என் இனிய தமிழ் மக்களே!
(பாரதிராஜாவும் நண்பர் குடந்தையூரானும் மன்னிக்க)
தமிழ்கூறும் நல்லுலுகத்திற்கோர் அறிவிப்பு!
நேரமிருப்பவர்கள் -
அதாவது வேறு வேலையில்லாதவர்கள்
மற்றும் நண்பர்கள்
குடும்பத்துடன் நேரடியாகத் தொலைக்காட்சியில் பார்த்து என்னைத் திட்டலாம்.
நேரமில்லாதவர்கள் -
அதாவது வேறு வேலை காரணமாகப் பார்க்க முடியாமல் போச்சு என்று மகிழ்ச்சியடைபவர்களே,
உங்கள் மகிழ்ச்சி ஒருநாள்தான்.
அடுத்த நாளே அது யு ட்யூபில் கிடைக்கும்
பொறுமையாகப் பார்த்த பிறகே கூட
என்னைத் திட்டலாம்.
எனது செல்பேசி எண் இருக்கில்ல...?
ஆமாம்...94431 93293
இன்னும் ஒரு கொசுறுத் தகவல் -
“பட்டிமன்றம் பார்த்தேன் ஆனால் நீங்க முதலிலேயே பேசிட்டிங்களோ அடாடா நா பாக்க முடியாமப் போச்சே” என்று சமாளிக்க விரும்பும் நண்பர்கள் 9.30மணிக்கு மேல் பார்க்கலாம் ஏனெனில் நான்தான் பட்டிமன்றத்தின் முதல்பேச்சாளர். எனவே அனேகமாக 9-10க்குப் பேசிவிடுவேன்...
அடுத்தடுத்து நண்பர்கள் விஜயகுமார், இனியவன், மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் பேசி நடுவர் 10.30மணிக்குள் தீர்ப்பு
(என் பேச்சுக்கு நான் பொறுப்பு. மற்ற நண்பர்களின் பேச்சைப் பற்றியோ அவர்களின் அரசியல்-இலக்கிய விளக்கங்கள் குறித்தோ என்னிடம் கருத்துக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தேவையெனில் அவர்களின் எண் தருகிறேன், அவர்களிடம் நீங்களே நேராகச் சொல்லலாம். சரியா? நன்றி)
என்ன ... தலைப்பா?
ஓ! அது ஒன்னு இருக்கில்ல... ஆமா..இருக்கு இருக்கு!
“தமிழ்த்திரைப்படங்களில் நல்ல கருத்தைச் சொல்லப் பெரிதும்தேவை - நகைச்சுவையா? சிந்தனையா?”
“சிந்தனையே”-ன்னு நானும், நண்பர் இனியவனும்.
“நகைச்சுவையே”ன்னு மதுக்கூரும், விஜயகுமாரும்.
நடுவர்- நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி.
(திருச்சியில் நான் பேசியபோது எடுத்த படத்தை எனது முகநூலில் பகிர்ந்து என்னைப் பழிவாங்கிய நண்பர் திருச்சி வெங்கடேஷ் அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் அதை இங்கே வெளியிட்டுவிட்டேன்... அப்பாடா..பழிககுப் பழி! வெங்கடேஷ்! எப்புடீ?)
எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. ஆனால் எப்படியும் பார்த்து விடுவேன். யூடியூப்லாவது. கண்டிப்பாக என் விமர்சனம் உங்கள் mobile inbox ஐ தட்டும்.அல்லது email ஐ எட்டும்.நான் கூட உங்களுக்கு சொல்லலாம் என்று நீங்கள் சொல்வதே எனக்குக் கிடைத்த தகுதியாக நினைத்து பெருமைப் படுகிறேன்.{ நீங்க பொதுவா சொன்னதுக்கு பாத்தீகளா....எனக்கே சொன்னமாரி...எல்லாம் உங்க நேரம்}
பதிலளிநீக்குகண்டிப்பாக பார்க்கிறேன் சார்
பதிலளிநீக்குபார்க்காமல் இருந்து விடுவோமா...? முன்கூட்டிய தகவலுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குகட்டாயம் பார்க்கிறோம் ஐயா!.விமர்சனம் எழுதினாலும் எழுதுவோம்.
பதிலளிநீக்குஹிஹிஹி
//எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.//
பதிலளிநீக்குசுவாதி கொடுத்து வைத்தவர்
தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத சுவாதி கொடுத்து வைத்தவர் என்று நண்பர் முரளி சொல்கிறார். அவர்கருத்தை ஏற்று அவர் கணவரும் பிள்ளைகளும் அப்படியே தொ.கா.வேண்டாமென்று ஒப்புக்கொண்டதையல்லவா முதலில் பாராட்டவேண்டும்! பார்க்கிறேன் என்று சொல்லிப் பயமுறுத்தியிருக்கும் நண்பர்கள் சரவணன், திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு நன்றி. முரளி அய்யா பார்த்துட்டு விமர்சனம்... கொஞ்சம் பாத்து அடிங்கண்ணா.. நன்றிங்கண்ணா.. (இப்பவே அண்ணே போட்டு வச்சா அடி கொஞ்சம் மெதுவா விழும்ல..? ஒரு மு.எ.நடவடிக்கைதான்!)
பதிலளிநீக்குதிரு முத்து நிலவன் அவர்களே! தங்களின் பட்டிமன்றப் பேச்சுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். திருக்குறளில் தளை தட்டுவதைப் பற்றிய தங்களின் பதிவு தமிழ் அறிவின் ஆழத்தைத் தெரிவித்தது.
பதிலளிநீக்குபட்டிமன்றங்கள் பொழுதைப் போக்கும் நிகழ்வாக மாறி வருகிறது.ம் மாற்றம் தான் மாறாதது. முடிந்தவரை தமிழ் பணி ஆற்றுவொம். வாழ்க! வள்ர்க!!
அய்யோ கிறுக்கல் அய்யா, திருக்குறளில் தளை தட்டுவதாவது,,,! அப்படித் தோன்றியதை மறுத்து, அந்த இடங்கள் பாடபேதம் என்பதுதான் எனது முடிவு என்றல்லவா எழுதியிருந்தேன். அதற்கும் மேல் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தொடர்ந்து இதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் விரைவில் எழுதுவதாகச் சொன்னார்கள்.
பதிலளிநீக்குமுன்னரே கூறியமைக்கு நன்றி அய்யா. தவறாமல் குடும்பத்துடன் பார்ப்போம். தாங்கள் கடந்த வாரம் சென்னை சென்றதுமே என்ன தலைப்பாக இருக்கும், எப்பொழுது ஒளிப்பரப்பாகும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது. தகவலுக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குமுத்துநிலவன் அய்யா,
பதிலளிநீக்குவணக்க்கோம்!(டீவில இப்படித்தான் சொல்லுதாங்கோ)
எங்க வீட்டுல ஒரு வண்ணத்தொலைக்காட்சி பெட்டியிருக்கு ஆனால் அதுக்கு கம்பிவடம்/ நேரில்ல இணைப்பு என எதுவுமே இல்லை, கடந்த பல வருடங்களாக இப்படித்தான், ஹி..ஹி இறுவட்டு படம் மட்டுமே பார்க்கிறேன்,ஆனாலும் நீங்க சொன்னதுக்காக நாளிக்கு ஒம்போது மணிக்கு தொ.காவை உயிர்ப்பித்து பார்க்கிறேன், உங்க நாவன்மையால் தானா பட்டிமன்றம் வந்தாலும் வரும்,எல்லாம் சரஸ்வதி கடாட்சம் :-))
இப்படி ஒரு தொ.கா வச்சிருக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம்னு நீங்க சொல்லுறது எனக்கு கேட்குது,ஆனால் கம்பிவடத்துக்கு ஏன் தெண்டமா காசுக்கொடுத்துட்டு மொக்கை நிகழ்ச்சி பார்க்கனும்னு தான் விட்டாச்சு!
#//அப்படித் தோன்றியதை மறுத்து, அந்த இடங்கள் பாடபேதம் என்பதுதான் எனது முடிவு என்றல்லவா எழுதியிருந்தேன். அதற்கும் மேல் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தொடர்ந்து இதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் விரைவில் எழுதுவதாகச் சொன்னார்கள்.//
நீங்க ஒரு சிறந்த தமிழய்யானு தெரியும்,ஆனால் திருக்குறள் ஆய்வெல்லாம் செய்வதாக இப்போது தான் அறிகிறேன், நல்ல முயற்சி, திருக்குறளில் தளையும் தட்டலை , வலையும் தட்டலை,நாம இப்ப படிப்பது எல்லாம் எளிதாக இருக்கனும் என்பதற்காக ஏற்கனவே சீர்ப்பிரிக்கப்பட்ட குறள்களே, யாப்பிலக்கணம்,புணர்ச்சி வித்திப்படி தளை,அசை,சீர் பிரிப்பதை காரிகை என்பார்களாம், அப்படி வரிவடிவம் பெற்றவை அல்ல நாம் படிக்கும் குறள்கள்,, நீங்க சீர்ப்பிரிக்க முயற்சிக்கணும் என்றால் நன்னூல்.தொல்காப்பிய புணர்ச்சி விதிப்படி அச்சிடப்பட்ட குறள்களீல் தான் செய்யனும்.
ஹி..ஹி இத நான் சொன்னேன்னு சொன்னால் சண்டைக்கு வருவீங்க, பெருமாள் முருகன் எனப்படும் எழுத்தாளர்/ தமிழாசிரியர் சொன்னார் ,அவரும் பிலாக் எல்லாம் வச்சிருக்கார். சுட்டி தேடிப்பார்த்து கிடைத்தால் சொல்கிறேன்.
# ஹி ..ஹி அடுத்த பட்டிமன்ற தலைப்பா, கணவன் அதிகம் பயப்படுதுவது மனைவிக்கா ,மாமியாருக்கா என வச்சால் , டிஆர்பி செம அள்ளு அள்ளும்!
# எனக்கு ஒரு அய்யம், இவ்வாண்டு பணி ஓய்வு பெறப்போவதாக உங்கள் பதிவில் கண்டேன் ஆனால் இன்று தான் பணிக்கு சேர்ந்த இளம் ஆசிரியர் போல புகைப்படத்தில் தெரியிறிங்க ,ஏதேனும் பழைய புகைப்படமா?
உங்க இளமை ரகசியம் என்னனு சொன்னா நாங்களும் பின் தொடர்வோம், எனக்கு முப்பதுலவே வெள்ள முடி எட்டிப்பார்க்குதுங்கய்யா அவ்வ்!
ஆம் பாடபேதமென்றுதான் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் அங்கு திருக்குறளைப் பற்றி தவறாகக் கூற வரவில்லை. தங்களின் ஆராய்ச்சியின் ஆழ்த்தை குறிக்க அவ்வாறு உரைத்தேன். திரு.கி.பாரதிதாசன் அவர்கள் பாடபேதமும் அக் குறட்பாக்களில் இல்லை என்று விளக்கியிருந்தார்.
பதிலளிநீக்கு“பட்டிமன்றம் பார்த்தேன் ஆனால் நீங்க முதலிலேயே பேசிட்டிங்களோ அடாடா நா பாக்க முடியாமப் போச்சே” என்று சமாளிக்க விரும்பும் நண்பர்கள்
பதிலளிநீக்குசமாளிக்கவில்லை அதுதான் நடந்தது. யூட்யூபில் பார்த்துவிட்டு எழுதுகிறேன்
நிகழ்ச்சி பார்த்தேன். நேரம் தவறாது கருத்து பிழறாது
பதிலளிநீக்குநல்ல எடுத்துக்காட்டுக்களுடன் பேசினீர்கள். ஆனால்
தீர்ப்பு வேறு விதமாக அமைந்ததில் எனக்கு வருத்தமே .
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஉங்கள் உச்சரிப்புக்கு ஒரு ஜே.
பதிலளிநீக்குபட்டிமன்றம் பார்த்துவிட்டு அலைபேசியில்தான் முன்பெல்லாம் திட்டுவார்கள், இப்ப நாம எல்லாம் “அப்டேட்” ஆயிட்டம்ல..! அதனால தனிமின்னஞ்சலில் வெளுத்து வாங்கிட்டாங்க (நண்பர் வவ்வால் பாணியில்..அவ்வ்..) ஆனாலும் பின்னூட்டத்தில் பாராட்டை (?) பகிர்ந்த என் இதயத்திற்கு இதமான நண்பர்கள்.. திருவாளர்கள் வையாபதி, ஸ்ரவாணி, நண்பர் ஜெயக்குமார், கவிஞரும் இனிய தோழியுமான செ.சுவாதி ஆகியோர்க்கு நன்றி. வவ்வால் அய்யா.. நீங்க பாராட்டுறீங்களா திட்டுறீங்களான்னே புரியல.. ம்ம்.. முடியல... “யாண்டுபலவாக நரையில ஆகுதல் யாங்காகியர் என வினவுதிராயின்”... “இண்டிகா“ என்க..
பதிலளிநீக்குபார்த்துக்கோங்கய்யா.. வவ்வால் அண்ணே சொல்ராரு நா புகைப்படத்துல இளமையா தெரியிறனாம்... அப்ப தொலைக்காட்சியில?
பதிலளிநீக்குஅதோட, நானு 60நெருங்கிட்டமாம்..
அவரு இப்பத்தான் 30ல எட்டிப்பாக்குறாராம்... நம்பிட்டம்யா..நம்பிட்டோம்..
வவ்வால் அய்யா எனப்படும்
பதிலளிநீக்குஅசின் ரசிகருக்கு (அவ்வ்வ்...) நன்றி. உங்க வலைப்பக்கம் வந்து பார்த்தேன்...
உங்க கேரக்டரப் புரிஞ்சிக்கவே முடியலயே... உலகப் பிரச்சினையிலிருந்து உள்ளுர் மணல் கொள்ளை வரைக்கும் எழுதுறீங்க.. நடுவுல நம்ம அசினைக் கொணாந்து விட்டுர்ரீங்க...?
தனக்குண்டான நேரத்தில் ரத்தினச் சுருக்கமாகப் பேசி அசத்தி விட்டீர்கள் அய்யா. தீர்ப்பு எப்படி இருந்தால் என்ன? பேச்சு தான் முக்கியம். சிறப்பான பேச்சு. பகிர்வுக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குமுத்து நிலவன் அய்யா,
பதிலளிநீக்கு//பட்டிமன்றம் பார்த்துவிட்டு அலைபேசியில்தான் முன்பெல்லாம் திட்டுவார்கள், இப்ப நாம எல்லாம் “அப்டேட்” ஆயிட்டம்ல..! அதனால தனிமின்னஞ்சலில் வெளுத்து வாங்கிட்டாங்க (நண்பர் வவ்வால் பாணியில்..அவ்வ்..) //
நீங்களே விமர்சனம் செய்யுங்கனு அழைப்பு விடுவித்து சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டிங்க, அதான் மக்கள் "பாசத்தோட போட்டு தாக்கிட்டாங்க" :-))
ஹி..ஹி நல்ல வேளை நான் பட்டிமன்றம் பாக்கலைனு சந்தோசப்பட்டுக்கோங்க,நான் மட்டும் பார்த்திருந்தேன் காதுல ரத்தம் வர்ர போல ஒரு தீட்டு தீட்டியிருப்பேன்!
யூ டியூப் சுட்டிப்போடுங்க,பார்த்துட்டு நானும் கொஞ்சம் தாளிக்கிறேன்!
நம்மையும் நண்பரா மதிச்சு குறிப்பிட்டதுக்கு நன்றி,எல்லாம் வைகைப்புயல் வாசந்தேன்!
#//வவ்வால் அய்யா.. நீங்க பாராட்டுறீங்களா திட்டுறீங்களான்னே புரியல.. ம்ம்.. முடியல... “யாண்டுபலவாக நரையில ஆகுதல் யாங்காகியர் என வினவுதிராயின்”... “இண்டிகா“ என்க..//
அய்யா நான் சொன்னது அக்மார்க்,ஐ.எஸ்.ஓ தரமான பாராட்டே, உம் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! என சொன்னால் இப்படியா நினைப்பது அவ்வ்!
//பார்த்துக்கோங்கய்யா.. வவ்வால் அண்ணே சொல்ராரு நா புகைப்படத்துல இளமையா தெரியிறனாம்... அப்ப தொலைக்காட்சியில? //
தொலைக்காட்சி பார்த்து ஆண்டுகள் பலவாயிற்று அதனால் அறியவில்லை, மன்னிக்கவும்.
புகைப்படம் வச்சுப்பார்த்தாக்கூட, நீங்க மட்டும் பதிவர் சந்திப்பு போனப்போ,அப்படியே ஏவிஎம் ஸ்டுடியோ உள்ளே போயிருந்தீங்க,எந்திரன் பார்ட் டூ எடுக்கப்போறோம் நீங்க தான் அந்த எந்திரன்னு புக் செய்து இருப்பார்கள் :-))
//வவ்வால் அய்யா எனப்படும்
அசின் ரசிகருக்கு (அவ்வ்வ்...) நன்றி.//
ஹி..ஹி...ஹி!
//உங்க வலைப்பக்கம் வந்து பார்த்தேன்...
உங்க கேரக்டரப் புரிஞ்சிக்கவே முடியலயே... உலகப் பிரச்சினையிலிருந்து உள்ளுர் மணல் கொள்ளை வரைக்கும் எழுதுறீங்க.. நடுவுல நம்ம அசினைக் கொணாந்து விட்டுர்ரீங்க...?//
நம்ம பதிவையும் படிச்சு வேறப்பார்த்தீங்களா,ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நல்லமனசுங்கய்யா,நன்றி!
ஹி..ஹி தலைவலி,தலைசுற்றல்,வாந்தி,பேதி ,மயக்கம்னு எதுனா வந்திருந்தா அடியேன் பொறுப்பல்ல!
ஹி..ஹி என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்களே!
அழகா எழுதத்தான் முடியலை அழகா ஒரு படம் போட்டுக்கலாம்னு தான் மலபார் படம்..ஹி..ஹி!