வலைப்பதிவர் திருவிழாவில் பங்கேற்று வந்தேன்...

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு இரண்டாம் ஆண்டுவிழாவில் நான் பங்கேற்பேன் என்று நேற்றுவரை எனக்கே தெரியாது! (Man Proposes but Super man Disposes!)
திடீரென்று வந்த தொலைபேசி அழைப்பு 31-08-2013 மாலை கலைஞர் தொலைக்காட்சி பட்டமன்றப் பதிவு என்றதால், கிளம்பிவிட்டேன். அடுத்தநாள திண்டுக்கல் கவிதைமுகாம் தள்ளிப்போடப் பட்டதால், அந்த நாளை நம் வலைநண்பர்களோடு கொண்டாடத் தீரமானித்து தாமதமாக, 11மணிக்குப் போய்ச்சேர்ந்தால்...
சென்னை – வடபழனி- திரையிசைக் கலைஞர்களின் சங்கக் கட்டிடத்தின் முன்பாக அழகான பதாகை (அதாங்க ஃபிளெக்ஸ் போர்டு) அன்போடு வரவேற்க உள்ளே நுழைந்தால், ஏராளமான வாகனங்கள் மிரட்டி வரவேற்றன.

வாயிலருகில் நண்பர்கள் மேசை போட்டு அமர்ந்து வந்த வலைப்பதிவர்களிடம் விவரம் கேட்டுப் பதிவுசெய்துகொண்டு, அடையாள அட்டை வழங்கினார்கள். ஏங்க இதுக்கெல்லாம் நிறையச் செலவாகுமே நன்கொடை ஏதும் தரலாமா? என்று கேட்டதற்கு அப்படி வாங்க எங்களுக்குச் சொலலப்படவில்லை என்றார்கள்!... அட..!

உள்ளே போனால்... 150க்கும் மேற்பட்டவர்கள்... ஆச்சரியப்பட்டுக் கொண்டி ருக்கும் போது விசில் சத்தம் காதைக் கிழித்தது. ஒரு சகோதரி-வலைப்பதிவர்தான்- தன்மகளுக்கு வேலைகிடைத்ததே வலைப்பக்க நண்பர்களால்தான், அவரது முதல்மாதச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இந்த நிகழ்ச்சிக் வந்ததாகச் சொன்னதும் மீண்டும் விசில்!

மேடையில் ஐந்து அலங்கார நாற்காலிகள்... இடது ஓரமாக நின்றுகொண்டு இரண்டு சகோதரிகள் ஐந்து,ஐந்து வலைப்பதிவராக வந்து சுய அறிமுகம் செய்ய அழைத்தார்கள். அருகில் பார்த்தால் புதுக்கோட்டை சுரேகா சுந்தர்! அவரும் அழைத்துக்கொண்டிருந்தார்.

சுயஅறிமுகத்தில் நிஷா, சங்கவி, கௌதமன், வேடியப்பன், வால்பையன், திலீபன், கணேசகுமார், அதிர்வு ஆன்லைன், கோகுல், சிவசங்கர்-காதல் குருடன், ஈரோடுதாமோதர், திருப்பூர் மனக்குதிரை, பெங்களுரு கற்போம், கோவைசதீஷ், பிருநதாவனமும் நொந்தகுமாரனும்(?) என மேடையேறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்... மகிழ்ச்சியாக இருந்தது-இருந்தார்கள்!

முகம் தெரிந்த யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தால்... அப்படி யாரும் இல்லையா என்று பார்ப்பதற்குள்... மேடையிலிருந்து சுய அறிமுகத்திற்கு அழைத்த அடுதத 5 பேரில் என் பெயர் வந்துவிட்டது.

அவசர அவசரமாக நண்பர தி.ந.முரளிதரன் அவர்களுக்கு உள்ளேன் அய்யா என்று ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு மேடைப்பக்கம் போனேன்.  

அந்தச் சகோதரி அடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்திருக்கும் திரு முத்துவளவன் அடுத்ததாகத் தன்னை சுய அறிமுகம் செய்துகொள்வார் என்று அறிவிக்கவும், நண்பர் முரளி வாசலுக்கு வந்துவிட்டதாகவும என்னை எங்கே என்றும் தொலைபேச, நான் மேடையில் என்று சொல்லிக்கொண்டே ஒலிபெருக்கியை வாங்கி, என்பெயர் முத்துநிலவன், எனது வலைப்பக்கம் வளரும் கவிதை இதுபோல மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று மட்டும் கூறிவிட்டு வணக்கம் போட்டுவிட்டு இறங்கினேன்.
முதல் வரிசையில் இருந்த மூத்த பதிவர் புலவர் சா.இராமானுசம், பாரதிமணியன் செல்லப்பா யாகசாமி ஆகியோர் அருகில் சென்று வணங்கி அறிமுகம் செய்துகொண்டேன்.
மேடைக்கு வந்துவிட்ட முரளி நான் முரளி என்று கைகொடுத்தார். மகிழச்சியோடு அவரது கைகளைப் பற்றிக குலுக்குமபோதே என்னசார் இவ்வளவு சுருக்கமா முடிச்சிட்டீங்க என்று சுரேகா சுந்தர் அன்பாகக் கடிந்துகொண்டார். பார்வையாளர்களைப் பற்றி ஓரளவேனும் புரிந்துகொள்ளாமல் நான் எப்படி என்னபேச என்று நினைத்தும், சொல்லவில்லை.

அடுத்தடுத்து பதிவர்கள் சுயஅறிமுகம் 115,116,117 என்று அறிவித்துக் கொண்டிருக்கும் போது எட்வின் (நோக்கும் திசையெல்லாம்) அழைக்கப்பட்டான்.. அவனைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி! உண்மையிலேயே ரொம்ப நாள் கழித்து சந்தித்தது மகிழ்வளித்தது.. தனது புத்தகம் (இவனுக்கு அப்போது மனு என்று பேர், பத்துக்கிலோ ஞானம்) இரண்டையும் தந்தான், உடன் வந்திருந்த காக்கைச் சிறகினிலே ஆசிரியரை அறிமுகப் படுத்தினான்.

நண்பர் மதுரை ஜோக்காளி பாரதிராஜா மாதிரி பேசிக்கொட்டினார!
மயிலனின்  பக்கோடாக் கவிதை ஜாலியாக இருந்தது.

அடுத்து பாமரன்  பேச்சு... அதுபற்றி விரிவாக நண்பரகள் எழுதுவார்கள்.. என்றாலும், வெகு இயல்பாகவும், மேடைப்பேச்சுப் பாசாங்கு அற்றதாகவும் இருந்தது.
பிறகு மதிய உணவை சைவ-அசைவமாகப் பிரித்து, பிரியாணி போட்டார்கள் எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இடையில் நண்பர் முரளி, மதுமதியைக் குழுவினரோடு அறிமுகப் படுத்தினார். அவர் அழகான ஆண் என்பது எனக்குச் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது ( அவரிடம் சொல்லவில்லை!) நண்பர்கள் புண்ணியமூர்ததி, தமிழமுதனைச் சந்தித்தது மகிழச்சி. அந்தப்பக்கமாக வீடுதிரும்பல் மோகன் குமார் ஏதோ வேலையாகப் போனார்...இந்தப்பக்கம் கவியாழியார் கண்ணதாசன் வந்து கைகுலுக்கினார்... ஒரே கலகலப்புத்தான்...  

மீண்டும் இரண்டு மணிக்கு மதுமதியின் 90டிகிரி எனும் குறும்படம். பள்ளிக்கூடத்தில் ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்காத சிறுமியை ஆசிரியர் கேவலமாகத் திட்ட, அவள் கற்கை நன்றே... என்று கோவில் வாசலில் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து 90ரூபாய் சேர்த்து கடைக்குப் போய் வாங்க... பின்னோக்கு உத்தியில் (ஃபிளாஷ் பேக்) கதை நெஞ்சைப் பிழிந்து விட்டது. நான் கண்ணைத் துடைத்துக்கொண்டிருக்கும்போதே.. என்னை மேடைக்கு அழைக்க உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த நான், 5நிமிடம் -- நல்லநல்ல குறும்படங்களை வலைப்பதிவர் அனைவரும்  த்த்தம் வலையில் அறிமுகப் படுத்த முயற்சிசெய்தால், அதுவே பண்பாட்டைச் சீரழிக்கும் இன்றைய படங்களுக்கான மாற்றுசினிமாவை வளர்க்கும் என்றுமட்டும் -- கூறிவிட்டு இறங்கிவிட்டேன். என்னால் அந்தநேரம் அதிகநேரம் பேசமுடியவில்லை. (90டிகிரி என்னும் படத்தலைப்பு எல்லாருக்கும் புரியாது என்பதோடு, இப்போதைய அரசு எட்டாம் வகுப்பு வரை ஜியோமெட்ரி பெட்டியையும் இலவசமாகத் தருகிறது என்னும் இரண்டு விமர்சனத்தை அங்கு சொல்ல மனமில்லை.. அது இல்லாவிடில் இன்னொன்று, கற்கத் தடையான வறுமையின்  குறியீடுதான் அது என்பதால்...)

வாமு.கோமு. அழகாகவும், அளவாகவும் பேசினார். பிறகு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பேசினார்...பேசினார்...பேசினார்... ஒரே விசில்! (ஊக்குவதற்காக மட்டுமல்ல, பேச்சாளரை மேடையை விட்டுப் போக்குவதற்காகவும் அதே விசில் கைத்தட்டல்தான் என்பதைப் பேசுவோர் குறிப்பாகப் புரிஞ்சிகிட்டா நல்லது!)

4மணிக்குமேல், நண்பர் முரளியிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
புதுக்கோட்டைக்கு 8மணிநேரப் பயணம்... நாளை வேலைநாள் அல்லவா?
(என்றாலும், 6மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இரவு 1மணிக்கு புதுக்கோட்டை வந்து இறங்கி, தூக்கமிலலாமல், இரவு இரண்டரை மணிக்கு மீண்டும் எழுந்து அடித்து வலையில் ஏற்றிவிட்டுத்தான் படுத்துத் தூங்கப் போகிறேன் என்பது விழாவின் தாக்கம்தானே?) 

அடுத்துத்தான் புத்தக வெளியீடுகள் நடந்திருக்கும் அதற்கு நான் இருக்க முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் கண்மணி குணசேகரனின் இடமறியாப் பேச்சின் நீளம்!

மொத்தத்தில் 
ஏதோ
பூர்வ ஜென்ம உறவுகளைப் 
பார்த்துவந்த 
மகிழ்ச்சி நிறைவு.

செல்லப்பா யாகசாமி முதலான மூத்தவர்களுக்கு என் பணிவான வணக்கமும், முரளி எட்வின் போன்ற என் சக நண்பர்களுக்கு என் கனிவான வணக்கமும், சுரேகா முதலான இளைய வலையர்களுக்கு என் வாழ்த்துகளும், பல சிரமங்களையும் விரும்பி ஏற்று இதைச் செய்த அமைப்பாளர்களுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளும, தோளின் மீது கைவைத்து அன்பான கை குலுக்கல்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அடுத்த முறை திட்டமிடும்போது, செய்தித் தொடர்புக்கென்று ஒருவர், மேடைக்கு ஆண்ஒருவர் பெண்ஒருவர், மற்றும் தலைமைக்குழுவாக 5பேர்,  அதில் ஒருவர் தலைவர் ஒருவர் செயலர் ஒருவர் பொருளர் என்று முன்னரே தெரிவு செய்து அறிவிப்புகளையும வெளியிட்டால் இன்னும் தெளிவாக இன்னும் எளிதாகப் புரிநதுகொள்ளலாம்.
இன்னும் அறிமுகப் படுததிக்கொள்ளாத பதிவர்களின் பெயர்களை அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக்கேட்டுத் தெரிந்தும் போய்ப்பேச முடியாமல் போய்விட்டது. அந்தப்பதிவர்கள் -தூக்கமில்லாமல் எழுதும்- இந்தப் பதிவைப் பார்த்துத் தவறாக நினைத்து விட வேண்டாம என்று அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் அய்யாவைப் பார்த்தும் அவரிடம் சிறிது நேரமே பேச முடிந்ததோடு, கரந்தை ஜெயக்குமார் அய்யாவைக் கடைசிவரை காணமுடியாததும் எனது வருத்தமே! 

வந்த பதிவர்களின் பெயர் விவரங்களை அமைப்பாளர்கள் வெளியிடுவாரகள என்றும், 
இது எனது உணர்வே அன்றி, Official Aritcle  அல்ல என்பதையும் தெரிவித்துககொள்கிறேன்

இந்த நிகழ்வுக்கு உதவிய -
மூத்தோர்க்கு வணக்கம், 
நண்பர்களுக்குப் பாராட்டுகள், 
இளையோர்க்கு வாழ்த்துகள்.
வந்துகலந்து சிறப்பித்த வலைப்பதிவர்களுக்கு நன்றி 
-- நா.மு. 02-09-2013 விடிகாலை -3-00 மணி
-------------------------------------------- 
பி.கு. விழா அமைப்பாளர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் - 
        உங்கள் களைப்பு நீங்க சற்றே இளைப்பாறிககொண்டு, படங்களுடன் செய்தியை இன்றே செய்தித்தாள் ஊடகங்களுக்குத் தந்து, வெளியிடச் செய்வதுடன், அமைப்பாளர் அனைவரும் பகிர்ந்து தத்தமது வலைப்பக்கங்களிலும் முடிந்தவரை படங்களை எலலாம் வெளியிட்டு வராதவர்களை அடுத்த விழாவிற்கு அவசியம் போய்விட வேண்டும் என்னும் உணர்வைப் பெறுமாறு செய்திட வேண்டுகிறேன்.                                              -நா.மு. 02-09-2013 காலை 7.45. 
--------------------------------------------

47 கருத்துகள்:

  1. பயணக்களைப்பையும் மீறி பதிவேற்றிய உங்கள் கடமை உணர்வுக்கு ஒரு ராஜ வணக்கம்!

    சுருக்கமா சொன்னாலும் சொல்ல வந்ததை அழகுற சொல்லிட்டீங்க, பிறகு விரிவாக பகிர்வீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    பதிவர் சந்திப்பில் அனுபவித்த நினைவுகளை பகிர்ந்த விதம் மிக அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் திருவிழாவில் பங்கேற்றுக் கலந்த பகிர்வைப் படிக்கையில் நன்மைகள் பல இருப்பதை அழகாக வெளிப்படுத்தியதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டதை மனநிறைவோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பதிவர் விழாவுக்கு போகாத குறையை உங்கள் பதிவு தீர்த்து வைத்துவிட்டது. எவ்வளவு பதிவர்கள் ஒன்று திரண்டுள்ளனர், வியப்பு. வரும் வரும் ஆண்டுகளில் இது மேன்மேலும் விரிவடைய பேரவா.

    பதிலளிநீக்கு
  6. செறிவான சுவையான நிகழ்ச்சித் தொகுப்பு.

    மகிழ்ச்சி; நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஏதோ பூர்வ ஜென்ம உறவுகளைப் பார்த்துவந்த மகிழ்ச்சி நிறைவு.

    வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  8. உடனே -விடிகாலையிலேயே- பின்னூட்டம் இட்டு வியப்பில் ஆழ்ததிய பதிவர்கள் வவ்வால், ரூபன், ஜீவ.காசி அய்யா, தமிழ் இளங்கோ, இக்பால் செல்வன், காமக்கிழததன், சகோதரி இராஜேஸ்வரி மற்றும் இன்னும் எழுதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. (பள்ளிககூடம் போயிட்டு சாயந்திரமா வந்து விரிவாப் பேசுவோம்ங்க...) வணக்கம்.

    பதிலளிநீக்கு

  9. அன்பின் இனிய முத்து நிலவன்! நான்

    நமது கழகத்தின் மாநிலத் தலைவராய்
    இருந்த போது தாங்கள் புதுக்கோட்டை
    மாவட்டத் தலைவராக இருந்ததை சொன்ன போது மகிழ்ந்து போனேன்
    முன்னரே பார்த்த, பழகிய முகமாக நான் எண்ணியது சரியாகி விட்டது. விரிவாக ,விழா முடிந்ததும்
    தங்களோடு போச நினைத்தேன் காணவில்லை! வலைவழி சந்திப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. கரந்தை ஜெயக்குமார் அய்யா அவர்கள் வரவில்லை... தங்களின் உரை அனைவரையும் கவர்ந்தது என்பதை என்னால் உணர முடியும்... ஒவ்வொரு வரியிலும் உற்சாகத் ததும்பல்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. உங்களைப் போலவே நானும் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களை தேடினேன் ...பயணம் செய்த களைப்பு இருந்தாலும் சிறிய பதிவை இட்டேன் ,உங்கள் பதிவின் நீளத்தில் இருந்துஉங்கள் ஆர்வம் புரிந்தது !
    என் இனிய தமிழ் மக்களே ..என்னைப் பற்றி வாத்தியார் முத்து நிலவன் சொல் லிஇருப்பது ஓவர் பில்டப் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் !
    நன்றி !

    பதிலளிநீக்கு
  12. சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாததை இட்டு கவலைப்பட்ட என்னைபோன்றவர்களுக்கு உங்களின் இந்த பதிவினை பார்த்ததும் ஏற்பட்ட மகிழ்சிக்கு அளவே இல்லை .
    இருந்தாலும் ஒரு குறை படங்களை தந்திருக்கலாம் .

    சரி உங்களின் இநத பதிவுக்கு எனது பாராட்டுக்கள் சகோ !

    கரிகாலன்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் என் பெயர் சசிகலா நேற்று சந்திப்பில் தங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது எனக்கு .. அனைவரையும் பார்த்த மகிழ்வில் என்ன செய்வது என்றே தெரியாமல் அமைதியுடன் வேடிக்கை பார்க்கும் சிறுமியாக அமர்ந்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
  14. அனுபவம் அருமை... பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்...

    பதிலளிநீக்கு
  15. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்

    பதிலளிநீக்கு
  16. நாடறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சக பதிவர் என்பதில் பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகிறேன்.இருந்த சிறிது நேரத்தில் நிகழ்ச்சியை கூர்நோக்கிய விதத்தை கண்டு வியக்கிறேன்.பின்தொடர்கிறேன் அய்யா... :)

    பதிலளிநீக்கு
  17. பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! உங்கள் பெயரை மறந்து போனதால் என் பதிவில் குறிப்பிடவில்லை! முரளிதரனுடன் சந்தித்ததால் அவரது வலைப்பூவிற்கு வந்து கண்டுபிடித்து உங்களின் ஃபாலோயராக இணைந்துவிட்டேன்! சிறப்பான பகிர்வு! நன்றி! http://thalirssb.blogspot.in/2013/09/bloggers-meet-chennai-2013.html

    பதிலளிநீக்கு
  18. குறும்படம் இணைப்பில் தருவதுதானே? இது எனது நீண்டநாள் ஆசை... சரியான வாய்ப்பும் சூழலும் சொல்லவைத்தன... நன்றி சக்கரக்கட்டி அய்யா

    பதிலளிநீக்கு
  19. இரண்டுக்கும் சேரத்து நன்றி சுரேஷ் அய்யா.
    முகநூல் என்று பெயர்தான் முகமறியாமலே நட்பாக இருப்பதில்லையா அதுமாதிரித்தான் வலையும். நம் நட்பு வளரட்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. சேலம் தேவா அய்யா... நன்றி நாடறிந்தவாவது ஒண்ணாவது நம்ம நம்ம சுரேஷ் அய்யா சொன்னதப் பாத்திங்கள்ல? நட்பு வலை விரியட்டும எனது மற்ற படைப்புகளையும் பார்த்துக் கருத்துச் சொல்ல வேண்டும் மீண்டும் நன்றி தேவா!

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஆர்வி சரவணன், கண்மணி உங்கள் நண்பர் என்றாரே! நல்ல மனிதர் நல்ல எழுததாளரும் கூட. தங்களுடன் நிறையப் பேச வேண்டும் என்றிருந்தேன். சூழல் வாய்க்கவிலலை. நட்பு வலையில் தொடர்வோம.

    பதிலளிநீக்கு
  22. பாராட்டுக்கு நன்றி சாய்ரோஸ். நீஙகளும் வந்திருக்கலாம்ல?இப்பவும் எனக்கு அந்தநினைவு இருந்துக்கிட்டே இருக்கு... அதற்கு உழைதத நண்பரகளின கைகளைப் பற்றிக் குலுக்கிவிடடு வர மறந்து போனதை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  23. ஆமாம் சகோதரி சசிகலா... நீங்கள் மட்டுமென்ன நானும்தான் வேடிக்கை பார்த்துச் சின்னக்குழந்தையாக வந்த வலைநண்பர்களுடன் என்னென்னவோ பேசிக்கொண்டே இருந்தோம்! தங்கள் பகிர்வுக்கு நன்றியம்மா!

    பதிலளிநீக்கு
  24. ஆமாம் கரிகாலன் அய்யா, படங்கள் இல்லாதது பெரிய குறைதான... ஆனால், அமைப்பாளர்கள் நிகழ்வைத் தொகுத்துத் தரும்போது படங்களுடன் போடுவார்கள். சற்றே பொறுங்கள்... நம்ம உணர்வுப் பகிர்வுதானே? முழுத் தகவலையும் அவர்கள்தானே தரமுடியும்? உஙகளோடு நானும் காத்திருக்கிறேன்... தங்கள் பகிர்வுககு நன்றி

    பதிலளிநீக்கு
  25. ஓவர் பில்டப் லாம் இலல பகவான்ஜி! உங்கள் முயற்சியுடன் ஈடுபாடும்தான் என்னை அப்படிச் சொலல வைத்தன! முழுவசனத்தையும் அழகாச சொன்னீஙகளேய்யா! பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. திண்டுக்கல் தனபாலன் அயயா நகத்தளவு படத்துலதான் கருப்பா தெரியிறாரு! நேர்ல பாததா அவ்ளோ செவப்பு, அவ்ளோ உயரம்! ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாலும் விரிவா பேசமுடியலயேங்கிற நினைபபு அடிமனசுல கெடக்கு! நன்றி நன்றி சந்திபபோம்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் புலவர் சா.இரா. அவர்களே! தங்களுடன் பேசிவரத்தான் நானும் எண்ணிக் காததிருநதேன்... இயலாமைக்கு மன்னிக்க.
    தங்களின் மரபுக்கவிதைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனது புதியமரபுகள் தொகுப்புக் கவிதைகள் மற்றும் மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பார்த்து, தங்கள் கருத்தை இட வேண்டும். தங்களை என்றும் தொடர்வேன்.நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  28. பதிவர் திருவிழாவிற்கு வரவில்லையென்றாலும் திருவிழாவிற்கு சென்று வந்த அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி அய்யா. மிக்க மகிழ்ச்சி. பயணக் களைப்பிலும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. பசுமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
  30. நண்பர்கள் ஜீவன் சுப்பு, கிராமத்துக்காக்கை, பாண்டியன் ஆகியோரின் பதிவுக்கு நன்றியன். நட்பு தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  31. நன்றி ; தங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  32. உங்கள் வரவும்... இந்தப் பதிவும்.. மிகவும் மகிழ்வுக்குரியது..!!


    மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  33. ஐயா!நான்தான் தாமதமா!
    தங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்வை பதிவாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
    நான் இனிமேல்தான் எழுதவேண்டும்.
    ஊருக்கு சென்றவுடன் கணினி முன் அமர்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மேடையில் என்பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம், திரு வண்ண நிலவன்.
    நேற்று உங்கள் பேச்சைக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் பேசுவீர்கள் என்று நினைத்திருந்தேன். மிகவும் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடீர்கள். எல்லோருமே திரு மதுமதியின் குறும் படத்தைப் பார்த்து பேச்சிழந்து போயிருந்தோம்.

    மதியத்திற்கு மேல் தான் என்னால் விழாவிற்கு வர முடிந்தது. உங்களை சந்திக்க முடியவில்லை.

    எட்வின் அவர்களின் புத்தகைத்தை வாங்கியிருக்கிறேன். அவரும் வந்திருந்தார் என்பது உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

    உங்கள் இருவரையும் சந்திக்க ஆசை.

    அன்புடன்
    ரஞ்சனி

    பதிலளிநீக்கு
  35. நீங்கள் ஒருமணிநேரம்தான் தாமதம். நான்,ஒருவருடம் மற்றும் ஒருமணிநேரத் தாமதமல்லோ!
    எனினும் தங்களைச் சந்தித்தது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி பெருமையான நட்பு.
    பதிவுக்கும் நன்றி. படங்களுடன் கூடிய தங்களின பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  36. சுரேகா, உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உண்மையிலேயே மதுமதியின் குறும்படத்தைப பாரத்துவிடடு உணர்சசிகர மாக உணர்ந்த ஒரு சில நிமிடஙகளில் அழைத்து, மேடையில் வந்து உட்கார்ந்த அடுதத நிமிடமே என்னைப் பேசவும் அழைத்த உங்களின் மீது இருந்த கோபததை என்னை உங்களிடம் மாட்டிவிட்ட திரு சுரேகாவை நான் அன்புடன் கண்டிககிறேன என்று கூறுவதற்குப் பதிலாக ஏதோ அறிக்கை விடுவது போல வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்... இது எனது சொற்பிழையே அனறி பொருட்பிழையன்று. எனவே அதைப் பொருட்படுத்தாமல் என்னைப் பற்றிப பெருமையாக மேலும் சொல்லிக்கொண்டிருந்த உங்களிடம் மன்னிப்புக் கேட்பது தவறல்ல, மன்னியுங்கள் சுரேகா! உங்களின் மற்றும் உங்கள் நண்பர்களின் உழைப்புக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. சந்திககலாம் சகோதரி,
    நான் வண்ணநிலவன் அல்லன், அவர் துக்ளக்கில் பணியாற்றும் எழுத்தாளர், நாவலாசிரியர்.
    கருத்துகள் ஒத்திருக்கும்போது சந்திப்பதுதானா பெரிது?
    நட்பின் வலை விரியட்டும்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி திரு மோகன் குமார் அய்யா.
    தங்களுடன் நிறையப் பேசலாம் என்றிருந்தேன், அந்த நேரம் பேசுவது, விழாவின் உங்களது சுறுசுறுப்பான வேலைகளுக்கு இடையூறாகிவிடுமோ என்று தயங்கியிருந்துவி்ட்டு... தங்கள் பதிவிறகு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. உங்கள் பெயரை தவறாகக் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. அய்யோ... மன்னிக்கணும் சகோதரி ரஞ்சனி! என்நண்பர் முரளிதரன் என்னை பிரபலமானவர் என்று அடிக்கடி சொல்வார் அவரிடம் நான் ஒன்றும் அப்படியில்லை என்று சொல்லிச்சொல்லி ஓய்ந்து போனேன்.. எனவே தான் என்பெயர் ஒன்றும் பிரபலமில்லை என்பதற்கான சான்று நீங்கள் வண்ணநிலவன் என்று குறிப்பிட்டதைப் போ்ட்டேன்.. விழாவில் என்னைப் பேச அழைத்த சகோதரியும் இப்படித்தான் முத்துவளவன் என்று குறிபபி்ட்டார்.. அதனானால் என்ன? அன்பு இருந்தால் போதும்... எனது மற்ற படைப்புகளைப் பார்த்து கருத்துச் சொல்லுங்கள் சகோதரீ. தங்கள் உளப்பூர்வமான பகிர்வுக்கு எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  41. சார் பதிவர் திருவிழாவில் நான் எடுத்த சில படங்களை என் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன் நேரமிருக்கும் போது பாருங்கள் மிக்க நன்றி


    http://kudanthaiyur.blogspot.com/2013/09/2013.html

    பதிலளிநீக்கு
  42. பதிவர் திருவிழாவில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்பும் உற்சாகமும் ததும்பும் இளைஞர் கூட்டம் நடத்திய விழா இது. அடுத்த ஆண்டு இம்மாதிரி விழா நடக்கும்போது நீங்கள் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் நடைமுறைபடுத்தப்படலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்பும். கண்மணி குணசேகரன் நேரத்தோடு பேசிமுடித்திருந்தால் ஒட்டுமொத்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பான பதிவை நம் இதயத்தில் எழுதியிருக்க முடியும். ஆனால் அவரது உற்சாகத்தையும் இதயசுத்தியோடு எழுந்த அவரின் சொற்களையும் நிச்சயம் கௌரவப்படுத்த விரும்புகிறேன். –கவிஞர் இராய செல்லப்பா, சென்னையிலிருந்து.

    பதிலளிநீக்கு
  43. அட! குடந்தையூரன்தான் சரவணனா! படங்கள் நல்லா இருந்துச்சு... நானும் நண்பர் முரளியும இருக்கும் படத்தை அப்புறமா சுட்டுக்கலாம்ல? தஙகள் தளத்தைப்
    பார்த்தேன்..
    பகிர்ந்தேன்..
    தொடர்வேன் நன்றி

    பதிலளிநீக்கு
  44. அன்பும் உற்சாகமும் ததும்பும் இளைஞர் கூட்டம் நடத்திய விழா இது. அடுத்த ஆண்டு இம்மாதிரி விழா நடக்கும்போது நீங்கள் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் நடைமுறை படுத்தப்படலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்பும்-
    ஆமாம் அய்யா, நானும் எதிர்பார்க்கிறேன்.தங்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு