பொதிகைத்
தொலைக்காட்சி
நா.முத்துநிலவன் நேர்காணல்
நா.முத்துநிலவன் நேர்காணல்
மறுஒளிபரப்பு-
(அடப்பாவமே! எத்தன தடவை ஒளிபரப்பினாலும் அதுதானே வரப்போகுது? வருத்தம் தான் வருமே தவிர திருத்தம் எதும் வருமா என்ன?னு கேக்குறது யாருப்பா மதுரைத் தமிழனா?)
நமது
வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தது போல பொதிகைத் தொலைக்காட்சியில் நமது
நேர்காணல், அந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை. அதற்கு
அடுத்தவாரம் 20-12-2014, சனிக்கிழமை
மாலைதான் ஒளிபரப்பானது.
நானும்
அன்று காலைதான் மலேசியாவிலிருந்து சென்னை வந்திருந்தேன். பொதிகைத் தொலைக்காட்சியில் எனது
நேர்காணல் வந்துகொண்டிருந்த அதே(மாலை5.30) நேரத்தில், கலைஞர்
தொலைக்காட்சியின் ஆங்கிலப் புத்தாண்டு தினச் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள
பட்டிமன்ற ஒளிப்பதிவு நடந்துகொண்டிருந்ததால் நானும் பொதிகை நேர்காணலைப் பார்க்க
முடியவில்லை! (அடுத்தநாள் அதாவது இன்று, புதுக்கோட்டை வந்து, பதிவு செய்து வைத்திருப்பதாக நண்பர் தங்கம் மூர்த்தி சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தேன். நாளைதான் வாங்கிப்போட்டுப் பார்க்க வேண்டும்)
பொதிகைத்
தொலைக்காட்சியின் இலக்கியப் பகுதிப் பொறுப்பாளர் திரு பன்னீர் அவர்களிடம்
கேட்டேன். அவர், “நீங்கள் மலேசியா போயிருப்பதாக அறிந்துதான்
அந்தவாரம் ஒளிபரப்பவில்லை, நீங்கள் வந்துவிடுவீர்கள் என்று
தெரிந்துதான் இந்தவாரம் ஒளிபரப்ப ஏற்பாடுசெய்தேன்” என்றார்!
இதே நேர்காணல் வரும்
23-12-2014
செவ்வாய்க் கிழமை நண்பகல் ஒருமணிக்கு மீண்டும்
ஒளிபரப்பாக உள்ளதையும் தெரிவித்தார்.
எனவே, நேற்றுப் பார்க்காத நண்பர்கள் -
23-12-2014 செவ்வாய்க்கிழமை
மதியம் 1.00 முதல் 1.30வரை
மறுஒளிபரப்பாகவுள்ளது
நிகழ்ச்சியை அவசியம் பார்த்துவிட்டு, நமது
வலைஇலக்கியம் பற்றியும் அதில் நான் கருத்துத்தெரிவிப்பதைப் பற்றிய உங்கள்
கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிட வேண்டுகிறேன்.
------------------------------------------
(விடமாட்டம்ல? “அடடே
அப்படியா? முந்தியே தெரி்ஞ்சிருந்தாப் பாத்துருப்பேனே?“ என்று
சொல்லிக் கழன்றுகொள்ள நினைத்தவர்களை மாட்டிவிட்டம்ல..?
விடுவமா? எப்புடீ? “அப்பாடா
ஆள் மலேசியா போனதுல 20நாள் நிம்மதியா இருந்தோம்..
வந்துட்டான்யா.. வந்துட்டான்..னு அங்க ம.த. மைண்ட் வாய்ஸ் ஏதோ கேக்குதுபோல...?)
-------------------------------------------------------------------------
ஹா... ஹா... கடைசிப் பாராவுல ஐயா மலேசியாவுல அடக்கி வச்சிருந்ததெல்லாம் எடுத்து விடுவேனுல்லன்னு சொல்லமா சொல்ற மாதிரி வார்த்தைகள் சலங்கை கட்டி ஆடுதுல்ல...
பதிலளிநீக்குஇங்க பார்க்க வாய்ப்பில்லை ஐயா... தாங்கள் இணைப்புக் கொடுக்கும் போதுதான் பார்க்க முடியும்... இணைப்பிற்காக காத்திருக்கிறோம் ஐயா...
மலேசியப் பயணம் இனிதாக முடிந்தது சந்தோஷம் ஐயா... துபாய் பக்கம் எல்லாம் பயணம் இல்லையா?
நண்பர்களைச் சந்தித்தீர்களா?
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதாங்கள் மலேசியாவிலிருந்து வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை முடித்து தாயகம் திரும்பி... அன்றைய தினமே கலைஞர் தொலைக்காட்சியின் ஆங்கிலப் புத்தாண்டு தினச் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்ற ஒளிப்பதிவில் கலந்து கொண்டு புதுகை திரும்பி இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தை அவசியம் எப்பொழுதும் பார்ப்பேன். இந்த ஆண்டு தங்களுக்காக சிறப்பாக பார்ப்பேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் நேர்காணல் பொதிகையில் 23-12-2014 செவ்வாய்க்கிழமை மதியம் ஒருமணிக்கு மறுஒளிபரப்பாகவுள்ள தெரிவித்து இருக்கிறீர்கள். பார்ப்பதற்கு முயற்சி செய்கிறேன்.
தங்களின் மலேசியப் பயண அனுபவத்தை வலைத்தள அன்பர்களுக்கு விரிவாக எழுத அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
வாங்க வாங்க நீங்க இல்லாம வலைத்தளமே பொழிவிழந்து போனது சகோ..
பதிலளிநீக்குஎங்கள் பகுதியில் பொதிகை சரியாக வருவதில்லை . 13.12.2014 அன்று இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பிற்கு முயற்சி செய்தேன். கிடைக்கப் பெறவில்லை . கடந்த ஐந்து நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் சீரடி பயணம் மேற்கொண்டிருந்தேன். இன்றுதான் (21.12.2014)திரும்பினேன்.
பதிலளிநீக்குசெவ்வாய் அலுவலக நாளாக இருப்பதால் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். நண்பரிடம் இருந்து வீடியோ பெற்று யூ ட்யூபில் பதிவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணா தங்களின் பயணம் சிறப்பாக இருந்தது எண்ணி மிக்க மகிழ்ச்சி உடல் சோர்விற்கு இடையிலும் வீதிகலைக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கு நன்றி. எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு கண்டிப்பாக நான் 23.12.2014 அனறு மறு ஒளிபரப்பினை பார்த்துவிட்டு கருத்து பதிவு செய்கிறேன். விடமாட்டமுள்ள.......................
பதிலளிநீக்குஅண்ணா
பதிலளிநீக்குஅன்று லாஸ்ட் வொர்கிங் day:(((( எப்படியும் you tubeல போடுவீங்களா....அப்போ பார்த்துக்கிறேன்:)))
வருக வருக... இனி மேல் தான் நிறைய வேலைகள் உள்ளன... கவனிப்போமா...?
பதிலளிநீக்குமலேசியப் பயணம்இனிதான் நிறைவுற்றதில் மகிழ்ச்சி ஐயா
பதிலளிநீக்குதங்களின் தொலைக் காட்சி நிகழ்ச்சியினை முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதுபோல், பு ட்பூப்பில் ஏற்றினால பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
தம +1
பதிலளிநீக்குவந்துட்டான்யா.. வந்துட்டான்...//நிறைய பரிசுகள் கிடைக்குமே!!!!!
பதிலளிநீக்குவருக வருக செய்வாய் பார்த்துவிடலாம்
பதிலளிநீக்குஇந்தப் படம் குறித்து மகா அண்ணாத்தே சொல்லிக்கொண்டு இருந்தார்.. அருமையாக இருக்கிறது ..
பதிலளிநீக்குமகா அண்ணாவிற்கு ஒரு அப்ளாஸ்
நாங்கல்லா யாரு.........? அண்ணாஅருமையாகவும் பசுமையாகவும் காட்சி
பதிலளிநீக்குஇருந்தது நடந்து கொண்டே மிக அழகாக விளக்கிச்சொன்னீர்கள் Rain rain ஐ go away செய்ததன் விளக்கம், சைக்கிள்.....பாடல்கள் தாளத்தோடு
பாடியவிதம் வலைத்தளம் பற்றிய விளக்கம் அனைத்தும் அருமையாகச் சொன்னீர்கள்.மொத்தத்தில் அருமையாகவும் எங்களுக்கெல்லாம் பெருமையாகவும் இருந்தது
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. காணொளிக் காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்தால் அனைவரும் கண்டு களிக்க வசதியாக இருக்கும்.
நன்றி.
பதிவு செய்த காணொளியைப் பகிர முடியுமா அண்ணா?
பதிலளிநீக்கு