அவன் சரி, இவன் சரி, “உவன்“ அப்டின்னா?



எட்டாம்ப்பு படிச்சப்ப சுட்டெழுத்து பத்திப் படிச்சிருப்பீங்க...
 “லேய்.. அவ்வைக்கிழவி சுட்டபழமா? சுடாத பழமானு கேட்டாள்ல..? இதானாடா அது? சுட்ட எழுத்து?“னு பக்கத்துல இருந்த வாலு ஒன்னு கேட்டதும் நினைவில் இருக்குமே?

அதுதான் சுட்டெழுத்து. சுட்டஎழுத்து இல்லிங்க, சுட்டெழுத்து.. சுட்டு எழுத்து. 
ஒன்றை, சுட்டிக்காட்ட உதவும் எழுத்து!


இது மூனு வகைன்னும் நினைவிருக்கும்

அ- சேய்மைச் சுட்டு

(அந்தப்பக்கம் எட்டி இருக்குறது)

அந்தா பாரு..

அப்பிடினு காட்டுறோம்ல..

அதுதான் அவன்தான் (படர்க்கை) 

இ- அண்மைச் சுட்டு

(இந்தப்பக்கம் கிட்டக்க இருக்குறது)

இங்க பாரு

இப்பிடினு சொல்றம்ல..

இதுதான் இவன்.


சரீ...

அது என்ன உ? உந்தப் பக்கம்? உவன்?

உ என்பது சுட்டெழுத்தில் இருந்தது, இப்பஇல்ல. அதாவது வழக்கில் இல்ல.

(இலக்கணம்ங்கிறது பழைய தமிழின் நிலை. வழக்குத்தான் இன்றைய தமிழ். அதுக்காக இலக்கணம் வேணாம்னு சொல்றதும் தப்பு, இலக்கணத்தப் புடுச்சிக்கிட்டே வழக்க மறந்து நிக்கிறதும் தப்புங்க. ரெண்டுல எது ரொம்ப முக்கியம்னு கேட்டா நா வழக்கு தான்பேன்)

சரி அத உடுங்க..


சுட்டெழுத்துல உ என்கிற எழுத்துப்பத்தி..

நினைவிருக்கிறவங்க ஓடிப்போய்டுங்க.

பச்சப் புள்ளைங்க தொடந்து வாங்க. என்ன?



அட அது 
ஒன்னுமில்லங்க..
அந்தப் பக்கம்,
இந்தப் பக்கம்,
உந்தப் பக்கம்.
அது என்ன
உந்தப் பக்கம்னா?

எட்டி இருக்கிறவன முகத்தைப் பாக்கமுடியல.
அது சரிதான். இவன் கிட்ட இருந்தும் முகத்தைப் பாக்க முடியலன்னா?                  
அதுதான் அதேதான்.
கிட்டயே இருந்தும் முகம்காட்டாம முதுகு காட்டி நிக்கிறவன உப்பக்கம் நிக்கிறான்னு சொல்ற வழக்கு முந்தி இருந்துச்சு.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது உஞற்று பவர்“ (குறள்-620)
கடுமையான இடைவிடா முயற்சி செய்பவர் விதியையும் புறமுதுகு காணலாம், அதாவது ஓடஓட விரட்டி வெல்லலாம்னு அர்த்தம்.

இதில் மகிழ்ச்சி கலந்த வருத்தம் என்னன்னா..
இன்னமும் ஈழத்தமிழரிடையே இந்த எழுத்து வழக்கில் இருப்பதுதான்... 

இன்னும் விரிவாகப் பார்க்க -
உவன்னு போட்டு
http://ta.wiktionary.org/ பாருங்க..
படங்களுக்கு நன்றி - தினமணி.காம். மற்றும்
நம் நண்பர் -http://yarlpavanan.wordpress.com/
--------------------------------- 
நாம் தொலைத்துவிட்ட விளையாட்டுகளை நினைவூட்டி ரேவதி எழுதிய பதிவு எனக்கு இதை யோசிக்க வைத்தது. பார்க்க -http://tamizhal.blogspot.in/2014/11/blog-post.html
----------------------------------------------------------------------------------- 

41 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம்.எழுத்துக்களின் அளவை கொஞ்சம் சுருக்கலாமா,பெரிய மனது பண்ணி/

    பதிலளிநீக்கு
  2. அழகான அருமையான விளக்கப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, நன்றி. ஆமா..வழிப்போக்கரா ஒரு பெருந்தோட்டத்தையே வச்சிருக்கவரு, தனிமரம் னு பேர்வச்சிருக்கீயளே இது நாயமாரே?

      நீக்கு
  3. கட்டத்திலிருக்கும் தமிழ்க் கவிதை அருமையாய் இருக்கிறது. அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு சரி, அந்த இடத்தில் இல்லாதிருப்பவனைப் பற்றிச் சொல்லத்தான் உவன் உபயோகப் படும் என்று சொல்லலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, அந்த இடத்தில் இல்லாதிருப்பவன் அவன் (படர்க்கை) ஆகிவிடுவான்.. அருகில் இருப்பவன் இவன். ஆனால் அருகில் இருந்தும் நம்மைப் பார்க்காமல் முகம்காட்டாமல் (அ) முதுகுகாட்டி இருப்பவன் உவன்... உங்கள் குழுவின் “பாஸிடிவ்“ செய்திகள் எனக்கு மிகவும் பிடித்த கோணம். உங்கள் குழுவே ஒரு பாஸிடிவ் குழுதான் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. தமிழர்களிடம் கட்டம் கடடிச் சொன்னவர் திரு யாழ்ப்பாணர் அவர்களுக்கே உங்கள் பாராட்டை ஃபார்வேர்டு செய்கிறேன்.ஆனால், உங்களைப் பின்பற்றுவோரை “ரசிகர்“என்று அழைப்பது நன்றாக இல்லையே அ்யயா. வெறும் பார்வையாளரை மட்டுமே் நீங்கள் கொண்டிருக்கவில்லை என்பது உங்களின் பின்னூட்ட வகைகளைப் பார்க்கும் யாருக்கும் தெரியும். அன்புகூர்ந்து அதை மாற்றுங்களேன்?

      நீக்கு
  4. எங்கே இருந்து கரு கிடைத்தது என சொல்லும் உங்க நேர்மைக்கு ஒரு ராயல் சல்யூட்:)) so இந்த அப்படின்னா பின் பக்கம்னு அர்த்தம், அதானே அண்ணா! நான் போய் wiki யை பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்கூம்.. தப்பு. கைய நீட்டு.. மகி அந்தக் குச்சிய எடுத்தாடா..
      உந்த பத்திச் சொல்லவந்த இடத்துல திரும்பவும் “இந்த அப்படி ன்னா பின்பக்கம்தானே?” னு கேட்டா பிரம்புதான். (கடிதோச்சி மெல்ல எறினு எங்க தாத்தன் சொல்லியிருக்காரு)

      நீக்கு
    2. ஹா....ஹா....உந்த என தட்டச்சு செய்ய நினைத்தேன். ஆன தப்பச்சு செய்திருக்கிறேன்:(((

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    அருமையான இலக்கண விளக்கம் உயர் தரம்கற்கும் போது இலக்கணம் படித்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி சரீ... அடுத்தவாரம் நேர்ல பாக்கும்போது இதுக்காக பெரிய பரிசெல்லாம் வாங்கிட்டு வந்துடாதீங்க (இப்படி சொன்னாலும் நீங்க என்ன கேக்கவா போறீங்க?)

      நீக்கு
  6. பதில்கள்
    1. அய்யா, தங்களின் வழியாக உறரணி அய்யாவின் தொடர்பு கிடைத்தது, மிக்க நன்றி அய்யா. (அடுத்த முறை தஞ்சை வரும்பொழுது அய்யாவை வீட்டில் போய் சந்திப்போம்)

      நீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    தங்களின் எளிமைத் தமிழ் இலக்கணம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. ‘அவன் சரி, இவன் சரி, “உவன்“ அப்டின்னா?’ சுட்டெழுத்து பற்றி சுட்டிக் காட்டியது ... வழக்கில் இல்லை என்றாலும்...இன்னமும் ஈழத்தமிழரிடையே இந்த எழுத்து வழக்கில் இருப்பதுதான் என்பதை அறிந்து கொண்டேன்.

    தாங்கள் சொன்னதால் முதன்முதலாக ‘விக்சனரி’யில் ‘உவன்’ பார்த்து உவந்தேன்.

    தொடரட்டும்.... தங்களின் இலக்கணப்பணி!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் பார்த்த எங்களை உந்தப்பக்கம் திருப்பிவிட்ட உங்களுக்கு நன்றி. நமது இலக்கியங்களில் இவ்வாறான சொற்கள் இருக்கும்போது தமிழில் இல்லை என்று ஏன் கூறிக்கொள்கிறோம், எங்கே இடைவெளி உள்ளது என்றே புரியவில்லை. தங்களைப் போன்றோரின் பதிவுகளைப் படிக்கும்போது இவ்வாறான சொற்கள் பயன்பாடு குறித்து அறியமுடிகிறது. சுட்டியுள்ள இருவர் பதிகளையும் கண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா சொல்லாராய்ச்சி அறிஞர் அவர்களே! தங்களின் ஆங்கிலச் சொல் ஆற்றல் பற்றி, தங்களின் தமிழ் -இந்து கட்டுரைகளில் பார்த்திருக்கிறேன். தங்களின் பாராட்டுக்கு மிகுந்த நன்றி அய்யா.

      நீக்கு
  9. கற்க மறந்தவைகளில் ஒன்றை வலைப்பூ வழி நினைவூட்டியதற்கு நன்றி அய்யா. இன்னும் உங்கள் பதிவில் கற்க ஆவலாக உள்ளேன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்துவிடுவது இயல்பு, மறக்காமல் செய்வதுதானே “படைப்பூ“க்களின் பழக்கம்? நன்றி அய்யா.

      நீக்கு
  10. "உப்பக்கம் காண்பர்" என்றவுடன் தான் ஞாபகம் வந்தது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திச்சா வந்திச்சா?
      ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!
      (நீங்க மட்டும் சினிமாப் பாட்டுலேயே பதில் சொல்லலாமா?)

      நீக்கு
  11. உந்தப்பக்கம் புதுமையாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமையெல்லாம் இல்ல கில்லர்ஜி, ஏற்கெனவே புழக்கத்தில இல்லாம அடஞ்சு கிடந்ததா? எடுத்து ரின்போட்டு விளக்கியதில் கொஞ்சம் பளிச்னு தெரியிது.. அவ்ளோதான். நன்றி நண்பரே

      நீக்கு
  12. வணக்கம் அப்பா..மகிழ்ச்சியாக இருக்கிறது தங்கள் பதிவில் என் பெயரைச் சொல்லியிருப்பது..(சுண்டக்காய்ச்சிய பாலில் ஒரு துளி தேன் மாதிரி)))்்்)....(சும்மா வெளாட்டுக்கு சொன்னேன் அப்பா கோச்சிக்காதீங்க) நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா எட்டடி பாயந்தால் மகள் பதினாறடி பாயணும்ல?
      நீயே மகள்னு சொ்ல்லிட்டே.. அப்பறம் பதினாறடி பாயணும்லடா?
      நா பாத்து ரசிக்கிற மாதிரி தேன்மாரி பொழிய எழுதிக்கிட்டே இரு!

      நீக்கு
  13. சுட்டெழுத்து விளக்கம் மிகச்சிறப்பு! எளிமையாக விளக்கியமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.. அப்பப்ப இதுமாதிரி எதையாவது எழுத, உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம்தான் காரணமாகும்

      நீக்கு
  14. ரா.பி.சேதுப்பிளையின் “தமிழ் இன்பம்” படித்தது போன்ற உணர்வைத் தந்தது இந்த கட்டுரை. இன்னும் சொல்லாராய்ச்சி, வலைப்பதிவர்கள் தமிழில் செய்யும் தவறுகள் என்று சுட்டிக் காட்டி கட்டுரைகள் தரவும்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா.. ரா.பி.சே.மாதிரியா..? அவர் பேரறிஞர் அய்யா. நானும் கற்றுக்கொண்டே எழுதும் ஒரு மாணவன்தான்.. தமிழ்க்கடலில் முத்தெடுக்க மூழ்கும்போது கொஞ்சம் பயத்துடன்தான்...

      நீக்கு
  15. வழக்கில் இல்லை என்கிற உகரச்சுட்டை மிக அழகாகச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இந்த பச்சப்புள்ளைய மனசுல வச்சு தொடர்ந்து சொல்லித்தாருங்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.. பச்சப் புள்ளைய விட்டுட்டு இருபதுநாள் மலேசியா போறேனே? சரி.. என்ன பிஸ்கட் வேணும்னு மின்னஞ்சல் பண்ணினா, மறக்காம அண்ணன் வாங்கிட்டு வருவனாம் சரியா?

      நீக்கு
  16. அவன் இவன் என்றவுடன் என்னது நம் ஐயா படம் பற்றி எழுதியிருக்கின்றாரா என்ற ஆச்சரியத்தில் வந்தால்...ஆஹா உவன், சுட்டெழுத்து என்று இலக்கணம். அருமை ஐயா! அது சரி இன்று என்ன நீங்கள் சுட்ட எழுத்து.....விஜு ஆசான் சுட்ட பதிவு பற்றி கட்டுரை, இளங்கோ ஐயா அவர்கள் சுட்ட பதிவு வேண்டுமா என்று....எல்லோருஒரே சுட்ட.....பதிவுகள்!!ஹஹ

    தமிழ் மொழி மிகவும் அருமை.....புதிதாக இருக்கின்றது...தலைநிமிர்ந்து சொல்லுவோம் "எங்கள் மொழி தமிழ் என்று"

    மிகவும் பயனுள்ள பதிவு! ஐயா! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சுடச்சுட சூடான பதிவா அமைஞ்சது ஓர் ஒற்றுமைதான் இல்ல? நீங்கள் சொன்னதும் தான் நானும் அதை கவனித்தேன். தமிழ்ப்பட ஷூட்டிங்குல கூட சுட்டபழம் பத்தி சூடா வழக்குமன்றம் வரை விவாதம் நடக்குதே அய்யா?

      நீக்கு
  17. பழைய தமிழ் வடிவங்களை எவ்வாறு இருந்தன எனச் சுட்டியும் வழக்கில் இங்கில்லா அது உங்கிருக்கிது எனக் காட்டியும் அதன் பயனையும் காட்டி விளக்கிய தங்களின் பதிவு அருமை அய்யா!
    நன்றி !
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கிருந்து வந்த பதிவும் சுடசசுட நன்றாக இருந்தது விஜூ.. இப்படி ஊடகங்களில் வரும் தகவல்களை உங்கள் பாணியில் தரஆரம்பித்தால், அது மிகச்சிறப்பாகக் கவனிக்கப்படும் இரண்டு பதிவுக்கும் சேர்த்து எனது நன்றி நண்ப.

      நீக்கு
  18. எடுத்துக் காட்டு குறள் மனதிலேயே தங்கிவிட்டது அய்யா.அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  19. நல்ல விளக்கம் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே பலருக்கும் தெரியாது சகோ...

    பதிலளிநீக்கு
  20. நல்லதோர் விளக்கம். குறள் தெரிந்தாலும் இப்போது தான் உப்பக்கம் என்பதன் அர்த்தம் விளங்கியது!

    தொடரட்டும் வகுப்புகள்.. தொடர்ந்து வருவேன்.

    பதிலளிநீக்கு