தாய் மொழியைப் புறக்கணித்து அன்னிய மொழியைக் கற்கிறோம்


First Published : 24 September 2013 02:37 AM IST
தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு, அன்னிய மொழியைக் கற்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
பட்டுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பாரதி விழாவில் மேலும் அவர் பேசியது:
உலகச் செம்மொழிகளில் பழமை வாய்ந்த தமிழ் மொழியும் ஒன்று. ஆனால் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அன்னிய மொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். மொழி வழிக்கல்வி பிரச்னையில் சிக்கித் தவிக்கிறோம். தாய்மொழியை புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தில் கல்வி கற்பதை காணும் போது என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்றார் அவர்.
விழாவுக்கு பட்டுக்கோட்டை பாரதி இயக்கத் தலைவர் புலவர் அ.த. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
கௌரவத் தலைவர் மருத்துவர் மு. செல்லப்பன், தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் ஞானதிரவியம், கவிஞர்கள் வல்லம் தாஜூபால், சௌ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கிய மன்ற நிர்வாகி நா. ராஜமோகன் வரவேற்றார். பட்டுக்கோட்டை பாரதி இயக்கச் செயலர் சிவ. தங்கையன் நன்றி கூறினார்.

நன்றி 

http://dinamani.com/edition_trichy/tanjore/2013/09/24/

குறிப்பு-

எனது முழுப் பேச்சையும் விடியோப் பதிவாக்கி உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்த நண்பர் சிவ.தங்கையன் அதை நமது வலையேற்றத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதுவரை மிகவும் ஈர்த்த பாரதியின் பாடலை விடியோவாக்கியிருக்கும் -யாரென்று தெரியாத நண்பர்களுக்கு நன்றி சொல்லி -அந்தப் பாடலைப் பார்ப்போம் -

நன்றிக் குறிப்பு-

http://www.youtube.com/watch?v=M1J9eCusFTQ

------------------------------------------------------- 

5 கருத்துகள்:

  1. இணைப்புகளுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இன்னும் நிறைய தொண்டு செய்ய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அய்யாவிற்கு வணக்கம், மிகச் சிறப்பானப் பேச்சு. காணொலியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி அய்யா. உலகத் தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழ் வாழட்டும். தமிழ் அவர்களை வளர்க்கட்டும். முத்தமிழோடு கணினித் தமிழையும் வளர்ப்போம். தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  4. பல்வேறு பணிகளுக்கிடையிலும் வந்து பார்த்து, கருத்துரைத்த நண்பர்கள் திண்டுககல் தனபாலன், கஸதூரிரங்கன், கவியாழி கண்ணதாசன், அ.பாண்டியன் ஆகிய நம் நண்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு