“மாற்றுக் கல்விக்கான விதை”
தமிழகத்தில்
கல்வி பற்றி விவாதங் களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற
தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும்
வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை
நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும்
அறியப்பட்ட கவிஞர் நா. முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது.
நேற்றைய
- இன்றைய கல்வி நிலை, கல்வி முறைகள், கற்றல், கற்பித்
தல் செயல்பாடுகள், அவற்றினால் நிகழ்ந்துள்ள சமூகத் தாக்கங்கள் என
நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுய சிந்தனைகளோடு நம்மிடம்
கலந்துரை யாடுகின்றன. சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை
விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக்
கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம் என ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும்
தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பு கின்றன. கல்வியாளர்கள்
மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண
வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய மாற்றுக்கல்விக்கான சிந்தனை விதைப்பே இந்நூல்
--- மு.முருகேஷ்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
-நா.முத்துநிலவன்
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014
பக்கம்: 156 | விலை: ரூ.120/-
தொடர்புக்கு: அகரம் பதிப்பகம் - 04362 239289
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014
பக்கம்: 156 | விலை: ரூ.120/-
தொடர்புக்கு: அகரம் பதிப்பகம் - 04362 239289
Keywords: முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே,
Topics: இலக்கியம்|நூல் அறிமுகம்|
------------------------------------------------
நன்றி -http://tamil.thehindu.com/general/literature/ நாள்-27-12-2014
வாழ்த்துகள் ஐயா! முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே கட்டுரையை பலமுறை படித்திருக்கிறேன். அந்த ஒரு கட்டுரையை யாவது பெற்றோர் நிச்சயம் படிக்க வேண்டும்.இதில் இடம் பெற்றுள்ள எல்லா கட்டுரைகளுமே வலைப்பூவில் வெளியிட்டவையா .
பதிலளிநீக்குநன்றி நண்பர் முரளி, அதில் உள்ள அனைத்துகட்டுரைகளுமே வலைப்பக்கத்தில் வந்தவை அல்ல. ஒரு சில கட்டுரைகளாவது நூல்வழி வாசிப்போர்க்கு மட்டுமே கிடைக்கட்டும் என்று விட்டு விட்டேன். அதில் உள்ள நம் வலைப்பக்கத்தில் வந்த “எனது ஆசிரியப்பணியில் சில நல்ல நாள்கள்“ கட்டுரையை மட்டுமாவது ஆசிரிய நண்பர்கள் படிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவற்றை எல்லாரும் படிக்கலாம்.நன்றி
நீக்குமிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
நன்றி அய்யா. வரும் 10ஆம் தேதி மாலை, தஞ்சையில் சந்திப்போம்.
நீக்குதம 2
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா.
நீக்குநூல்விமர்சனத்தைக் காலையிலே கண்டேன் அய்யா!
பதிலளிநீக்குநூல் நுவலும் கருத்துகள் கல்வி மற்றும் பாடத்தைத் திட்டமிடுவார் பார்வையில் படட்டும்.
பகிர்விற்கு நன்றி!
த ம 3
இரட்டை நன்றி விஜூ
நீக்குஇந்துவில் படித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்கு“மாற்றுக் கல்விக்கான விதை” என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழில் - மு.முருகேஷ் அவர்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். அன்னாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய நூல் என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருந்தார்கள்.
அனைவரும் வாசிக்க வேண்டிய இந்த நூலை அரசு நூலகங்களில் கிடைக்க ஆவன செய்தால் தமிழகம் மிகுந்த பலனைப் பெரும் என்பதில் அய்யமில்லை!
முயற்சி திருவினை ஆக்கும்!
நன்றி.
நிச்சயம் நூலகங்களில் கிடைக்க ஆவன செய்வார் நமது பதிப்பாசிரியர் திரு கதிர்மீரா. (பிரபல வானம்பாடிக்கவிஞர் மீரா அவர்களின் புதல்வர்) நூல்வெளியான ஒரே மாதத்தில் நூல்கள் விற்றுத்தீர்ந்தது பற்றி மகிழ்ந்த அவர் உடனே மறு அச்சும் (சில திருத்தங்களுடன்) கொண்டுவந்துவிட்டார். இந்தநூலில் ஒரு கட்டுரையை நீக்கி, எழுத்துகளைச் சற்றே பெரிதாக்கி யிருக்கும். அவருக்குத்தான் எனது நன்றியை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.
நீக்குத.ம. 4
பதிலளிநீக்குநன்றி அய்யா. தி இந்துவில் வந்ததால் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக திரு கதிர்மீரா பேசினார். உங்களைப் போன்றோரின் அன்புக்கு நன்றி -இன்னும் நன்றாக எழுதுவதுதானே? இய்ன்றவரை செய்வேன்.
நீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குநூல்வெளியான ஒரே மாதத்தில் நூல்கள் அணைத்தும் விற்றுத்தீர்ந்து உடனே மறு அச்சும் கொண்டுவந்தது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
தங்களின் பணிகளுக்கிடையிலும் பின்னூட்டத்திற்கும் பதில் எழுதுவது கண்டு பிரமித்துப்போகிறேன்.
ஓய்விலும் ஓய்வின்றி உழைக்கும் தங்களின் உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
-நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.
நீக்குஅன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணககம். விமர்சனம் படித்துவிட்டேன். புத்தகம் படிக்கவேண்டும்.
வரும் 10ஆம் தேதி தஞ்சைக்கு வருவேன். தங்களை நேரில் சந்திக்கத் தங்கள் இல்லம் வர முயல்வேன். அதற்கு முன்னர் நிகழ்ச்சி உறுதியானதும் தங்களுடன் பேசுவேன் அய்யா.நன்றி
நீக்குஉண்மையில் இந்த புத்தகம் இன்னும்,இன்னும் பல மகுடங்கள் சூடும் அண்ணா!! மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா!
பதிலளிநீக்குநூல்பற்றி, வலையில்வந்த முதல் அறிமுகம் உன்னுடையது தானே மைதிலி? நான் நல்லவற்றை மறப்பதே இல்லை.
நீக்குஒரு நல்ல புத்தகத்துக்கு அழகான அறிமுகம் ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
ஆம் நண்பரே. நன்றி.
நீக்குஎனது வாழ்த்துகள் நண்பரே....
பதிலளிநீக்குநன்றி நண்பர் கில்லர்ஜி
நீக்குஅய்யா,
பதிலளிநீக்குசமூக அக்கறையுடன் எழுதப்பட்ட உங்களின் நூலை வாசிக்க மிக ஆவலாய் உள்ளேன். நூலினை வாங்குவதற்கான விபரங்களை கொடுத்தமைக்கு நன்றி.
சாமானியன்
எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
நன்றி நண்பரே. பதிவைப் படித்துவிட்டு அவசியம் எழுதுவேன்.
நீக்குஎன்னை நீண்ட கருத்தூட்டம் எழுத வைத்துவிட்டீர்கள். உங்களின் வாசிப்பு ருசி மிக அரிதானது நண்பரே! உங்களின் தமிழ்நாட்டு முகவரி தெரிவித்தால் எனது நூல்களை அனுப்பி வைப்பேன். அல்லது இங்கிருந்து அங்கு வரும் உங்கள் நண்பர்கள் முகவரிக்கு அனுப்பலாம் எனில் அன்புடன் தெரிவித்து உதவுங்கள் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள் சகோ..
பதிலளிநீக்கு