பட்டுக்கோட்டை பாரதிவிழாவுக்கு வருக!

பட்டுக்கோட்டையில் பாரதிவிழா!
22-09-2013-ஞாயிற்றுக் கிழமை மாலை பட்டுக்கோட்டையில் நடைபெறும் “பாரதி இயக்கம்” நடத்தும், பாரதிநினைவுநாள் கருத்தரங்கில் சிறப்புரையாற்ற என்னை அழைத்திருக்கிறார் பட்டுக்கோட்டையின் புகழ்பெற்ற ஓவியரும் விமர்சகரும் --தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் அதிகாரியுமான- சிவ.தங்கையன்.

பட்டுக்கோட்டை மற்றும் அருகில் இருக்கும் நமது வலையுலக நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வருக!

எனவே திங்களன்றுபுதியன காண்போம்...

அது வரை... நேற்று நடந்த “தேசிய கவி பாரதி நினைவுநாள் விழா மற்றும் தேசிய விருது பெற்ற கவி தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா” படம் ஒன்றைச் செய்தியுடன்  ஏற்றிவிட்டுச் செல்கிறேன்...
--------------------------------------------------------- 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் திருக்கோகர் ணம் கிளை சார்பில் மகா கவி பாரதியார் விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு பாராட்டு விழா, கவியரங் கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆக்ஸ் போர்டு கேட்டரிங் கல்லூரி யில் நடைபெற்ற இவ்விழா விற்கு கிளைத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். செயலாளர் செ. சுவாதி வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு நினைவுப் பரிசு வழங்கி கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார்.தமுஎகச மாவட்டச் செயலாளர் ரமா ராம நாதன், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.நீலா, மாவட் டப் பொருளாளர் சு.மதியழ கன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர்கள் கஸ்தூரிநாதன், கீதா, ஸ்டாலின் சரவணன், சிவா, மேகலைவா ணன், பீர்முகமது உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். பாவலர் பொன்.க., மீனா சுந்தர் ஆகியோர் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர். கவிஞர் தங்கம் மூர்த்தி ஏற்புரை வழங்கினார். கிளைப் பொருளாளர் மகா.சுந்தர் நன்றி கூறினார். தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத்குமார், தமிழாசிரியர் கழகத் தலைவர் திருப்பதி, செயலாளர் குருநாதசுந்தரம், இணைச்செயலர் முனைவர் துரைக்குமரன், டீம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சலீம், அறிவியல் இயக்கம்  பாலகிருஷ்ணன், பி.எஸ்.கே.கருப்பையா, ஆக்ஸ்போர்டு சுரேஷ், கலைஇலக்கியப் பெருமன்றம் செம்பை மணவாளன், மீரா.செல்வகுமார், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாபு, பாவேந்தர் பள்ளி ஆர்.எஸ். காசிநாதன், நண்பர்கள் சங்கம் முத்துச்சாமி, ஆசிரியர்கள் முனைவர் அய்யாவு, எம்.எஸ்.ஆர்.ரவி, ஓவியர் புகழேந்தி, கலையரசி, “ஆனந்தஜோதி” மீரா சுந்தர், “பார்வை” இசைப்பள்ளி உறரிமோகன், கவிஞர் சுரேஷ்மான்யா, கவிராஜன் அறக்கட்டளை முருகபாரதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

  
படத்தில் -இடமிருந்து-தமுஎகச மாவட்டப் பொருளாளர் சு.மதி, திருக்கோகர்ணம் கிளைத்தலைவர் கவிஞர் எஸ்.இளங்கோ, நா.முத்துநிலவன், விருதுபெறும் கவிஞர்-தேசிய நல்லாசிரியர்-தங்கம் மூர்த்தி, திருமதிஅஞ்சலிமூர்த்தி, திருக்கோகர்ணம் தமுஎகச செயலர் கவிஞர் சுவாதி, மாவட்டச் செயலர் கவிஞர் ரமா.ராமநாதன் ஆகியோர்.

நன்றி - https://www.facebook.com/subramanian.ramakrishnan.3
“தீக்கதிர்” நாளிதழ் 22-09-2013 (மதுரைப் பதிப்பு),
“தினமணி”நாளிதழ் 23-09-2013 (திருச்சிப் பதிப்பு)
------------------------------------------------- 
மீண்டும் சுவையான தகவல்களோடு ”இந்தவாரம்...”பகுதியில் திங்கள் மாலை சந்திப்போம்... 

9 கருத்துகள்:

  1. மேலும் சுவையான தகவல்களை அறிய காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. இன்றைய கருத்தரங்கம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி! விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக் கூறிய திருவாளர்கள் கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், டி.என்.முரளிதரன், எஸ்.சுரேஷ் ஆகிய நண்பர்களுக்கு நன்றி. பட்டுக்கோட்டையில் நடந்த 22-09-2013 பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியை -அங்குள்ள உள்ளுர் தொ.கா.நிகழ்ச்சிக்காக விடியோ பதிவு செய்திருக்கிறாரகள். நண்பர் சிவ.தங்கையன் அதை நம் வலைப்பகுதியில் வெளியிடத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வந்தவுடன் நம் வலையில் ஏற்றி நண்பர்கள் காணவும், கேட்கவும் தருவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (“பேசினதும் இல்லாம அதை நம்மைப் பார்க்கவும் சொல்கிறானே, அவ்வ்..” என்று “வவ்வால்” அய்யா குரல் கொடுப்பது எனக்குக் கேட்கிறது... என்ன செய்வது? விதி...வலியது..! எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அய்யாவுக்கு இருக்குமே? இருக்கட்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அய்யா,விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சியின் வீடியோ பதிவை நம் வலையில் ஏற்றுங்கள். காணவும், கேட்கவும் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  6. முகநூல் வரிகள் -

    எனக்கு முன்பிருந்த எங்கள் தமிழாசிரியர் கழகத் தலைவரின் மகள், பாரதி விழாவில் பாரதியைக் காணவில்லையென்று தன் தந்தையைக் கேட்டுக் கொண்டிருந்த செல்நிலை மனோபாவச் சூழலை மூத்த கவிஞர் முத்துநிலவனின் முத்துரை நீக்கியது.
    இறுதியாக ஒரு கவிஞரின் மறுமுகத்தைக் கேட்க நேர்ந்த தருணம் ஒலிக் கோடுகளில் ஒரு நிசப்தத்தை நிறுவியது. அத்தருணம் கவிஞர் தங்கம் மூர்த்தியின் அருகமை, நெருக்கத்தின் உணர்வாய் அமைந்தது. செல்நிலை மனோபாவம் மறைந்து என் கேட்புச் சூழலை ஆழப்படுத்தியது. ஒரு நல்ல ஆசிரியனின் வெற்றி அனுபவங்களை கேட்ட நான் முதல் முறையாக தோற்றுப்போனேன். என் வகுப்பறை வெற்றிகளின் மீது கர்வம் கொண்டிருந்த என் தலைகனம் நொறுங்கிப்போவதை உணர்ந்தேன். பூக்களாய்ப் பாவிக்கும் மென்மை மாணவச் சந்திப்புகளின் பரந்த பாதையில் அவர் பயணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தேன். சொல் வடிவங்களை மாற்றித் தான் படிப்பது மட்டுமே நல்ல கவிதையென்று உலகு அங்கீகரிக்க வேண்டுமென்ற குறைநிலை நிழல்கவிஞர்கள் மத்தியில் தங்கம் மூர்த்தி விலகி இருப்பதை நான் கண்டேன்.
    உயர்கல்வியாளனின் சமூகப் பார்வையை நான் இரசித்தேன். எளிய கவிஞனின் அமைதியான மலர்ப்பாதை என்னை வெகுவாய்க் கவர்ந்தது.. பணப்பற்றுதலில்லாத சமூக அக்கறையுள்ள தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரை நான் அன்று தான் முதன்முறையாகக் கண்டேன். சட்டை கிழிந்த என் ஏழை மாணவனுக்கு வாழ்வுக் கல்வியைத் தரஇயலாத புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு போராடிக்கொண்டிருக்கும் எனக்கு கவிஞக்கல்வியாளர் தங்கம் மூர்த்தியின் அருகாமை ஆறுதலைத் தந்தது.
    என் இலக்கிய வாசிப்பிலும் ஆய்வு அனுபவங்களிலும் என்னை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிய என் எண்ணக்கிளர்ந்தாளர் பேராசிரியர் தொ.ப. என்னுள் முதலில் கவிஞர் தங்கம் மூர்த்தியைப் போலவே இடைவெளிகளுக்குப் பின் நுழைந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது.
    சிலிர்ப்பான மறுமுகத்தைப் பார்த்த மகிழ்வில் என் மாலைநொடிகளுக்குச் சிறகுகள் முளைத்தன.. விருதின் எதிர்மறை எண்ணங்கள் விலகிய பின் தருணங்களில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதையை புத்தக அலமாரியில் என் விரல்கள் தேடின.
    கவிஞர் தங்கம் மூர்த்தியின் மனத்துள் நற்கல்விச்சமூக மாற்றத்திற்கான வல்லமை வேர்கள் விழுதூன்றிட புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் வாழ்த்துகிறது. அவரின் ஆசிரியத்தை வணங்குகிறது.
    சி.குருநாதசுந்தரம்,
    மாவட்டச்செயலர்,
    தமிழகத் தமிழாசிரியர் கழகம்.
    புதுக்கோட்டை.

    பதிலளிநீக்கு

  7. பணப்பற்றுதலில்லாத சமூக விழாவிற்கு வந்திருந்ததோடு, முகநூலில் நீண்டதொரு பதிவையும் இட்டிருந்த என் நண்பரும் தமிழாசிரியர்க் கழகத்தின் மாவட்டச் செயலருமான குருநாதசுந்தரம் அவர்களின் கடிதம் வித்தியாசமாக இருந்ததால் இங்கு எடுத்து இட்டேன். அவருக்கு நன்றி. கடிதத்தின் “அக்கறையுள்ள தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரை நான் அன்று தான் முதன்முறையாகக் கண்டேன்” என்ற அவரது வரிகள் உண்மையானவை. அவரது சில சொல்லாட்சிகள்...!
    செல்நிலை, முத்துரை, ஒலிக் கோடுகளில் ஒரு நிசப்தத்தை நிறுவியது,எண்ணக்கிளர்ந்தாளர், கவிஞக்கல்வியாளர், அவரின் ஆசிரியத்தை வணங்குகிறது - முதலிய சொற்கள் வியப்பளித்தன!

    பதிலளிநீக்கு
  8. குருநாதசுந்தர அய்யாவுக்கு வணக்கம். அதனால் தான் கவிஞர் தங்கம்மூர்த்தி உங்கள் நெஞ்சங்களில் வாழ்வதைப்போலவே எங்கள் நெஞ்சங்களிலும் வாழ்கிறார். முத்துநிலவன் அய்யாவிம் ஆணைப்படியும்..அன்புபிடியும்..எங்களை உற்சாகப்படுத்தி... விழா சிறக்க வைத்தது. திருக்கோகர்ணம் கிளை சார்பாக என் நன்றி அனைத்தும் முத்துநிலவன் அய்யாவுக்கே.....

    பதிலளிநீக்கு