வணக்கம் அம்மம்மா பிறந்தநாள் செய்திகள் வாசிப்பது..

கராத்தே வீரர் ஹூசைனி  இப்படிச் செய்தது ஏன்?
விளக்கம் உள்ளே... 
வணக்கம். அம்மம்மா பிறந்தநாள் செய்திகள்...வாசிப்பது... 
5000 பால்குட வரிசை நெரிசலில் சிக்கி, பால்வாங்க முடியாமல் காலைக் காப்பியை தியாகம் செய்த பாரதசாரி, சாரி பாதசாரி.

இனி விரிவான செய்திகள் -
எந்எந்நாளும் அம்மா தி.மு.கவின் நிரந்தரத் தலைவரும்
முன்முன்னாளின் முத்தமிழ்நாட்டு முதல்வரும்,
இந்இந்நாளின் மக்களின் முதல்வருமான மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி டாக்டர் தலைவி அம்மம்மா அவர்கள் மீண்டும் அற்ப மாநில முதல்வராக முடியாவிட்டாலும் அட்லீஸ்ட் பிரதமராகவாவது வர வேண்டிக்கொண்டு ,   அந்தக் கட்சியின் “முக்கிய“ -மற்றும் முக்காத- நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகள் பல லட்சம் பேரும் பலகோடித் தமிழர்களுடன், காவடி எடுத்தல், கால்கை பிடித்தல், பால்குடம் எடுத்தல், டாஸ்மாக் அடித்தல், மண் சோறு சாப்பிடுதல், சாப்பிடாத வயிற்றில் அடித்தல், அலகு குத்தி ஆடுதல், தேர் இழுத்து ஓடுதல்,  வேப்பிலை கட்டிப் பாடுதல், அக்னி சட்டி ஏந்துதல், ஆசிட் அடித்தல் எனப் பலவிதமான வேண்டுதல்களை சமூக நீதி வீராங்கனைக்காக -மனசுக்குள் நொந்துகொண்டே- நிறைவேற்றிய செய்திகள் வந்து குமிகின்றன...
(பார்க்க படம் - இது சாம்பிள்தான்.. விகடன் பார்க்க)

தாம் நடத்திய வழிபாட்டு முறைகளைப் படமெடுத்து மேலிடத்துக்கு அனுப்பாதவர் பதவி காலியென்று அறிவிக்காத அறிவிப்பை அடுத்த சீட்டுக்காரர் வழியாக அறிந்து, தானே மனமுவந்து செய்த நேர்த்திக் கடன் இதுவாகும் என்று உறுதியாகத் தெரிவதாக வதந்திச் செய்தி ஒன்று வந்திருப்பதை மக்கள் நம்பவேண்டாம் என்று மக்களின் முதல்வரின் ஆசியோடு... 
ஸ்..அப்பா சாரி அம்மம்மா..அந்த சோடாவ எடு! 

ஊர்க் கடவுள்கள் ஊரைவிட்டுக் காலிசெய்தனர்! 
வரலாறு காணாத விதம் விதமான வழிபாடு கண்ட அந்தந்த ஊர் அம்மன் உள்ளிட்ட அனைத்துச் சாமிகளும் உடனடியாக ஊரைக் காலி செய்துவிட்டு, தங்களை விட சக்தி படைத்தவர் அம்மம்மா என்பதை ஒப்புக்கொண்டு, அவரது ஆசிகேட்டு, கட்சியில் சேர அணி திரண்டு வந்துவிட்டனர். எனவே, தங்கள் ஊரில் சாமிகளைக் காணாத மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அம்மம்மா ஆட்சியில் மக்களின் முதல்வரின் ஆசியோடு இந்தச் செய்தியைத் தானே அறிவிக்கும் அளவிற்கு மக்கள் அல்லாத முதல்வர் ஆக்டிவாக இருக்கிறார். இதனை மக்கள் அறிய வேண்டும் என்பற்காகவே அவர் கார் பயணத்தைத் தவிர்த்து ஆக்டிவா வாகனத்தில் இனிமேல் வலம் வருவார் என்பதையும் ஆசையோடு ச்சே ஆசியோடு தெரிவிக்கிறோம் என்பதை சொல்லலாமானு தெரியலயே? சரி விடு சொல்லிட்டோம்.

இந்த வழிபாட்டுப் போட்டியில் முதலிடத்திற்கு வந்தது யார் என்பது 25ஆம் தேதி யாருக்குப் புதிய பதவி அல்லது பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புக் கிடைக்கிறது என்னும் அறிவிப்பின்போது மக்களுக்குத் தெரியவரலாம் என்பதையும் தெரிவித்து மகிழ்கிறோம்.

அந்த வகையில்  தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வித்தியாசமான வேண்டுதலில் ஈடுபட்டார் பிரபல கராத்தே வீரர் ஹூசைனி என்பது உண்மை!

கராத்தே வீரர் ஹூசைனி  இப்படிச் செய்தது ஏன்? உங்கள் கருத்து என்ன?  வாக்களிக்கலாம் -

(1)  இஸ்லாமியர்கள் இந்து முறையிலான  வழிபாட்டிற்கு கிறிஸ்துவழியில் மாறிவிட்டார்கள்
(2)  மதம் கடந்த மனித நேயம் கொப்பளித்ததில் 
  ஆணி குத்திடுச்சு ஏழுநிமிடத்தில் புிடுங்கியாச்சு.
(3)  நவீன ரத்தக்கண்ணீர் நாடகம் ரத்தம் பொங்கிப் பெருகும் போதும் அமைதியான நடிப்பு
(4)  முன்னர் ரத்தத்தில் சிலைசெய்ததைப் பாராட்டித் தரப்பட்ட நிலத்தை யாரோ பிடுங்கிக் கொண்டதால் ஹூசைனி இம்முறை மாற்றம்..
(5)  இஸ்லாமியரான ஹூசைனி, இந்து அம்மாவின் கடைக்கண் பட, கிறிஸ்துவரைப்போல் சிலுவையில் அறைந்து கொண்டதால், அவர் “மத நல்லிணக்க மந்திரி“ ஆவாரா ? அமைச்சர்கள் குழப்பம்.
---------------------------------------------------
எச்சரிக்கை – (வலை வாசகர்க்கு)
நீங்கள் பின்னூட்டத்தில் அசட்டுத்தனமாக ஏதும் எழுதக்கூடாது. மீறி எழுதினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்றும் அன்புடன் எச்சரிக்கிறேன். 

எனினும் யார் போட்டது என்று சொல்லாமலே தமிழ்மணம் வாக்கு மட்டும் போட்டுவிட்டு சத்தம் போடாமல் ஓடிப்போய்விடுவது புத்திசாலித்தனம்

மீறி பின்னூட்டத்தில் ஓட்டுப் போட்டால், தலைக்கு ரெண்டாயிரமோ ஐயாயிரமோ, வீட்டுக்கான வேறு செலவுகளுக்கான தொகையோ தரப்படலாம் அல்லது முன்னொரு முறை திருச்சியில் ப.சிதம்பரத்திற்கும், சென்னையில் சு.சாமிக்கும் நடந்தது போல அரை நிர்வாண ஆட்ட பாட்டத்துடன் கூடிய வரவேற்பும் தரப்படலாம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில்...
அடச் சே.. கரண்ட் போச்....சாரிங்க
-----------------------------------------------
மூலச் செய்தி இன்னபிற படங்களைக் காண,
மற்றும் விரிவான செய்திகளுக்கு நன்றி –

http://news.vikatan.com/article.php?module=news&aid=38959

20 கருத்துகள்:

  1. அம்மம்ம்ம்ம்ம்மா... இவையெல்லாம் தேவையா...?

    சத்தம் போடாமல் போய் விடலாம் என்றால்... தமிழ்மணம் எங்கே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணம் மீண்டும் காணவில்லையே அய்யா??!!
      நீங்களோ நம்ம முரளி அய்யாவோ ஏதாவது செய்தால்தான் உண்டு. அப்பறம் அது “தமிழ்மணம்“னு இருக்கிறதால இப்படிப்பட்ட நாத்தம் புடிச்ச செய்தியெலலாம் அதுல ஏறாதோ என்னமோ?

      நீக்கு
  2. சொல்லலாம் ஆனா சொல்லக் கூடாது. நீங்க சொன்னா நான் பொறுப்பில்லன்னு வேற சொல்லிட்டீங்க . நமக்கு எதுக்கு வம்பு? நீங்கள் சொன்ன மாதிரி ஒட்டு மட்டும் போட்டுட்டு எஸ்கேப் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்குரிய முரளி... உங்களையும் நண்பர் வலைச்சித்தரையும் பெரும்பாலான நேரம் நான் பிரித்தே பார்பதில்லை.. எனவே, அவருக்கு இட்ட பின்னூட்டத்தைப் பார்க்க வேண்டுகிறேன். (அது வேற ஒன்னுமில்லிங்க.. திரும்ப ஒரு தடவை அடிக்கணுமான்னுதான்...??!!)

      நீக்கு
  3. எல்லாம் ஒரு வெளாம்பரம்தான்...
    வாக்கு மிசினக்கானமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிசினே எஸ்கேப்... எனில் அம்மாவின் அதிகாரம் எந்திரங்களையும் ஈர்த்திருக்கிறது என்று புரிந்துகொள்ளணும்.
      அம்மான்னா சும்மா இல்லிங்கோ..

      நீக்கு
  4. கராத்தே வீரர் ஹூசைனி அப்படிச் செய்தது ஏன்? உங்கள் கருத்து என்ன?
    அவர் பணத்திற்காகவும் பதவிக்காகவும் செய்து இருக்கலாம் ஆனால் அவருக்கு சொல்ல விரும்புவது இதுதான் அம்மாவிற்காக தீக்குளிச்சு உயிரைவிட்டவங்களுக்கே 1 லட்சம்தான் அம்மா கொடுத்தாங்க ஆனால் நீங்க இப்படி சிலுவையில் அறைந்து கொண்டு சாகமால் பிழைத்து கொண்டதால் ஆயிரமோ இரண்டாயிரமோதான் தர முடியும் அதற்கு மேல ஆசைப்படக்கூடாது ஹுசைனி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லுங்க.. நீங்க எதார்த்தவாதி மதுரைத்தமிழரே!
      நான் சொன்னத விட இப்ப நீங்க சொன்னது அவருக்கு சரியாகப் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியுது.. ஆனா..“தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும், தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை..?” என்று அண்மையில் காலமான பேராசிரியர் இரா.இளவரசு ஒரு கவிதையில் கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. நன்றி நண்பரே

      நீக்கு
  5. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கியமா? அட அப்படி ஒன்னும் இதுல இருக்கா?
      அப்படின்னா..“இலக்கியம் வளர்க்கும் எங்கள் அம்மாவுக்கு பாரதியார்-பாரதிதாசன்-பல்கலைக்கழகங்கள் ஏன் இன்னும் முதுமுனைவர் அல்லது புதுமுனைவர் பட்டத்தை வழங்கிடத் தாமதிக்கிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்” என்று கேட்க நான் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

      நீக்கு
  6. சரிரிரிரிரிரிரிரி..... எங்கே ? தமிழ் மணத்தையே... காணோம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போயே போச்..இட்ஸ் Gone! (அட ஏன்ங்க நீங்க வேற வயித்தெரிச்சலக் கிளப்பிக்கிட்டு அதத்தான் நானும் தேடிக்கிட்டுத் திரியிறேன்...ஒரு எ...வும் புரியல)

      நீக்கு
  7. மத நல்லிணக்க மந்திரியா?!!!!
    "மட நல்லிணக்கம்", "மட நல்லிணக்கம்", "மத நல்லிணக்கம்", "மந்த நல்லிணக்கம்"ன்னு நாலா பிரிச்சு நாலுக்கும் நாலு பேர போட்டறலாம்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலுபேருக்குப் போடலாம்தான், வேலைவாய்ப்பும் கிடைக்கும். அப்பறம் அவங்களுக்குள்ள இணக்கம் வர்ரதுக்கு, ஒரு “மந்திரி நல்லிணக்கத் துறை” தேவைப்படும். தூக்குறது பொணம், இதுல கால்மாட்டுல தூக்குணா என்ன? தலைமாட்டுல தூக்குனா என்ன? சரி வுடுங்க..

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா.
    கருத்து எழுதும் போது பயந்தான் என்ன செய்வது சொல்லியாகவேண்டும்.
    அம்மா நல்லது செய்ததால் மக்களும் நல்லவர் பக்கம் நாடுவது வழக்கம்... இது உலக நீதி....


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்... அந்த பயம் இருக்கட்டும்.. நல்ல இலக்கிய வாதிக்குரிய நல்ல பண்புகள் இருப்பதால் அடுத்த பட்டியலில் அனேகமாக உங்களுக்குக் கலைமாமணி உண்டு ரூபன். எதற்கும் அம்மபுராணம் எழுதி ஒரு நகலை அனுபபிப்பாருங்கள்.

      நீக்கு
  9. அப்பப்ப்பாபா என்ன ஒரு பதிவு. இப்படி எல்லாம் நடப்பதற்கு இதையெல்லாம் எடுத்துச்சொல்ல அவர்கள் வீட்டில் ஒரு அம்மா இல்லாததுதான் காரணமாக இருக்கும்.

    என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் அய்யா வழியை பின்பற்றுவோம். பின்னூட்டம் போடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வழின்னா..? நம்ம வைகுண்டசுவாமிகள் பத்தி ஒரு குறும்படம் வந்ததே அதுதானே வரது?
      இப்படி அம்மாவின் அம்மா பத்தி நினைவுபடுத்தினா எப்படி? அழுகாச்சி அழுகாச்சியா வருது, வரது!

      நீக்கு
  10. அதெல்லாம் சரிதான் ஐயா.உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே தொலைக்காட்சியையும் அந்த ஒரே நடுவரையும் அந்த கட்சியையும் தலைவரையும் முக்கி முக்கி பாராட்டி பட்டிமன்றத்தில் பொளந்து கட்டுறீங்களே அந்த கதையை என்னவென்று சொல்வது.நம்ம செஞ்சா சரி.அடுத்தவன் அதே மாதிரி செஞ்சா நம்ம தெறமை எல்லாம் காட்டி இப்படி ஒரு பதிவு போட்டு நான்தான் இந்த ஊர்ல ரொம்ப புத்திசாலி என்று தம்பட்டம் அடிப்பது. நல்லா இருக்கு ஐயா உங்க நியாயம்.(எப்படியும் இந்த விமர்சனத்த வெளியிடமாட்டீங்க.இருந்தாலும் ஜால்ராக்களுக்கு மத்தியில் இதுவும் உங்கள் காதில் விழட்டும் என்ற நப்பாசையில்)

    பதிலளிநீக்கு
  11. இந்த வீரரை எல்லாம் நம்புவதற்கில்லை ஐயா....சரியான விளம்பரப் பிரியர்....

    அது சரி ஏதாவது எசகு பிசகா எழுதாம சத்தமில்லாமல் ஒரு ஓட்டு மட்டும் போடலாம் என்று பார்த்தால் ஓட்டு வங்கிப் பெட்டியைக் காணவில்லையே! நாமெல்லாம் அரசியல்வாதியா என்ன.....ஹஹஹ எங்கேயாவது இவருக்கு நிறைய ஓட்டு விழுந்துடப் போகுதுனு ஏதாவது தலைவர் தூக்கிட்டுப் போய்ருபாய்ங்களோ....ஹஹஹ்



    பதிலளிநீக்கு