மதுபான அரசியல்! காணொலிப் பதிவு!

நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், தி.மு.க. முதல் கையெழுத்திலேயே மது ஒழிக்கப்படும் என்றும் தம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே பலமுறை மதுவை ஒழித்தவர் கலைஞர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது என்பதால் அதை யாரும் நம்பவில்லை.
அ.தி.மு.க.முதன்முறையாகச் சொல்கிறது… 
ஆனால் முடியுமா?
முடியாது என்பதே என் கருத்து.

மதுபான வளர்ச்சியில் ஆளும் வர்க்கங்களுக்கு இரண்டு நன்மை!
1.மதுவால் மூவழியில் தமக்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் வருமானம்.
2.போதையால் “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இதுவென அறியாத நிலைமையில் கிடப்பார்கள்” நேரடி மோதல் இல்லை!

இந்த காணொளித் தொகுப்பைப் பாருங்கள் –

நன்றி – சத்யம் தொலைக்காட்சி
படங்களுக்கு நன்றி – நண்பர் புதுவை ராம்ஜி

இதனால், மதுவை ஒழிக்கவே முடியாது என்பதில்லை! முதன்முதலாக 1937இல் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட மாநிலம் தமிழகம்தான்!

இப்போதும் பீகாரில் நிதிஷ்குமார் ஒழித்துவிட்டார். கேரளாவில் முயற்சி தொடங்கியிருப்பதைப் பார்க்கும்போதே வெற்றிதோன்றுகிறது! இதற்கு அரசியல் உறுதியே காரணமாக இருக்க முடியும்.

3 கருத்துகள்:

  1. உறுதியாகவும் தைரியமாகவும் முடிவெடுக்க வேண்டும்..... செய்வார்களா? சில நாட்களில் தெரிந்துவிடும். பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. அரசு மதுவிலக்கு கொண்டு வந்தாலும் நம்ம
    குடிமக்கள் கொண்டு வர விடமாட்டாங்க போல

    பதிலளிநீக்கு