வணக்கம்
ஜூலை 3முதல் 15ஆம் தேதிவரையான எனது அமெரிக்கப் பயணம் அமெரிக்கையாக இருந்தது!
(தமிழில் உள்ள இந்தச் சொல்லே தனித்துவமான அமெரிக்கப் பண்பைச் சொல்லுவதாக உள்ளது! இது பற்றித் தனியாக ஒரு சொல்லாய்வு செய்யலாம் போல! – செய்வோம்!)
அமெரிக்கப் பயணம் பற்றி
நாலைந்து இயல்கள் (அத்தியாயம்) எழுத வேண்டும். எழுதுவேன். பயணத்தின்10ஆம் நாள்-12ஆம் தேதி- மதியம், நியூயார்க்
சுதந்திர தேவி சிலை முன் எனது செல்பேசி தொலைந்து போனது ஒரு பெரும் சோகம்! அன்று மதியம்வரை அமெரிக்க நிகழ்வுகளில் எடுத்த படங்கள்
அனைத்தும் செல்லோடு போய்விட்டன!
எனினும் நியூயார்க்கில்
உள்ள நண்பர் ஆல்ஃபி @ ஆல்ஃபிரட் தியாகராஜன், பாஸ்டனில் உள்ள தம்பி அருண் ரவி ஆகியோரின் சலிப்பில்லாத
அன்பால் பத்திரமாக ஊர்வந்து சேர்ந்தது தனிக்கதை!
இப்போது புதுக்கோட்டை
வந்து செல்பேசித் தொடர்பு எண்களை மீட்டு எடுத்துவிட்டேன். படங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.
கிடைத்ததும் அமெரிக்க நண்பர்களின் அன்பை விரிவாக எழுத ஆசை -
நல்ல வேளையாக எனது இணையருக்கும்
இனிய நண்பர்களுக்கும் அவ்வப்போது அனுப்பிய படங்களில் பாதி கிடைத்திருக்கிறது. முழுவதும்
கிடைத்ததும் தொடர்ச்சியாக எழுதுவேன்.
இது நிற்க.
அமெரிக்கப் பயணத்திற்கு முதல்நாள் –ஜூலை 1ஆம் தேதி –இந்து தமிழ் திசை நாளிதழில் ஓராண்டாகத் தொடரந்து வெளியான “தமிழ்இனிது” நூலும் அச்சாகி வந்துவிட்டது. 10பிரதிகளை மட்டும் எடுத்துச் சென்று FeTNA பேரவை நிகழ்விலும் வெளியிட்டாகி விட்டது (இதை முந்தைய எனது வலைப்பதிவில், அட்லாண்டா தங்கை கிரேஸ் பிரதிபாவின் மேசைக் கணினி வழி நமது வலைப்பக்கத்தில் பகிர்ந்ததை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்கள் பார்த்துவிட வேண்டுகிறேன்)
நமது நூல்பிரதிகள்
எங்கே கிடைக்கும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே
இந்தப் பதிவு –
தமிழ்இனிது நூல் வெளியீடு : “இந்து தமிழ் திசை“ குழுமம். எனவே மாவட்டத் தலைநகர் அனைத்திலும், முக்கியமான நகரங்களிலும் இந்து-தமிழ்- விற்பனை நிலையங்கள் உள்ளன
சென்னை “இந்து தமிழ் திசை” அலுவலகத்தில் நூல் கிடைக்குமிடம் –விற்பனையகப் பொறுப்பாளர்- திரு இந்துராஜ் அவர்களின் – தொடர்பு எண் – 91 74012 96562, மற்றும் ஜி.பே.எண் - 9840699497.
அவர்களிடமே கேட்டால் விவரம் தெரிவிப்பார்கள்.
புதுக்கோட்டையில் மேல
ராச வீதி “சக்சஸ் புக்ஸ்டால்”இல் கிடைக்கும் (நூல் வந்த பதினைந்து நாளில்
100பிரதிகள் விற்பனை ஆகிவிட்டதாக சக்சஸ் அஜ்மீர் மகிழ்வுடன் தெரிவித்தார்!) அவரது தொடர்பு எண் - +91
98420 18544
பொதுவாக 10 %கழிவு தருகிறார்கள். பிரதிகள் அதிகமாக வாங்கினால் அதிக கழிவும் கிடைக்கும். என்னைத் தொடர்பு கொண்டால் எவ்வளவு கழிவு தருவார்கள் எனும்
கூடுதல் விவரத்தையும் தருவேன்.
நூலைப் படித்தபின், சிறந்த -புகழ்ந்த அல்ல- நூல்விமர்சனத்தின் பகுதியை அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடத் திட்டமுள்ளது. எனவே ஆக்கவழியிலான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
வணக்கம்.
----------------------------------------------------
நமது வலை நண்பர்களுக்காக
இந்து தமிழ் திசை ஆசிரியர்
திருமிகு அசோகன் அவர்களின்
அருமையான பதிப்புரை-
என்னுரை -
இனி,
மற்றவை-
நூலைப் படித்தபின்
உங்கள் கருத்தறிந்து..
நன்றி வணக்கம்.
(அடுத்த பதிவு-
அமெரிக்கப் பயண நினைவுகள்... )
-------------------------------------------------------
அருமை.வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபாராட்டுகள், உங்கள் உரையில் மொழிச் சீர்மை செய்வதை வண்டல் நீக்குவதுடன் ஒப்பிட்டுள்ள முறை சிறப்பு
பதிலளிநீக்குஇந்த அதிகாலையில் தமிழ்இனிது நூலின் முன்னுரைகள் ஆசிரியவுரை போன்றனவற்றை வாசிக்க வாசிக்க இனித்தது.பொழுது புலர்ந்ததும் சென்னை இந்து தமிழ்திசை சென்று நூலை வாங்கிக் கொள்வேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் கவிஞர் நா.மு
-இரா.தெ.முத்து
மகிழ்ச்சி. வாழ்த்துகள் சார். அன்புடன் புதியமாதவி
பதிலளிநீக்குஅண்ணா வணக்கம், தமிழ் இனிது நூல் வெளியிடுவதற்கு முன்பே ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் இந்து தமிழ் திசை நாளிதழில் வாசித்து இருந்தாலும் நூலை கையில் பெற்றவுடன் அளவில்லாத ஆனந்தம் மிக அழகாக அட்டை படத்துடன் ஆளுமைகளை விமர்சனங்களுடன் பார்த்ததில் மேலும் மகிழ்ச்சி வரும் 31 7 2024 அன்று பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் எனும் குழுமத்தில் மாதம் இருமுறை நூல் விமர்சனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ் இனிது நூல் பற்றிய வவிமர்சனத்தைநான் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பதிலளிநீக்குதிரைப்படம் வெளிவரும் முன் அசைபடம் (Motion Poster), முதல் பார்வை (First Look), தூண்டோட்டம் (teaser) என வெளியிடுவது போல முதலில் புத்தகத்தின் அட்டை, அடுத்து இப்பொழுது பதிப்புரை - முன்னுரையெல்லாம் வெளியிடும் தங்கள் சந்தைப்படுத்தல் நுட்பம் அருமை ஐயா! தொடருங்கள்!
பதிலளிநீக்கு15 நாட்களில் 100 படி விற்பனை என்ற செய்தி மகிழ்ச்சியில் உச்சி குளிர வைக்கிறது. அந்தத் தமிழார்வமுள்ள நெஞ்சங்களுக்கு நனி நன்றி!
விரைவில் படங்கள் கிடைத்ததும் அமெரிக்கப் பயணம் பற்றி எழுதுங்கள்! ஆர்வமாக இருக்கிறோம்!
மிகவும் அருமை ஐயா
பதிலளிநீக்கு