“தமிழ்வெளி“க்கு என்னாச்சு?

நமது நன்றிக்குரிய 'தமிழ்வெளி' திரட்டி இரண்டுநாளாகக் கிடைக்கவில்லை. எனக்குமட்டும்தானா என்ற சந்தேகம் வந்தது. சில வலைநண்பர்களைக் கேட்டேன். அவர்களுக்கும் கிடைக்கவில்லை என்றே சொன்னார்கள். 

என்ன ஆச்சு தமிழ்வெளிக்கு?
தமிழ்மணம், தமிழ்வெளி இரண்டு திரட்டிகளும்தான் நமது தமிழ்வலைப் பதிவுகளை உலகமெங்கும் உள்ள தமிழார்வலர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் திரட்டிகள் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
இப்போது தமிழ்வெளி கிடைக்கவில்லை எனில் கவலைப்படாமல் இருக்க முடியவில்லையே?

கடந்த சில வாரங்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் –
“தமிழ்வெளித் திரட்டியில் தவறு நடக்கலாமா?என்றொரு பதிவை எழுதியிருந்தேன்.– http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post.html

ஆபாசப் பதிவுகள் பலவற்றை “வாசகர் பரிந்துரைத்தவை“ என்னும் தலைப்பிலேயே வெளியிடுவதைக் கண்டித்து அப்படித் தமிழ்வெளி வெளியிடுவதை நிறுத்தவேண்டுமென்றும், “பரிந்துரைத்த பதிவர்களின் பெயர்களை வெளியிடுவதாகச் சொன்னால், தானே பரிந்துரை நின்றுவிடும்“ என்றும் எழுதியிருந்தேன். 
அதன் பின்னரும் அப்படியான தளங்கள் வருவது தொடரவே செய்தது. ஆனால் குறைந்திருந்தது

ஆனால் கடந்த இரண்டுநாளாகத் “தமிழ்வெளி“ தளமே கிடைக்கவில்லை! என்ன ஆயிற்று தெரியவில்லையே?
தெரிந்தவர்கள் – தொடர்புடையவர்கள் தெரிவித்தால் மகிழ்வேன். அல்லது மீண்டும் கிடைத்தால் சரிதான்.

ஒருவேளை பராமரிப்புக்காக (நம்ம மின்துறை அப்பப்ப செய்ற மாதிரி) இடைவெளி விட்டிருந்தால் அதை அவர்களின் தளத்திலேயே தெரிவித்திருப்பார்கள் அல்லவா? எனில், ஏதும் தொழில்நுட்பச் சிக்கலா?
எவ்வாறாயினும், தமிழ்வெளி மீண்டும் வந்து தமிழ் வலைப்பதிவர் எழுத்துகளை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடரவேண்டும் என்பதே என்போலும் –தொழில்நுட்பம் அறியாத- தமிழ் எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பு.

(அதுக்குள்ள “இந்த முத்துநிலவன்தான் ஏதோ “அறம்“ பாடிட்டான், அதுனாலதான் தமிழ்வெளிக்கு ஏதோ ஆயிப்போச்சு“னு இல்லாத பொல்லாததை எல்லாம் கிளப்பிவிடுற ஆளுகள நம்பாதீங்க... நா அப்படியெல்லாம் அறம்பாடுற ஆள்கிடையாதுங்க. நா ரொம்ப நல்லவனுங்கோ. அப்படியே நாம அறம் பாடினாலும் அது பலிக்கிற அளவுக்கு நாம பெரும் புலவரா என்ன? புளுகர்னுதானே சொல்றாய்ங்க?1?)              ---------------------   

16 கருத்துகள்:

  1. itharkku munpum oru oru varushathukku munpu tamilveli kittathatta oru oru varathirkku velai seyamal irunthichu sir.
    athan piraku mindum iyanga thuvangiyathu.

    athu polataan sikkiram mindum palaya padi tamilveli palaya nilaikku thirumpum ena nampukiren sir.

    பதிலளிநீக்கு
  2. அய்யா,
    தமிழ்வெளி இருக்கட்டும்.
    இந்த “அறம்பாடுதல் “ என்ற விஷயத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?
    அதற்குள்ள இலக்கணப்படிப் பாடினால் பாடப்பட்டவர் கொடூரமாக அழிவதைப பார்த்திருக்கிறீர்களா
    “ வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    மறிகடல் அடைந்ததுன் கீர்த்தி“
    என்பது உண்மையா பொய்யா?
    நான் பகுத்தறிவோடு சிந்திக்கிறவன்தான் அய்யா!
    ஆனால் இந்த அறம்பாடலை முயன்றிருக்கிறேன்.
    சரியோ தவறோ என அறியாமல் பரிசோதித்துப் பார்க்க மேற்கொண்ட முயற்சி!
    மூன்று முறை...மூவரின் மேல்..
    மூவரும் இன்று இல்லை.

    காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாகக் கூட இது இருக்கலாம்.

    நானும் அப்படிப் பலமுறை நினைத்திருக்கிறேன்.

    ஆனால் உதிர்ந்த மூன்றில் ஒன்று கூடப்பழங்களாய் இல்லை.

    கற்றதைப் பயன்படுத்திப் பார்ப்பது மட்டுமல்ல .
    நானவர்கள் மேல் கொண்ட வெறுப்பும் அதற்குக் காரணமாயிருந்திருக்கக் கூடும்.
    அதன் பின் இதுமாதிரிப் பரிசோதனைகளில் இறங்கியதில்லை.
    மீண்டும் சோதித்துப் பார்க்கவும் மனம் இடம் தரவில்லை.
    விளக்க வேண்டுகிறேன்.
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @விஜூ ....நான் அறம் பாடியதில்லை. வாழ்த்துக் கவிதை நிறைய எழுதி இருக்கிறேன். திருமணம் , மணிவிழா போன்றவற்றிற்கு.
      நான் ஆன்மீகக் கவிதைகள் எழுதும் போது அமங்கலமான சொற்கள் இடம் பெறலாகாது என்பார் என் சித்தப்பா. ஆனால் உணர்ச்சி வேகத்தில் வந்து விழும் வார்த்தைகளை நான் மாற்றுவதில்லை.
      என்னை ஏமாற்றிய ஒரு சிலரை , அறம் பாடி பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் மனம் ஒப்பவில்லை.

      நீக்கு
    2. அம்மாடி!! இனி விஜூ அண்ணாகிட்ட careful லா இருந்துகோங்க தமிழ் மக்களே!! (விஜூ அண்ணா எனக்கும் ஒருத்தர் மேல் அறம் பாட வேண்டியிருக்கு பக்சே!!! எனக்கு இலக்கணம் தெரியாதே:(( கொஞ்சம் சொல்லிதாங்களேன்????

      நீக்கு
    3. ஆமாம் அண்ணா!
      எழுத்தானந்தமும் சொல்லானந்தமும் சேர, ஆனந்தப்பையுளாய் “ குறித்த யாப்பில் “ சேர்த்த மூன்று பதிகங்கள் அவை!
      எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
      படிப்தெலலாவற்றையும் நம்பவா முடியும்!
      ஆனால்
      நடந்தது கண்டு நம்மால்தானோ என்று உள்குமையும் குற்ற உணர்ச்சி......
      இல்லை அது ஏதோ அவர்களுக்கு தானே நடந்தது என்னும் சமாதானம்...
      இரண்டிற்கும் நடுவே சிக்கித் தூக்கம் தொலைத்த எத்தனையோ இரவுகள்..!
      நானே நம்பாத போது யார் நம்புவார்கள்?
      விளையாட்டாய்க் கூட ஒருவன் அழியவேண்டும் என்ற எண்ணம் படைப்பாளிக்கு வரக்கூடாது என்பது அதன் மூலம் நான் கற்றது.
      உங்களுக்கு அந்தப் பக்குவம் அருளப்பெற்றது.
      சகோதரி,
      எதுவும் கதையல்ல நிஜமே!

      நீக்கு
    4. இல்லையண்ணா, என்னால் ராஜபக்சே மட்டும் எத்தனை முயன்றும் மன்னிக்கவே முடியவில்லை:(((((

      நீக்கு
  3. தமிழ் வெளி புத்துணர்வோடு தன் பணியினைத் தொடங்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. கண்ணதாசன் ஒருமுறை பஞ்சு வின் வீட்டுக் குழந்தையை எழுப்பமுயன்ற போது விளையாட்டாய் "அவனை எழுப்பாதே! அப்படி தூங்கட்டும்" என்றொரு பாடல் பாடியதாகவும், சற்று நேரத்தில் எல்லாம் அந்த குழந்தை இறந்துவிட்டாதாகவும் ஏதோ பட்டிமன்றத்தில் கேட்ட நினவு! பின் அவர் அறம் பாடிவிட்டேனோ நான் என வருந்தினாரமே! ஆனால் அண்ணனுக்கு அறம் பாட வராது. ஏனெனில் அன்பே அறம் எனும் குளிர் நிலவல்லவா??(ஹச்....ஹச்...யாருப்பா தும்மிகாட்டுவது. பேசவிடமாட்டாங்களே:)) எனக்கும் ரெண்டு நாள் இந்த பிரச்சனை இருந்தது. பல நாள் தமிழ்வெளியில் என்னை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நானும் அதுபோலன்னு நினைச்சுட்டேன்:(((

    பதிலளிநீக்கு
  5. உங்களின் பழைய பதிவில் ,சத்தியமாக நீங்க 'அறம்' பாடியதால் வந்த வினை என்ற அர்த்தத்தில் நான் சொல்லலே !:) நானும் தமிழ்வெளியை இழந்த சோகத்தைத்தான் பகிர்ந்து கொண்டேன் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பும் தமிழ்வெளி இதேபோல காணாமல் போய்விட்டது. அப்போதும் சரி, இப்போதும் சரி – என்ன பிரச்சினை என்று மட்டும் தெரியவில்லை. அவர்களும் சொல்லவில்லை.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  7. குருவி உட்கார இளநீர் விழுந்த கதைபோல் ஆகிவிட்டதோ....

    பதிலளிநீக்கு
  8. தமிழ்வெளி மட்டுமல்ல தமிழ்10 ஐயும் ரெண்டு நாளாகக் காணோம்... விரைவில் வரும் என்று நம்புவோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. நானும் தேடித் தேடிப் பார்தேன் காணவில்லை என் இணைய தளம் தான் பிரச்சினை என்று நினைத்தேன் .

    பதிலளிநீக்கு