எங்கள் மலேசியப் பயணமும், எனது பொதிகை நேர்காணலும்

எங்கள் மலேசியப் பயணமும்,
எனது பொதிகை நேர்காணலும்

நண்பர்களே, வணக்கம்.
எனது இரண்டு நிகழ்ச்சிகளை, 
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

(1)        02-12-2014 முதல் 19-12-2014 முடிய 
மலேசியா நாடு முழுவதும்
எங்கள் பட்டிமன்ற நிகழ்ச்சிகள்
நடைபெறவுள்ளன.

திண்டுக்கல் ஐ.லியோனி, 
திருமதி அமுதாலியோனி, 
மதுக்கூர் இராமலிங்கம், 
கோவை தனபால், சென்னை விஜயகுமார் இவர்களுடன் நானும் பேச இருக்கிறேன்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் கட்டண நிகழ்ச்சிகள்.

எனவே, அந்தந்த ஊரில் முற்பகல் வேளைகளில் நம் வலை-இலக்கிய நண்பர்களைச் சந்திக்க முடிந்தால் பெரிதும் மகிழ்வேன்.

நமது வலை நண்பர் திரு.ரூபன் அவர்களுடன், புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்டு, தற்போது மலேசியாவில் இருக்கும் எழுத்தாளர் திரு பீர்முகமது மற்றும் மலேசியத் தமிழிலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...
குறிப்பாக அங்குள்ள கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன். (1975முடிய தொகுக்கப்பட்ட “மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்“ நூலை அங்கு வாங்கவேண்டும்)

மடிக்கணினி இருப்பதால் அங்கிருந்துகொண்டே நம் நண்பர்களுடன் வலைவழித் தொடர்பு கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். பார்க்கலாம்.

(2)        சனிக்கிழமை தோறும் மாலை 5.30முதல் 6மணிவரை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இலக்கிய ஏடு“ பகுதியில் எனது நேர்காணல் வரவிருக்கிறது. பத்துநாள் முன்பு பதிவு செய்யப்பட்ட எனது நேர்காணல், வரும் டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை ஒன்றில் ஒளிபரப்பாகக்கூடும்.

அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே இதுபற்றிய நிகழ்ச்சி விளம்பரம், பொதிகையிலேயே வரும். நண்பர்கள், நமது வலை-இலக்கிய நட்பு-உறவினர் அனைவர்க்கும் தெரிவித்துப் பார்க்கச் சொல்லி, தங்கள் கருத்துகளை எனது மின்னஞ்சலுக்கோ நமது இந்த வலைப்பக்கப் பின்னூட்டத்திலோ தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை-அறிவியல் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரும் கவிஞரும் பேச்சாளருமான முனைவர் கண்ணதாசன் அவர்கள், எனது நேர்காணலை எடுத்திருக்கிறார்கள்.

இயலுமெனில் இந்த ஒளிபரப்பை நமது நண்பர் யாரேனும் யூ-ட்யூபில் ஏற்றி, அந்த இணைப்பை எனக்குத் தெரிவித்தால் நமது வலைப்பக்கத்தில் நன்றியுடன் பதிவேற்றுவேன் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

------------------------ 

திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றம் மற்றும் பாட்டுமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்கள் மற்றும் இடங்கள் வருமாறு.

02/12/14- TRICHY TO KUALA LUMPUR     
03/12/14 – PRESS CONF.
04/12/14 – SUNGAI PETANI
05/12/14 – BUTTERWORTH
06/12/14 – KULIM
07/12/14 – Alor Star
08/12/14 – PARIT BUNTAR
09/12/14 – REST AT PANGKOR ISLAND
10/12/14 – SHAH ALAM
11/12/14 – Batu caves
12/12/14 – KUALA SELANGOR
13/12/14 – KUALA LUMPUR
14/12/14 – KLANG
15/12/14 – SERDANG
16/12/14 – KUALA LUMPUR                       17/12/14 – BENTONG
18/12/14 – KULUANG
19/12/14 – JOHOR
20/12/14 RETURN TO CHENNAI

--------------------------------------- 

76 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வாருங்கள் _அங்குள்ள
    மற்ற பதிவர்களையும் கண்டு வாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இரண்டு நிகழ்வுகளுக்கும் முதலில் வாழ்த்துக்கள் ஐயா..
    மலேசியப் பயணம் இனிதே அமையட்டும்... பொதிகை தொலைக்காட்சிக்காக எங்கள் கல்லூரியின் ஆசிரியர் கண்ணதாசன் அவர்கள் தங்களை இலக்கிய ஏடு நிகழ்ச்சிக்காக எடுத்த பேட்டியை யூடிப்பில் போட்டால் பார்த்து விடுவேன். இங்கு தொலைக்காட்சி இல்லை ஐயா... யூடிப்பில் வரும் போது சொல்லுங்கள்...

    சகோதரர் ரூபன் மற்றும் நம் நண்பர்களைச் சந்தித்து வாருங்கள்...

    மலேசியாவில் இருந்தாலும் தொடர்பில் வாருங்கள்... எங்கள் படைப்புக்களுக்கு தங்களின் முத்தான கருத்துக்களைத் தாருங்கள்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!
      நண்பர் ரூபன் அவர்களைச் சந்திக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்.நிச்சயம் தங்களின் வரவை எதிர்பார்கிறேன்.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இந்த மூன்று பின்னூடடப் பதில்களையும் எனது மடிக்கணினியில் தடடச்சுச் செய்து பார்த்தேன்..
      நெடில் குறிலாகி.. நொந்து நூடுல்சாகி..
      இனி 20நாளில் என் பதிவு கிடக்கட்டும்.. நண்பர்களின் தளத்தில் பின்னூட்டங்கள் என்னாகப் போகுதோ!
      மைக்ரோ சாஃப்டா... காப்பாத்துப்பா...

      நீக்கு
  4. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்.. கிளப்புங்கள் பட்டையை
    அய்யா!
    அப்படியே பயண அனுபவங்களை
    தங்கள் நடையில் தொகுப்பாக வழங்கிட
    வேண்டுகிறே... (இல்லையில்லை) றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா.. கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்... கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனானாம், அங்க ரெண்டு கொடுமை டிங்கு டிங்குன்னு ஆடிச்சாம் (டிங்குக் காய்ச்சலா இருக்குமோ?) இங்க எழுத்துப்பிழையில்லாம எழுதறதப் பத்திப் பதிவு போட்ட கையோட..மடிக்கணினியக் கட்டிக்கிட்டு எப்படி மாரடிக்கப் போறனோ.. இதுல பயணக்கட்டுரையாய்யா.. பேதிமாத்திரை குடுக்கிறீங்களேய்யா.. (அட.. ஆமால்ல... மாத்திரை ரெண்டு செட் வாங்கிக்கணும்ல நன்றி அய்யா. கண்ணதாசன் ருசியா போனப்ப.. சுகர் மாத்திரை வாங்கிக்காம போயி அங்க கேட்டா கிடைக்கலியாம்.. என்ன இவ்வளவு முன்னேறுன நாடுன்னு சொல்றாங்க சுகருக்கு மாத்திரை இல்லயா? னு கேட்டப்ப இங்க சுகரே இல்லயேனு சொன்னாங்களாம்.. அப்படி மலேசியா இருக்காதுன்னு நம்புறேன்.. ) நன்றி நண்பரே

      நீக்கு
  6. மகிழ்ச்சியான செய்தி
    பயணங்கள் சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களது மலேசிய பயணக் கட்டுரைக்கு படங்கள் அதிகம் எடுக்கவும். நேரம் கிடைப்பின் அவசியம் பொதிகையில் தங்கள் நேர்காணலைக் காண்கிறேன்.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா... முந்திய பின்னூட்டத்திலேயே சொல்ட்டேன்... நீங்களுமா அய்யா..

      நீக்கு
  8. மகிழ்ச்சி. பயணம் சிறக்க வாழ்த்துகள். - எங்கள் மலேசியப் பயணமும், எனது பொதிகை நேர்காணலும் -
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Muthu Nilavan
    நன்றி திரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.. பொதிகை பார்த்துவிட்டு எனது நேர்காணல் நிகழ்வு சரியாக அமைந்தால் அதையும் யூ-ட்யூப் இணைப்போடு ஏற்ற க் கேட்டுக்கொள்கிறேன் அய்யா. அம்மாவுக்கும் என் வணக்கம்.

      நீக்கு
  9. நிகழ்ச்சி நிரலின் அருகே கொண்டாடும் அந்தக் குழந்தை மகிழ்ச்சியை எங்களுக்கும் பரப்புகிறது.

    பயணம் இனிதாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை ஆடும்போது பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதும், இதையே பெரியவர்கள் ஆடும்போது பார்க்க பயமாக இருப்பதும் இயல்பே. நன்றி அ்யயா.

      நீக்கு
  10. வாழ்த்துகள் அய்யா..! வென்று வாருங்கள்..!
    நீங்கள் செல்லும் திசையெல்லாம் வெல்லும் திசையாகட்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்களுக்கும் தங்கள் மகளுக்கும்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். (நம் இருவருக்குமே அனிமேஷன் டீச்சர் உங்க பொண்ணு தானே?) நன்றிங்க டீச்சர்‘! நன்றிங்க அய்யா.

