நான் பேசிய பட்டிமன்றக் காணொளிப் பதிவு


எனது முந்திய பதிவில் தெரிவித்திருந்தது போல,
மே-1ஆம் தேதி நான் பேசிய பட்டிமன்றக் காணொளிப் பதிவு கிடைத்துள்ளது.

- பார்க்க -
 
  கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றம்

சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை
மனித உழைப்பா?            அறிவியல் வளர்ச்சியா?
- நடுவர் - 
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் .லியோனி
மனித உழைப்பே!                             அறிவியல் வளர்ச்சியே
சென்னை விஜயகுமார்                 திண்டுக்கல் சிவக்குமார்
காரைக்குடி சர்மீளி                        தேனி தமிழ்ச்செல்வி
புதுகை நா.முத்துநிலவன்          கோவை கவிஞர் தனபால்
     (அணித்தலைவர்)                           (அணித்தலைவர்)

(நிகழ்ச்சியில் பேசும் வரிசையில் பெயர் உள்ளது)
-------------------------------------- 
விளம்பர இடைவேளை இன்றி மொத்தம் 1மணி,11நிமிடம்
(எனது பேச்சு 47முதல் 56ஆம் நிமிடம் வரை)
பார்த்துக் கருத்திடுக
திறந்த மனத்துடன் 
தங்கள் கருத்துகளுக்காகக் 
காத்திருக்கிறேன்

------------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. கவிஞர் நா. முத்து நிலவன் அவர்களுக்கு உழைப்பே உயர்வுக்கு உறுதுணை
    கண்ணீருக்கும், வியர்வைக்கும் தாங்கள் சொல்லிய வித்தியாசம் அற்புதம்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நேற்று (02.05.16) இரவு யூடியூப்பில் உங்கள் பட்டிமன்ற காட்சியைக் கண்டு கேட்டு ரசித்தேன். உங்கள் ’உழைப்பே’ என்ற அணித்தலைவர் (விஜயகுமார்) தனிநபர் துதிப் பேச்சைத் தொடங்கி வைக்க எல்லோரும் அதன் வழியே போனார்கள் என்பது வேதனையான விஷயம்.

    நீங்கள் ஒருவர் மட்டுமே இலக்கிய மேற்கோள்களை உரத்துச் சொன்னதாக நினைவு. அதிலும் தொல்காப்பியருக்கே (ஓருயிர், ஈருயிர் என்ற கண்டு பிடிப்பில்) நோபல்பரிசு சேரவேண்டும் என்ற உண்மையை அன்றிலிருந்து வலியுறுத்தி வரும். நீங்கள், இந்த பட்டிமன்றத்திலும் அந்த கருத்தினை ஓங்கி வலியுறுத்தி அரங்கத்துள் கைதட்டலைப் பெற்றமைக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.

    இப்போதெல்லாம் இலக்கிய பட்டிமன்றங்களை விட, நகைச்சுவை பட்டிமன்றங்களே நடத்தப் படுகின்றன.மற்ற பேச்சாளர்களும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் நன்றாகவே செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பேச்சை நான் நேரில் இரசித்தேன் மலேசியாவில் தற்போது பார்த்து மகிழ்ந்தேன் ஐயா வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு