வரும்
01-01-2015 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல,
காலை 9மணிக்கு, உங்கள்
வீட்டுக்கு வருகிறேன்..
கலைஞர் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகவுள்ள
“சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும்
தேவை...“
“கல்வி வளர்ச்சியா?“ “தொழில்
வளர்ச்சியா?”
எனும்
நகைச்சுவை - சிந்தனைப் பட்டிமன்றத்தில்,
நகைச்சுவைத் தென்றல்,
கலைமாமணி
திண்டுக்கல் ஐ.லியோனி
அவர்களின் தீர்ப்பில்
வெற்றிபெற்றது எந்த
அணி?
புதுக்கோட்டை நா.முத்துநிலவன்
தலைமையிலான
“கல்வி வளர்ச்சி“ அணியா?
மதுக்கூர் இராமலிங்கம் தலைமையிலான
“தொழில் வளர்ச்சி” அணியா?
சின்னத்திரையில்
பாருங்கள்...
01-01-2015 காலை 9-00மணி
கலைஞர் தொலைக்காட்சி
இனிய வலை நட்பூக்களுக்கு
எனது இனிய
எனது இனிய
ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துப் பூக்கள்!
வாழ்த்துப் பூக்கள்!
--------------------------------------
வாழ்த்து அட்டைக்கு நன்றி - எழுத்து.காம்.
வாங்க, வாங்க,
பதிலளிநீக்குவருகிறேன்.. வாழ்த்துகளுடன், நன்றி வணக்கம்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நிச்சயம் பார்க்கிறோம்..தங்களின் பேச்சு திறனை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.. அந்த பாக்கியம் போதும்..ஐயா.. வாழ்க வளமுடன்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பார்த்தோம், நெகிழ்ந்தோம், மகிழ்ந்தோம்.
நீக்குஆனால், நிறையப் பேசமுடியாதபடி நேரச்சிக்கல் நேர்ந்ததை எண்ணி இன்றும் வருந்துகிறேன் நண்பா.. வருகைக்கு நன்றி.
ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம்.
பதிலளிநீக்குவருக!வருக!புத்தாண்டில் இனிய தமிழ் பேச்சால் இல்லம் நிறைக்க.
பதிலளிநீக்குஉங்கள் அறிமுகத்திற்கு முன்னாள் உங்கள் பட்டிமன்றங்களை அன்றே பார்த்து விடுவேன். சமீப காலங்களில் டியூபில்தான் பார்க்கிறேன்.இம்முறை கட்டாயம் தொலைக்காட்சியிலேயே பார்த்து விடுவேன்.
காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...
வாங்க வாங்க ..மகிழ்வுடன் காத்திருக்கின்றோம் சகோ..
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குபுத்தாண்டு அன்று காலை எங்கள் வீட்டுக்கு வருகைதர இருக்கின்ற தங்களை... கலைஞர் தொலைக்காட்சியின் கதவினைத் திறந்து வைத்து வரவேற்கிறோம்.
வருக! வருக!!
பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஒ! புத்தாண்டு ட்ரீட்டா?? ஓகே ,ஓகே:) thanks அண்ணா!
பதிலளிநீக்குவரவேற்க ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள்.
பதிலளிநீக்குஎங்காவது இணையத்தில் பிடிக்கப் பார்க்கிறேன் அண்ணா
பதிலளிநீக்குஅன்பின் முத்து நிலவன்
பதிலளிநீக்குநாளை காலை எங்கள் வீட்டிற்கு வரும் தங்களை முழு மனதுடன் வரவேற்கத் தயாராய் இருக்கிறோம். கலைஞர் தொலைக் காட்சியில் கண்டு மகிழும் நல்லதொரு சந்தர்ப்பத்தினை நழுவ விடாமல் காண இருக்கிறோம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நிச்சயம் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறோம், ஐயா.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஊடகங்கள் வெறும் பொழுது போக்க அல்ல.. பழுது நீக்கவே எனும் குறிக்கோளோடு சமூக மாற்றத்திற்கான நல்ல தலைப்பி்ல் தங்கள் ஊடக இலக்கியப் பணி அமைவது கண்டு பெருமகிழ்வு. நெடிதுற தோழமையான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகண்டிப்பாக புத்தாண்டு தினத்தில் தங்களை கலைஞர் டி.வி.யில் எங்கள்வீட்டு வரவேற்பரையில் காண்போம். நன்றி அண்ணா‘
பதிலளிநீக்குஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அண்ணா இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம் என்று நினைக்கத்தோன்றியது. வேலை மற்றும் சம்பாதிக்க என்று இல்லாமல் அறிவை வளர்க்க படிக்க வேண்டும். என்று சொன்னதும் சிறப்பு. இறுதியாக படி...படி ...படி பாவேந்தர் பாடல் வெகு சிறப்பு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅண்ணா கலக்கீட்டீங்க பாடலோடு தொடங்கும் என எதிர் பார்த்தேன்
பதிலளிநீக்குரயிலா? காரா? என்ற கேள்வி திருக்குறளில் காலடி , சமுதாய முனேற்றம்
அருமைஅண்ணா.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குசமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை..
“கல்வி வளர்ச்சியா?“ “தொழில் வளர்ச்சியா?” புத்தாண்டுப் பட்டிமன்றம் பார்த்தும்... கேட்டும்... மகிழ்ந்தோம்.
கவிஞர் நா.முத்து நிலவன் அய்யா பட்டிமன்ற முதல் பேச்சாளராக ஆரம்பித்து...‘ படிப்படிப்யாக என்று தொடங்கி படிப்பு இல்லையென்றால் தொழில் வளராது. கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவதெப்படி? என்ற கேள்வியோடு ...நாடு கல்வி வளர்ச்சியடைந்தால்தான் சமத்துவம் வரும் நல்ல சிந்தனையை விதைத்தீர்கள். வள்ளுவரின் ஒன்றரை முக்கால் அடியை நினைவுகூர்ந்து... நாம் காலடி பதிக்க அவர் விட்டுச் சென்றததை கூறியது நன்றாக இருந்தது.
பாரதிதாசனின் ‘படி!படி!படி! நூலைப்படி- சங்கத்தமிழ் நூழைப்படி-முறைப்படி-நுலைப்படி... காலையில் படி...கடும்பகல் படி மாலை, இரவு பொருள்படும்படி’ கல்வியின் முக்கியத்துவத்தை பாரதிதாசனின் வரிகளைப் அருமையாகப் பாடி நிறைவு செய்தீர்கள்.
பிறகு வந்த அஞ்சலி அவர்களும் ... ‘காலை எழுந்தவுடன் படிப்பு... கல்வியில்லா பெண்கள் களர் நிலம்... அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்று ...’என்று பாரதி வரிகளைத் தொட்டுப் பேசினார்.
பேராசிரியர் அன்பும் ‘பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும்’என்று பாரதியின் பாட்டைத் தொட்டுக் காட்டினார்.
பெரிய அம்மை... சின்ன அம்மை நோய் இப்பொழுது நாட்டில் இல்லை என்பதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்னார். தஞ்சையில் சாகுபடி செய்பவர்கள் சாகும்படி இருக்கிற அவலத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கல்வி தன்மானம்...தொழில் வருமானம் என்று தன்னுடைய அணிக்கு வலிமை சேர்த்து தன் பங்கை அருமையாக நிறைவு செய்தார்.
‘தொழில் வளர்ச்சி’ என்ற அணியில் பேச வந்த கோவை தனபால்...ஜி.டி.நாயுடு, அம்பானி, போன்றோர் கல்வி கற்று முன்னேறவில்லை... தொழில் முன்னேறியவர்கள் ... கல்வி என்பது பாதி கிணறு தாண்டுவது போல... என்றார். முழுக் கிணறு தாண்டுவது என்பது தொழில் வளர்ச்சிதான் என்று அவரும் தனது அணிக்கு அணி சேர்த்தார்.
அதே அணியில் கிருஷ்ணகிரி வேதவல்லி 216 அடி உயரம் உள்ள தஞ்சை கோயிலைக் காட்டி கல்வியில்லா காலத்தே அந்த தொழில் நுட்பத்தை வியந்தார்.
பிறகு வந்த மதுக்கூர் இராமலிங்கம் வாழ்க்கையை பூந்தோட்டமாகவும்...உழைப்பு அதில் தேனியாகவும் இருக்க வேண்டும் என்றும்... கரிகாலன் கட்டிய கல்லணை எடுத்துக்காட்டினார். நாம் படிப்பது வேலைக்காக... தொழிலுக்காக... தொழிற்சாலையால் நாடு வளரும்... வளம் பெரும் என்று நன்றாக வாதிட்டார்.
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் மலேசியப் பயணத்தில் தஞ்சை மண்ணுக்குச் சொந்தக்காரர்... தாய்மொழிக்காரர் விமான நிலையத்தில் கடைசிநேரத்தில் உதவியதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கரப்பான் பூச்சி மல்லாக்க படுத்துவிட்டால் எழுந்திருக்க இயலாது...! என்று நக்கலடித்தது நகைச்சுவையாக இருந்தது.
பெரியாரும்... பேரறிஞரும் புகைவண்டியில் பயணிக்கும் பொழுது ஒரு பார்வையற்றவராக (நடித்து) பிச்சைகேட்டவருக்கு பிச்சைபோட்டது...அதை பெரியார் கண்டுபிடித்தது... அவனது நடிப்புக்கே காசு போட்டேன் என்று அண்ணா கூறியது இருவரையும் படம் பிடித்துக் காட்டியது நன்றாக இருந்தது.
பிறகு அந்த அண்ணா அவர்கள் பராசக்தியில் சிவாஜி நடிக்க முன்மொழிந்தது நடிப்பினமீது அவருக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டியது.
அம்பேத்கர் முதல்...அண்ணா... வரை கையில் புத்தகத்தோடுதான் சிலையாக இருக்கிறார்கள். காமராசர்கூட குழந்தைகளோடுதான் இருக்கிறார் என்று இறுதில் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை...“ “கல்வி வளர்ச்சி” என்று தீர்ப்பளித்தது நன்றாக இருந்தது.
நகைச்சுவை குறைந்தும் ... லியோனியின் பாடல்கள் கேட்க முடியாதது மனதுக்கு குறையாகவே இருந்தது.
புத்தாண்டு தினப் பட்டிமன்றம் இரசிக்கும்படி அமைந்திருந்தது.
-நன்றி.
அன்புள்ள ஐயா,
பதிலளிநீக்குவணக்கம் ஐயா,
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தங்களின் இன்றைய பட்டிமன்றப்பேச்சினை தொலைகாட்சியில் கண்டு கேட்டு ரசித்து மகிழ்ந்தேன்.
படிப்படியா ..... படி, படி, படி, படி.
திருக்குறளின் 1-3/4 வரிக்குப்பிறகு 1/4 வரி அவர் வெற்றிடமாக விட்டதன் நோக்கம் .....
என அனைத்துமே மிக அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
http://gopu1949.blogspot.in
அன்பின் முத்து நிலவன்
பதிலளிநீக்குஅருமையான பட்டி மன்றம் - பேச்சாளர் அனைவருமே தங்கள் பணியினைச் செவ்வனே செய்தார்கள் - போட்டி சிறந்து விளங்கியது - நடுவரின் பேச்சினை இரசித்தோம். -
பலப்பல எடுத்துக் காட்டுகள்- அனைத்துமே அருமை
இனி மேல் நடக்கும் எந்த ஒரு விழாவிலும் ஒரு சிறிய பட்டி மன்றத்தினையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா