வெண்பா - எளிய விளக்கம்.

எனது முந்திய பதிவில், தமிழ் மரபுப் பாவகைகளை அறிந்து எழுதிப்பழக வேண்டும் என்று இளைய கவிகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.அதற்கான எளிய இலக்கணம் தேவை என்பதை நண்பர் “மூங்கில் காற்று“ முரளிதரன் உட்படப் பலரும் உணர்த்தினார்கள்.

நானும் எழுதலாம் என்றுதான் இருந்தேன்....

அதற்குள் இந்தப் படுபாவி
திருச்சி நண்பர் ஜோசப் விஜூ
நான் நினைத்திருந்ததை விடவும்
அழகாக, எளிமையாக எழுதிவி்ட்டார்!

இதைவிட எளிமையாகச் சொல்ல
என்னால் இயலாது என்பதாலும்,
எனது நண்பரின் இலக்கணப் புலமை,
இளைய கவிஞர்க்குப் பயன்பட வேண்டும்
என்னும் எனது நெடுநாள் விருப்பத்தாலும்
அதை அப்படியே இங்கே இணைப்பில் தருகிறேன்.

சென்று படித்து, சிலரேனும் வெண்பாவை
வென்று வருவீர் விரைந்து.

வெண்பா எழுத விரும்பும் இளையோரை
அன்பாய் மிகஎளிதாய் ஆற்றுவித்த – நண்பா!நீ,
“வெண்பா விஜூ“வானாய்! வேறுபல பாவகையும்
அன்பாய்த் தருவாய் அடுத்து.

இணைப்புக்குச் செல்ல –
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html

24 கருத்துகள்:

  1. “என்பால் உளஅன்பால் என்றும் வளர்கவிதை
    உன்பால் இருந்து முயர்பண்பால் - அன்பால்
    கரம்பிடித்துத் தூக்கியெனைக் காணென்று காட்டச்
    சிரம்வணங்கி நன்றி சொலும்!“

    நானும் என் பதிவும் உங்கள் அறிமுகமே!
    உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நன்றிக்கு நன்றி.

      போடும் விதையெல்லாம் பொய்க்கும் நிலந்தன்னில்
      காடு வளர்த்த கவியே! நீர் - நீடுபுகழ்
      எய்த வளர்ந்தபின்னும் என்னை மறவாமல்
      செய்த கவிதை சிறப்பு.

      நம் பயணம் தொடரட்டும் விஜூ.நல்லது நடக்கட்டும்.
      தங்கள் பணிகளுக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.

      நீக்கு
    2. அண்ணா
      ஆளாளுக்கு சிக்ஸர் அடிக்கிறீங்களே !!!!!!!! கொஞ்சம் பொறுங்க ! நானும் அந்த இலக்கணத்தை படிச்சு, கில்லி அடிக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம் கலக்குகிறார்கள் அண்ணன்மார்..
      நானும் வரேன் மைதிலி

      நீக்கு
  2. ஊமைக் கனவுகள் வலைதளத்தில் வெண்பா இலக்கணத்திற்கான தொடக்கப் பாடத்தை சுவைபட அறிந்தேன். நன்றி ஐயா!. தெரிந்ததை வைத்து சமாளித்துவிட முடியும் என்றாலும் இன்னும் நுணுக்கமாக அறிந்து கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன . அவற்றை அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முரளி அய்யா.
      இலக்கணம் என்பது உடலமைப்புத்தான்
      கவிதையை அதற்குள் கட்டமைக்கும் ரகசியம் யாராலும் விளக்கமுடியாத ஒன்று. அதுதான் பிரச்சினை. அதுபற்றியும் நண்பர் ஜோசப் எழுதுவதாயச் சொல்லியிருக்கிறார். நானும் எழுதுவேன். தங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் நன்றி முரளி

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    சொற்கள் கோலமிட செப்பிய வரிகள்
    செவ்வனே பகட்டுது வலையில்...
    அடுத்தவர் வரிகளை ஆர்வமுடன்
    படிக்கையில் மனசில் மந்தப் பூ பூக்குது...

    தொடருங்கள் ஐயா.. மிகவும் பயனாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா கவிதைங்களா...?
      ஏன்..?
      நா ஏதாவது தப்புப்பண்ணிட்டனுங்களா?
      மந்தப்பூ? புரியலிங்களே?

      நீக்கு
  4. ஆகா சென்று பார்க்கிறேன்..
    த ம மூன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த.ம.1,2,3 நமக்கு இந்த விஷயமே புரியலயே மது?
      ஆனா, நீஙக ஏதோ பாராட்டி ஓட்டுப் போடுறிங்கன்னு புரியிது.
      ஆனா அந்த விவரம் புரியல. சரி உடுங்க.
      நீங்க நல்லதுதான செய்வீங்க.(அப்பறமா சொல்லுங்க?)

      நீக்கு
  5. விஜு ஆசானின் பக்கம் பார்த்துவிட்ட்டோம். ஏற்கனவே நாங்கள் தான் தொடர்கின்றோமே அவரை....மிக்க நன்றி ஐயா! தங்கள் பதிவுப் பகிர்வுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதா எது இருந்தாலும் பகிர்வோம்.
      நண்பர் செஞ்சா பகிரமாட்டமா? அதுதான் அயயா.
      தங்கள் வருகைக்கும் நன்றிக்கும் வணக்கம்

      நீக்கு
  6. எமது நண்பரை ஊக்குவித்தமைக்கு நன்றி எமது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாராட்டியதற்கு நன்றி. அது என்ன எமது...? (பாதியிலயே நிக்குது?)

      நீக்கு
  7. "வெண்பா விஜூ" சரியான பட்டம்...!

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  8. இந்த இளசுகள் வடிக்கின்ற பதிவுகள்
    அந்த வெண்பாவில் வரட்டும் என்ற
    உந்தலுடன் தந்த இணைப்பு நன்று
    இது தானையா நற்பணி!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் மூலமாக ஊமைக்கனவுகளைச் சந்தித்து வெண்பா பற்றிய பதிவை முழுமையாகப் படித்தேன். இவ்வளவு எளிமையாகக் கூற முடிவதையறிந்து மகிழ்ந்தேன். முடிந்தவரை கடைபிடிக்க முயற்சிப்பேன். தங்களுக்கும், ஊமைக்கனவுகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அண்ணா,
    விஜூ அண்ணாவின் அந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்புறம் அந்த நல்முத்தை முக்குளித்து இந்த வலையில் ஒளிரவிட்ட பெருமை பெற்றவர் நீங்க இல்லையா? (இது வெறும் புகழ்ச்சி இல்லை அண்ணா)

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா

    அவர்பக்கம் சென்றேன் பலகாரம் உண்டேன்
    பயிலரங்கம் அல்ல பரமனெழும் கூடு
    மனதிறங்கி மெல்ல குதித்தாட கண்டேன்
    இயக்கமே ஈன்றது உள்......

    பதிலளிநீக்கு
  12. நண்பரின் தளத்தில் நானும் வெண்பா பயின்றேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இனிய வணக்கம் ஐயா...
    நண்பர் விஜூ வின் ஊமைக்கனவுகள் தளம் சென்று
    வெண்பாவுக்கான எளிய விளக்கம் படித்தறிந்தேன்...
    நானும் முயன்று பார்க்கிறேன் ஐயா..
    ======================================
    மதுரை பதிவர் சந்திப்பில் உங்களைக் காணக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
    மேடையில் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்ததால் சிறைபட்டுவிட்டேன் அங்கேயே..
    உங்களிடம் உரையாட இயலாது போயிற்று...

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கு நல்ல மனது தம்பீ! நான் சொல்வது வெறும் புகழ்ச்சி இல்லை! அதற்கு எடுத்துக்காட்டே நண்பர் விஜூ வின் ஊமைக்கனவுகள் தளம் தன்னை எடுத்துக் காட்டி , பாராட்டியுள்ள பண்பே சான்றாகும் இன்னும் நிறைய எழுதலாம் முதுமை இயலவில்லை! வாழ்க நீவீர்!

    பதிலளிநீக்கு
  15. 'வெண்பா விஜூ' மிக அருமை..இதோ சென்று பார்க்கிறேன் வெண்பா பதிவை

    பதிலளிநீக்கு
  16. //வெளியிட அல்ல//

    அண்ணா, நீங்கள் பதிவில் இணைப்புகள் கொடுக்கும்பொழுது, அதைச் சொடுக்கினால் இணைப்பிற்குச் செல்லுமாறு அமைக்கலாமே..
    பதிவெழுதும் பொழுது மேலே, 'இணைப்பு' என்று இருப்பதைச் சொடுக்கினால் திறக்கும் சாளரத்தில் எந்த URLக்கு இந்த இணைப்பு செல்கிறது என்று இருக்கும் இடத்தில் முகவரியைக் கொடுத்துவிட்டால் போதும் அண்ணா. அதே சாளரத்தில் திறக்க வேண்டுமா இல்லை தனி பக்கத்தில் திறக்க வேண்டுமா என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.
    நீங்கள் இதை ஏற்கனவே அறிந்திருந்தால் என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்.. :))

    பதிலளிநீக்கு