வழித்தடம் -
கூகுள் (செயற்கைக்கோள்வழி) வரைபடத்தில்
புதுக்கோட்டையின் இருப்பிடம் காண -
https://www.google.co.in/maps/@10.4650209,78.9262096,9z?hl=en
கூகுள் (செயற்கைக்கோள்வழி) வரைபடத்தில்
புதுக்கோட்டையின் இருப்பிடம் காண -
https://www.google.co.in/maps/@10.4650209,78.9262096,9z?hl=en
(1) பேருந்தில் வருவோர் கவனத்திற்கு -
தஞ்சை, திருச்சியிலிருந்து பேருந்தில் வருவோர்
இறங்கவேண்டிய இடம் - புதிய பேருந்து நிலையம்தான்.'கொஞ்சம் முன்னால் இறங்கி நடக்கலாமே?' என்று நினைப்போர்,புதிய பேருந்து நிலையத்திற்கு முந்திய நிறுத்தமான அரசு தலைமை மருத்துவ மனையில் இறங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக ஆலங்குடிச் சாலையில் இருக்கும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்திற்கு வந்துவிடலாம்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிய இரட்டைச் சாலையில் சுமார் 200மீ. தொலைவில பழைய பேருந்து நிலையம். அதைக்கடந்து அதே திசையில் சுமார் 150மீ.தூரம் கடந்தால் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம். மொத்தத்தில், புதிய பேருந்துநிலையத்திலிருந்தே நடந்து போகும் தூரம்தான் (சுமார் அரை கி.மீ.)
மதுரையிலிருந்து வருவோர் இறங்க வேண்டிய இடம் - பழைய பேருந்துநிலையம் இங்கிருந்து நிகழ்ச்சி நடக்குமிடம் கிழக்கே போகும் சாலையில் 250மீட்டர். (புதியபேருந்து நிலையம் போனாலும், அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலைய வழியாகத்தான் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்திற்கு வரவேண்டும் எனவே, மதுரையிலிருந்து வருவோர், புதிய பேருந்து நிலையத்திற்கு முந்திய பழைய பேருந்து நிலைய நிறுத்தத்திலேயே இறங்கி எளிதாக வந்துவிடலாம்.)
“இல்லை நான் நகரப்பேருந்தில் வரணும்னு நினைக்கிறேன்” அப்பிடிங்கிறவங்க - புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலைய வழி ஆலங்குடி, அறந்தாங்கி போகும் நகரப் பேருந்தில் ஏறி “பேராங்குளம்” அப்படிங்கிற நிறுத்தத்துல இறங்கி மேற்கு நோக்கி நடந்தால், 50மீட்டர் தூரம்தான் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்.
“நா ஆட்டோவுல வந்துடுவேன்”-அப்பிடிங்கிறவங்க, புதிய பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் மன்றம் 50ரூ. அல்லது
பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30 அதிகபட்சம் 40ரூ. தந்தால் போதும். (ஆனால் இது நடைபழகும் தூரம்தான்)
(2) தொடர்வண்டி(ரயில்)வழி வருவோர் கவனத்திற்கு -
ரயில் நிலையம் ஊருக்கு வெளியில் இருப்பதால், அங்கிருந்துபுதிய பேருந்து நிலையம் வந்துதான் வரவேண்டும். ஒவ்வொரு முக்கியமான ரயில் வருகையின் போதும் புதிய பேருந்து நிலையம் வருவதற்கான நகரப்பேருந்து இருக்கும்.
(3) மகிழ்வுந்து (கார்)வழி வருவோர் கவனத்திற்கு - பேருந்து மற்றும் மகிழ்வுந்து வழியாக வருவதில் பெரிய தூர வேறுபாடு இல்லை என்பதால் பேருந்து வழியிலேயே வரலாம். எனினும், திருச்சியிலிருந்து வருவோர் திருக்கோகர்ணம் அருங்காட்சி யகத்தில் -பேருந்து வழியில் பிரிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, 4சாலைத் திருப்பத்தில் தென்புறச் சாலையில் திரும்பி, மகளிர் கல்லூரி வந்து -புதிய பழைய பேருந்து நிலையங்களைக் கடந்து அதே நேர்ச்சாலையில் நேராக மக்கள் மன்றம் வந்துவிடலாம்.
அப்பறம்..(4), (5) விமான நிலையமோ கப்பல் துறைமுகமோ இன்னும் புதுக்கோட்டை நகருக்கு வரல.. என்பதால்...

சரி... சரி.. வந்து சேருங்க
வரவேற்கக் காத்திருக்கிறோம் -- அன்புடன் விழாக்குழு.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
வேண்டுகோள் (1)
முன்பதிவு செய்தோ, செய்யாமலோ, விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரையும், தேநீர், குறிப்பேடு, பேனா அடையாள அட்டையுடன் சுவையான மதிய உணவும் தந்து உபசரிக்க விழாக்குழு காத்துள்ளது.
ஆனால் –
முன்னதாக, படிவம் நிரப்பி அனுப்பி, வருகையை உறுதி செய்தவர்க்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடும் அதனோடு தரப்படும் கைப்பையும் வழங்கப்படும். (இவர்களின எண்ணிக்கை, சரியாக232 பேர்எண்ணிக்கையை உயர்த்த இயலாது)
பதிவு செய்யாத பதிவர்களும்
தாராளமாக வரலாம். ஆனால்...
பதிவு செய்யாத பதிவர்களும்
தாராளமாக வரலாம். ஆனால்...
அவர்கள், முன்னதாகத் தெரிவிக்காத காரணத்தால், கையேடு, கைப்பையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இவற்றை முன் திட்டமின்றிச் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவரும், “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால்,விழாவுக்கு நேரில் வந்து கலந்துகொள்வோர்க்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடு, விழா நினைவுப் பரிசாக அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது என்பதையும் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறோம்.
கையேட்டுக்குத் தமது வலை பற்றிய தகவல் படிவத்தை முன்பே அனுப்பாமல் விழாவில் கலந்துகொள்ள வருவோர்க்கோ, படிவம் அனுப்பியும் விழாவுக்கு வராதவர்க்கோ இலவசக் கையேடு வழங்கும் திட்டமில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறோம்.
விழாச் செலவுக்கு ரூ.5,000 மற்றும் அதற்கும் மேலாக நன்கொடை தந்த புரவலர்களுக்கு மட்டும், அவர்களது முகவரிக்கோ அல்லது அவர்கள் விரும்பும் (இந்திய) முகவரிக்கோ கையேடு அன்புடன் அனுப்பி வைக்கப்படும்.

மற்றவர்கள், விரும்பினால், விழா அரங்கில் விழாச்சலுகையாக ரூ.150 மதிப்புள்ள நூலை ரூ.100 மட்டும் தந்து, வாங்கிக் கொள்ளலாம்.
மற்றபடி -
விழா நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால்...
விழாவுக்கு வரும் நண்பர்கள் தாமாகத் தரும் நன்கொடை எதுவாயினும் விழாக்குழு அன்போடு ஏற்றுக் கொள்ளும். அதற்கு, சீருடை விழாக்குழுவினர் வழிகாட்டுவார்கள்.
நன்றி.
------அடுத்து..இன்னொரு முக்கியமான வேண்டுகோள்...
----------- (தொடரும்) -----------
வழிகாட்டல் பகிர்வு அருமை ஐயா!
பதிலளிநீக்குஅப்பறம்..(4), (5) விமான நிலையமோ கப்பல் துறைமுகமோ இன்னும் புதுக்கோட்டை நகருக்கு வரல.. என்பதால்... ஆஹா!! அண்ணா இதுதான் புதுக்கோட்டை ரவுசா:)))
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குபடமும் விளக்கமும் யாரும் எளிதாக
விழா மண்டபம் வந்தடைய உதவும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
#விமான நிலையமோ கப்பல் துறைமுகமோ இன்னும் புதுக்கோட்டை நகருக்கு வரல.. என்பதால்...
பதிலளிநீக்குசரி... சரி.. வந்து சேருங்க #
ஹெலிபேட் வசதி செய்யப் பட்டுள்ளதா ,இல்லையான்னு சொல்ல வில்லையே தவிர நீங்கள் சொல்லி இருக்கும் விபரமே போதும் ,போதும் :)_
தகவலுக்கு நன்றி அய்யா! விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை (நேரம்) வெளியிட்டால் வலைப்பதிவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள உதவும்.
பதிலளிநீக்குபயண வழிசொல்லும் விழாக்குழுவினர் அலைபேசி எண் பதிந்தாலும் பயனுடையதாக இருக்கும் என்போன்றவர் இறங்கி முழிக்காம அழைத்து பேச வசதியாக இது யோசனை மட்டுமே.
பதிலளிநீக்குஅண்ணா அப்படியே விழாவின் நேரலை காண சுட்டி எதாவது தந்திருக்கிங்களா? நானும் விழாவில் இருப்பேன் பாருங்க என்று இங்கு சொல்லிவிட்டு வரத்தான்.ஹஹ (ஏன் இந்த விளம்பரம்னு கேட்பது புரிகிறதுங்க அண்ணா)
பதிலளிநீக்குஇவ்வளவு சொன்னவரு.. நியூ யார்க்கில் இருந்து வரவழியை சொல்லி இருந்தா நம்ம மதுரை தமிழன் கூட வந்து இருப்பார் இல்ல. அப்படியே.. ஹாலிவுட் ஏரியாவில் இருந்து வழி சொல்லி இருந்தா நான் கூட வந்து இருப்பேன் இல்ல. இப்படி.. கூட இருந்தே எங்களை தள்ளி வச்சிடிங்களே! அருமையான பதிவு , உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குவழி சொல்லிய விதம் அருமை ஐயா...
பதிலளிநீக்குமதிப்பிற்குறிய முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு.
பதிலளிநீக்குஎனது வருகையை உறுதி செய்ய நான் வருகைப் பட்டியலில் பதிவு செய்து எட்டு நாட்களுக்கும் மேல் ஆகிறது. (கையோடு அந்தச் சமயம் எனது வலைதளத்திலும் பதிவு எழுதி இருந்தேன்).
ஆனால் எனது பெயர் வருகைப் பட்டியலில் அப்டேட் ஆகவில்லை. முன்னதாக வலைப்பதிவு கையேட்டுக்கு மட்டும் தகவல் அனுப்பி இருந்தேன். எனது பக்கம் ஏற்பாடுகள் அனைத்தும் செய்துக்கொண்ட பிறகுதான்் வருகையை பதிவு செய்திருந்தேன்.
எல்லாமே சரியாக சொன்னீங்களே உங்களை நம்பி ஃப்ளைட் புறப்பட்டுருச்சு.. எந்த இடத்தில் லேண்டிங் பண்ணுறது... குதிச்சுடவா...
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
திருமிகு முத்து நிலவன். நான் நாளை மதியமே புதுக்கோட்டை வந்து விடுவேன். உங்கள் அன்பினில் திளைக்க. மதிய உணவருந்த... இரவு மண்டபத்தில் தங்கிகொள்ள மறு நாள் முழு நிகழ்வையும் துளித்துளியாக சுவைக்க... சென்னையிலிருந்து வருவதாக இருந்தேன். இப்போது விருது நகரிலிருந்து வருகிறேன். அழகிய நாட்கள் வலைத்தளம் வலைஞர் விழாவினை வாழ்த்துகிறது...
பதிலளிநீக்குசிறப்பான வழிகாட்டல்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சிறந்த வழிகாட்டல்.. யாவரும் அறியவேண்டி விடயம்.. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-