ஐயா அவர்களுக்கு வணக்கம்
  கவிப்பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்ததை எண்ணுகையில் அகம் மகிழ்கிறேன். பங்கேற்பாளர்களின் கவிதைகள் மிக அழகாக உள்ளன. தங்களது உரை சிறப்பாக அமைந்தது என்று பாராட்டியது வியப்பு ஒன்றுமில்லை ஐயா. அதற்கு தங்களது பதிலும் ரசிக்க வைத்தது. திரு. ஜனநேசன் அவர்களின் பேச்சும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்திருக்கும்.. இது போன்ற பயிற்சிகள் பெருக வேண்டும் அதில் தங்கள் பங்களிப்பால் புதுக் கவிஞர்கள் உருவாகி அன்னை மொழியில் இலக்கியங்கள் பெருக வேண்டுமென்பதே எனது விருப்பமும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

  பதிலளிநீக்கு