அம்மா மீண்டும் முதல்வரானால்……..…!!!!!!!!! (சும்மா ஒரு கற்பனைதான்!)

(1)  தமிழ்நாடு அம்மா நாடு என்று பெயர்மாற்றம் பெறும்.
(2)  தமிழர் நெற்றிகளில் அம்மா ஸ்டிக்கர் இலவசமாக ஒட்டப்படும்!
(3)  அனைவருக்கும் வேலைவாய்ப்பு - ஸ்டிக்கர் ஒட்டும் துறையில்
(4)  அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படாத பொருள்கள் தடைசெய்யப்படும்.
(5)  அம்மா வீடுகளைச் சேர்ந்த அம்மா பள்ளிகளில் படிக்கும் அம்மா பிள்ளைகள் அனைவரும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அம்மா புத்தகங்களை அம்மா புத்தக மூட்டையில் வைத்து, அம்மா சைக்கிளில் ஏறி, அம்மா ரோட்டில் வருவதை அம்மா ஆசிரியர்கள் வரவேற்க, அம்மா வகுப்பில் அம்மா கணினியில் அம்மா தேர்வெழுத, அம்மா மதிப்பெண் சும்மா தரப்படும்.

(6)  ஆசிரியப் பயிற்சியில், ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயப் பாடமாகும்.
(7)  அனைத்துக் கல்விநிறுவனங்கள் மற்றும் அம்மா அரசு மற்றும் அம்மா தனியார் நிறுவனங்களும் அம்மாபெயருடனே தொடங்கும்
(8)  வேகமாக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கேற்பவே பணிஉயர்வு வழங்கப்படும்.
(9)  தோப்புக்கரணம் போடத்தெரிவது அரசுப்பணிக்கு அடிப்படைத் தகுதியாக்கப்படும், குட்டிக்கரணம் போடுவது கூடுதல் தகுதியாகும்.
(10) எவ்வளவு நேரம் காலில் விழ முடியுமோ அவ்வளவு நேரம்மட்டுமே அமைச்சர் பதவி இருக்கும். எழுந்தவர் முன்னாள் அமைச்சராவார்.
(11) செல்போன், டிவி அனைத்தும் ரிமோட் கண்ட்ரோலில் அம்மா என்றால் மட்டுமே ஆன் ஆகும் அழுதால் மட்டுமே ஆஃப் ஆகும். (அதற்காக சீரியல் பார்த்து அழுதால் முடியாது, அம்மா என்று சொல்லிக்கொண்டே அழவேண்டும் அப்பத்தான் ஆஃப் ஆகும்!)
(12) அம்மா என்றால் அன்பு என்ற பாடலை மட்டுமே இனிமேல் சூப்பர் அம்மா சிங்கர் உள்ளிட்ட அம்மா டிவிபோட்டிகளில்  பாடவேண்டும்.
(13) அம்மா என்று தொடங்கும் பாடல்களுக்கு மட்டுமே அம்மா திரையரங்கு மற்றும் அம்மா ஒலிபெருக்கிகளில் அனுமதி
(14)  அம்மா நாடு முழுவதும் முதுகெலும்பு அகற்றும் சிகிச்சை அம்மா மருத்துவர்களால் அம்மா மருத்துவத் திட்டத்தின்படி வழங்கப்படும்.
(15) அடுத்த தேர்தலில் அனைத்துச் சின்னமும் அம்மாவாகவே இருக்கப்  போவதால் அம்மா நிரந்தர அம்மாவாக அறிவிக்கப்படுகிறது.
(16) அப்பா என்னும் சொல் அம்மா அகராதிகளிலிருந்து அகற்றப்படும்
(17) ம.ந.கூ.மற்றும் க மற்றும் ஸ் எனத் தொடங்கும் பெயர்களும் ரத்து!
(18)  தேசிய கீதத்தில கடைசியாக ஜெயகே ஜெயகே என்னும் சொற்கள் இனி அம்மாகே அம்மாகே என்று முடியுமாறு திருத்தப்படும்.
(19) அம்மாவுக்குப் பிடித்த 9எனும் எண்ணுடன் கணிதம் முடிவடையும்.
--------------------------------------------------------------------------------------------------- 
இதற்கு அடுத்த பதிவு-
கலைஞர் மீண்டும் முதல்வரானால்…
படிக்கச் சொடுக்குக -

---------------------------------------------- 

16 கருத்துகள்:

 1. எல்லாம் சரி கவிஞரே 10-வது கொஞ்சம் இடிக்குதே... எழுந்தவர் முன்னாள் அமைச்சராவார் என்றால் எப்பொழுது எழுந்து எப்பொழுது மக்களுக்கு பணி செய்து எப்பொழுது மக்கள் நலன் பெற ?

  இருந்தாலும் கற்பனை பயமாகத்தான் இருக்கு..... ஆத்தாடி Sorry ''அம்மா''டி

  பதிலளிநீக்கு
 2. நடந்தாலும் நடக்கும், இலவசத்துக்கு அடிமையாய் இருக்கும் வரை.

  பதிலளிநீக்கு
 3. நடக்கப்போவதை அப்படியே உரைத்த நீவிர் "வரும் பொருளுரைத்த மாமந்திரி" என்று வருங்கால சரித்திரத்தில் போற்றப்படுவீர் !

  பதிலளிநீக்கு
 4. இந்த உன்னத திட்டங்கள் எல்லாம் அப்படியே தவறாமல் நிறைவேற, என்றும் தொடர தமிழ் மக்கள் அனைவரும் அம்மாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
  இது கற்பனை அல்ல, சுடும் உண்மை.!
  த ம 2

  பதிலளிநீக்கு
 5. ஐயா! எங்கள் சார்பாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 6. மொத்தமாக தமிழ்நாடு அரசு அம்மா ஸ்டிக்கர் அரசு தான் ஐயா.இரசித்தேன் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 7. அடே அம்மா .
  அம்மானா சும்மாவா .
  போன தேர்தலில் பாராளுமன்றத்தில் அம்மாவை வைத்து அழகு பார்த்த அன்பர்கள் , அடுத்த தேர்தலில் பூமியின் மேற்புறத்தில் செயற்கை கோள் போல வைத்து சுற்ற விடுவார்கள் . ( பூலோக ராணி )

  பதிலளிநீக்கு
 8. நல்ல கற்பனை ஐயா. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. அம்மா மறுபடியும் முதல்வரானல் நடைபெறபோகும் உண்மைகள்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கற்பனை; பலகாலும் படித்து மகிழலாம்

  பதிலளிநீக்கு
 11. ஹஹ்ஹஹ செம ரசித்தாலும்...ஆனால் வேதனை பாருங்க அண்ணா இன்றைய முடிவுகள் நீங்கள் நகைச்சுவையாக எழுதியதை ...ம்ம்ம்ம்ம்

  கீதா

  பதிலளிநீக்கு