“தமிழ்வெளி“ திரட்டியில் தவறு நடக்கலாமா?

தமிழ் வலைப்பதிவர்கள் தற்காலத் தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து வருகிறார்கள். இன்றும் குப்பைகள் பெருகிக் கிடக்கும் இணையத்தமிழில் நல்ல பதிவுகளைப் பார்க்க முடிகிறதெனில் வலைத்திரட்டி உதவியால்தான் இது சாத்தியமாகிறது என்பதை அனைவரும் அறிவர். நன்றியுடன் நினைக்கவும் செய்வர். 

எனது நல்ல பதிவுகள் சில, “தமிழ்மணம், தமிழ்வெளியின் அதிகம்பேர் பார்த்த பதிவுகள்“ எனும் தினசரிப் பட்டியலில் முதலிடம் மற்றும் முதல் பத்துக்குள் வந்ததால் பலஆயிரம் பார்வையாளர்கள் வந்தார்கள் என்பதை நான் நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நன்றியை என்றும் மறவேன். 

எனினும் இப்போது - 
தமிழ் வெளியிடம் இரண்டு கேள்விகள் - 

(1) “தமிழ்வெளியின் பரிந்துரை“ என்னும் தலைப்பில் ஒருசிலர் படைப்புகளே திரும்பத்திரும்ப இடம்பெறுவது தமிழ்வெளி நிர்வாகத்தின் நேர்மையைச் சந்தேகிக்க வைக்கிறதே! “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்“ என்கிறார்களே? இதற்குத் தனி விண்ணப்பம் ஏதும் உண்டா என்று தெரியவில்லை. பணம் கட்டும் பதிவர்களின் பதிவுகள் வண்ணங்களில் பெரிதாக வருவது நியாயம் எனில் இந்தத் தனிப்பரிந்துரை எந்த வகையென்று புரியவில்லையே சாமிகளே? 
“புரியுது... ஆனா புரியல“ ரகமா இருக்கே?

(2) மற்றும் முக்கியமான கேள்வி -
அண்மையில் தமிழ்மணத்தில் சில வேண்டத்தகாத பதிவுகள் தொடர்ந்ததும், அதுகண்டு நமது வலை நண்பர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதும், அய்யா இராமாநுசம்  முதலானோர் கவிதையால் கண்டனக் குரல் எழுப்பியதையும்... தொடர்ந்து, ஆபாசத் தளத்தொடர்புகளைத் தமிழ்மணம் நிர்வாகிகளே நீக்கிவிட்டதும் அனைவரும் அறிந்ததே.
அந்தக் கணடனப் பதிவுகளைப் பார்க்காதோர் பார்க்க -
தரங்கெட்டுப் போவதுவோ! 
.......தமிழ்மணமும் தானோ-கூசும்
            தலைப்புகளில் பதிவுகளை 
................போடுவதும் ஏனோ
கரம்பற்றிக் கேட்கின்றோம் 
.......கண்ணியமும் இதுவா-என்ன
           காரணமோ தெரியவில்லை! 
..............போதைதரும் மதுவா?’எனத்தொடரும் அய்யாவின் புலவர் குரல் தமிழ்மணத்திற்குக் கேட்டு அவர்களும் சரியாகப் புரிந்துகொண்டு, அவ்வாறான தளங்களை நீக்கிவிட்டார்கள். தற்போது தமிழ்மணத்தில் அத்தகைய பதிகள் இடம்பெறுவதில்லை. 
மகிழ்ச்சி நன்றி. நிம்மதி.
எனது இரண்டாவது கேள்வி இதுதான்
இப்போது “தமிழ்வெளி“ யின் முறையா?
இம்முறை தமிழ்வெளிக்கு அதே கண்டனக் குரலைத் திருப்பிவிட (ஃபார்வேர்டு செய்ய?) வேண்டியிருக்கிறது.
ஆபாசத்தளங்களின் முகவரிகளை நான் குறிப்பிடப்போவதில்லை.
தமிழ்வெளியின் முகப்பு உள்ளடக்கப் பக்கத்தில் அதுவும் “வாசகர் பகிர்ந்தவை“ என்னும் தலைப்போடு வருவதை என்ன சொல்ல?
(இப்போது பார்த்தால் ஒன்றிரண்டு ஆபாசத்தளங்கள்தான் உள்ளன. 
இந்தப் பதிவை எழுத நேற்று உட்கார்ந்த நேரம் அனைத்துப் பரிந்துரை(?)களும் ஆபாசத் தலைப்புடனே இருந்தன! இன்று சற்றே மாறியிருக்கிறது)
“பரிந்துரைத்தவை“ என்பது உண்மையெனில், பரிந்துரையாளர் பெயர்களை அந்தந்தப் பதிவுகளின் கீழேயே தமிழ்வெளி வெளியிட வேண்டும். அப்படியெனில், இப்படியான தவறு நிகழாது என்றே நினைக்கிறேன். இவ்வாறே பெயரிலிகள் பதிவுகளையும் நீக்கவேண்டும்.இவுங்க தொல்லை தாங்கலயே...!)

தமிழ்வெளி“ நிர்வாகம் கவனிக்குமா?
தமிழ்வெளியைக் கவனிக்க வைக்க, நண்பர்களும் குரல்கொடுத்து உதவ வேண்டுகிறேன். 
ஊர்கூடித் தேரிழுப்போம் வாருங்கள்.
நல்ல படைப்புகளே தமிழ்வலைப்பக்கங்களில் வலம்வரவேண்டும் என்று உண்மையாகவே விரும்பும் நண்பர்கள் குரல்கொடுக்க வேண்டும். என்ன வேதனை என்றால், நல்ல பதிவுகளை அனைவரின் பார்வைக்கும் கொண்டுசெல்ல என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இந்தக் குறுக்கீடு வந்தால் சிரிப்பதா? அழுவதா? 

அவரவர் பதிவுகளில்
பின்னூட்டங்களில்
கண்டனக் குரல் முழங்கட்டும்.  நல்லது நடக்கட்டும்.

--------------------------------------------

18 கருத்துகள்:

 1. இந்த வகை திரட்டிகளில் ஒரு முறை தளத்தை இணைத்துவிட்டால் தானாக பதிவுகளை திரட்டிக் கொள்கிறது. இதனால் இந்த தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மணமும் இதையே சொன்னது. நிர்வாகிகள் இன்னும் கொஞ்சம் விழிப்போடு இருந்து கண்காணிக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தானாக இணைப்பது அறிவியல். அவ்வப்போது தலையிடுவது மனதவியல் இல்லையெனில் அணுகுண்டு கதைதான்...

   நீக்கு
 2. அய்யோடா இதுவேறா..இனி கவனமா இருக்கனும் போலவே..சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும் கவனம்தான்.
   வீட்டிலும் நாட்டிலும் வெளியிலும் இணைய வெளியிலும்.

   நீக்கு

 3. தங்கள் ஆய்வுப் பதிவினை
  முதலில் வரவேற்கிறேன்...
  அடுத்து எல்லாத் திரட்டிகளிலும்
  பாலியல் (Sex) இணைப்புகள் தான்
  பதிவர்கள் எல்லோரும் எதிர்ப்போம்!
  மேலும்,
  வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?
  http://yppubs.blogspot.com/2014/10/sex.html
  என்றொரு பதிவை
  நானும் பதிவு செய்திருந்த வேளை
  அறிஞர் ரிஷி அவர்களும்
  தமிழ்மணத்திற்கு எதிர்ப்புக்குரல்
  அனுப்பியிருந்தார்!
  அவரையும்
  பாராட்டுங்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தே ஆகவேண்டும்.
   பாராட்டுவோம் அதிலென்ன குறை?

   நீக்கு
 4. தமிழ்வெளி நிர்வாகிகள் விழிப்போடு கண்காணிப்பது நல்லது ஐயா
  செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெய்யவில்லை என்றால் எல்லாருமாக அழிந்துபோவோம் அவ்வளவுதான்... கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையானால் பிறகு அழிவுதானே?

   நீக்கு
 5. பலமுறை கவனித்தேன் ஆனால் பதிவிட வில்லை அங்கே நிற்கிறார் நிலவன் அண்ணாத்தே..

  பதிலளிநீக்கு
 6. சிரிக்கலாம்.... மற்றபடி நேரில் பேசுகிறேன்....

  பதிலளிநீக்கு
 7. தமிழ்வெளி நிர்வாகம் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது ஏதோ தொழில்நுட்பச் சிக்கலில் உள்ளதுபோலத் தோன்றுகிறது. அதிலிருந்து மீண்டுவரவேண்டுமென விரும்புகிறேன். வரும். வரவேண்டும்.

   நீக்கு
 8. இந்தத் திரட்டிகளில் அவ்வப்போது இந்த மாதிரி சில விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில மாதங்கள் முன்பு இண்ட்லி திரட்டியிலும் இப்பிரச்சனை வந்தது. சரி செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

  தமிழ்வெளி நிர்வாகமும் நல்ல முடிவு எடுக்கும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுக்கும் என்றே நம்புகிறேன்.
   இப்போது ஏதோ தொழில்நுட்பச் சிக்கலில் உள்ளதுபோலத் தோன்றுகிறது. அதிலிருந்து மீண்டுவரவேண்டுமென விரும்புகிறேன். வரும். வரவேண்டும்.

   நீக்கு
 9. தலைவரே ,நீங்க இந்த பதிவு போட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை ,தமிழ்வெளி திரட்டி போன இடம் தெரியவில்லையே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலலையில்லை பகவானே! ஒரு வேளை என் கருத்தினைக் கணக்கில் கொண்டு, நிர்வாகத்தில் சில மாறுதல்களைச் செய்கிறார்களோ என்னவோ? செய்து வரட்டும். வரும் வரணும்.

   நீக்கு