பெண்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்! (“புதுயுகம்” நிகழ்ச்சி நடத்தும் நடிகை சினேகாவுக்கும் சேர்த்து)



கொஞ்சம்போல் படித்து, எப்படியாவது முன்னேறுவோம் என்று உழைக்கும் பெண்களைக்கூட முன்னேற விடாமல்தான் எத்தனை எத்தனை தடைகள்!

புதிதாக வந்திருக்கும் “புதுயுகம்“ தொலைக்காட்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று இன்று கிடைத்த விடுமுறை நாளில் அந்த்த் தொலைக் காட்சியிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்படும் “மேளம் கொட்டு தாலி கட்டுநிகழ்ச்சியை இன்று காலை 9மணி முதல் 10மணிவரை பார்த்தேன்.


இது ஒரு நகைக் கடை விளம்பரத்தில் நடக்கும் நிகழ்ச்சி – புரிகிறதா?

“நகையும் நட்டும் இல்லாமல் ஒரு பெண் புகுந்த வீட்டுக்குப் போகக் கூடாது“ எனும் கால காலமான “ஆண்களின் ஆழ்மன ஆசையைப் பெண்களே புரிந்து அதன்படி நடந்து கணவன் விரும்பும்படி குடும்பத்தை நடத்த வேண்டும்“ என்னும் பொதுப் புத்தியின்படி, சிறப்பாக நடந்தது!

தொகுத்து வழங்கிய நடிகை சினேகாவின் ஒவ்வொரு வார்த்தையும் இதில் கவனமாக இருந்தது! அவரின் அழகுகூட இதனால் எரிச்சலையே தந்தது!
இறுதிச் சுற்றுக்கு வந்த பெண்கள் இருவரில் ஒருவர் இசுலாமியச் சகோதரி. இந்துத் திருமணத்தின் அர்த்தமற்ற சடங்குகளைப் ப்ற்றிய கேள்விகளால் அந்த இசுலாமியப்பெண் “எலிமினேட்“ ஆனது நிகழ்ச்சி நடத்துவோரின் நடுநிலை குறித்த சந்தேகத்தை எழுப்பியது.

இத்தனைக்கும் அந்தப் பெண் மற்ற இருவரும் சொல்லாத “குடும்பவிளக்கு“ நூலின் ஆசிரியர் பெயரை,  பாரதிதாசன் என்று சரியாகச் சொல்லியிருந்தார்! அவரிடம் கேட்கப்பட்ட ஒருகேள்வி முகூர்த்தம் என்பது எத்தனை மணிநேரம் என்பதாகும்! 

இன்னொரு கேள்வி திருமணத்தின் போது திருமணத்தில் என்னென்ன இலைகளைக் கொண்டு தோரணம் கட்டுவார்கள். இவை இந்துத் திருமணங்களில் மட்டும்தான் என்பது சினேகாவுக்கோ நிகழ்ச்சியை இயக்கிய இயக்குநருக்கோ தயாரிப்பாளருக்கோ தெரிந்திருக்க வேண்டாமா? அல்லது, இசுலாமிய நிக்கா பற்றிய கேள்விகளை இந்துப் பெண்களிடம் கேட்டு எலிமினேட் செய்து அனுப்பினால் அது சரியாகுமா? (நான் நமது வலையில் எழுதிய பொருத்தமற்ற போட்டிக்கு அடையாளமான முயல்-ஆமைக்கதை இப்போது உங்கள் நினைவிற்கு வருகிறதா? அதே தான் இதுவும்)

இது ஒரு புறமிருக்க-
இரண்டாம் சுற்றில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பாருங்கள் -

கேள்வி-1. பெரோஸ் காந்தி யாருடைய கணவர்? (விடை விருப்பத்தில் மேனகா காந்தி, இந்திரா காந்தி, சோனியா காந்தி என மூன்று இருந்தது)
கேள்வி-2. அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் –இதில் அண்ணல் என்று குறிப்பிடப் படுபவர் யார்? (விடை விருப்பத்தில் அர்ஜூனன், இராமன், கிருஷ்ணன் என மூவர்)

இந்தக் கேள்விகளுக்கு எந்தப் பெண்ணுமே சரியாகப் பதில் சொல்லவில்லை! என்றாலும்ட, ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது 50,000 முதல் 2,00,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை வெற்றி கொண்டதாக நிகழ்ச்சி முடிந்தது!

இன்ன கேள்வி கேட்கப்படும் என்பதறிந்து அந்த வகையிலேயே கேள்வி-பதில் தயாரிப்பது, அதைத் தெரிந்து வரட்டும் என்பதன் உள்நோக்கம் போட்டிக்கு உண்டன்றோ?

அப்படியெனில் இந்த நிகழ்ச்சியின் நோக்கமென்ன? பெண்கள் இந்தச் சடங்கு, நகைப்பித்து, கெக்கெபிக்கெ கேள்வி பதிலைத் தாண்டி வந்துவிடக் கூடாது என்பதுதான் ஊடகத்தின் நோக்கமா?

(இதைத்தான் தந்தை பெரியார் பெண்களை “நகை ஸ்டாண்ட்“ போல ஆக்குவது என்று சொன்னார். அதாவது பெண்களின் பிற அறிவுத் திறமைகளைக் கண்டுகொள்ளாமல் நகையணிவது போலும் அலங்காரம் செய்துகொள்வது போலும் பெண்ணடிமைத்தனத்தின் தன்னடிமைத்தனத்தைச் சொன்னார். புரிகிறதா? புரியணும்...)



அப்படியெனில் இந்த நிகழ்ச்சி பெண்களைப் பின்னுக்கு இழுக்கவா?

கொஞ்சமாவது படித்து முன்னேறும் பெண்ணும் இந்தச் சாக்கடையிலேயே விழுந்து புரள்வதுதான் சுகம் என்னு நினைக்க வைப்பதுதான் நியாயமா?

எனக்குள் எழுந்த இன்னொரு கேள்வி –
மிகச் சாதாரணமான கேள்விகளுக்கே பதில் தெரியாத இன்றைய இளைஞர் -இளம்பெண்கள் எதிர்கால இந்தியாவில் என்ன செய்யப் போகிறார்கள்?

இதுவே இப்படி என்றால் –
சந்திரகுப்தர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர் – என்னும் கேள்விக்கு, அவர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் குப்த வம்சத்தைச் சேர்ந்தவர் என்று விடை சொன்ன ஒருவரை,

தண்டியில் காந்தி உப்புக்காய்ச்சியபோது வேதாரண்யத்தில் உப்புக் காய்ச்சிய தமிழகத் தலைவர் யார்? – என்னும் கேள்விக்கு, இராஜாஜி என்பது கூடத் தெரியாமல் வ.உ.சி என்று சொன்ன ஒருவரை,

கங்கையைக் கடந்து வராத அலெக்ஸாண்டரை, பீகாரிகள் தோற்கடித்து விரட்டியதாகச் சொன்ன ஒருவரை,

இப்படிப் பலப்பல தவறான வரலாற்றுத் தகவல்களைச் சொல்லிக் கொண்டிருப்பவரை, இந்தியாவின் மிகப் பெரிய பதவியைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறார் என்பதாலேயே நம் ஊடகங்கள் ஊதிஊதிப் பெரிய பலூன் போலக் காட்டி “இவர்தான் வரப்போறார்“ என்று ஊதிக்கொண்டிருக்கின்றன! (யாருன்னு தெரியாதவங்கள்ட்ட, நானும் மோடிவித்தை காட்டத் தயாரில்ல)

----------- ஆக, நிகழ்ச்சி பார்த்த எனக்குத் தோன்றியது இதுதான்-

இந்தப் பெண்களை நாம் முன்னேற விடப்போவதில்லை. 
பெண்களை முன்னேறி விடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல, பின்னுக்கு இழுத்து மிகச் சாதாரண ஆசைகளையே அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு மேல் தெரிந்துகொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் நம் தொ.கா.நிகழ்ச்சிகளில் 99விழுக்காடு அப்படித்தான் இருக்கிறது!

பிதா ரக்ஷதி கௌமாரே
பர்த்தா ரக்ஷதி யௌவனே
புத்ரோ ரக்ஷதி வார்தக்யே
நஸ்த்ரீ ஸ்வதந்தர்ய மர்கதிஎனும் வடமொழி ஸ்லோகத்தை,
புதுக்கோட்டையில் 1989-90களில் நாங்கள் நடத்திய அறிவொளி இயக்க்க் கலை-நிகழ்ச்சிகளுக்காகப் பின்வருமாறு நான் மொழிபெயர்த்தேன் –
           தந்தைக் கடிமை சிறுவயதில்,
           கணவற் கடிமை இளவயதில்,
           மகனுக் கடிமை முதுமையிலே,
           எந்நா ளும்,பெண் அடிமைதான்!
பெண்களே! சகோதரிகளே! தோழியரே! எங்கள் ஆண்வர்க்கம் உங்களுக்குச் சுதந்திரத்தை வாரி வழங்கிவிடும் என்று கனவு காணாதீர்கள்!
சலுகைகளை நம்பி உரிமைகளை இழந்து விடாதீர்கள்!
உரிமைகள் தரப்படுவதில்லை! போராடி எடுத்துக் கொள்வது!

--------------------------------------------------------  

27 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    சலுகைகளை நம்பி உரிமைகளை இழந்து விடாதீர்கள்!
    உரிமைகள் தரப்படுவதில்லை! போராடி எடுத்துக் கொள்வது
    மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் . உண்மையில் உரிமை என்பது போராடித்தான் எடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவைப் படித்து, பதிலும் இட்டமைக்கு நன்றி நண்பர் ரூபன் அவர்களே

      நீக்கு
  2. விடை தெரியாதவர்க்கு மோடிவித்தை காட்டமாட்டீர்களா ?
    இதுதான் புத்திசாதுர்யம் என்பதா ?
    பெரியார் நகையை மட்டுமா வேண்டாம் என்றார் ?
    கர்ப்பபையை வெட்டி எறியுங்கள் என்றார் அல்லவா ?
    அவ்வளவு துணிச்சல் வர இன்னும் சில யுகங்கள் ஆகும் அதுவரை
    இது போன்ற மட்டமா நிகழ்ச்சிகளை
    நகை மோகத்திற்காக பார்த்து character assassination செய்து கொள்ளமலாவது இருக்கலாம் .நன்று சொன்னீர் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தை காட்டுவோரும், வேடிக்கை பார்ப்போரும் அதிகரித்து விட்டார்களம்மா! இவர்களைத்தான் “வேடிக்கை மனிதர்கள்“ என்று வேதனைப் பட்டான் பாரதி! உன் கருத்தில் நானும் உடன்படுகிறேன்

      நீக்கு
    2. கரந்தையாரின் மலாலா பற்றிய மிக அருமையான பதிவு பார்த்தியா மைதிலி? ளா பார்த்திருப்பாய் ஒருவேளை நீ பார்க்க வில்லையெனில் உடனே பார்த்து விடு! நண்பர்களையும் பார்க்கச் சொல்லு- http://karanthaijayakumar.blogspot.com/2013/12/blog-post.html

      நீக்கு
    3. பார்த்துவிட்டேன் அண்ணா .அவரது ஒவ்வொரோ படைப்பும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது .நல்ல சிந்தனைக்கு சொந்தகாரர் .உங்கள் மூலம் அவரது எழுத்து அறிமுகமானது .நன்றி அண்ணா

      நீக்கு
  3. சைக்கிள் ஓட்ட கத்துக்கனும் தங்கச்சி...
    கொடுத்த மனதின் வீறு இன்னும் இருப்பது மகிழ்வே...
    நல்ல பதிவு...

    இவ்வளவு நீளமாக ஒரு நிகழ்கால பதிவு...
    இப்பதிவின் அவசியம் வேறு ஒரு தளத்தில் அதி முக்கியம் என்று படுகிறது..நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்படிக் குறையும் மது? கட்டை வெந்தாலும்...
      பதிவு அவ்ளோ நீளமாவா இருக்கு?
      இன்னொரு தளத்தில்...? அதுவும் மக்கள் தளம்தானே?

      நீக்கு
    2. கரந்தையாரின் மலாலா பற்றிய மிக அருமையான பதிவு பார்த்தீர்களா பார்த்திருப்பீர்கள் பார்க்க வில்லையெனில் உடனே பாருங்கள்... நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள். http://karanthaijayakumar.blogspot.com/2013/12/blog-post.html

      நீக்கு
  4. //சலுகைகளை நம்பி உரிமைகளை இழந்து விடாதீர்கள்!
    உரிமைகள் தரப்படுவதில்லை! போராடி எடுத்துக் கொள்வது!//
    ஆனால் நீங்கள் சொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெண்கள்தானே ஐயா.
    பெண்கள் உண்மை சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
      ....காட்சி கெடுத்திட லாமோ?
      பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
      ...பேதைமை அற்றிடும் காணீர்“ - பாரதியின் மேல் நம்பிக்கை வைத்து அவன் வழியில் பயணம் தொடர்வோம். நன்றிஅய்யா

      நீக்கு
    2. பெண்கல்விக்காக நம் காலத்திலேயே போராடிக்கொண்டிருக்கும் அந்தக் கிழவி மலாலா நமக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறாள். (அவங்க அப்பாதான் என்னவோ மோடிவித்தை மாதிரி தெரியுது)

      நீக்கு
  5. பெண்கள் நகை ,அழகு மட்டும் நோக்கியே குறிக்கோளாய் சமூக அக்கறையின்றி பணம் பண்ணுவதே நோக்கமாய் செயல்படும் தொலைக்காட்சிகள் மாறும் காலம் வரும் நிச்சயம்.மாற்றும் பெண்ணினம் அதை.

    பதிலளிநீக்கு
  6. மாறுவது மரபு. இல்லையேல் மாற்றுவது நம் மரபு! நன்றி கவிஞரே. உங்கள் பதிவுகளில் கூர்மை கூடிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையாரின் மலாலா பற்றிய மிக அருமையான பதிவு பார்த்தீர்களா பார்த்திருப்பீர்கள் பார்க்க வில்லையெனில் உடனே பாருங்கள்... நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள். http://karanthaijayakumar.blogspot.com/2013/12/blog-post.html

      நீக்கு
  7. சரியாக சொன்னிங்க. நகையும், அழகும்... இன்னமும் அடிமைத்தனமாய்த்தனமாய்த்தான் வைத்திருக்கிறது என்று புரியாமலே.. அழகியல் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டுத்தான் போய் கொண்டிருக்கிறார்கள்... பெண்கள்! பல நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் அழகை ஆயுதமாய் பயன் படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் அதை அடிமைத்தனம் என்று உணருவது எப்போது? ஆண் என்றால் திறமை, வீரம்! பெண் என்றால் அழகு, அடக்கம் என்று காலங்காலமாய் படிந்து விட்டது.

    எவ்வளவுதான் படித்தாலும் பெண்கள் இன்னமும் நகை ஸ்டாண்டாய்தான் இருக்கிறார்கள்... ! தாமாகத்தான் மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு பற்றிய பார்வையே மாறவேண்டியிருக்கிறதல்லவா சகோதரீ? உங்களைப் போன்றவர்கள்...தொடர்ந்து எழுதினால் இந்தநிலை மாறும் என்று நம்புகிறேன். நன்றி

      நீக்கு
  8. ஐயாவிற்கு வணக்கம்
    பெண்ணடிமைத் தனம் எல்லா வகையிலும் ஊடுருவுவதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கூறியது போல் போராடி எடுத்துக் கொள்ள வேண்டும் அதிலும் நீங்கள் போராடி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை காரணம் யாரும் கொடுப்பது இல்லை உரிமையை. நன்கு உணர்ந்து எடுத்து கொள்ள வேண்டுமென்று கூறியிருப்பதை பெண்கள் கவனிக்க வேண்டும். யாரோ போராடாடுவார்கள் என்னும் மனநிலை மாற வேண்டும் தவறு என்று தெரியும் போது துணிய வேண்டும் அப்பொழுது தான் உரிமைகளை எடுத்துக் கொள்ள முடியும். போராடுவதை ஆண்களிடம் கொடுத்து பெண்கள் முடங்குவார்களானால் ஆண்கள் பெண்ணியவாதி என்ற போர்வைக்குள்ளே ஒளிந்து கொள்வார்கள் தவிர முழுமையான உரிமை கிடைக்க வழிவகை செய்வார்களா! என்பது கேள்விக்குறியே.. மிக அழகாக பதிவிட்டு சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் புரிந்துகொள்வது முக்கியம்தான். அதைவிட இதுபோலும் கருத்தோட்டங்களை உருவாக்கி மறைமுகமாக (அம்மா அப்பாவின் பெயரில்) காப்பாற்றும் ஆண்களும் புரிந்துகொள்வது அதைவிட முக்கியம் என்று கருதுகிறேன். பகிர்வுக்கு நன்றி பாண்டியன்.

      நீக்கு
  9. பசுத்தோல் போர்த்திய புலிகளாக பல தொலைக்காட்சிக் கால்வாய்கள் கழிவுகளைக் கக்குவதும், பரிசுகள், சலுகைகள் என அறிவிப்பதும் பெண்கள் தப்பித்தவறி பகுத்தறிவு பெற்றுவிடக் கூடாது என்னும் உள்நோக்கமேதானேயொழிய விழிப்புணர்வு ஊட்ட இல்லை என்பது தெளிவு. அதிலும் இத்தகு நிகழ்ச்சிகள் நடத்தும் ஊடகங்களின் வர்க்க, அ ரசியல் பின்னணிகள் தாங்கள் அறியாததா என்ன? அழகுப் பதுமைகளாகவும், போகப் பொருளாகவும் ஆண்களுக்கு அடிமைகளாகவுமேப் பெண்களை வைத்திருக்க வேண்டுமென்பதில் அவர்களின் முனைப்பு முறிக்க பெண்ணினம் விழித்தெழுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழும்! பாவலரே! நீங்களும் நானும் நம்மைப் போலும் இனிய நம் நண்பர்களும் அதற்காகத்தானே இயங்கிவருகிறோம்... என்ன 100விழுக்காடு தான் முழுமை. இப்போது சூடு ஏறிவருகிறது. என்னத்த.. இறங்கித்தான் கிடக்கு என்போர் இதன் முந்திய நிலையை ஒப்பிட்டால் புரியும். நம்பித் தொடர்வோம்.

      நீக்கு
  10. பெண்களைக் கவர்ந்தால் மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிலைத்து நிற்க முடியும். பெண்களுக்கு நகை நட்டு, புடவை போன்ற ஆடம்பர விஷயங்களில் தான் கவர்ச்சி ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லா தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றுவிடுகின்றன. அதே தொலைக்காட்சியில் கஸ்தூரி நடத்தும் அறிவுபூர்வமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறதே! அதை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... அதை நான் பார்க்கவில்லையே! பார்க்கிறேன் அய்யா... விளம்பரம் பார்த்து நானும் தான் ஏமாந்து விட்டு விட்டேன் போல. தகவலுக்கு நன்றி அய்யா

      நீக்கு
  11. பல கோணங்களில் “புதுயுகம்” நிகழ்ச்சியை அலசியுள்ளீர்கள். சிறந்த வழிகாட்டல்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி நண்பரே, நீங்களும் கவிதை, கதை, கட்டுரை, திரட்டிகள் என்று வலையில் கலக்குகிறீர்களே... தொடரட்டும் நம் பணியும் நட்பும்

    பதிலளிநீக்கு
  13. பெண்களை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் அவர்களின் மூளை யை மளுங்கடிக்க வைப்பது தான் ஊடகங்களின் வேலையாக உள்ளது. பெண்கள் போராடி அடைந்த உரிமைகள் அனைத்தும் வெறும் ஏட்டு சுரைகாயாக தான் உள்ளது. பெண்களின் பலவீனமே நகைகளிலும், உடைகளிலும், அழகு சாதன பொருட்களிலும் தான் என்கிற எண்ணத்துடன் தான் எல்லா தொலைக்காட்சிகளும் செயல்படுகிறது. பெண்கள் எல்லா துறைகளிலும் போட்டி போட்டு கொண்டு முன்னேறி வந்தாலும், பட்டங்கள் பல வாங்கி உயர் பதவியில் இருந்தாலும், இத்தகைய பெண் அடிமை தனத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு வேண்டும். இந்த சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்கும் வராத பட்சத்தில் இந்த நிலை நீடித்து கொண்டே தான் இருக்கும். அதற்கும் மேலாக வரதட்சணை என்கிற ஒரு நிலை மாறினால் பெண்களின் நகை மோகம் மாற வழியுண்டு. தங்கள் பதிவுக்கு நன்றி தோழரே! மிகவும் பயனுள்ள பதிவு. வரவேர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. ஆகா!! அண்ணா , இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நான் என்ன என்ன நினைத்தேனோ அதையே நீங்கள் எழுதியிருக்கிறீர்களே..நகை வென்று செல்லட்டும் திருமணத்திற்கு என்று..என்ன ஒரு நிகழ்ச்சி!!! நகைக்கடை விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்றால் சிநேகாவிற்குத் தெரியவேண்டாம்? பெண்களும் நகை கிடைக்கும்வரை இலாபம் என்று வருகிறார்கள்...எப்படி புரிய வைப்பது அண்ணா..சுற்றிலும் நடக்கும் இம்மாதிரி விசயங்கள் மிகவும் கோபத்தை ஏற்படுத்துகின்றன அண்ணா..படித்த என் தோழிகளில் சிலரே "உனக்கு என்ன இரண்டும் ஆண் குழந்தைகள், நாங்கள் நகை சேர்க்க வேண்டும்" என்று சொல்கிறார்களே!!! :(
    சில விசயங்கள் இங்கு சொல்வதை விட அலைபேசியில் எப்பொழுதாவது சொல்கிறேன் அண்ணா

    பதிலளிநீக்கு