லிங்கா – பட விமர்சனம்தாமதமாத்தான் பார்த்தேன். (சமீபத்திய ரஜினி  படங்களின் மீது அவ்வளவு பயம் எனக்கு... பயம் சில நேரம் நல்லதுதானே?)

LATE  IS  BETTER  THAN  NEVER  என்பது ஆங்கிலப் பழமொழி.
LATE  IS  WORST  THAN  FIRST என்பது இந்தப்படம் பார்த்தபின் எனக்குப் புரிந்தமொழி.

என்ன திடீர்னு ஆங்கிலம் னு கேக்குறிங்களா? இந்தப் படத்தோட விளம்பரம் பெரும்பாலும் ஆங்கிலத்துல தான இருக்கு?!
(மலேயாவுல கூட!)

(அப்பாடா நாம மலேயா போனத எப்படியோ சொல்லியாச்சு!)

கோடியில் புரளும் வியாபாரப் படமாம் சாமிகளே!
நமக்குத் தெரிஞ்சது ரெண்டே கோடிதான்!
ஒன்று நம்ம தெருக்கோடி ரெண்டு நம்ம தனக்கோடி!

அதிகமில்லை ஜென்டில் மேன் அன் வுமன்..
ரெண்டுவரி ரெண்டே வரி..

எனது ரெட்டைவரி விமர்சனம் –
“கேக்குறவன் கேணையா இருந்தா,
கே.ஆர்.விஜயா கொண்டையில கே.டி.வி தெரியுமாம்!

அவ்ளோ தான்!
-------------------------------------
நகைச்சுவையாக லிங்கா விமர்சனம் பார்க்கணும்னா,
இந்த இணைப்பை நன்றியுடன் சொடுக்கவும் -

------------------------------- 

31 கருத்துகள்:

 1. மலேசியாவில் இருந்து திரும்பியதும் பிஸியா ஐயா...
  எங்கள் வலைப்பக்கம் எல்லாம் தாங்கள் இன்னும் வரவில்லையே...?
  தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே... வாசிக்கவில்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர்ரேன்...வர்ரேன்.. மலேசியாவிலிருந்து வந்தும் இன்னும் பழைய பாக்கி வேலைகள்.. அத்தோடு தொடரும் நிகழ்ச்சிகள்... மன்னியுங்கள் நண்பரே!. விரைவில் பதில் இடுவேன்.. நன்றி

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா.
  ஆங்கிலத்தில் சொல்லிய பழமொழியும் புது மொழியும் அருமையாக உள்ளது தாங்கள் பதிவு செய்த இணைப்பின் வழிபார்(க்)கிறேன்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைப்புத்தான் உண்மையில ரசனையானது. நம்முடையது ச்சும்மா... ஒரு இதுக்காகத்தான். நன்றி ரூபன்.

   நீக்கு
 3. விமர்சனம் பார்த்தேன் கெக்கே. பிக்கே என்று சிரித்து மகிழ்ந்தேன்.

  லிங்கா sorry லிங்க் கொடுத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லிங்கா ..சாரி..
   அட! இது நான் எழுதுன ரெண்டுவரி விமர்சனத்தைவிடவும்
   சுருக்கமான விமர்சனமா இருக்கே?

   நீக்கு
 4. பதில்கள்
  1. மொத ஓட்டுக்கு நன்றி ஆனா.. படிச்சித்தானே போட்டீங்க..? (படிச்சிருந்தா போட்டிருப்பீங்களா னு ஒரு இது..)

   நீக்கு
 5. ***LATE IS WORST THAN FIRST ***

  "late is worse than first" னு சொல்லணும்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! டிகிரி ஆஃப் கம்பேரிசன்ங்களா..? தேன் போட்ட மேட்டர்? ஒர்ஸ்ட் போட்டா டு போடணும்ல? இங்கிலீஷ் விளம்பரத்தை இங்கிலீஷில் அடிக்கப்போயி... (புலவா அடச்சே..நிலவா? உனக்கு இது தேவையா? )
   ஆமா.. உங்க பதிவுல பின்னூட்டம் போட யோசிக்க வைச்சிட்டீங்களே? நல்ல வேளை தொடர்ந்து எழுதுவது குறித்து மகிழ்ச்சி.. “போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றதட்டும்“தான் நம்ம கருத்து. நன்றி வருண்.

   நீக்கு
  2. ஹா....ஹா...ஹா....
   ரஜினி ரசிகர் மன்றத்தின் யு.எஸ்.கிளையின் தலைவர் என்ன பின்னூட்டம் போடப்போறாரோன்னு படிக்கும் போது கொஞ்சம் மெர்சலா இருந்தது...அப்படா!! கிராம்மர் கரக்ஷன் மட்டும் பண்ணிட்டு போட்டார்:))

   நீக்கு
 6. ஐயா!நீங்கள் பார்த்து விட்டு விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் .நான் பார்க்காமலே எழுதிவிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா முழுசாப் பாத்தேன்னு சொன்னனா? (பாக்க உட்டாத் தானே? டபுள் ஆர் -ரஜினி, ரவிக்குமார்- சேந்து முதல் சொதப்பலாமே? ரொம்ப சந்தோஷம்)

   நீக்கு
 7. பதில்கள்
  1. நன்றி மது. (இங்கிலீஷ்ல சொல்லலாம்னுதான் நெனச்சேன். இந்த வருண் வேற பாக்குறாரா? அப்பறம் அந்தப்பக்கம் மைதிலி வேற முழிக்கிதா.. எதுக்குடா சாமீனு..) ரெண்டாவது நன்றி மது.

   நீக்கு
  2. ஹா....ஹ...ஹா...கிடைச்சா கேப்ல எல்லாம் சிக்சர் வெளுக்குறீங்க அண்ணா!

   நீக்கு
 8. கே என்பதால் கே ஆர் விஜயாவா...சகோ....அந்த படத்த பார்க்க வேற செய்தீர்களா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளே கால்நடையாப் போறாராம்.. பூசாரி புல்லட் கேடடாராம்.
   இதுமாதிரி அப்பப்ப உருவாக்கும்போதே எதுகை மோனையோட உருவாகிரும்.. (படத்தை முழுசா யார் பாத்தா?)

   நீக்கு
 9. ஹாஹா அண்ணா..இரட்டை வரி விமர்சனம் :)))
  மலேயா போய் வந்து ரொம்ப ஜாலியா இருக்குற மாதிரி தெரியுது அண்ணா..ஒரே நகைச்சுவை.. :)
  நான் லிங்கா பார்க்கவில்லை, பார்க்க மாட்டேன்.. :)
  அமிர்கானின் PK பாருங்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களுரில் இருந்து வந்த என் தம்பியும் சொன்னான்,
   பெங்களுரில் இருந்து யுஎஸ் சென்ற என் தங்கையும் சொல்கிறார் விரைவில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் பா. நன்றி

   நீக்கு
 10. அண்ணா
  செம trendy ஆ விமர்சனம் போட்டுருக்கீங்க:) என் தம்பி என்ன சொன்னான் தெரியுமா காட்டுறவன் காதை தூக்கி கட்டினா, இடிக்கிறவன் உலக்கையில் இடித்தானாம்.படம் தொடங்கும்போது சொன்னான்.ஹெலிகாப்ட்டர் பைட் அப்போ எனக்கு பழமொழி புரிஞ்சது:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபைட் மட்டுமில்லம்மா.. பாட்டு சீன்கள் கூட.. அவர் என்ன மந்திரவாதியா? ராமராஜனின் அம்மன் படம்னா முன்முடிவு நம்மைக் காப்பாற்றும்.. இவர்படம் எப்பவும் இப்படித்தான் என்றாலும் சங்கரின் எந்திரனில் ஒரு நியாயம் தெரிந்தது. இது ரொம்ப ரொம்பவே ஓவர்னு தோணிச்சு அதா்ன... நன்றிய்யா.

   நீக்கு
 11. வெளிநாட்டுப்பயணம் முடித்த தாங்கள் ஒரு மாற்றத்திற்காக இப்படம் பற்றிய பதிவை இட்டுள்ளீர்கள் போலுள்ளது. படம் பார்க்க ஆவலாக உள்ளவர்களை தங்களது பதிவு காப்பாற்றும். தங்களது பதிவில் ஆங்கில பழமொழியை அதிகம் ரசித்தேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்பவுமே இப்படித்தான். குமுதம் படித்துக்கொண்டே நம்மாழ்வார் பற்றிய கருத்தரங்கம் பேசப் போவேன்... ஒரே போக்கில் போகக் கூடாதுல்ல..அப்பப்ப சில மடைமாற்று..! அது நம்மை நாமே ரெஃப்ரெஷ்(?) செய்துகொள்ள உதவும் என்பது சரியோ தவறோ என் அனுபவக் கருத்து. நன்றிங்க அய்யா.

   நீக்கு
 12. நம்ம பதிவு "லிங்கா...? எப்படி...!" வாசித்தீர்களா...?

  Linkகா


  பதிலளிநீக்கு