போர்க்குணத்துக்கு ஏது தடை? – மொழிபெயர்ப்புக் கவிதை

URDU Poet FAIZ (A) FAIZ
சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன் 
                 சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்! -  நான் 
நெருப்பெனப் பற்றுவேன்!  நிச்சயம் பரவுவேன்! 
                 நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத்  தடுக்கலாம் எண்ணத் தடைபோட 
               எந்தத் தடைச்சட்டம் இங்குவரும்? - என் 
கழுத்தை ஓடிக்கலாம் கையை முறிக்கலாம் 
               கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என் 
               வாழ்க்கையைக் கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பொங்கிடும் போர்க்குணக் கவிதையின் 
               உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
(உருதுக் கவிஞர் 'ஃபெய்ஸ் ஏ ஃபெய்ஸ்' எழுதிய
கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை
மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அஞ்சல் அட்டையில்  வெளியிட்டுள்ளது . 
இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர்
வங்கக் கவிஞர் தேபேஷ் தாகூர்.(ஒரு முகாமில்
சந்தித்தபோது அவர் தந்ததை வாங்கி,
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நா.மு.)



9 கருத்துகள்:

  1. ஐயாவிற்கு வணக்கம்,
    மிகச் சிறந்த கவிதையை போர்க்குணத்துக்கு ஏது தடை? எனும் தலைப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிற தங்கள் பணி
    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும்” எனும் பாரதியின் கனவினை தாங்கள் நனவாக்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. இக்கவிதையின் புரட்சி கரமான தன் எண்ணங்கள் கவிஞரின் சிந்தனையிலிருந்து சீற்றம் கொண்டு எழுந்து வந்திருப்பது நம்மைக் கவர்கிறது. ஆயிரம் அடக்கு முறைகள் வந்தாலும் தம் எண்ணத்திற்கு ஏது பூட்டு எனும் உண்மையை உணர்ச்சி மாறாமல் மொழிபெயர்த்து தங்கள் பல்துறை அறிவு தமிழுக்கு அணி செய்துள்ளது. சிறிய கவிதை தான் இருப்பினும் மொழிபெயர்த்த தங்கள் பணி மிகப் பெரியது.. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    எழுத்தைத் தடுக்கலாம் எண்ணத் தடைபோ
    எந்தத் தடைச்சட்டம் இங்குவரும்? - என்
    கழுத்தை ஓடிக்கலாம் கையை முறிக்கலாம்
    கவிதையைத் தடுக்க முடியாது!

    சொல்வது உண்மைதான்...ஐயா.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. படிக்கப் படிக்க உணர்ச்சி கொந்தளிக்கிறது ஐயா.
    போர்க்குணமென்றால் இதுதான்.
    உணர்ச்சி சற்றும் குன்றாத மொழிபெயர்ப்பை
    வழங்கியுள்ளீகள் ஐயா.
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. மொழிபெயர்ப்புக் கவிதை மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. நம்மை பாதித்த கவிதையை தாக்கம் குறையாமல்
    மொழிபெயர்ப்பது பெரிய சவால்அண்ணா .தங்களின்
    முதிர்ச்சியும் ,சொல்வளமும் லாவகமாய்
    சாதித்து விட்டன .நானும் தான் ராபர்ட் பிராஷ்டின்
    ஒரு கவிதையை சுவை மாறாமல் மொழி பெயர்க்க வெகுநாளாய்
    முயல்கிறேன் .பாப்போம் இனியாவது முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. மிக அற்புதமான மொழியாக்கம்
    ரொம்ப நல்ல கீது அண்ணா
    சுருக்கென பற்ற ஒரு தத்துவ மரபில் திளைத்த பேனா ஒன்றை தேடிகொண்டிருகிறேன்
    தத்துவங்கள் தோற்றுக்கொண்டே இருக்கின்றன
    மனிதம் மட்டும் என்னை பார்த்து இளக்காரமாய் சிரிக்கிறது
    மனிதம் மட்டுமே நல்ல தத்துவம் என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. இனிய வணக்கம் ஐயா..
    எதையும் தடுக்கலாம்...
    உணர்வு பீரிட்டு வரும்
    எழுத்துக்கு இல்லை தடை
    என்ற அற்புதமான கருத்தேந்தி வந்த
    கவிதையினை மொழிபெயர்த்துத் தந்தமைக்கு
    நன்றிகள் பல ஐயா..

    பதிலளிநீக்கு