சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!

சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!
இன்றிரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சியைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்... 

அதுவும் சன் தொலைக்காட்சியில்
ஞாயிறு விடுமுறையில்
வந்த பைரவீ...!
பாவிகளுக்குப் பிரியமானவள்! 
மன்னிக்கவும்
ஆவிகளுக்குப் பிரியமானவள்!

நான் பயந்தது 
பேயைப் பார்த்தல்ல.. 
பேயே பயந்து பேய்  
அடச்சே..
பேயே பயந்து போய்
பேய் அலறல் அலறியதைப் பார்த்துத்தான்!
பேய்கள் இளம்பெண்ணாக வெள்ளைச் சீருடையில் வந்து காமெடி பண்ணும் என்பது தெரிந்தது தானே? (பள்ளிக் கூடத்துப் பசங்க கூட சனிக்கிழமையில் சிறப்பு வகுப்பு வைக்கும் நல்ல ஆசிரியர் சிலரிடம் கெஞ்சிக் கூத்தாடி கலர்-டிரஸ் போட அனுமதி வாங்கி விடுகிறார்கள்... ஆனால் பாவம்... இந்த இளம் பேய்களுக்கு “அன்-யூனிஃபாமில்“ வர எந்தக் காலத்திலும் அனுமதியே கிடையாது போல! எப்பப் பாரு வெள்ளைச் சீருடைதானா? மாத்துங்கப்பா!)

கொலை செய்யப் பட்ட பெண், தன்னைச் சீரழித்துக் கொலை செய்தவர்களை மீண்டும் வந்து படுகொலை செய்வது அனைத்துத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படப்“பைரவி”கதைகளில் வழக்கம்தானே?

நா இந்த எழவெல்லாம் பாக்குறதில்லன்னாலும்...
பேரறிஞர் முத்துநிலவனே பாக்கலங்குறதுக்காக நம்ம தமிழ்நாட்டுப் பாமர மக்கள் பாக்காமயா இருக்காங்க(?)
அவுங்க பாக்குற எல்லாத்தையும் என்னதான் பாக்குறாங்க னு நாமளும் பாத்துத்தானே தொலைக்க வேண்டியிருக்கு? 
மத்தபடி இந்த பைரவியில நடிக்கிறது யாரு? இயக்குநர் யாரு ன்னெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா..

அந்த அழகான பேய் மட்டும் அப்பப்ப வேற வேற அழகான பொண்ணுங்களா மாறிக்கிட்டே இருக்கும்.. அட ஆமா பின்ன பேய்க்கும் போரடிக்காதா என்ன? என்ன நம்ம மாதிரி தாலிகட்டியா குடும்பம் நடத்துது இந்தப் பேய்க..? சரிசரி..
ஆனா..
நமது காவல் மற்றும், நீதித்துறைக்காரர்கள் தங்கள் வேலை போகாமல் இருப்பதற்கு நம்ம பேய்களிடம் கொஞ்சம் நன்றி விசுவாசமா இருங்கப்பா.... 
ஏன்”னா...மற்ற பேய்கள் எல்லாம் தன்னைக் கொன்றவர்களை இவர்கள் கண்டுபிடித்துத் தண்டிக்கட்டும் என்று பெரியமனது பண்ணி விட்டுவிடுவதால் தானே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது?!!? இல்லன்னா.. அதுபாட்டுக்குப் பேய்களெல்லாம் தீர்மானம் போட்டுக் கிளம்பி, தன்னைக் கொன்றவர்களை எல்லாம் 
தாங்களே பேய் ச்சே.. போய் கொன்றுவிட்டால் இந்தக் காவல்துறையும், நீதித் துறையும் வேலையில்லாத் துறைகளாகிக் களைக்கப்பட்டு விடுமல்லவா? 

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்..
தன்னைக் கொன்றவனை வேறொரு பெண் உடலில் புகுந்துகொண்டு கொல்ல வரும் அந்தப் பேய் அவன் கழுத்தைப் பிடித்து விடுகிறது

நெறிக்கிறது... 
நெறிக்க்க்க்க்கிகிறது! நெறிக்க்க்க்க்க்க்க்க்கிறது! முழிபிதுங்கிக் துடிதுடித்து, 
கொலைகாரன் சாகப்போவதை ரசிக்க 
நாமும் தயாராகிவிட்டோம்... 

டொட்டாய்ங்.. டொடாய்ங் டொண்டடாய்ங்.. 
டொட்டாய்ங்.. டொடாய்ங் டொண்டடாய்ங்.. எனத் தொடரும் பின்னணி இசையில் 
நம்ம மயிர்க்கால் எல்லாம் கிளம்பி 
சும்மா டொடாய்ங்னு நட்டுக்கிச்சுல்ல? 

இருக்காதா பின்ன? விஷூவல் எஃபக்டுல்ல? 

(காதலிக்க நேரமில்லை படத்துல
 நாகேஷ் 
கதை சொல்லும்போது பாலையா குடுத்த விஷூவல் எஃபக்ட்ட நினைச்சிக்குங்க...

ராத்திரி 10மணிக்கு மேல 
தமிழ் நாடே இப்ப பாலையா ஆகிடுதுல்ல.. 
இருக்காதா பின்ன? விஷூவல் எஃபக்டுல்ல?)

அட அப்பப் பாருங்க... 
நம்ம கொலைகாரன் கழுத்தை 
நெறித்துக் கொண்டு ஆங்காரம் காட்டிய 
சீருடைப் பேயிடமிருந்து 
“ஐயோ..“ என அலறல்!

நமக்குத் தூக்கி வாரிப்போட்டது... 
எப்பவும் பேயப் பாத்து 
மத்தவங்க தானே அலறுவாங்க... 
இங்க என்ன பேயே அலறுது னு 
எனக்கே பயமாப் போச்சு!

அட ஆமாங்க.. 
பேயே பேய்அலறல் அலறினா !!!!!
நமக்குப் பயமா இருக்காதா?

சரி என்னதான் நடக்குதுன்னு பாத்தா... 
பேயின் கையில் நெருப்புப் பட்டது மாதரி வேக்காடு.. எரிச்சல் தாங்காம பேய் பேயலறல்...போடுது!... 

“ஐயோ! என் கையெல்லாம் எரியுதே!..
நெருப்பாக் கொதிக்குதே! ஐயோ ஐயய்யய்யோ“ இது என்னடாது...திடீர்னு இந்தப் பேய “சம்சாரம் அது மின்சாரம்“ படத்துல நம்ம ஆச்சி மனோரமா விசுவிடம் வசனத்தை மாத்திப் பேசிட்டு உலறல் அலறல் அலறுவாங்களே அதுமாதிரி அலறுதேனு பாத்தா... அடி ஆத்தா...
அந்தக் கொலைகாரனின் கழுத்துல 
மந்திரிச்சுக் கட்டுன ஆத்தாத் தகடு!

தகடு! தகடு! னு சத்யராஜ் பாணியில சொல்லிக்குங்க...
“ஐயோ! என்னை விடு”ன்னு முந்திக் கத்தின பொண்ணு இப்ப இவனையே அந்த வசனத்தை ரிபீட் பண்ணவச்சது மாறி, மீண்டும் அந்தப் பெண்ணே கதற... கொலைகாரன் முழிச்சிக்கிட்டான்
“ஆகா....! ஆத்தா படம்போட்ட தகடு! நம்ம கழுத்துல தாலிமாதிரித் தொங்க விட்டு இருந்தம்ல்ல அதுதான் இந்தப் பேய் கைய எரிச்சுடுச்சுனு சட்டுனு புரிஞ்சிக்கிட்டு,  அதக் கெட்டியாப் புடுச்சிக்கிட்டே எடுத்தான் பாரு ஓட்டம்!

ஆனா   அந்த  ஆத்தாத் தகடு டச்சுல எரிஞ்ச கையின் வேதனை தாங்காமெ அந்தப் பேய் அந்தப் பொண்ண அங்ஙனயே அம்போனு விட்டுட்டு சொய்ங்..னு அந்தப் பொண்ணு உடம்பிலர்ந்து கிளம்பிப் பேயி...அட..போயி.. 
ஒருவீட்டுல நிம்மதியாத் தூங்கிட்டிருந்த 
இன்னொருத்தன் உடம்புல பூந்துச்சா.. 

அவன் திடீர்னு எந்திரிச்சு 
“ஐயோ கை எரியுதே“னு ஒரே பேயலறல்... 
அட என்னங்கடா இது...? 
பேய்க்கு டைரக்டா அந்த எஃபக்ட் வரலயாம்! 
ஆனா அடுத்தவங்க உடம்புல 
பூந்தா மட்டும் எஃபக்ட் வந்து
எரிச்சல்ல கதறுமாம்.. எப்புடீ?
  
இந்தத் தகடுகள் பற்றி ஒரு பெரும் ஆய்வே நடத்தலாம்.. இது ஒரு குறியீடுதான்.. 
பாருங்க..பாருங்க.. பார்த்துக்கிட்டே இருங்க..
ஆனா கொஞ்சமும் யோசிச்சிடாதீங்க...

அட அறிவுக் கொழுந்துகளே!
சன் தொலைக்காட்சியின் 
பேய்க்காமெடிக்கு 
ஓர் அளவில்லயா சாமிகளே?

“ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – மிஞ்சும்
அஞ்சும்கூட இருக்குமின்னா 
அதுவும் கூட  டவுட்டு! பட்டுக்கோட்டையார்

இதனால்தான் என்னமாதிரி ரெண்டுங்கெட்டான் சிலர் சொல்கிறார்கள் --
இரவு பத்துமணிக்குமேல் பேய்பிடிக்காத 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள்...
வாராவாரமும் சோதிடம் வெளியிடாத 
பத்திரிகைகளாப் பார்த்து
வாங்குங்கள் வாசியுங்கள்” -என்று


தந்தை பெரியார் வளர்த்த 
பகுத்தறிவுப் பாரம்பரியம் என்ன?
அதில் வளர்ந்தவர்கள் வளர்த்த 
சன் டிவியின் பேய்க் காமெடிகள் என்ன?

நம்ம மக்களை என்ன சொல்ல...
நெஞ்சு பொறுக்குதில்லையே..என்ற பாரதிக்கு
வயது 133!
வழிபட எதையாவது யாரையாவது
தேடி அலைகிறார்கள்..!
உன்னைக் கும்பிட்டு விழவா?’ என்று
சிலைகளிடத்தில் மட்டுமல்ல
சில களைகளிடத்திலும் கேட்டுக்
கூழைக்கும்பிடு போட்டுக்

கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.. நிமிராமலே..

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?”
ஒருபக்கம் கோபமாகவும்,
மறுபக்கம் பாவமாகவும் இருக்கிறது... 
என்ன செய்ய? சிரிச்சித்தான் ஆத்தணும்.
வேறென்ன சொல்ல?
------------------------------------------------

24 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    பேய்கள் காமெடி பதிவு செம ரகளை ஐயா. பகுத்தறிவுப் பாரம்பரியத்தில்
    வளர்ந்தவர்கள் வளர்த்த 
    சன் டிவியின் பேய்க் காமெடிகள் பார்ப்பவர்களைச்
    சிந்திக்க வைக்கும் பதிவு. நான் படித்து விழுந்து விழுந்து சிரித்தது உண்மை (அடி எல்லாம் படலங்க ஐயா). இப்படி நடு ராத்திரியில் வலையில உலாவுற நம்மல இந்த உலகம் என்ன சொல்லுங்க ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம உலா கண்காணிக்கத்தானே-
      எந்தெந்தப் பேயி எந்தெந்த சேனல் ல வருதுன்னு பார்தது
      மக்கள உசார்ப்படுத்த வேணாம்?
      அடிபடாம சிரிச்சா சரியா உணர்ந்து படிக்கலன்னு அர்த்தம்.
      எதுக்கும் மறுபடியும் நல்ல்ல்லா படிங்க.. நா அந்தச் சீருடைய வரச்சொல்றேன்...

      நீக்கு
  2. நான் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் பார்ப்பதே இல்லை. அதிலும் 9.30க்கு மேல் எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் தூங்கப்போய் விடுவேன்! எனவே இந்தக் காட்சிகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கில்லை!

    :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நானும் பார்ப்பதில்லங்கய்யா.. சும்மா அப்படிப் பேயி சாரி போயிக் கிட்டிருந்தப்ப.. கண்ணுல பட்டுச்சா.. சரிதான்னு..

      நீக்கு
  3. ஓரிரு முறை பார்த்துள்ளேன்... நல்ல காமெடி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவர், இராம.நாராயணன் காமெடியும் ரசிப்பேனாக்கும் நான்.. பின்ன பாம்பு டைப்படிக்கிறது.. ஆடு வழிகா்ட்டுறது.. குரங்கு பழிவாங்குறது.. யானை டான்ஸ் ஆடுறதெல்லாம் வேற யாரு காட்டுனா..? என்ன சைடு ஆக்டரா எம்ஜிஆர், ரஜினி, சிவகுமார் எல்லாம் வருவாங்க பாவம்..

      நீக்கு
  4. //ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – மிஞ்சும்
    அஞ்சும்கூட இருக்குமின்னா
    அதுவும் கூட டவுட்டு!” – பட்டுக்கோட்டையார்///
    பட்டுக் கோட்டையார்
    பட்டுக் கோட்டையார்தான்

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,
    ‘சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!’- படித்தேன்...
    பேயே...ஒரு கட்டுக்கதை... இதில் அந்தக் கொலைகாரனின் கழுத்துல
    மந்திரிச்சுக் கட்டுன தகடு... இது பேயைவிட மோசமான ஏமாற்று வேலை. ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...!’
    சோதிடம் வெளியிடாத தொலைக்காட்சி... இதுவும் சன் டி.வி.க்கு பொருந்தாது... வர்த்தகம்தான் முதன்மையாக இருக்கிறது...
    தந்தை பெரியார் வளர்த்த பகுத்தறிவு ? கேள்வி நியாயமானது...சிந்திப்பார்காளா?
    நல்ல பகுத்தறிவுச் சிந்தனையைப் பகிர்ந்தீர்கள்-

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சில வருடங்களுக்கு முன்னால், பக்தி தொடர் எடுத்து எல்லா மக்கள் காதுலையும் பூ சுற்றினார்கள்....
    இப்போது வரும் எல்லா பேய் தொடரிலும் , இப்படி தான் ஒரே template -ஐ வைத்து எடுக்கிறார்கள்... ஐயகோ!!!திருந்த மாட்டேன்கிறார்களே..!!!!

    பதிலளிநீக்கு
  7. அய்யா நம்ம மக்களை என்ன சொல்ல...
    “நெஞ்சு பொறுக்குதில்லையே..“ என்ற பாரதிக்கு வயது 125க்கு மேல்!
    வழிபட எதையாவது யாரையாவது தேடி அலைகிறார்கள்..!
    உன்னைக் கும்பிட்டு விழவா என்று சிலைகளிடத்தில் மட்டுமல்ல
    சில களைகளிடத்திலும் கேட்டுக் கூழைக்கும்பிடு போட்டுக் கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.. நிமிராமலே..
    “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?”
    ஒருபக்கம் கோபமாகவும்,
    மறுபக்கம் பாவமாகவும் இருக்கிறது...
    என்ன செய்ய? சிரிச்சித்தான் ஆத்தணும்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா விதமான கதைகளையும் சொல்லியாச்சு அதான் பேய் கதைகளை பற்றி சொல்ல தொடங்கி விட்டார்கள்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா நல்லா சிரித்தேன்.பேய்க்கு அன்யூனிபார்மா..யோசிக்க வேண்டிய விடயம் தான்...என்ன ஒண்ணு இப்ப குழந்தைகளே பேய்ப்படம் வரைந்து நம்மள பயமுறுத்துங்க..சகோ

    பதிலளிநீக்கு
  10. இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் போறதில்லை!

    ஏமாற மக்கள் தயாராக இருக்கும்போது வேறு என்ன செய்வது!

    பதிலளிநீக்கு
  11. சன் டீவியின் பேய் பயபுள்ள அலும்புக்கு ஒரு அளவே இல்ல, அளவே இல்ல.முடியல.கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  12. பொறுமையாக அமர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததும் பகிர்ந்ததும் எங்களை ஆச்சர்யப்பட வைத்தது, இல்லை பயப்பட வைத்தது.

    பதிலளிநீக்கு
  13. தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை! அதிலும் இந்த பேய்த்தொடர்களில் இந்த டீவியின் அட்டகாசம் தாங்க முடியாது! மக்களின் மூடநம்பிக்கை இங்கே காசாக்க படுகிறது வேறென்ன சொல்லமுடியும்?

    பதிலளிநீக்கு
  14. ஐயோ .. அப்பா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..உண்மைய சொல்லனும்னா அந்த பைரவிய நானும் பாப்பேன்..அதுவும் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டுப் பாப்பேன்.. எங்க பேய் முன்னாடி வந்துடோமுன்னு (ச்சசசசசச..... ரேவதி உன்னயும் காமெடி பீஸ் ஆக்கிப்புபுபுபுட்ட்ட்ட்டடாாாங்களேளளளளள)....இனி எனக்குச் சிரிப்புதான் அப்பா வரும்..பேயப் பாத்து இல்ல.என்னப்பாத்து......

    பதிலளிநீக்கு
  15. அண்ணாமக்கள் மாரினாலும் தொ.கா கள்விடாது போலிருக்கே..

    பதிலளிநீக்கு
  16. பகுத்தறிவா முக்கியம். பணத்தறிவுதான் முக்கியம்

    பதிலளிநீக்கு