      நீக்கு
  11. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தரின் இனிய வாழ்த்துக்கு என் இதயபூர்வ நன்றி.
      (எல்லாம் உங்கள் ஊர்க்காரருடன் போவதால்தான். இல்லன்னா நம்மளயெல்லாம் ஒரு ஆளா நினைச்சு ஆரு கூப்புடுறா?) வந்து ஜனவரியில ஒரு இணையப் பயிற்சி உண்டுங்கய்யா.

      நீக்கு
  12. வாழ்த்துக்கள் ஐயா! தங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஆஹா....அருமையான செய்தி அப்பா.. பத்திரமா போய்ட்டு வாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப்போடு! புள்ளைங்களத்தான் பெத்தவுங்க வாழ்த்தி அனுப்புவாங்க.. இங்க என் மக “பத்திரமாப் போயிட்டு வாங்கப்பா“ னு சொல்லுது! இலக்கிய மகளுக்கு இனிய நன்றிடா. (நான் போய் வருவதற்குள் நீ 4 பதிவாவது போட்டிருக்கணும் அதில் இரண்டேனும் கவிதை சரியா?)

      நீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    தங்களின் மலேசியப் பயணமும், பொதிகை நேர்காணலும்
    பற்றிய செய்தி அறிந்தது மகிழ்ச்சி!
    திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றம் மற்றும் பாட்டுமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறவும்... அதில் தாங்கள் நல்ல பல கருத்துகளை ... பகுத்தறிவுள்ள சிந்தனைகளை நாட்டுக்கு நல்கி... நயம்பட பேசிடவும்... வெற்றித் திருமகனாகிடவும்... விரும்புகின்றேன்.
    தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைந்து நம் நாடு திரும்பிட இதயம்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ்யயா, இதுவரை இருபது முறைகளுக்குமேல் வெளிநாடுகள் சென்றிருக்கிறேன். அத்தனையும் இலக்கிய நிகழ்ச்சிகள்தான். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ( இந்த நாடுகளுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் 4முறைகள்) மற்றும் சில அரபுநாடுகள், மஸ்கட், கத்தார், சிஷெல்ஸ், ஜாம்பியா..என.. ஆனால் நம் வலையுலகமறிய இப்போதுதான் இத்தனை வாழ்த்துகளுடன் செல்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  15. வாழ்த்துகள் மிகவும் மகிழ்வாக உள்ளது சகோ...உலகெங்கும் ஒலிக்கட்டும் உங்களின் குரல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. (ஏற்கெனவே ஒளிச்சது -சாரி- ஒலிச்சதுதான்.
      இப்ப ஒளி-ஒலிக்கப்போகுது!)

      நீக்கு
  16. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. (இன்று மாலை உஙகள் ஊருக்கு அறிஞர் பொ.வேல்சாமி வருகிறார் நான்தான் போக முடியவில்லை. பேசிக்கொண்டிருந்துவிட்டு புதுக்கோட்டையிலிருந்து அனுப்பி வைத்துவிட்டுத்தான் வருகிறேன்-ராஜ.முருகுபாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்தநிகழ்ச்சி வாய்ப்பிருந்தால் பாருங்கள்)

      நீக்கு
    2. நீங்கள் எங்கள் ஊருக்கு அவசியம் வர வேண்டும் அய்யா.

      நீக்கு
  17. பயணம் சிறக்கட்டும் ஐயா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அய்யா
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் பயணம் மலேஷியா விழா ஆகிறது. நம்முடைய நண்பர்களுடன் சந்திக்க மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையில் உங்கள் வழியாக அறிமுகமான நண்பர் ரூபன் அவர்களை நேரில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் பாண்டியன். தங்கள் மகிழ்ச்சியைச் சுமந்து செ(ா)ல்வேன். நன்றி

      நீக்கு
  19. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  20. அண்ணாவணக்கம்,அலைகடலும்தாண்டிதங்களின்பெருமைகொடிகட்டிப்பறக்கவேண்டும் அண்ணா,வாழ்த்துக்கள்.அந்தபொம்மைப்படம் மகிழ்சியானதங்களின்பயணத்தைஎங்களுக்குகாட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் எனில் பெரியவர்களும் குழந்தைகள் ஆகிவிடுகிறோம் என்பது உண்மை தானேம்மா? வாழ்த்துக்கு நன்றி சகோதரி

      நீக்கு
  21. மிக்க மகிழ்ச்சி ஐயா!

    நலமோடு எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  22. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா..
    அடுத்த வீதிக் கூட்டத்தில் சந்திப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது.. (மகியும் நிறையும் செய்த சேட்டைகள் எப்போதும் என் கண்ணுக்குள் இருக்கின்றன..)

      நீக்கு
  23. நாம் வலையில் தான் அதிகம் பேசிக்கொள்வோம் என்றாலும் இப்போ வெளியூர் போறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு அண்ணா! ரெண்டு மாதம்.ஹ்ம்ம்.ஓகே:) நல்ல படியா போய்டுவாங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டா. (அதுக்காக வெறும் இருபது நாள் போய்வரப் போகும் என்னை இரண்டுமாசம் துரத்தப்பார்ப்பது ரொம்ப அநியாயம் பா)

      நீக்கு
    2. ஹா.....ஹ.....ஹா...ஒவ்வொரு பத்து நாளும் ஒரு மாதமாய் தெரியுதண்ணா:((( (எப்படி சமாளிச்சோம்:))) நிஜமே அப்பிடி தான் இருக்கு:(((

      நீக்கு
  24. பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள் ஐயா. பொதிகை நிகழ்ச்சியை கட்டாயம் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி அய்யா. த.ம.வாக்குகளை நம் நண்பர்கள் வாரி வழங்கும்பொழுதெல்லாம் அதற்கான நன்றியை உங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். (இந்த யூட்யூப் சமாச்சாரம் தான் இன்னும் பிடிபடமாட்டேன் என்கிறது . நீங்கள் அந்தப் பொதிகை நிகழ்வைச் சுட்டு, என் வலைப்பதிவில் ஏற்ற உங்களுக்கு நேரம் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன் அய்யா. நேரம் கிடைத்தால்தான்.. அலுவலராகிய உங்களின் வேலைப் பளுவை அறிவேன்.. இயலவிலலையெனில் வருந்தமாட்டேன்)

      நீக்கு
  25. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, தங்களின் இனிய வாழ்த்து எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றிங்க அய்யா.

      நீக்கு
  26. மலேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் இரண்டு நிகழ்வுகளுக்கும்.
    பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. இரு நிகழ்வுகளும் சிறப்பாக அமைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பொதிகையில் தங்களது நிகழ்ச்சியினைக் காண்பேன். வெளிநாட்டு பட்டி மன்ற மற்றும் பாட்டு மன்ற நிகழ்வுகளில் தாங்கள் வழக்கம்போல் தங்கள் பதிவைச் சிறப்பாகப் பதிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அ்யயா. தொடர்ந்து உங்களைப்போல பயணம் செய்ய என்னால் முடியாது அய்யா. தாங்கள் தொடர்ந்து எங்காவது போய்க்கொண்டே இருக்கிறீர்களே! பாராட்டுக்குரியது அய்யா.

      நீக்கு
  29. பயணம் சிறக்க எனது வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் முத்து நிலவன் ஐயா !

    என் அக்கினிச் சுவடுகள் வலைப்பூவில் தாங்கள் இட்ட கருத்துக் கண்டு மிகமகிழ்ந்தேன் நன்றி !

    தங்கள் மலேசிய பயணமும் பட்டி மன்றமும் சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் நான் இருக்கும் இடத்தில் பொதிகை தொலைக்காட்சி பார்க்க முடியாவிட்டாலும் கணனியில் பார்த்தாவது கருத்திடுகிறேன் நன்றி !

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. அன்பின் முத்து நிலவன்

    இரு நிகழ்வுகளும் சிறப்புடன் வெற்றி கரமாக நடை பெற நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  33. மகிழ்ச்சி ஐயா..பயணமும் பாட்டுமன்றமும் சிறக்க அன்பான வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  34. தங்கள் பயணம் சிறக்கவும் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  35. சென்று, நல்லவிதமாக நிகழ்ச்சிகள் செய்து,
    மகிழ்வுடன் திரும்பி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  36. அண்ணா இனிதாக தங்கள் பயணம் அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள் சார்.. அப்படியே சிங்கப்பூருக்கும் ஒரு ட்ரிப் அடிக்கலாமே..

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..நீங்கள் பொம்மையைக் குதிக்க வைத்து ஆடியிருப்பது போலவே உங்கள் நட்பாலும் அன்பாலும் எங்கள் மனமும் துள்ளிக் குதிக்கிறது. சென்று....வென்று......வாருங்கள்....

    பதிலளிநீக்கு
  39. அன்புள்ள ஐயா.

    நிறைய மகிழ்ச்சிகள். வாழ்த்துக்கள்.

    மலேசியத் தமிழ்க்கவிதை களஞ்சியத்தை ஒருவாரத்திற்கு முன்பிருந்துதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருமையான தொகுப்பு அது. திருமிகு நெடுமாறன் அவர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்.

    சனவரி முதல் வாரத்தில் மற்றும் கடைசிவாரத்தில் இருவாரங்களில் இருவேறு நிகழ்வுகளில் மலேசியப் பயணம் முதன்முதலாக நானும் மேற்கொள்ளவிருக்கிறேன்.

    அவசியம் உங்களின் நிகழ்வை பார்த்து எழுதுகிறேன்.

    மணம் வீசும் இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு