“கமல்-60“ வாழ்த்தும், சில கேள்விகளும்






அற்புதக் கலைஞன் கமலஹாசனின் 60ஆவது பிறந்தநாளுக்கு நானும் வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். எனினும் எனக்குள் உருளும் சில கேள்விகளை என்னால் மறைக்க முடியவில்லை.
வேலூர் தோழர் 
திரு எஸ்.ராமன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் மிகஅரிய கமல் படங்களின் காட்சிகளை முதலில் ரசியுங்கள்.
பின்னர் கேள்விகளைப் பார்ப்போம்- 
--------------------------------------------------------------
நன்றி 
(படைப்புத் தொகுப்பு மற்றும்  கமலின் அழகான படத்திற்கும் )
நன்றி நன்றி - http://ramaniecuvellore.blogspot.in/2014/11/60-10.html 
------------------------------------------------------------- 
ஒரு ஆக்ரோஷமான விவாதம் உணர்ச்சிமிக்க 

இங்கே ஆடிக் காண்பிக்கிறார்.

நம்மை  திடுக்கிட வைத்திடும். 

படத்தின் உணர்ச்சி மிக்க காட்சி.

நம்மையும் கலங்க வைக்கும்.

இந்த தந்தையின் நிம்மதி தொலைந்து போனதே!

வெளியே வரும் முன்பாக.

சோகம் இங்கே.

வெளிப்படும் தருணம் இது. 

அடித்துச் சொல்லும் காட்சி.

எல்லாமே ரொம்ப சீரியசா இருக்கிறது  அல்லவா? 


இன்னும் ஒரு போனஸ்.

நான் கல்லூரியில் படித்த போது வந்த பாடல். 
பணிக்காலமே 28 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனாலும் 

ரசியுங்கள் நண்பர்களே,

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்
நன்றி - திரு எஸ.ராமன், வேலூர்(ஒரு ஊழியனின் குரல்)
----------------------------------------------------------------------------------- 
இப்போது என் கேள்விகள் -
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த நடிகர் - திரைக்கலையின் பல்துறை நிபுணர் கமல் -இதை ஒப்புக்கொண்டுதான் கேள்விகளை முன்வைக்கிறேன்-
(1) கமல் யார்? நாத்திகரா ஆத்திகரா? 
       அவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டு வெளிப்படையாகச்     சொல்வதில் ஏராளமான வணிகச் சிக்கல் உண்டு என்பதால் வெளிப்படச்         சொல்லாமல் மழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாரா? அல்லது இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமா?
         ஏனெனில், வசூல்ராஜாவில் “கடவுள் இல்லங்கிறவன நம்பு, கடவுள் இ்ல்லங்கிறான் பாரு அவனைக் கூட நம்பு, ஆனா, நான்தான் கடவுள்ங்கிறாம் பாரு அவனை மட்டும் நம்பாதே” தசாவதாரத்தில், “நா எங்க கடவுள இல்ல னு சொன்னேன்.. இருந்தா நல்லதுதானே னு சொன்னேன்” முதலானவை.
“கல்லைமட்டும் கண்டால் கடவுள் கிடையாது“ கடவுள்பாதி மிருகம் பாதி?
             
(2) முற்போக்காளரா? இல்லை திரைக்கு வெளியிலும் நடிகரா?
          பெரும்பாலான படங்களில் சாதாரண ஏழை மக்களுக்காகக் குரல் கொடுத்த கமல், அவ்வப்போது தன்னை முற்போக்காளராகக் காட்டிக் கொண்டே வருகிறார். பெரியாரை அவ்வப்போது பாராட்டுவார். இப்போது பா.ஜ.க.வின் (பிரதமர் மோடியின்?) “இந்தியாவைச் சுத்தப்படுத்துவோம்“ இயக்கத்தின் தூதுவராகி, ஏரியைச் சுத்தப்படுத்த இறங்கும்போது காவி பா.ஜ.க.வுக்கு ஆகாத கருப்புச் சட்டையுடன்... நவம்பர்-7 உலகைமாற்றிய ருஷ்யப் புரட்சிதினத்தன்று பிறந்திருக்கிறீர்கள்... ஆனால் உங்களின் எந்தப் பிறந்தநாளிலாவது அதுபற்றி வாய்திறந்திருந்தால் மகிழ்ந்திருப்போம்... ஆனால் ஏனோ நீங்கள் அந்த மகிழ்ச்சியை எங்களுக்குத் தரவே இல்லல்ல?
நேற்றைய -உலகமகா எழுத்தாளர் ஜெயமோகனின் உலகமகா இலக்கியமாம் மகாபாரத மொழிபெயர்ப்பு “வெண்முரசு“ பற்றி, இளைய ராஜா புகழ்ந்தது சரி, நீங்களும் இப்படி வாாாாாானளாாாாாாவ..? என்ன கமல் இது?

ஒன்னுமே புரியலே உலகத்துல... 
என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது! 

எனினும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்!
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து (உங்கள் பிரச்சாரத்திற்காகவேனும்) சில நல்ல செய்திகளை மக்களுக்குச் சொல்லுங்கள்... பாவம் நம் மக்கள்!
------------------------------------------------------------------- 
கமலஹாசன் பற்றிய எனது கடந்தஆண்டுப் பதிவைப் பார்க்க -
http://valarumkavithai.blogspot.com/2013/11/blog-post_10.html
------------------------------------------------------------------ 

28 கருத்துகள்:

  1. நடிகர்கள் சொல்ல வேண்டுவதை எல்லாம் திரையில் சொல்லிவிடுவதால் நேரில் அமைதியாக இருந்து விடுவார்களோ ?
    (இதற்கும் தெளிவுரை நீங்க தான் சொல்லனும் எனக்கு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் குழப்புவதுதானே சிக்கல்? நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ தன்னைச் சொல்லிக்கொள்வதில் என்ன சிக்கல்? நடுநிலை என்று ஒன்று இல்லை தெரியுமோ? நீதி என்பதே ஒருபக்க உண்மைதான்.

      நீக்கு
  2. நடிகர்கள் சொல்வதையும் செய்வதையும் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து! நடிப்பு அவர்கள் தொழில். பொழுது போக்குக்கு நாம் அதைப் பார்க்கிறோம். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் மக்கள் பெரிதாக எடுத்துக் கொண்டு பெரிய தலைவர்களாக்கி விடுகிறார்களே? புரட்சி நடிகர்தானே புரட்சித்தலைவர் ஆனார்? இது வேறெங்கும் இல்லாத புரட்சியாக அல்லவா இருக்கிறது. (எம்ஜிஆருக்குப் பின்னர்தான் என்டிஆர் ஆந்திர முதல்வரானார்-தொத்துவியாதி)

      நீக்கு
  3. கேன்விகள் சரியே ஆனால் பதில்கள் வரும்,,,,, ஆனா வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவே வராது
      வரும் என்பதற்காக அல்ல,
      நண்பர்களின் பார்வைக்கு..
      (தமிழ் இலக்கிய மரபில் ஆடவர் மகளிர் யாரையாவது முன்னிலைப் படுத்திச் செய்யுள் செய்யும் வழக்கம் உள்ளது)

      நீக்கு
  4. நடிகர்களை அவர்கள் நடிப்புக்காக மட்டும் ரசித்தால் போதும்! அவர் கொள்கை கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டாம் என்பது என் கருத்து. அதே சமயம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் அவர் குழப்பாமல் தெளிவாக தன் கருத்தை சொல்ல வேண்டியதும் அவசியம்! நல்ல பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினி “நா ஒரு தடவை சொன்னா“ என்று சொல்லிக் குழப்பினார். இவர் ஒரு தடவைகூட அப்படிச் சொல்லாமலே குழப்புகிறார். என் மனம் விரும்பும் கலைஞர் என்பதால் எனக்குக் கூடுதல் ஆதங்கம்.

      நீக்கு
  5. அண்ணா
    கமல் அட்டகாசமான நடிகர். உணர்வுகளை முகத்தில் கொண்டுவருவதில் வல்லவர். தொழில் நுட்பத்தில் துடிப்பாய் இருப்பவர். அவ்ளோ தான் மத்தபடி கமல் மற்றுமொரு ரஜினி என்றே நான் கருதுகிறேன். நடுநிலை பதிவு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலநேரம் ரஜினியின் நேர்மை (சுயநலமானது என்றாலும்) இவரிடம் இல்லையே என்னும் ஆதங்கமும் எனக்கு உண்டு.
      அவர் தன் படத்து விளம்பரத்திற்காக அவ்வப்போது ஏதாவது வெளியில் கிளப்புவார். இவர் படத்துக்குள்ளேயே கிளப்புவார்

      நீக்கு
  6. பதில்கள்
    1. வராது என்றே தெரிந்து கேட்கப்பட்ட கேள்வி அய்யா.
      (நாமெல்லாம் கமலுக்குக் கொசுவைவிடக் கேவலம்தான்) இதில் அறிவு ஜீவி நடிப்புக்காக இளைய ராஜா உளறுவதைவிட இவர் உளறியது ஜெயமோகன் விழாவில் நேற்று நடந்தது மகாகேவலம்

      நீக்கு
  7. அவரே நான் வியாபாரி என்ற சொன்ன பிறகு நாம் எதற்கு பொழிப்புரை எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொன்னாலும், மற்றவர்கள் உன்னதமான கலைஞன் என்று நம்புகிறார்களே? எம்.ஆர்.ராதா, ஜானகியம்மாள் முதலான மேடைக் கலைஞர்களை விட இவர் உயர்ந்தவரில்லையே?

      நீக்கு
  8. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை. எலும்பு இல்லாத நாக்கு எல்லாருக்கும் உண்டு. நடிப்பவருக்கு அந்த நாக்கு கூட நடிக்கிறதோ? அப்ப்ப்ப்ப்பா உலக மகா நடிப்புடா சாமி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் நடிக்கவே தெரியாமல் தோற்றுப்போனவர் சிவாஜி.
      வெளியில் மட்டுமே நடித்து வெற்றிபெற்றவர் எம்.ஜி.ஆர்.
      வெளியிலும் திரையிலும் நடித்து ஒன்றில் பெயர்-கமலுக்கு. (வெளிநடிப்பை அவர் ரசிகர்களே நம்புவதில்லை)

      நீக்கு
  9. கமல் ஒரு நல்ல நடிகர்.அவ்வப்போது சில நற்பணிகளை செய்து வருகிறார். மற்ற பல நடிகர்களைவிட மேலானவர்.என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் சரியான மதிப்பீடு.
      மற்றபடி “உலகநாயகன்“பட்டமும் நாத்திகப் பூச்சும் செயற்கை. சிவாஜிக்குப் பிறகு ஆற்றல் வாய்ந்த கலைஞன் இப்படி தன்னைப் பற்றிமட்டுமே நினைப்பதுதான் என் வருத்தம்.

      நீக்கு
  10. எனக்கு பொதுவாகவே கமலின் குறைகள்தான் நிறைகளைவிட அதிகமாகத் தெரியும்.. அதனால் அவரைப் பற்றி வரும் விமர்சனங்கள் வரும்போது.. "அட உங்களுக்கும் விளங்கி விட்டதா?"னுதான் தோனும்.

    கமலை நடு நிலையாக என்னால் விமர்சிக்க முடியாது என்பது என்னைப் பற்றி நான் புரிந்து கொண்டது..

    இருந்தும் தொடர்கிறேன்..

    நான் நாத்திகன் என்பதால், கமல் இன்னொரு நாத்திகன் என்கிற சிறிய கோணத்தில் கமலை "நம்ம வகை"தான் இவர்னு ஒரு போதும் நான் எடுத்துக்கொள்வதில்லை! அந்தளவுக்கு எனக்கு சிறு புத்தி கெடையாது.

    சமீபத்தில் சிந்திக்கவே தெரியாத மதவெறி தலைக்கேறிய அடிமுட்டாள் ஜெயமோஹனும் நாத்திக வேடதாரி கமலும் நாடறிய நட்பு பாராட்டு றாங்க..

    மஹாபாரதத்தை நாவலாக்கும் "முன்னவரின்" முயற்சியை ஒரு "உலக ம்காப் பணியை" மேற்கொள்வதாகச் சொல்லி பின்னவர் பாராட்டப் பேசியதுடன், நாத்திகன் இவரு..மஹாபாரதம் எத்தனை பெரிய காவியம் என்று சிலாகிக்கும் போது, கமல் ஒரு மூளைவளர்ச்சி குன்றிய சாதாரண பார்ப்பாந்தான் என்றுதான் தெளிவு படுகிறது!

    இலக்கிய மேதாவி இவரு சினிமா கலையை ஆஹா ஓஹோனு புகழ்வதும்..

    நாத்திக வேடதாரி இவரு உடனே மஹாபாரதம் பத்தி ஆஹா ஓஹோ சிலாகிப்பதும்.

    அட அட அட!!!

    மனிதன் எவளவு கீழ்த்தரமானவன் என்பதைக் காட்டும் நிதர்சனம்!!

    உண்மையைத்தான் நான் இங்கே சொன்னேன். கமல் ரசிகர்களுக்கு குத்துச்சுனா நான் ஒண் ணும் பண்ண முடியாது. முடிந்தால் திருந்துங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கலைஞர்கள் இப்படிக் குழப்பும்போது ரசிகர்கள் ஏமாறத்தானே செய்வார்கள்? கலையினால் வெற்றிபெறுவோர் அந்த சமூகப் பொறுப்பை ஏற்கவேண்டாமா? இதில் ரசிகர்களைக் குற்றம் சொல்வது, நுங்கு தின்னவன் ஓடிப்போயிட்டான், அங்க நோண்டித்தின்னவன் மாட்டிகிடடான் கதைதான் என்று எனக்குத் தோன்றுகிறது வருண. இன்னொன்று உ்ண்மையிலேயே அவர்களை மாற்ற நினைத்தால் உங்கள் மொழிநடை கொஞ்சம் மாறினால் நல்லது என்பது என்கருத்து. தங்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. கமல் நல்ல நடிகர்... தனிப்பட்ட வாழ்வில் அவர் நல்லவரா கெட்டவரான்னு நாயகன் பட கிளைமேக்ஸில் கேட்பது போல்தான் கேட்க வேண்டும்... இருப்பினும் நற்பணிகள் செய்வதிலும் ஒழுங்காக வருமான வரி கட்டுவதிலும் முதன்மையானவர் என்று அறிந்திருக்கிறேன்.

    உங்கள் பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் கருத்து ஏதும் சொல்லவில்லை. அதில் மூக்கை நுழைக்க நமக்கு உரிமையும் இல்லை. எவ்வளவு பெரியவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையைத் தனிப்பட வாழ உரிமையுண்டு. மற்றபடி, அவர் நீங்கள் சொல்வது போல நற்பணி மற்றும் வருமான வரிகட்டுவது இவற்றில் சரியாகவே இருக்கிறார் என்பதும் பாராட்டுக்கு உரியதுதான். “குணமும் குற்றமும்நாடி..”? நன்றி

      நீக்கு
  12. முதலில் நடிப்பு அவரின் தொழில் அதில் அவர் வாழ பல சமரசங்கள் செய்து கொண்டிருக்கிறார்... சில நல்ல திரைப்படங்கள் மூலம் கொஞ்சமேனும் கருத்து சொல்லியிருக்கிறார் என்றாலும்... நச்சு எந்த விதத்தில் கலந்திருந்தாலும் நஞ்சுதானே.... அவரிடம் எதிர்பார்ப்பது நம் தவறு.. அவர் தொழிலை அவர் சரியாகச் செய்கிறார் அவ்வளவே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.
      “உன்னை யார் அப்படி என்னிடம் எதிர்பார்க்கச் சொன்னது?” என்று அவர் கேட்டால் நம்மிடம் பதில் இ்ல்லையே? சரிதான். நன்றி

      நீக்கு
  13. ****“உன்னை யார் அப்படி என்னிடம் எதிர்பார்க்கச் சொன்னது?” ****

    நிலவன் சார்:

    வேடிக்கையாக இருக்கு உங்க நிலைப்பாடு. தொட்டிலையும் ஆட்டிக்கிறீங்க பிள்ளையையும் கிள்ளி விடுறீங்க!!

    அதென்ன அது?? அப்பப்போ நீங்களே கமலாகி அவர் செய்கையை டிஃபெண்ட் பண்ணுறீங்க???? இதெல்லாம் உங்களுக்கு புரியுதோ இல்லையோ, பார்வையாளர்களுக்கு தெளிவாகப் புரிகிறது.

    எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் "ரசிகன்" என்பவன் நகைக்கத்தக்க ஒரு "சிறுவன்"தான் என்பதென்னவோ உண்மைதான். நீங்க இதுக்கு விதிவிலக்கா இருக்கணும்ணும் நான் எதிர் பார்க்கவில்லை! ஆனால் நீங்க விதிவிலக்கு கெடையாதுனு சொல்ல நிச்சயம் பேச்சுரிமை உண்டு.

    அதேபோல் கமலின் முரணை நிச்சயம் விமர்சிக்கலாம்.

    கமலுக்கு திருப்பி கேள்வி கேட்க தகுதி இல்லை. ஏன் என்றால் ரசிகனை வைத்து பொழைப்பு நடத்தி வாழ்பவன் அவன் என்பதால்.

    எப்படிப்பட்ட முரணை சுட்டிக்காட்டணும்??

    கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை! திருமணங்கள் உடைகின்றன!னு சொல்றது. அப்புறம் ஒவ்வொருத்தன் கலயாணத்துக்காப் ப்போயி "போஸ்" கொடுக்கிறது.ணைது எப்படினா, கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்றது. கோயில் கோயிலாப் போயி வழிபடுறது போல! புரிகிறதா??

    உனக்குத்தான் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லையே? என்ன எழவுக்கு அங்கே போயி அவநம்பிக்கையுடன் போற? அவ ந்நம்பிக்கையுடன் அவர்களை உதடளவில் வாழ்த்துற?? னு கேக்கத்தான் செய்வோம்! அதையெல்லாம் நீஙக "கமல்" ரூபம் எடுத்து சப்பைக் கட்ட முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே நாந்தான் “சின்னப்பய“(நீங்க சொன்னதுதான்) அறியாம தெரியாம செஞ்சுட்டேன்.. நீங்க பெரிய மனுசரு ஒத்துக்கிறேன்யா கடைசி பாராவுல தெரியுதது உங்க பெரியமனுச அறிவு. நன்றி (இதுக்கு பதில் போடலாம் விரிவா ஒரு கட்டுரைான் போடணும் அதுக்கு இந்தச் சின்னப்பையன் தகுதியானவனான்னு தெரியல. ஆனா கமல் “இணைந்து வாழும்“ வாழ்க்கைக்கும், திருமணங்களில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்கும் முரண்பாடு இல்லை என்பது எனது தனிப்பட்ட சின்னக் கருத்துங்கண்ணா.)

      நீக்கு