இதைப் பாருங்க கலங்க அடிக்கிறாங்க சகோதரி..

இதைப் பாருங்க
கலங்க அடிக்கிறாங்க
என் சகோதரி..

முதல் பதிலிலேயே நான் அம்பேல்...

ஒப்பனையில்லாத
உயர்ந்த கருத்துகள்.
நன்றி சகோதரி.

நிறையப் பேரு பாக்கணும்கிறதுக்காக
திருமதி ஜெயலட்சுமி அவர்களின் பதிவை
இங்கு மீளப் பதிவிடுகிறேன்.
அன்பு கூர்ந்து பார்க்க..
இணைப்பிற்குச் செல்ல...

http://jayalakshmiaeo.blogspot.in/2014/11/7.html#comment-form

21 கருத்துகள்:

 1. ஐ!! அம்மா பதிவு!! அட எங்க அம்மாவை சொன்னேன் அண்ணா!

  பதிலளிநீக்கு
 2. வழக்கமாக நான் எந்த தளம் சென்றாலும் கலாய்த்து கருத்து இடுவது வழக்கம். இந்த பதிவில் முதல் பதிலை படித்தவுடன் மனம் நெகிழ்ந்துவிட்டது.. அவர் சொன்ன பதிலை கலாய்த்தால் பதிவின் சிறப்பு திசை திரும்பிடும் அதனால் கலாய்க்காமல் இருந்துவிட்டேன்
  பதிவர் திருவிழா நடத்தினால் இந்த மாதிரி எழுத்துகளை பாராட்டி கண்டிப்பாக நீங்க விருது வழங்கனும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரலாம்... ஆனா நடத்தப்போறதே அவுங்களை உள்ளிட்ட நாங்க என்பதால் இந்த முறை கலாய்க்காமல் விட்டு(ம்) நெகிழவைத்த மதுரைத்தமிழனுக்குப் பரிசு கொடுக்கலாம்னு அவுங்க சொல்றாங்க... இருந்தாலும் நடத்துறப்ப மக்கள் கிட்ட கேட்டுத்தானே முடிவு செய்வோம்? நன்றி நண்பா..

   நீக்கு
 3. கனவில் வந்த காந்தியிடம் கேட்ட கேள்விகளுக்கு ....

  இன்றைக்கு... அவசியம் தேவையான...சிந்திக்கக்கூடிய... பதிலைத் தந்தார்.

  அன்புச் சகோதரிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. உதவிகளை இங்கும் கண்டேள.
   ஊக்கச் சொல் அங்கும் கண்டென்
   உங்கள் தளத்தில் எதுவும் காணேன்? ஏன் அய்யா?

   நீக்கு
 5. பகிர்வுக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா
  அருகிலிருப்பவரிடம் அமர்ந்து பேசுவது போலவே பதிலளித்திருக்கிறார் அன்பு சகோதரியார். எதார்த்தமும் எளிமையும் அவரது பலம் என்று எண்ணுகிறேன். நல்லவர்களின் நட்பு நாளும் வளரட்டும். இணையத்தின் வழியே புதுகை மாநகரமே கட்டுண்டு தமிழுக்கு புகழ் சேர்க்கட்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த “நன்றீங்க அய்யா“ வைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு?
   வந்தவுடனே சிக்ஸர் அடிச்சிட்டீங்களேய்யா? தொடர வேண்டும் நன்றி பாண்டியன்.

   நீக்கு
 7. தங்கள் மூலம் அறிந்து சென்றேன் ஐயா...
  சகோதரியின் முதல் பதிலில் மனசு கலங்கி விட்டது...
  மனதில் கனத்துடன் வாசித்தேன்... தொடர்கிறேன் என இணைந்து வந்திருக்கிறேன்...
  நல்ல பகிவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அசராமல் தொடர்ந்து எழுதும் உங்களின் விடாமுயற்சி எனக்கு “பொட்டில்“அறைகிறது. நினைக்கும் அளவிற்கு எழுத, உங்களின் சுறுசுறுப்பைப் பழகிக்கொள்கிறேன் நண்பரே! நன்றி.

   நீக்கு
 8. இயல்பான பதில்கள் என்ற மறுமொழியினைத் தந்து பதிவின் சிறப்பை உயர்த்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். வழிகாட்டிய உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கப்படுத்த வேண்டிய படிப்பாளி அவர் என்பதை மற்றவர் அறிய வேண்டுமே எனும் ஆசை. தொடர் படிப்பாளி ஒருநாள் ஒருபுள்ளியில் படைப்பாளி ஆகிவிடுவர் அல்லவா அய்யா?

   நீக்கு
 9. பார்த்துவந்தேன் அண்ணா..மிக அருமையான பதில்கள்..
  பகிர்விற்கு நன்றி, இனித் தொடர்வேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா. (பிள்ளைகள் நல்லபள்ளி கிடைத்து, வீடும் செட்டில் ஆனபின் உன் ஆங்கில மொழிபெயர்ப்புத் தளத்தில் தொடர வேண்டுகிறேன்- இதை வேறுயாரிடமும் சொல்ல முடியாதுடா. உன்னிடம்தான் சொல்லமுடியும்) நன்றிப்பா

   நீக்கு
 10. புரியவில்லையே அய்யா...
  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு